எகிப்திய விமான விபத்தும் மேற்கின் அரசியலும்!
[ உண்மையில் கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு பயங்கரவாத நிகழ்வும் மேற்கத்திய உளவு முகவாண்மைகளுடன் உறவு வைத்துள்ள தனிநபர்களாலேயே நடத்தப்பட்டிருக்கிறது.]
எஜிப்ட் எயார்-804 பாரிசிலிருந்து கெய்ரோ போகும் வழியில் சென்ற வியாழன் அன்று மத்தியதரைக் கடலில் விழுந்து நொருங்கியதில் எகிப்து, சவுதி அரேபியா, ஈராக், பிரான்ஸ், கிரேட் பிரிட்டன், குவைத், சூடான், சாட், போர்ச்சுகல், பெல்ஜியம், கனடா மற்றும் அல்ஜீரியா ஆகியவற்றிலிருந்து குறைந்த பட்சம் 66 பயணிகள் கொல்லப்பட்டனர்.
ஏர்பஸ் A320 எகிப்திய வான்வெளிக்குள் நுழைந்த பின்னர் வினாடிக்கு 37000 லிருந்து 15000 அடிக்கு திடீரென மாற்றிய பிறகு எகிப்திய கடற்கரையிலிருந்து சுமார் 180 மைல் தொலைவில் ராடாரிலிருந்து மறைந்து போனது.
804 விமானம் நொருங்கியதன் உண்மையான மூலம் தொடர்பாக மாறுபட்ட கருத்துக்ள் நிலவும் அதேவேளை, நேட்டோ அரசுகள் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற சாக்கில் மேற்கொண்டுவரும் போர் நடவடிக்கைகள் மற்றும் பொலீஸ் அரசு தயாரிப்பை உக்கிரப்படுத்துவதற்கு அத்தாக்குதலை பற்றிக்கொள்ளும் என்பது உடனடியாகத் தெளிவானது.
சில மணி நேரங்களுக்குள்ளேயே, மேற்கத்திய மற்றும் பிராந்திய அரசாங்கங்கள் பயங்கரவாதிகள் சம்பந்தப்பட்டிருப்பதாய் கூற்றுக்களை முன்னெடுத்தன, பிரெஞ்சு மற்றும் அமெரிக்க படைகள் உள்பட நேட்டோ இராணுவங்கள் தலையிட்டன, எகிப்திய, பிரெஞ்சு மற்றும் கிரேக்க நிர்வாகங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தின.
விமானம் 804, பயங்கரவாத தாக்குதலால் வீழ்த்தப்பட்டது “மிகவும் நிகழக்கூடியதாக’ இருந்தது என்று எகிப்திய அரசாங்கம் கூறியது. அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான முன்னணி போட்டியாளர் டொனால்ட் டிரம்ப், வியாழன் அன்று கருத்துரைக்கையில், “உலக வர்த்தக மையம், சான் பெனார்டினோ, பாரிஸ், யுஎஸ்எஸ் கோல், புருஸ்செல்ஸ் உள்பட உலகம் முழுவதுக்குமான பேரழிவுக்கு” “தீவிர இஸ்லாம்” பொறுப்பு என கண்டனம் செய்தார்.
“பாரிசிலிருந்து புறப்பட்ட விமானம் இன்னுமொரு பயங்கரவாத தாக்குதல் போல் தெரிகிறது. எப்பொழுது நாம் கடுமையாக, துடிப்பாக விழிப்பாக இருப்போம்?” டிரம்ப் டுவீட்டரில் எழுதினார். இதேபோல நியூ ஜேர்சி கவர்னர் கிறிஸ் கிறிஸ்டியும், “விமானம் வானில் வெடித்துச் சிதறியுது” என்று அழுத்தம் திருத்தமாக கூறினார்.
டிரம்ப்பின் ஜனநாயகக் கட்சி போட்டியாளர், முன்னாள் அரசுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் கூட இந்த விபத்தை “பயங்கரவாதத்தின் செயல்” என்று அறிவித்தார், அத்தோடு “ஐரோப்பாவில், மத்திய கிழக்கில் மற்றும் எங்குமுள்ள அமெரிக்க தலைமை இடம், ஈராக் மற்றும் சிரியாவிற்கு எதிராக நிறைய தாக்குதல்கள் உள்பட” அதிகமானவற்றை கோரினார்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது பயங்கரவாத எதிர்ப்பு ஆலோசகர்கள் இந்த சூழ்நிலைகளை மிக உன்னிப்பாக கவனித்து வருவதாக வெள்ளை மாளிகை கூறியது.
கிரேக்க புலனாய்வாளர்களின்படி, பயங்கரவாதிகள் தலையீடு என்று கூறுவது அவசர முடிவாகும், அவர்கள் விமானத்தின் உடைந்து நொருங்கிய பகுததிகளிலிருந்து ஆதாரம் காட்டி அது பயங்கரவாதிகளின் தகர்ப்பை சுட்டிக்காட்டவில்லை என்றனர். மேலும், வியாழன் பிந்தைய நேரம் வரை ஒரு பயங்கரவாத குழுவும் விமானத்தை வீழ்த்தியதற்குப் பொறுப்பு எனக் கோரியிருக்கவில்லை.
யார் கூறுவது சரியாக இருந்தாலும், மேற்கத்திய அரசாங்கங்களின் அவசர அறிவிப்புக்கள் அரசியல் நோக்கம் கொண்டவை என்பதில் ஐயமே இல்லை.
பாரிஸ் மற்றும் சான் பேர்னார்டனோவில் கடந்த நவம்பர் தாக்குதலை தொடர்ந்து, பிரெஞ்சு பாதுகாப்பு படைகளுக்கு “பாதுகாப்புக்கும் பொது ஒழுங்குக்கும் அச்சுறுத்தல்” என பொலீஸ் கருதும் மக்களில் எவரையும் கண்காணிப்பு செய்ய, தேடுதல் வேட்டை நடத்த மற்றும் கொல்ல உண்மையில் வரையற்ற அதிகாரத்தை வழங்கல் உள்பட பிரெஞ்சு அரசாங்கத்தால் பின்பற்றப்பட்ட பொலீஸ் ஒடுக்குமுறையின் பெரும் கடுமை இருந்தது.
விபத்து நடந்த அதேநாள், பிரான்சின் தேசிய சட்டமன்றமானது, பாரிஸ் தாக்குதல்களுக்கு பின்னர் அறிவித்த அவசரகால நிலையை, இன்னும் இருமாதங்களுக்கு நீட்டித்தது.
முதலாளித்துவத்துக்கு எதிரான புரட்சிகரப் போராட்டங்களின் எழுச்சிக்கு எதிராக பிரெஞ்சு அரசை தயாரித்துவரும் வரிசையான அவசரகால ஆணைகளின் சமீபத்திய ஒன்றான, பிரான்சின் சோசலிஸ்ட் கட்சியினால் (PS) கொண்டுவரப்பட்ட பிற்போக்கு மசோதாவிற்கு பின்னர், சில தினங்களில் வியாழக்கிழமை விபத்து நடந்தது.
பிரெஞ்சு பிரதமர் மானுவெல் வால்ஸ், யூரோ கால்பந்து கோப்பை போட்டிகள் மற்றும் பிரான்ஸ் சைக்கிள் ஓட்டப்போட்டி உட்பட எதிர்வரும் “பெரிய நிகழ்ச்சிகள்” மீதான தாக்குதலை எதிர்பார்த்து, எதேச்சாதிகார அதிகாரங்கள் நீட்டிக்கப்படும் என்று ஏப்பிரலில் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.
கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை திணிப்பதற்கு, மார்ச்சில் எகிப்திய விமானம் 181 கடத்தல், அக்டோபரில் ரஷ்ய மெட்ரோ ஜெட் விமானம் 9268, எகிப்து சினாய் தீபகற்பத்தில் அழிப்பு, இரண்டும் ஐரோப்பிய அரசாங்கங்களால் பற்றிக்கொள்ளப்பட்டன.
உண்மையில் கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு பயங்கரவாத நிகழ்வும் மேற்கத்திய உளவு முகவாண்மைகளுடன் உறவு வைத்துள்ள தனிநபர்களாலேயே நடத்தப்பட்டிருக்கிறது.
நவம்பர் 13 பாரிஸ் தாக்குதல்களுக்கு பின்னால் உள்ள இஸ்லாமிய அரசின் உறுப்பினர்கள் அச்சம்பவத்திற்கு முன்னரே பிரெஞ்சு மற்றும் பெல்ஜியம் போலீசுக்கு நன்கு அறியப்பட்டவர்களாக இருந்தனர், மற்றும் பாரிஸ் போலீஸ் தலைமையத்திற்கு ஒரு மைலுக்கும் குறைவான தொலைவில் வசித்து வந்தனர்.
9/11ன் குற்றவாளிகள், மத்திய கிழக்கிலுள்ள பிரதான அமெரிக்க கூட்டாளியான சௌதி அரேபியாவிலிருந்து மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டார்கள், மற்றும் 9/11 விமானக் கடத்தல் காரர்களுக்கும் சௌதி அரேபிய செல்வந்த தட்டினருக்கும் இடையிலான உறவுகளை ஆவணப்படுத்தும் எப்பிஐ இன் 80,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் தொடர்ந்து பொதுமக்கள் பார்வைக்கு காட்டப்படாமல் வைக்கப்படிருக்கிறது.
அத்தகைய தாக்குதல்கள், அரசு தூண்டிவிட்ட சம்பவங்கள் இல்லையென்றாலும், ஏகாதிபத்திய குழுக்கள் மற்றும் அவர்களின் இராணுவ –உளவு முகவாண்மைகளுக்கு மற்றும் அவர்களின் உலக ரீதியான போர் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய உந்துதலுக்கு சாதகமாக உதவுகின்றன. இத்தகைய ஒவ்வொரு நிகழ்வும், தொழிலாளர்களுக்கும் புலம்பெயர்ந்தோருக்கும் எதிரான அரசு ஒடுக்குமுறை நடவடிக்கைகளின் புதிய சுற்றுக்களை தொடர்கின்றது.
லிபியா, ஏமன், சிரியா மற்றும் ஈராக், அதேபோல ரஷ்யாவின் எல்லைகளில் மற்றும் சீனாவின் கிழக்கு கடற்பரப்பில் தீவிரமாகிவரும் இராணுவத் தலையீடுகளுக்காக அனைத்து ஏகாதிபத்திய சக்திகளாலும் செய்யப்படும் தயாரிப்புகளுக்கு மத்தியில், குறிப்பாக வியாழக்கிழமை நடந்த சம்பவம் ஒரு தீய குறியாகும்.
source: http://khaibarthalam.blogspot.in/2016/05/blog-post_21.html