வர்ணம் தீட்டுவதில் அல்லாஹ்வை விட அழகானவன் வேறு யார்?
சிகப்பு ரோஜா உண்மையில் சிகப்பா…?
இந்த கேள்விக்கு பதில் “இல்லை”
சிகப்பு ரோஜா சிவப்பு நிறமானதில்லை அதனால் பிரதிபலிக்கப்படும் நிறம்தான் சிகப்பு.
சாதாரண ஒளியானது சிகப்பு ஊதா இன்டிகோ பச்சை நீலம் ஆரஞ்சு மஞ்சள் ஆகியவை வானவில் நிறங்களின் கலவையாகும். சாதாரண ஒளி ஒரு படிகத்தால் சிதறடிக்கப்படும் போது இந்த நிறங்களை காண முடிகிறது.
அலை நீளத்தைப் பொறுத்துதான் நிறம் அமைகிறது குறைவான அலைநீளம் என்றால் அது ஊதா அதிகமான அலை நீளம் என்றால் அது சிகப்பு.
ஒளியின் வெளிச்சம் ரோஜாவின் மீது விழும்போது அது சில அலைநீளங்களை ஈர்த்து கொள்கிறது அவை தவிர மற்ற அலைநீளங்களைப் பிரதிபலிக்கிறது.
சிகப்பு ரோஜாகள் எல்லா அலைநீளத்தையும் ஈர்த்துக் கொண்டு சிவப்புக்கான அலைநீளத்தை மட்டும் நம் கண்களுக்குப் பிரதிபலிக்கிறது எனவே நாம் ரோஜாவை சிகப்பாகப் பார்க்கிறோம்.
உண்மையில் நாம் பார்ப்பது சிகப்பு ரோஜாவை அல்ல!
அதனால் பிரதிபலிக்கப்படும் பிரதானமான வண்ணத்தைத்தான்.
விஞ்ஞானம் முடிவாக கூறவது… வண்ணம் ஒரு பொருளில் இருப்பது அல்ல; அதனால் பிரதிபலிக்கப்படும் ஒளியில்தான் உள்ளது.
நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ”நீங்கள் உங்கள் இறைவனை (மிஹ்ராஜ் பயணத்தின் போது) பார்த்தீர்களா?” என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், ”(அவனைச் சுற்றிலும் இருப்பது) ஒளியாயிற்றே! நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?” என்று திருப்பிக் கேட்டார்கள். (அபூதர் ரலி அவர்கள், முஸ்லிம் 291 தமிழில்)
அல்லாஹ் தீட்டும் வர்ணத்தையே நாங்கள் ஏற்போம் வர்ணம் தீட்டுவதில் அல்லாஹ்வை விட அழகானவன் வேறு யார்? நாங்கள் அவனையே வழிபடுபவர்கள் ஆவோம் என்று கூறுங்கள். (குர்ஆன் 2 : 138)
– Rahmath Rajakumaran