உம்மி
முஸ்லிம்களுக்கும் மக்கத்துக் குரைஷிகளுக்கும் இடையே ஹுதையிய்யாவில சமாதான உடன்படிக்கை கையெழுத்து ஆகும் சமயம்…
உடன்படிக்கை ஆவணத்தில் நபி பெயருடன், “ரசூலல்லாஹ்” என்று சேர்த்து எழுதி இருந்ததை இறை மறுப்பாளர்கள் எதிர்த்தார்கள்.
நபியை தாங்கள் இறைவனின் தூதர் என்று ஒப்புக் கொள்ளவில்லை அவர்களது தந்தையார் பெயர் அப்துல்லாஹ் எனவே அவர்களை ரசூலல்லாஹ் என்று குறிப்பிடாமல் தந்தையின் பெயரைத் தம் பெயருடன் அதாவது முஹம்மது பின் அப்துல்லாஹ் என்று சேர்த்து எழுத வேண்டும் என்று வாதிட்டனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது மீது மரியாதையும் மேலான தன் உயிரையும் வைத்திருந்த அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ரசூலல்லாஹ் என்ற வார்த்தையை அடிக்க மறுத்து விட்டார்கள்.
உடனே “ரசூலல்லாஹ்” என்ற வார்த்தை இருக்குமிடத்தை காட்டுமாறு அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள். அதைக் காட்டியதும் நபிஸல் அவர்கள் தம் கையாலேயே குறுக்கிட்டு கோடிட்டு அடித்தார்கள்
பொதுவாக எழுதப் படிக்க தெரியாதவர்கள் தங்களின் பெயரின் வரி வடிவ அமைப்பான எழுத்துக்களை தெரிந்து இருப்பார்கள் ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பூர்ணமாக எழுத்து அட்சரத்தை அல்லாஹ் அவர்களுக்கு அளிக்கவில்லை.
காரணம் குர்ஆன் பரிபூர்ணமாகவே அல்லாஹ்விடமிருந்துதான் வந்துள்ளது என்பதை இதன் முலம் அல்லாஹ் நமக்கு தெரியப்படுத்தியுள்ளான்.
-ரஹ்மத் ராஜகுமாரன்