வீரமங்கை ஜெய்னபுல் கஸ்ஸாலி
சாலிஹான பெண் என்பவள் அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிமையாகவும் தன் கணவனுக்கு அன்புள்ள மனைவியாகவும் இருப்பதோடு இந்த சமூகத்திற்கும் உபயோகமுள்ள ஒரு பெண்ணாக வாழ வேணடாமா?
இன்று தமிழகத்தில் முஸ்லிம் பெண்களுக்காக போராடுவதற்காக ஆண்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் ஒரு பெண் தலைவர்களாவது சமூகத்திற்கு குரல் கொடுப்பதற்கு உள்ளார்களா?
ஆனால் வருடந்தோறும் 6000 பெண் ஆலிம்கள் வெளிவருகிறார்கள் எங்கே செல்கிறார்கள் இவர்கள் எல்லாம்? ஒரு ஆணிற்கு அடிமையாகவா? எதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? சோதனையே இல்லாமல் சுவர்க்கம் நுழைவதற்கா?
அல்லாஹ் போராடச் சொல்லியும் தீமையை தடுக்கவும் ஆண்களுக்குத் மட்டும் தான் கட்டளையிட்டுள்ளானா? பெண்களுக்கு அந்த பொறுப்புகள் இல்லையா?
புர்காவிற்கு எதிர்ப்பு கிளம்பும் பொழுது ஏன் உங்களில் ஒரு தலைவரை உருவாக்கி இது எங்கள் உரிமை இது எங்கள் பாதுகாப்பு என வெளிப்படையாக அறிவிக்க முடியவில்லையே ஏன் சகோதரிகளே! உலகத்தில் கிடைக்க கூடிய அற்ப சந்தோசங்களுக்கு அடிபணிந்து விட்டீர்களா?
திருமணம் என்பது உங்களை அடிமைப்படுத்துவதற்கு அல்ல சகோதரிகளே மாறாக, அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக போராடக் கூடிய முஃமீன்களை இந்த உலகிற்கு அளிப்பதற்காகத்தான். அப்படிப்பட்ட முஃமீன்களை எப்படி உருவாக்குவீர்கள், உங்களை பார்த்து தானே உங்கள் குழந்தை வளரும்.
நீங்கள் இந்த மார்க்கத்திற்காக போராட நினைக்கும் போது தான் உங்களுடைய குழந்தையும் அதே போராட்ட குணம் கொண்டு வளரும். இப்படிப்பட்ட குழந்தைகளை உருவாக்குவது நம் மீது கடமையள்ளவா?
இஸ்லாத்தில் அல்லாஹ் முதன் முதலில் ஷஹீத் அந்தஸ்தை கொடுத்து சிறப்பித்தது கூட சுமையா ரளியல்லாஹு அன்ஹா என்ற பெண்மணிக்குத் தானே! சிந்தியுங்கள் சகோதரிகளே! ஜிஹாதுடைய களம் பெண்களுடையதும் அல்லவா!
ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணும கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு நபர் ஜெய்னபுல் கஸ்ஸாஸி! அவர்கள் அவர்களது வாழ்வை படியுங்கள் சகோதரிகளே! அவரின் வரலாற்றை படிக்கும் போது ஒருபெண்ணுடைய பங்கு இந்த இஸ்லாமிய சமூகத்திற்கு எவ்வளவு தேவை என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.
நாம் சஹாபாக்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை கற்பனை செய்தும் பார்க்க முடியாது அவர்களுக்கு ஏற்பட்ட சோதனையை ஒரு பெண்மணி நிகழ்காலத்தில் அனுபவித்தார் என்றால் நம்ப முடிகிறதா?
அவர்களின் வாழ்க்கை ஒவ்வொரு முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையாக அமைய வேண்டும் இன்ஷா அல்லாஹ் என் சமூகத்தின் பெண்களின் நிலை மாற வேண்டும். இனி என் சமுதாய பெண்கள் ஒரு எழுத்தாளராகவோ, சமூகத்தின் பிரச்சனைக்கு குரல் கொடுக்கும் ஒரு சமூக போராளியாகவோ எழுச்சிமிகு பணிகளில் எல்லாம நம் சமுதாய பெண்கள் முன்னேற வேண்டும்.
ஜெய்னபுல் கஸ்ஸாலி அவர்களை தெரிந்து கொள்வதற்காக இந்த புத்தகம் உதவியாக அமையும்.
-அபூ சித்திக்