தேன் ஏன் கெட்டுப் போவதில்லை?
தேனீ மலர்களிலிருந்து சேகரிக்கும் தேனை அப்படியே வைத்துக் கொள்வதில்லை கூட்டுக்குச் செல்லும் போது அதறகென்று ஸ்பெஷலாக வயிற்றுக்குள் ஒரு பை வைத்திருக்கிறது அதில்தான் கொண்டு போகிறது.
வயிற்றில் இருந்து இந்தப் பையைப் பிரிக்கக் குட்டியாக வால்வு இருக்கிறது சமூகத்துக்கு வேண்டியதைச் சொந்தமாகச் சாப்பிடாமல் பாதுகாக்க…!
இந்த பையில் இருக்கையில் பூந்தேன் சில இரசாயன மாறுதல்களுக்கு உள்ளாகிறது அதிலிருக்கும் சர்க்கரை வகைகள் மாறுகின்றன.
தேன் இந்த மாறுதலுக்குப் பின் தேன் கூட்டில் சேகரித்து வைக்கப்படுகிறது.
கூட்டின் சூடும் காற்றோட்டமும் சேர்ந்துக் கொண்டு தேன் இறுகுகிறது அதில் இருக்கும் ஈரம் தண்ணீர் பெரும்பாலும் நீக்கப்பட்டு விடுகிறது மேலும் தேனீ தன் இறக்கையாலும் விசிறியடித்தும் தேனை இறுக வைக்கிறது.
இந்த விதத்தில் பழுத்து நீர் நீக்கப்படுவதாலும் ரசாயன வகையில் தேனீயின் வயிற்றில் மாற்றம் ஏற்படுவதாலும் தேன் ரொம்ப காலம் கெடாமல் இருக்கிறது.
எகிப்து நாட்டு மம்மி எனப்படும் மனித உடலைப் பதப்படுத்தி அவர் விரும்பும் தங்க ஆபரணங்கள் அவர் உயிர்தெழுந்ததும் சாப்பிடுவதற்கு ஒரு பெரிய புட்டியில் தேனும் வைக்கப்பட்டிருந்தது நேற்றோடு 4000 வருஷம் முடிந்தும் இன்று வரை கெட்டுப் போகவில்லை.
இதற்கு தேன் அடையில் தயாரிக்கப்பட வேண்டும் கடையில் இல்லை.
“நீ ஒவ்வொரு புஷ்பத்தில் இருந்தும் புசித்து உனதிறைவன் உனக்கு அறிவித்த எளிதான வழியில் உன்னுடைய கூட்டிற்குள் ஒடுங்கிக் கொள் எனக் கட்டளையிட்டான்.
இதனால் இதன் வயிற்றில் இருந்து பல நிறங்களுடைய ஒரு பானம்
(தேன்) வெளியாகிறது.
அதில் மனிதர்களுக்கு நிவாரணம் உண்டு நிச்சயமாக இதிலும் சிந்திக்க கூடிய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (குர்ஆன் 16 : 69)
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்கள்; “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இனிப்புப் பொருட்களையும் தேனையும் விரும்பி(ச் சாப்பிட்டு) வந்தார்கள்.”
தேனைப் பற்றி வேறு எந்த வேதத்திலும் சொல்லப்படவில்லை.
–Rahmath Rajakumaran