“இத்தா”வின் வகைகள்
இத்தா நான்கு வகைகளாக உள்ளது :
1. கற்பிணியின் ‘இத்தா’ இது குழந்தை பிரசவத்துடன் முடிவடைகிறது. உயிரோடு இருக்கும்போது வாழ்க்கை யில் பிரிவு ஏற்பட்டாலோ, கணவன் இறந்த பெண்ணாக இருந்தாலோ இந்த இத்தா நிகழ்கிறது.
”கற்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய இத்தாவின் தவணை அவர்கள் பிரசவமாகும் வரையிலாகும்.” (அல்குர்ஆன் 65:4)
2. மாதவிடாய்வந்து கொண்டிருக்கும் பெண் தலாக் சொல்லப்பட்டால் அவளுடைய ‘இத்தா’ மூன்று மாதவிடாய்களாகும்.
”தலாக்’ கூறப்பட்ட பெண்கள் தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும் வரை பொறுத்(து காத்)திருக்க வேண்டும்.” (அல்குர்ஆன் 2:228)
3. மாதவிடாய் இல்லாத பெண்களின் இத்தா இரண்டு வகையாக உள்ளது. ஒன்று, மாதவிடாய் ஏற்படாத சிறிய பெண். இரண்டு, மாதவிடாய் நின்றுபோன வயது முதிர்ந்த பெண். இந்த இரண்டு வகைப் பெண்களின் நிலை குறித்தும் அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்.
”மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடு வது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாத பெண்களுக்கும் இத்தாவின் தவணை மூன்று மாதங்களாகும்.” (அல்குர்ஆன் 65:4)
4. கணவன் இறந்துபோன பெண்ணுடைய இத்தாவைப் பற்றி குர்ஆன் கூறும்போது.
”உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித் தால் அம்மனைவியர் நான்குமாதம் பத்துநாள் பொறுத்(து காத்)திருக்க வேண்டும்.” (அல்குர்ஆன் 2:234)
உடலுறவு கொள்ளப்பட்ட பெண், சிறிய பெண், பெரிய பெண் எல்லோருக்கும் இது பொருந்தும். கற்பினி பெண்ணிற்கு மட்டும் இது பொருந்தாது. ஏனெனில், அவள் பின்வரும் இறை வசனத்தின் மூலம் விதிவிலக்கைப் பெறுகிறாள்.
”கற்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய இத்தா வின் தவணை அவர்கள் பிரசவமாகும் வரையிலாகும்.” (அல்குர்ஆன் 65:4) (அல்ஹதியுந் நபவீ 5ழூ ழூ594, 595)
இத்தாவிலிருக்கும் பெண்கள் மீது விலக்கப்பட்டவை :
1. ஒரு முறையோ இரண்டு முறையோ ‘தலாக்’ சொல்லப் பட்ட பெண் இத்தாவில் இருக்கும்போது வெளிப் படையாகவோ, சைக்கினையாகவும் அவளைத் திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தில் மற்றவர் பெண் பேசுவது தடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அவள் இத்தா காலத்தில் இருக்கும் வரை கணவன், மனைவி என்ற சட்டத்தின் அடிப்படையிலேயே இருக்கிறார்கள். எனவே அவளிடம் வேறு நபர் திருமணப்பேச்சுக்கள் பேசக்கூடாது. இத்தாகாலம் முடியும் வரை அவள் தன் னுடைய கணவனின் பாதுகாப்பில்தான் இருக்கிறாள் என்பதையும் கவனிக்க!
2. மூன்று தடவை ‘தலாக்’ சொல்லப்பட்ட பெண்ணிடம் இத்தாவின்போது சைக்கினையாகவோ, பம்ரங்க மாகவோ, பெண் பேசுவது கூடாது.
”இத்தா இருக்கும் பெண்ணுடன் திருமணம் செய்யக் கருதி (அது பற்றிக்) சைக்கினையாக எடுத்துரைப்பதிலோ, அல்லது மனதில் மறைவாக வைத்திருப்பதிலோ உங்கள் மீது குற்றமில்லை.” (அல்குர்ஆன்: 2:235)
வெளிப்படையாக பெண் பேசுவது என்பது அவளைத் திருமணம் செய்யும் விருப்பத்தைத் தெரிவிப் பது நான் உன்னைத் திருமணம் செய்யவிரும்புகின்றேன். என்று கூறுவது. ஏனெனில், அவள் தன்னுடைய இத்தா காலம் முடிவதற்கு முன்னரே திருமண ஆசையின் காரண மாக ‘இத்தா’ காலம் முடிந்து விட்டதாகக் கூறக்கூடும்.
அதே நேரத்தில் சைக்கினையாகச் சொல்வது என்பது அவ்வாறல்ல. ஏனெனில், அவளைத் திருமணம் செய்வது தெளிவுபடுத்தப்படவில்லை. அதனால் எவ்விதப் பிரச்சி னையும் ஏற்படப் போவதில்லை. மேலும் குர்ஆன் வசனத் திலிருந்து இவ்வாறே விளங்க முடிகிறது.
சைக்கிணையாகப் பெண் பேசுவது என்பது, உன்னை போன்றவர்களில் நான் ஆசை வைத்துள் ளேன்.என்று கூறுவது, முழுமையாக தலாக் சொல்லப் பட்டவரிடம், சைக்கிணையாக இவ்வாறு சொல்லும் போது அவளும் அவ்வாறு பதில் சொல்வதில் தவறில்லை. அப்படியே யாரேனும் வெளிப்படையாகத் திருமண விருப்பம் தெரிவிக்கும்போது அவள் பதில் சொல்லக் கூடாது. ஒரு முறையோ இரண்டு முறையோ தலாக் சொல்லப்பட்டவள் தன்னைப் பெண் பேசுகிறவனுக்கு வெளிப்படையாகவோ, சைக்கிணையாகவோ பதில் சொல்லக்கூடாது.
‘இத்தா’ காலத்தில் திருமண ஒப்பந்தம் செய்யக் கூடாது :
அல்லாஹ் கூறுகிறான்: ”மேலும் ‘இத்தா’வின் கெடுமுடியும் வரை திருமண பந்தத்தைப் பற்றித் தீர்மானித்து விடாதீர்கள்.” (அல்குர்ஆன் 2:235)
இமாம் இப்னுகªர் தம் தப்ªரில் 1ழூ ழூ509 ல் கூறுகிறார்கள்.
இத்தாகாலம் முடியும் வரை திருமண ஒப்பந்தம் செய்யாதீர்கள். இத்தா காலத்தில் திருமண ஒப்பந்தம் செய்தால் அது செல்லாதும் என அறிஞர்கள் அனைவரும் கூறியுள்ளார்கள்.
இரண்டு விஷயங்கள் தெளிவு படுத்தப்பட்டுள்ளன :
1. திருமணமான பின்னர் உடலுறவு கொள்வதற்கு முன்பாக ஒருவர் விவாகரத்து செய்து விடுவாரானால் இந்த நிலையில் உள்ள பெண்ணுக்கு ‘இத்தா’ கிடையாது.
அல்லாஹ் கூறுகிறான்:
இறை நம்பிக்கையாளர்களே! இறை நம்பிக்கையு டைய பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களை தொடுவதற்கு முன்னரே விவாகரத்துச் செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக்கூடிய தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை.ம் (அல்குர்ஆன் 33:49)
இமாம் இப்னு கªர் தம் தப்ªர் 5ழூ ழூ479 ல் குறிப்பிடுகிறார். இது மார்க்க அறிஞர்களிடையே ஏகோபித்த முடிவாகும். அதாவது ஒரு பெண் திருமண மாம் அவளுடன் உடலுறவு கொளவ்தற்கு முன்பாக கணவன் விவாகரத்து செய்துவிட்டால் அவள் ‘இத்தா’ அனுஷ்டிக்க வேண்டிய அவசியமில்லை. உடனேயே அவள் விரும்பிய வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொள்ளலாம்.
2. ஒரு பெண் திருமணமாம் உடலுறவு கொள்வதற்கு முன்பாக கணவன் விவாகரத்துச் செய்துவிட்டால், அதே நேரத்தில் மஹர் தொகை குறிப்பிடப்பட்டிருக்குமானால் அதில் நேர்பகுதி பெண்ணுக்குக் கொடுக்கப் பட வேண்டும். மஹர் தொகை குறிப்பிடப்படாத போது அவளுக்குரிய உடை, உணவு போன்ற தேவை யானவற்றை முடிந்த அளவு கணவன் அவளுக்குக் கொடுக்கவேண்டும்.
திருமணமாகி உடலுறவு கொண்ட பின்னர் விவாகரத்துச் சொல்வானானால் பெண்ணிற்குரிய முழு மஹரையும் கொடுத்துவிடவேண்டும்.
பெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களுக்கான மஹரை நிர்ணயம் செய்வதற்கு முன்பு ‘தலாக்’ சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை. என்றாலும் அவர்களுக்கு பயனுள்ள பொருட்களைக் கொடுத்து உதவுங்கள். அதாவது செல்வம் படைத்தவன் அவனுக்கு தக்க அளவும், ஏழை அவனுக்கு தக்க அளவும் கொடுத்து நியாயமான முறையில் உதவி செய்தல் வேண்டும். இது நல்லோர் மீது கடமையாகும்.
”ஆயினும், அப்பெண்களைத் தீண்டுவதற்கு முன்பு மஹர் நிச்சயித்த பின்னர் நீங்கள் ‘தலாக்’ சொல்வீர்களானால் நீங்கள் குறிப்பிட்டிருந்த மஹர் தொகையில் பாதி (அவர்களுக்கு) உண்டு.” (அல்குர்ஆன் 2:236, 237)
அதாவது கணவன்மார்களே! நீங்கள் திருமணம் செய்த பெண்ணை உடலுறவு கொள்வதற்கும், மஹ்ரை நிச்சயிப்பதற்கும் முன் விவாகரத்து சொல்வதில் குற்ற மில்லை. அதே நேரத்தில் இதனால் அவளுக்கு மன உளைச்சல் ஏற்படுமானால் அதற்குப் பரிகாரமாக அவளுக்கு கணவனின் நிலமையை அனுசரித்து உதவி செய்யவேண்டும். வசதியுள்ளவன் அதிகமாகவும், வசதி யற்றவன் குறைவாகவும் கொடுக்கவேண்டும்.
மஹர் தொகையை நிச்சயித்தவன் பாதி மஹரை கொடுக்க வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்.
இமாம் இப்னுகªர் தம் தப்ªரில் 1ழூ ழூ512 ல் கூறுகிறார்.
இந்நிலையில் அதாவது மஹர் தொகையை நிச்சயிய்த்து உடல் உறவு கொள்வதற்கு முன்னர் தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு பாதி மஹர் கொடுக்க வேண்டும் என்பதை மார்க்க அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர்.
3. கணவன் இறந்துபோன பெண் மீது ஐந்து விஷயங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. :
1. நறுமணம் உபயோகித்தல்
கணவன் இறந்த பெண் இத்தாவில் இருக்கும்போது எந்தவிதமான நறுமணத்தையும் உடலிலோ, ஆடையிலோ உபயோகிக்கலாகாது. இவ்வாறே வாசனைப் பொருட் களையும் பயன்படுத்துவது கூடாது.
”கணவன் இறந்து இத்தாவில் இருக்கும்போது வாசனைப் பொருட்களைத் தொடக்கூடாது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
2. உடல் அலங்காரம்
உடலில் மைலாஞ்சி போன்ற சாயம் இடுதல், அலங்காரம் செய்யும் நோக்கத்தில் சுருமா இடுதல், தோல் அலங்காரப் பொருட்களைப் பயன்படுத்துதல் கூடாது. அத்தியாவசிய தேவைக்காக அலங்கார நோக்கமின்றி மருத்துவ சிம்ச்சை என்ற முறையில் சுருமா இடுவது கூடும். அவள் இரவில் சுருமா இட்டுவிட்டு பகலில் துடைத்துவிட வேண்டும். சுருமா அல்லாத அலங்காரமில்லாத மற்ற பொருள்களைக் கொண்டு கண்ணிற்கு மருந்திடுவதும் குற்றமில்லை.
3. ஆடையில் அலங்காரம்
கணவன் இறந்து இத்தாவில் இருக்கும் பெண் ஆடை அலங்காரம் செய்வதும் கூடாது அலங்காரமில்லாத ஆடையை அவள் அணியவேண்டும். சாதாரண பழக்கத் தில் உள்ளது போல் அவள் ஒரு குறிப்பிட்ட நிறமுள்ள ஆடையைத்தான் அணிய வேண்டும் என்பது கிடையாது.
4. ஆபரணங்கள் அணிதல்
மோதிரம் உள்பட ஆபரணங்கள் அணிதல் கூடாது. :
5. அவள் எந்த வீட்டில் இருக்கும் போது கணவன் இறந்தானோ அந்த வீட்டை விட்டு மார்க்க அடிப் படையான எவ்வித காரணமுமின்றி வேறு வீட்டில் இரவு தங்கக்கூடாது. மார்க்க அடிப்படையிலான எவ்வித காரணமுமின்றி, தன் வீட்டை விட்டு வேறு வீட்டிற்குச் செல்லக்கூடாது நோய் விசாரிப்பதற் காகவும் செல்லக்கூடாது. தோழிகளையோ உறவின ரையோ சந்திப்பதற்கும் வெளியே செல்லக் கூடாது. அவசரத் தேவைக்காக வேண்டி பகல் நேரம் வெளியே செல்வதில் தவறில்லை. இந்த ஐந்து விஷயங்களைத் தவிர அல்லாஹ் அனுமதித்துள்ள வேறு எந்த விஷயங் களை விட்டும் அவளைத் தடுக்கக்கூடாது.
இமாம் இப்னுல் கையிம் அவர்கள் அல்ஹதந் நபவி என்ற நூலில் 5ழூ ழூ507 ல் குறிப்பிடுகிறார்கள்.
நகம் வெட்டுதல், அக்குள் முடிகளைதல், நீக்குதல் சுன்னத்தாக்கப்பட்ட முடிகளை நீக்குதல், இலந்தை இலை போட்டுக் குளித்தல், தலை முடி கோருதல் போன்ற செய்லகளைச் செய்வதை விட்டும் இத்தாவில் இருக்கும் பெண்களைத் தடுப்பது கூடாது.
இமாம் இப்னு தைமிய்யா தம் ஃபத்வா தொகுப்பு 34ழூ ழூ27, 28 ல் குறிப்பிடுகிறார்.
இத்தாவில் இருக்கின்ற பெண் அல்லாஹ் அனுமதித்த பழங்கள், இறைச்சி போன்ற எல்லாப் பொருட்களையும் உண்ணுவது அவளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அனு மதிக்கப்பட்ட எல்லா பாணங்களையும் அவள் அருந்தலாம். நூல்நூற்றல், தையல், போன்ற பெண்கள் செய்கின்ற அனுமதிக்கப்பட்ட எந்த வேலையைச் செய்வதும் அவள் மீது தடை இல்லை.
இத்தா அல்லாத காலத்தில் அவளுக்கு என்ன அனுமதிக்கப்பட்டுள்ளதோ அது ‘இத்தா’ காலத்திலும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அவள் தேவைப் படும்போது ஆண்களுடன் திரைக்குப் பின்னால் பேசுவது போன்றவை அவளுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. இதுதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழி முறையாகும். இப்படித்தான் ஸஹாபிய பெண்மணிகள் அவர்களுடைய கணவன் மார்கள் இறந்துபோனப் பின்னர் வாழ்ந்துள்ளார்கள்.
சில பாமர மக்கள் கூறுவது போன்று அவள் சந்திரனை விட்டும் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டும் வீட்டுமாடியில் ஏறக் கூடாது, ஆண்களுடன் திரைமறைவிற்குப் பின்னால் கூட பேசக் கூடாது. திருமணம் செய்வது தடுக்கப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்கள் முன்பும் முகத்தை மறைக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை.