Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இஸ்லாமிய போர் நெறிமுறை!

Posted on May 4, 2016 by admin

இஸ்லாமிய போர் நெறிமுறை!

    Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)    

முஸ்லிம்கள்   போர்களில், மற்ற மத அரசர்கள் போலல்லாது தர்மம் காத்து, நெறி தவறாது நடந்து கொண்டனர் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்களுக்குப் பின்னால் பதவியேற்ற கலிபாக்களும், அலி ரளியல்லாஹு அன்ஹு மற்றும் காலித் ரளியல்லாஹு அன்ஹு போன்ற தளபதிகளும், அதன் பின்பு சிலுவை யுத்தத்தில் இஸ்லாமிய கொடியினை ஜெருசலத்தில் நிலை நாட்டிய வீரத் தளபதி சலாஹுத்தீன் போன்றோர் போர்களில் மாற்று மதத்தினர் கவுரவம் பாதிக்காது நடந்து கொண்டார்கள் என்றும், முஸ்லிம்கள்   தங்கள் மார்க்கத்தினை வாள் கொண்டு பரப்பவில்லை, மாறாக மற்ற மதம், இனத்தினவரை அன்பு, பாசத்தால் அரவணைத்து பாதுகாக்கும் போர் வீரர்களாக இருந்து மார்க்கம் பரவ ஊன்று கோலாக இருந்துள்ளனர் என்பதினை வரலாற்று ஆசிர்யர்கள் பொன் எழுத்துக்களால் பொறித்துள்ளனர்.

ரசூலல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போரிட நேர்ந்த போதோ அல்லது தளபதிகளுக்கு வேற்று நாடுகளுக்குபோருக்காக கட்டளைகள் பிறப்பித்து அனுப்பும்போதோ, கடுமையான கட்டுப்பாடு மிகுந்த உத்தரவுகளை பிறப்பித்தார்கள். உதாரணத்திற்கு, பயிர்களை, உணவினைதரும் கனி வர்க்க மரங்களை, நீர் நிலைகளை, குடியிருக்கும் வீடுகளை சேதப் படுத்தாதும், முதியோர்,நோயாளிகள், பெண்கள், குழந்தைகளை, புறமுதுகிட்டு ஒடுவோர்களையும், வளர்ப்பு பிராணிகளையும் கொன்று குவிக்கவோ அல்லது துன்புறுத்தவோ கூடாது என்று கட்டளை இட்டார்கள்.

போருக்குச் செல்லும் தளபதிகள் முதலில் மார்க்க அழைப்பினை விடுப்பர். அதை ஏற்காது எதிர்த்து நின்ற இறை மறுப்பாலர்களைத் தான் இஸ்லாமிய படைகள் போரிட்டனர். ஆனால் இஸ்லாமிய படைகளின் வலிமை, மார்க்கத்தின் அருமை, பெருமை தெரிந்த இறை மறுப்பாலர்களுடன்,சமாதான உடன்படிக்கைகள் மேற் கொண்டர் என்பதிற்கு எடுத்துக்காட்டு தான், வரலாற்று சிறப்பு மிக்க ‘ஹுதைபியா’ உடன் படிக்கையாகும்.

போரில் கைப்பற்றப் பட்ட செல்வங்களை போர் வீரர்களோ, தளபதிகளோ, கலீபாக்களோ அபகரித்துக் கொள்ளாது அத்தனை செல்வங்களும் அரசுடமை ஆக்கப் பட்டு, அனைத்து மக்களுக்கும் பகிர்ந்து வழங்கி சமவுடமை தத்துவத்திற்கு சிறந்த உதாரணமாக விளங்கியது இஸ்லாமியப் போர்கள்.

இஸ்லாமிய மார்க்கத்தினர் எதிரிகளுடன் நேருக்கு நேர் தங்கள் மார்க்கத்தின் கொடியினை தூக்கி நிறுத்த புனிதப் போரிடும் போது உயிரிழந்தவர்களுக்கு ஷஹீதானவர்கள் பட்டியலில் அல்லாஹுத்தாலா ஜென்னத்துல் பிர்தௌசில் நுழையச் செய்வான். ஆனால் ஏக இறைவன் கொடுத்த மனித உயிரினை, கோழைத் தனமாக எதிரிகளை தாக்குகிறோம் என்று சொல்லி, தற்கொலைப் படை அமைத்து, வெடிகுண்டு கலாச்சாரத்தில் தாக்குவதின் மூலம் எதிரிகள் மட்டும் அல்லாது மூமினான அப்பாவி சகோதர, சகோதரிகள், வயதானவர்கள், குழந்தைகள் மடிந்தும், காயம்பட்டும், கை, கால்கள், கண்கள் இழந்தும் கஷ்டப் பதுவதினை இஸ்லாமிய மார்க்கம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.

ரசூலல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதித்த போர் நெறிகளை மேலை நாடுகள் கடைப் பிடித்து இருப்பார்களேயானால் இரண்டாம் உலகப் போரில், ஜப்பான் நாட்டின் நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி போன்றவற்றில் மனித இனம் கொல்லி அணுகுண்டினை வீசி, அந்த நகரங்களை கூண்டோடு அழித்து இருக்க மாட்டார்கள். அது மட்டுமல்ல, தீவிரவாதிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் ஆப்கானிஷ்தான், ஈராக்,லிபியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஆளில்லா விமானங்களை அனுப்பி பல்வேறு இடங்களில் வாழும் அப்பாவி மக்களை அழித்திருக்க மாட்டார்கள்.

அத்துடன் மற்ற அரசுகளின் உள் விவகாரங்களில் தலை இடவோ அல்லது அந்த நாடுகளின் இறையான்மையினை நசுக்கவோ முயன்றிருக்க மாட்டார்கள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அதுபோன்ற செயல்களில் ஈடு பட்டதால் அந்த நாடுகளின் தலைவர்கள் பதவி இழந்தும், பொருளாதார வீழ்ச்சியும் கண்டார்கள் என்பது இன்றைய உலகில் நடந்த உண்மை நிகழ்வு ஆகும். ஆகவே இஸ்லாமிய போர் நெறிமுறைகளை ஐக்கிய நாடுகளின் சபை ஏற்று அவைகளை மேலை நாடுகளும், மற்ற நாடுகளும் கடைப் பிடிக்கச் சொல்வதின் மூலம் சர்வதேச சமூதாயத்தின் அமைதியினை நிலை நாட்ட முடியுமல்லவா?

-A.P.முஹம்மது அலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

26 + = 29

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb