தப்லீக் ஜமாஅத்தைப் பற்றி சிறந்த இஸ்லாமிய அறிஞர்கள் வழங்கியிருக்கும் தீர்ப்புக்கள்
(ﺃﻗﻮﺍﻝ ﺍﻟﻌﻠﻤﺎﺀ ﺍﻷﺟﻼﺀ ﻋﻦ ﺿﻼﻟﺔ ﺟﻤﺎﻋﺔ ﺍﻟﺘﺒﻠﻴﻎ ( ﺟﻤﺎﻋﺔ ﺍﻷﺣﺒﺎﺏ
1: ﻗﺎﻝ ﺍﻟﺸﻴﺦ ﺳﻌﺪ ﺍﻟﺤﺼﻴﻦ ﺭﺣﻤﻪ ﷲ :
ﺟﻤﺎﻋﺔ _ ﺍﻟﺘﺒﻠﻴﻎ ﺃﺷﻌﺮﻳﺔ ﻣﺎﺗﺮﻳﺪﻳﺔ ﻓﻲ
ﺍﻟﻌﻘﻴﺪﺓ ، ﺟـﺸﺘﻴﺔ ، ﻧﻘﺸﺒﻨﺪﻳﺔ ، ﻗﺎﺩﺭﻳﺔ
ﺳﻬﺮﻭﺭﺩﻳﺔ ، ﺻﻮﻓﻴﺔ !
ﺣﻘﻴﻘﺔ ﺍﻟﺪﻋﻮﺓ ٧٠
1: அஷ் ஷைக் ஸஃத் அல் ஹுஸைன் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் :
“தப்லீக் ஜமாஅத் அகீதா எனும் அடிப்படைக் கொள்கையில் அஷ்அரிய்யா, மற்றும் மாதுரீதிய்யாவை சார்ந்ததாகும். அத்தோடு (தரீக்காவாதிகளின் பிரிவுகளான) ஜிஷ்திய்யா, நக்ஷபந்திய்யா, காதிரிய்யா, ஸஹ்ரூர்திய்யா, சூபிய்யா போன்றவற்றையும் சார்ந்தாகும் (பல பிரிவுகளின் கலவை)”
( ஹகீகதுத் தஃவா : 70)
2: ﻗﺎﻝ ﺍﻹﻣﺎﻡ ﺍﻷﻟﺒﺎﻧﻲ ﺭﺣﻤﻪ ﺍﻟﻠﻪ :
” ﺧﻼﺻﺔ ﺟﻤﺎﻋﺔ ﺍﻟﺘﺒﻠﻴﻎ :
ﺟﻤﺎﻋﺔ ﺍﻟﺘﺒﻠﻴﻎ ﺻﻮﻓﻴﺔ ﻋﺼﺮﻳﺔ “
ﺍﻟﻬﺪﻯ ﻭﺍﻟﻨﻮﺭ ٧١٥
2 : இமாம் அல் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் :
“தப்லீக் ஜமாஅத்தினர் என்போர் தற்கால சூபித்துவ வாதிகள்.”
( அல் ஹுதா வன் நூர் : 715)
3: ﻗﺎﻝ ﺍﻟﻌﻼّﻣﺔ ﺣﻤﻮﺩ ﺍﻟﺘﻮﻳﺠﺮﻱ :
” ﻣﻦ ﻛﺎﻥ ﻋﺎﻟﻤﺎً ﺑﺄﻥ ﺍﻟﺘﺒﻠﻴﻐﻴﻴﻦ ﻣﻦ ﺃﻫﻞ
ﺍﻟﺒﺪﻉ ﻭﻫﻮ ﻣﻊ ﻫﺬﺍ ﻳﻤﺪﺣﻬﻢ ﻓﺈﻧّﻪ ﻳﻠﺤﻖ
ﺑﻬﻢ “
ﺍﻟﻘﻮﻝ ﺍﻟﺒﻠﻴﻎ ٢٣٠
3: அல்லாமா ஹமூத் அத் துவைஜிரீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள் :
“யார் ஒருவர், தப்லீக் ஜமாஅத்தினர், பித்அத் எனும் மார்க்கத்தில் இல்லாதவற்றை நடைமுறைப்படுத்தும் கூட்டம் என்று தெரிந்திருந்தும் அவர்களைப் புகழ்வாரோ அவர் அவர்களைச் சார்ந்தவராவார்”
( அல் கௌலுல் முபீத் : 213 )
4: ﻗﺎﻝ ﺍﻟﺸﻴﺦ ﺣﻤّﺎﺩ ﺍﻷﻧﺼﺎﺭﻱ ﺭﺣﻤﻪ ﷲ :
” ﻛﻞ ﻣﻦ ﻛﺎﻥ ﻋﻠﻰ ﻓﻜﺮ ﻣﺨﺎﻟﻒ ﻷﻫﻞ
ﺍﻟﺴﻨﺔ ﻓﻠﻴﺲ ﻣﻨﻬﻢ ﻓﺠﻤﺎﻋﺔ ﺍﻹﺧﻮﺍﻥ
ﻭﺍﻟﺘﺒﻠﻴﻎ ﻟﻴﺴﻮﺍ ﻣﻦ ﺃﻫﻞ ﺍﻟﺴﻨﺔ “
ﺍﻟﻤﺠﻤﻮﻉ ٧٦٣/ ٢
4: அஷ் ஷைக் ஹம்மாத் அல் அன்ஸாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள் :
“யாரெல்லாம் அஹ்லுஸ் ஸுன்னா எனும் நேர்வழியில் செல்லும் கூட்டத்திற்கு மாற்றமான சிந்தனையில் இருக்கின்றனரோ அவர்கள் அந்த அஹ்லுஸ் ஸுன்னாவைச் சேர்ந்தவர்கள் அல்லர், சகோதரத்துவ இயக்கமும், தப்லீக் ஜமாஅத்தும் அஹ்லுஸ் ஸுன்னாவில் உள்ளவர்கள் அல்லர்”
( அல் மஜ்மூஉ : 2/763)
5: ﻗﺎﻝ ﺍﻟﺸﻴﺦ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺇﺑﺮﺍﻫﻴﻢ ﺁﻝ ﺍﻟﺸﻴﺦ ﺭﺣﻤﻪ ﺍﻟﻠﻪ :
” ﺟﻤﺎﻋﺔ _ ﺍﻟﺘﺒﻠﻴﻎ ﺗﺸﺘﻤﻞ ﻋﻠﻰ ﺍﻟﻀﻼﻝ
ﻭﺍﻟﺒﺪﻋﺔ ﻭﺍﻟﺪﻋﻮﺓ ﺇﻟﻰ ﺍﻟﺸﺮﻙ ﻭﻋﺒﺎﺩﺓ ﺍﻟﻘﺒﻮﺭ “
ﺍﻟﻔﺘﺎﻭﻯ ٢٦٧/ ١
5: அஷ் ஷைக் முஹம்மத் இப்னு இப்ராஹீம் ஆலுஷ் ஷைக் அவர்கள் கூறுகிறார்கள் :
“தப்லீக் ஜமாஅத், வழிகேடு, பித்அத் எனும் மார்க்கத்தில் இல்லாதவற்றை நடைமுறைப் படுத்துதல், மற்றும் இணை வைப்பு, கப்ருகளை வணங்குதல் என்பனவற்றின் பால் அழைப்பு விடுத்தல் போன்ற அபத்தங்களை உள்ளடக்கிய ஒரு ஜமாஅத்”
( அல் பதாவா : 1/267 )
6: ﻗﺎﻝ ﺍﻟﻌﻼﻣﺔ ﻣﻘﺒﻞ ﺍﻟﻮﺍﺩﻋﻲ ﺭﺣﻤﻪ ﺍﻟﻠﻪ :
” ﺍﻷﻣﺮ ﺍﻟﺬﻱ ﻧﻌﺘﻘﺪﻩ ﺃﻥ ﺍﻹﺧﻮﺍﻥ ﺍﻟﻤﺴﻠﻤﻴﻦ
ﻣﺒﺘﺪﻋﺔ، ﻭﺃﻥ # ﺟﻤﺎﻋﺔ _ ﺍﻟﺘﺒﻠﻴﻎ ﻣﺒﺘﺪﻋﺔ “
ﺇﺟﺎﺑﺔ ﺍﻟﺴﺎﺋﻞ ٣٢٨
6: அல்லாமா முக்பில் அல் வாதிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள் :
“நாம் உறுதி கொள்ளும் விடயம் யாதெனில்; நச்சயமாக இக்வானுல் முஸ்லிமீன்களும் தப்லீக் ஜமாஅத்தினரும் மார்க்கத்தில் இல்லாதவற்றை செய்யும் பித்அத் வாதிகளாவர்.”
( இஜாபதுஸ் ஸாஇல் : 328 )
7: ﻗﺎﻝ ﺍﻹﻣﺎﻡ ﺑﻦ ﺑﺎﺯ ﺭﺣﻤﻪ ﷲ :
” ﺇﻥ ﺟﻤﺎﻋﺔ ﺍﻟﺘﺒﻠﻴﻎ ﻟﻴﺲ ﻋﻨﺪﻫﻢ
ﺑﺼﻴﺮﺓ ﻓﻲ ﻣﺴﺎﺋﻞ ﺍﻟﻌﻘﻴﺪﺓ ! “
ﻣﺠﻤﻮﻉ ﻓﺘﺎﻭﻯ ﺍﻟﺸﻴﺦ ﺍﺑﻦ ﺑﺎﺯ ٣٣١/ ٨
7: இமாம் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள் :
“தப்லீக் ஜமாஅத்தினருக்கு அகீதா எனும் அடிப்படைக் கொள்கை விவகாரங்களில் போதிய தெளிவு இல்லை.”
(மஜ்மூஉ பதாவாஷ் ஷைக் இப்னு பாஸ் : 8/331)
8: ﻗﺎﻝ ﺍﻟﻌﻼﻣﺔ ﻣﻘﺒﻞ ﺍﻟﻮﺍﺩﻋﻲ ﺭﺣﻤﻪ ﺍﻟﻠﻪ
ﻓﻲ ﺳﺆﺍﻝ ﻋﻦ # ﺟﻤﺎﻋﺔ _ ﺍﻟﺘﺒﻠﻴﻎ :
” ﻭﺩﻋﻮﺗُﻬﻢ ﻟﻮ ﻛﺎﻧﺖ ﻓﻲ ﺯﻣﻦ
ﺃﺑﻲ ﺟﻬﻞ ﻣﺎ ﺃﻧﻜﺮ ﻋﻠﻴﻬﻢ “
ﺗﺤﻔﺔ ﺍﻟﻤﺠﻴﺐ ﺹ ٦٨
8 : அல்லாமா முக்பில் இப்னுல் வாதிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள் :
“அபூ ஜஹ்லின் காலத்தில் இவர்களது அழைப்புப் பணி இருந்திருந்தால் அவன் இவர்களை மறுக்கமாட்டான்”
( துஹ்பதுல் முஜீப் : 68 )
9: ﺍﻟﻌﻼﻣﺔ ﺻﺎﻟﺢ ﺍﻟﻔﻮﺯﺍﻥ ﻋﻦ ﺟﻤﺎﻋﺔ ﺍﻟﺘﺒﻠﻴﻎ :
” ﻭﻧﺼﻴﺤﺘﻲ ﻟﻠﻌﻮﺍﻡ ﻭﻏﻴﺮ
ﺍﻟﻌﻮﺍﻡ : ﺃﻟَّﺎ ﻳﺼﺤﺒﻮﻫﻢ “
ﺍﻷﺟﻮﺑﺔ ﺍﻟﻤﻔﻴﺪﺓ ﺱ١٠٦
9: அல்லாமா ஸாலிஹ் அல் பௌஸான் அவர்கள் கூறுகிறார்கள் :
“பொதுமக்களுக்கும் ஏனையோருக்கும் எனது உபதேசம் என்னவெனில் அவர்களுடன் சேராமல் இருப்பதாகும்.”
( அல் அஜ்விபதுல் முபீதா : பக் 106)
10: ﻗﺎﻝ ﺍﻟﻌﻼﻣﺔ ﺣﻤﻮﺩ ﺍﻟﺘﻮﻳﺠﺮﻱ :
ﻓﻠﻴﺤﺬﺭ ﺍﻟﻤﺆﻣﻦ ﺍﻟﻨﺎﺻﺢ ﻟﻨﻔﺴﻪ ﻣﻦ ﺍﻻﻧﻀﻤﺎﻡ ﺇﻟﻰ ﺍﻟﺘﺒﻠﻴﻐﻴﻴﻦ ﺍﻟﺬﻳﻦ
ﻳﻨﻜﺮﻭﻥ ﻋﻠﻮ ﷲ ﻋﻠﻰ ﺧﻠﻘﻪ ﻭﻳﺰﻋﻤﻮﻥ ﺃﻧﻪ ﻓﻲ ﻛﻞ ﻣﻜﺎﻥ
ﺍﻟﻘﻮﻝ ﺍﻟﺒﻠﻴﻎ٤٤
10: அல்லாமா ஹமூத் அத் துவைஜிரீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள் :
“அல்லாஹ்வின் படைப்பினங்களை விட்டும் அவன் உயர்வானவன் என்பதை மறுக்கக்கூடிய, மற்றும் அவன் அனைத்து இடங்களிலும் இருக்கின்றான் என்று எண்ணும் தப்லீக் ஜமாஅத்தினரோடு இணைவதிலிருந்து தனக்கு உண்மையாக உபதேசிக்கும் ஒரு முஃமின் தவிர்ந்து கொள்ளட்டும் (எச்சரிக்கையாக இருக்கட்டும்).”
( அல் கௌலுல் பலீக் : 44 )
11: ﻗﺎﻝ ﺍﻟﻌﻼﻣﺔ ﺻﺎﻟﺢ ﺍﻟﻔﻮﺯﺍﻥ :
” ﺃﻧﺎ ﺷﺎﻫﺪﺕ ﺑﻨﻔﺴﻲ ﺯﻫﺪ ﺟﻤﺎﻋﺔ ﺍﻟﺘﺒﻠﻴﻎ
ﻓﻲ ﻋﻘﻴﺪﺓ ﺍﻟﺘﻮﺣﻴﺪ، ﻭﻧﻔﻮﺭﻫﻢ ﻣﻦ ﺫﻛﺮﻫﺎ “
ﺍﻷﺟﻮﺑﺔ ﺍﻟﻤﻔﻴﺪﺓ ﺹ ٢٣٤
11: அல்லாமா ஸாலிஹ் அல் பௌஸான் அவர்கள் கூறுகிறார்கள்:
“தப்லீக் ஜமாஅத்தினர் ஓரிறைக் கொள்கையில் துறவறத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அத்தோடு அவர்கள் ஓரிறைக் கொள்கை பற்றி பேசுவோரை விட்டும் விரண்டோடுபவர்கள், என்பவை நான் (அக்கூட்டத்தினரிடத்தில) சுயமாக கண்ட விடயங்களாகும்”
( அல் அஜ்விபதுல் முபீதா : 234)
தமிழாக்கம் :
அ(z)ஸ்ஹான் ஹனீபா
27/04/2016
source: https://www.facebook.com/unmaiyin.kural/posts/1749940558571468