அல்லாஹ் பாவியான மனிதனின் மூலமாகவும் அவனது தூய மார்க்கத்திற்கு வலுவூட்டுகின்றான் (1)
S.M. அமீர், நிந்தவூர், இலங்கை
அன்றைய கால உயர் குலமாகக் கருதப்பட்ட “”கிப்தி” குலத்தில் பிறந்தவன் எவனோ! (தப்ஸீர் இப்னு கஸீர் 6:738)
அக்கால மக்களில் சிறந்தவர்களாக இருந்த இஸ்ரவேலர்களை தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதி கீழ்த்தரமான வேலைகள் கொடுத்து கொடுமைப்படுத்தியவன் எவனோ! நிச்சயமாக அந்நேரம் பூமியில்(தன்) ஆதிக்க வலிமை மிக்கவன் எவனோ! (அல்குர்ஆன் 10:83, 20:24,43)
தன்னுடைய ஆட்சி அஸ்தமிப்பதற்கான அறிகுறியாக ஜெருசலத்திலுள்ள பைதுல் மக்திஸில் இருந்து புறப்பட்டு வந்த நெருப்பு ஒன்று இஸ்ரவேலர்களின் இல்லங்களை விட்டுவிட்டுத் தனது இனமான கிப்திகளின் இல்லங்களில் மட்டும் நுழைந்தது போன்ற அதிர்ச்சி தரும் கனவைக் கண்டவன் எவனோ! (தப்ஸீர் இப்னு கஸீர் 1:20)
நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாரிசுகளான இஸ்ரவேலர்களில் ஓர் ஆண்மகன் பிறந்து அவரது கரத்தால் எகிப்தின் சர்வாதிகார ஆட்சியாளனாகிய தனக்கு ஆபத்து ஏற்படும் என்று இஸ்ரவேலர்களின் மத்தியில் வாழையடி வாழையாகப் பேசப்பட்டு வந்த செய்தியால் பீதி அடைந்திருந்தவன் எவனோ! (தப்ஸீர் இப்னு கஸீர் 1:200-205, 6:738-741)
அந்தக் குழந்தை பிறந்து விடக்கூடாது என முன்னெச்சரிக்கையுடன் இருந்த ஆணவக்கார பேரரசன் எவனோ! (கஸீர் : 6:741)
எந்தக் குழந்தை வளர்ந்துவிடக் கூடாது என்ப தற்காக பல்லாயிரக்கணக்கான குழந்தைகளைக் கொடூரமாக கொன்று குவித்தவன் எவனோ! (தப்ஸீர் இப்னு கஸீர் 6:741, 14:6, 2:49, 7:127,141)
இஸ்ரவேலர்களுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகளையயல்லாம் அறுத்துக் கொலை செய்வதற்காக நீளமான வாள்களைக் கொடுத்து படைகளை ஏவிவிட்டவன் எவனோ! (தப்ஸீர் இப்னு கஸீர் 4:936-938, 2:49, பாகம் :1, பக்.:200:205)
இஸ்ரவேலர்களைக் கொத்தடிமைகளாக்கி கேவலமான பணிகள் கொடுத்து கொடுமைப் படுத்தியவன் எவனோ! (அல்குர்ஆன் 2:49, தப்சீர் இப்னு கஸீர் : 1:200-205)
பூமியில் கர்வம் கொண்டு அகந்தையும், ஆணவ மும் கொண்டவனாக வரம்பு மீறி நடந்து கொண்டவன் எவனோ! (அல்குர்ஆன் 28:4, 23:46, 44:31)
கொடுங்கோலர்களுக்கே தலைவனாகக் கருதப் பட்டு அழைக்கப்பட்ட கொடுங்கோலன் எவனோ! (தப்ஸீர் இப்னு கஸீர் : 1:200, சிறு குறிப்பு 93ஆவது.)
அன்று தனது ஆட்சிக்குட்பட்டவர்களை ஒன்று திரட்டி, நானே உங்களின் மேலான இறைவன் என்று உரத்த குரலில் பிரகடனப்படுத்தியவன் எவனோ! (79:23,24, 28:38, தப்ஸீர் இப்னு கஸீர் : 6:780-784)
எகிப்தின் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்டுப் பின்னால் வருவோருக்குப் படிப்பினையாகப் பாதுகாக்கப்பட்டுப் பத்திரமாக கெய்ரோ அருங்காட்சியகத்தில் இன்றளவும் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும் சடலத் திற்கு உரியவன் எவனோ! (அல்குர்ஆன் 10:90-92, தப்ஸீர் இப்னு கஸீர் 4:556-561)
பிர்அவ்னைக் கொண்டும் :
சாட்சாத் இறை சாபத்திற்குரிய அடக்குமுறை ஆட்சியாளனாகவும் சர்வாதியாரியாகவும் எல்லை மீறிய கொடுங்கோலனாகவும் உலகமகா ஆணவத்தின் பிறப்பிடமாகவும் இருந்த ஃபிர்அவ்னுடைய கைகளில் தவழ்ந்து அவனது மடியில் வளர்ந்து, மஞ்சத்தில் புரண்டு, நெஞ்சில் இடம் பிடித்து, மாளிகையில் வளர்ந்து, மன்னர்களின் உணவுண்டு, வாலிப வயது வரை நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பாதுகாத்த பெருமை அல்லாஹ்வைச் சேரும் அல்ஹம்துலில்லாஹ். (அல்குர்ஆன் 28:56, 26:59, 7:137)
அதுவே அல்லாஹ்வுடைய விருப்பமாகவும் இருந்தது. இதனாலேயே பலவீனர்களாகக் கருதப்பட்டோருக்கு அந்தப் பூமியில் வைத்தே அருள் புரிய வேண்டுமென்றும் அவர்களைத் தலைவர்களாக ஆக்க வேண்டும் என்றும் நாம் விரும்பினோம். மேலும் அவர்களை (அப்பூமிக்கு) உரிமையாளர்களாக ஆக்கவும் (விரும்பினோம்) மேலும் அந்தப் பூமியில் அவர்களுக்கு அதிகாரம் வழங்கவும் ஃபிர் அவ்ன், ஹாமான், அவர்களுடைய படையினர் ஆகியோர் (ஒடுக்கப்பட்ட) அந்த மக்கள் குறித்து எதை அஞ்சிக் கொண்டிருந்தார்களோ அதையே அவர்களுக்குக் காட்டவும் (விரும்பினோம்) 28:5,6 என அல்லாஹ் தெரிவிக்கின்றான். உயர்ந்தோன் அல்லாஹ் தான் கூறியபடியே இஸ்ரவேலர்களுக்குச் செய்தான் என்பதை மற்றுமொரு வசனத்தில், அதை யடுத்து பலவீனமானோர் என்று கருதப்பட்டு வந்த சமுதாயத்தாரைப் பூமியின் கிழக்கு(ப்பகுதி)களுக்கும் மேற்குப்பகுதி)களுக்கும் நாம் உரிமையாளர் களாக்கினோம். அவற்றை நாம் (அவர்களுக்காக முன்பே) வளமாக்கிக் கொடுத்த அழகிய வாக்கு நிறைவேறியது. ஏனெனில் அவர்கள் பொறுமை காத்தனர். 7:137 என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். மற்றோர் இடத்தில், அவ்வாறே அவற்றுக்கு இஸ்ரவேலர்களை நாம் உரிமையாளர்களாக்கினோம் 26:59 என்று அல்லாஹ் தெரிவிக்கின்றான்.
நரகவாதி என்று சொல்லப்பட்ட குஸ்மானைக் கொண்டும் :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு கைபர் போரில் கலந்து கொண்டவர்களில் முஸ்லிம்களின் அணியைச் சேர்ந்த “குஸ்மான்’ என்பவரின் வீரதீரச் செயற்பாடு குறித்து இன்றைய தினம் இன்னார் உத்வேகத்து டன் போரிட்டது போன்று வேறெவரும் நம்மில் செயற்படவில்லை என்று மக்களால் பேசப்பட்டது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர் நரகவாசிகளில் ஒருவர் என்று கூறினார்கள். அப்போது மக்களில் அக்ஸம் பின் அபில் ஜவ்ள் என்ற ஒருவர் அடுத்த நாள் போரின் போது “குஸ்மானைப்’ பின் தொடர்ந்து சென்றார். அப்போது “குஸ்மான்’ போரின் ஒரு கட்டத்தில் கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார். அதன் வேதனை தாங்காமல் அவசரமாக இறந்துவிட விரும்பி தனது வாளின் அடிப் பகுதியை நிலத்தில் நட்டு வைத்து அதன் கூரான மேல் பகுதியைத் தனது மார்புகளுக்கிடையில் வைத்து அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இவ்விபரம் அறிவிக்கப்பட்டபோது அவர்கள் அல்லாஹ் மிகப் பெரியவன்; நான் அல்லாஹ்வின் அடியாரும் அவ னது தூதருமாவேன் என்பதற்கு நானே சாட்சி கூறு கின்றேன் என்று சொல்லிவிட்டு, பிறகு பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அனைத்து முஸ்லிமான ஆன்மாதான் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும். மேலும் “அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனித னின் மூலமாகவும் வலுவூட்டுகின்றான்’ என்று மக்க ளிடையே பொது அறிவிப்புச் செய்யும்படி ஏவினார் கள். (சுருக்கம்) அறிவிப்பு அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, சஹ்ல் பின் சஅத் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி: 3062, 4204, 6606, 4203, 4207, 2898, 3062, 6607, 6493.
நரகில் வீசப்படும் மெளலவி, செல்வந்தர், ஷஹீத்களைக் கொண்டும்:
போர்க்களத்தில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத் திற்கும் அரணாக இருந்தபோதிலும் மார்க்கத்தை மற்றவர்களுக்குப் பிரச்சாரம் செய்தபோதிலும் செல்வத்தைக் கொண்டு ஏழைகளும் முஸ்லிம்களும் பயனடைந்த போதிலும் நாளை மறுமையில் முதன் முதலாக முகம் குப்புற இழுத்து நரகில் வீசப்படும் ஒரு இஹீத், அறிஞர், செல்வந்தர் ஆகிய மூவரையும் கொண்டு அல்லாஹ் பாவியான மனிதனின் மூல மாகவும் மார்க்கத்திற்கு வலுவூட்டுகின்றான் என் பதற்கு சிறந்த உதாரணமாகும். அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் இந்த ஆதாரபூர்வமான ஹதீஸ் முஸ்லிம், திர்மிதி 2489, இப்னு குஸைமாவிலும் காணலாம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே பிரார்த்திக்க முடியாதவர்களைக் கொண்டும்:
நாம் விருப்பு வெறுப்பின்றி நடுநிலையோடு பார்ப்போமாயின், இரு உலக அருட்கொடையாக வும் இறைத்தூதர்களின் தலைவராகவும் வந்த இறுதி நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 9:128, 17:79, 26:3, 9:61, 16:127, 18:6, 33:6,8 அவர்களை பெற்றெடுத்து நபித்துவப் பணிக்காக இஸ்லாத்திற்குக் கொடுத்த தாயார் ஆமீன அவர்களுக்கு பாவமன்னிப்புக் கோர அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. முஸ்லிம், அபூதாவூத், நஸாயி, இப்னுமாஜா, முஸ்னத், தப்ஸீர் இப்னு அபீ ஹாத்தீம், ஸஹீன் இப்னு ஹிப்பான், முஸன்னஃப் அப்திர்ரஸ்ஸாக், தப்ஸீர் தபரி, தப்ஸீர் இப்னு கஸீர் : 4:415-417, 9:113 என்பதிலிருந்து நாம் எதைப் புரிந்து கொள்கின்றோம்.
ஆண் குழந்தை பிறந்த நற்செய்தியை அறிந்து மகிழ்ச்சியடைந்த அப்துல் முத்தலிப் பேரரை கஅபாவுக்கு தூக்கிச் சென்று அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திப் பிரார்த்தித்து முஹம்மது எனப் பெயருமிட்ட பாட்டனார் அப்துல் முத்தலிப் தல்கீஹ், இப்னு ஹிஷாம், ரஹீக் : 75,
இஸ்லாத்தில் மரணித் ததாக ஆதாரம் காணமுடியவில்லை. தாயார் ஆமினாவிற்குப் பிறகு ஒரு வாரம் கழித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பாலூட்டிய முதல் பெண்மணி அபூஹலப் உடைய அடிமைப்பெண் ஸுவைய்பா ஆவார். இத்ஹாஃபுல் வரா, ரஹீக் : 75, அப்போது ஸுவைய்பாவுக்கு மஸ்ரூஹ் எனும் ஆண் குழந்தை பிறந்திருந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னர் ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிறகு அபூ ஸலமா, இப்னு அப்துல் அஸதுக் கும் இவ் அம்மையார் பாலூட்டியுள்ளார் (புகாரி), எனினும் இவரும் இஸ்லாத்தில் மரணித்த ஆதாரத்தைக் காணமுடியவில்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கருவில் உருவாக காரண மாக இருந்த தந்தை அப்துல்லாஹ் நரகவாதி என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாலேயே சொல் லப்பட்டாகிவிட்டது. அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் இந்த ஹதீஸ் முஸ்லிம்…ல் காணலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு மேலாக பாலூட்டி சீராட்டிப் பக்குவமாக வளர்த்த செவிலித்தாய் ஹலீமா அம்மையாரும் அதற்கு உறுதுணை யாக இருந்த கணவர் ஹாரிஸ் இப்னு அப்துல் உஜ்ஜாவும் (இப்னு ஹிஷாம், ரஹீக் : 75:78)
பெற்றோரை இழந்து முழு அனாதையாக நின்ற நபிகளாரை தனது முழு அன்பையும், பாசத்தையும் ஊட்டி தனது பிள்ளைகளைவிட பேரன் மீது மிகுந்த அன்பு செலுத்தி வளர்க்க முன்னுரிமை கொடுத்து தனது விரிப்பில் அமரவைத்து சுமார் எட்டு ஆண்டுகள் வளர்த்த பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களும் (இப்னு ஹிஸாம், ரஹீக் :78)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எட்டு வயதிலிருந்து பொறுப்பேற்றுப் பிறரது வெறுப்பையும், விரோதத்தையும் சம்பாதித்து மகனே உமக்கிட்ட கட்டளையை நீ நிறைவேற்றுவதில் உறுதியாக இரு அல் லாஹ்வின் மீது ஆணையாக நான் உன்னைச் சூழ்ந்து நின்று பாதுகாப்பேன். எனது தலை மண்ணில் சாயும் வரை உனது விஇயத்தை வெளிப்படையாகச் சொல் உன்மீது குற்றமில்லை என்று ஆறுதல்படுத்தி அல் காமில், இப்னு ஹிஷாம், ரஹீக் : 100,145,117 நபித் துவ ஏழாம் ஆண்டு சமூகப் பகிஸ்கரிப்பு ஏற்படுத்தப் பட்டு ஹாஒம் மற்றும் முத்தலிபின் கிளையாரில் அபூலஹப்பைத் தவிர ஏனைய முஸ்லிம்களும் நிராகரிப்பவர்களும் (புகாரி : 3140, 3503, 4229 நஸயீ, முஸ்னத் அஹமத், தப்சீர் இப்னு கஸீர் : 4:113-115)
அனைவருமாக அபூதாலிப் கனவாயில் மூன்று ஆண்டுகள் ஒதுக்கி வைக்கப்பட்டு ஒருத்தருக்காக அத்தனை பேரும், பெரும் சிரமங்களைத் தாங்கி எண்பது வயதைக் கடந்த நிலையில் கனவாயில் அலைக்கழிக்கப்பட்டு அங்கே ஏற்பட்ட பஞ்சம், பட்டனி, இழப்புகளென ஏற்பட்ட இன்னல்களால், மிகவும் வலுவிழந்து தளர்ந்துபோய் கடினமான நோய்க்கு ஆளாகி இறந்துபோன பெரிய தந்தை அபூ தாலிப் (ரஹிக் : 145-151) நரகவாசி என்பது உறுதியாகிவிட்டது. 9:113, 28:56, புகாரி : 1360, 3884, 4675, 4772, முஸ்லிம் : 39)
மேலும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களுடைய பிறப்பு வம்சமான பனூ ஹாசிம் குடும்பமும் ஷிஅபு அபீதாலிப் பள்ளத்தாக்கில் சமூகப் புறக்கணிப்புக்கு ஆளான போது குறைஒயர் மீது கோபம் கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஆதர வாகவும் அவர்களைப் பாதுகாப்பதற்காகவும் பனூ ஹாசிம்களுடன் பனுல் முத்தலிப் குடும்பத்தாரும் அந்தப் பள்ளத்தாக்கில் தாமாக முன்வந்து தங்கினார்கள். அதனால் பல இன்னல்களையும் எதிர் கொண்டார்கள். (புகாரி : 3140,3503,4229, தப்ஸீர் இப்னு கசீர் 4:114)
பைனுல் முத்தலிப் குடும்பத்தார் அறியாமைக் காலத்திலும் சரி, இஸ்லாத்திலும் சரி, எங்களை விட்டுப் பிரிந்ததில்லை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அபுதாவுத், நஸயீ, முஸ்னத் அஹமத், தப்ஸீர் இப்னு கஸீர் : 4:115)
இணைவைப்பாளர்களைக் கொண்டும்:
மேலும் சமூகப் பகிஸ்கரிப்பு ஒப்பந்தப் பத்திரம் கிழித்தெறியப்படுவதற்கு முக்கிய காரணமானவர் களான ஹிஷாம் இப்னு அம்ர், ஸுஹைர் இப்னு அபூ உமைய்யா, மக்ஜுமி, முத்இம் இப்னு அதீ, ஹிஷாம் அபுல் புத்தரி, ஸம்ஆ ஆகிய இணைவைப் பாளர்களாகும். (ரஹீக் : 147)
அரணாக இருந்த அபூதாலிப்புடைய மரணத் திற்குப் பிறகு அவரது வாழ்நாளில் கொடுக்க முடி யாத கடுமையான வேதனைகளை குறைஒகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கொடுத்து வந்தார்கள். அவர்களது தொல்லைகளைத் தாங்க முடியாதவர்களாக அங்கிருந்து துரத்தப்பட்டவர் போன்று அருகிலுள்ள தாயிபுக்குச் சென்றார்கள். திரும்பி வரும் போது மக்காவிற்குள் நுழைய அஞ்சிய காரணத் தால் அருகிலுள்ள ஹிரா குகையில் தங்கிக் கொண்டு தனக்கு அடைக்கலம் தந்து பக்கபலமாக இருக்க வேண்டுமென்று சில குறைஒத் தலைவர்களுக்கு தூது அனுப்பினார்கள். அதில் “முத்இம் இப்னு அதீ’ ஆம்! நான் அடைக்கலம் தருவேன் என்று கூறி உடனே தனது ஆயுதங்களை அணிந்து கொண்டு தனது ஆண் பிள்ளைகள் மற்றும் கூட்டத்தாரையும் ஆயுதம் அணியச் செய்து கஅபாவுக்கு அழைத்துச் சென்று நான்கு மூலைகளிலும் நிற்க வைத்துவிட்டு தனது ஒட்டகத்தில் ஏறி அமர்ந்து கொண்டு குறைஷிகளே “நான் முஹம்மதுக்கு அடைக்கலம் கொடுத்து விட்டேன்’ உங்களில் எவரும் முஹம்மதை சொல்லாலோ, செயலாலோ நோவினை செய்யக்கூடாது என்று பகிரங்க அறிவிப்புச் செய்தார். (ரஹீக் 169:170)
எனினும் தொண்ணூறு வயதையும் தாண்டிய இவருக்கு இஸ்லாத்தின் பாக்கியம் கிடைக்கவில்லை. பத்ருப் போருக்கு சுமார் ஏழு மாதங்களுக்கு முன்பே இணைவைப்பவராகவே இறந்து விட்டார். எனி னும் இஸ்லாத்திற்கான இவரது உதவியை நினைவு கூர்ந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ரில் பிடிபட்ட கைதி கள் தொடர்பாக “முத்இம் பின் அதீ’ உயிரோடு இருந்து இந்த அசுத்தம் பிடித்தவர்களை (பிணை தொகை வாங்காமலேயே) விட்டுவிடும்படி அவர் என்னிடம் (பரிந்து) பேசியிருந்தால் நான் அவருக் காக (பிணைத் தொகை வாங்காமலேயே) இவர்களை விடுவித்திருப்பேனென்று கூறினார்கள். (அறிவிப்பு: அவர்களின் மகன் ஜுபைர் பின் முத்இம் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி : 4024, 3139)
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு குறைஒ காஃபிர்களால் பல் வேறு துன்பங்கள் ஏற்படுத்தப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டபோது நாடு துறந்து அபீசீனிய நாட்டை நோக்கிச் சென்ற போது வழியில் “பர்குல் கிமாத்’ என்னுமிடத்தில் வைத்து மக்காவாசிகளில் இணைவைப்பாளர் “இப்னு தஃகினா’ என்பவர் சந் தித்து விபரமறிந்து உம்மைப் போன்றவர் மக்காவை விட்டு வெளியேறவும் கூடாது வெளியேற்றப்படவும் கூடாது என்று சொல்லி கையோடு மக்கா வரை கூட்டிவந்து குறைஷிக் குல பிரமுகர்களைச் சந்தித்து அவர்களிடம் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்காகப் பரிந்து பேசி அவரது பொறுப்பில் அடைக்கலம் கொடுத்தார். (சுருக்கம்) (புகாரி : 3905, 2297)
ஏக இறைவனை வழிபடுவதற்காக ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் நிறுவப்பட்டு (புகாரி: 3366) நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம், இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களாலும் புதுப்பித்துக் கட்டப்பட்டு பின்னர்) காலப் போக்கில் புனித ஆலயம் சிதிலம் அடைந்த போதெல்லாம் பல இணைவைப்பு சமூகத்தினரால் புதுப்பிக்கப்பட்டு வந்தது. இந்த வகையில் அமாலிக்கா, ஜுர்ஹும் ஆகிய சமூகத்தினரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபித்துவத்திற்கு முன்பிருந்தே நீண்ட காலமாக பல கோத்திரத்தினர் புனித கஅபாவை பராமரித்தல், வருடம் தோறும் முஹர்ரம் பத்தாம் நாள் நோன்பு நோற்று கஅபாவிற்கு புதிய திரை போடுதல் (புகாரி : 1593,1893, 3831) ஸம்ஸம் நீரூற்றைப் பராமரித்தல், ஹாஜிகளுக்கு தண்ணீர் வழங்குதல், ஹஜ்ஜுடைய காலத்தில் மக்களுக்கு உதவி செய்தல் என புனித பள்ளிவாசல் இணைவைப்பாளர்கள் மூலமாவே நீண்ட காலமாக பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. இணைவைத்த நிலையில் நபித்துவத்திற்கு சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே குரைஷிகள் கஅபாவை புதுப்பித்துக் கட்டினார்கள். (புகாரி:4, பக்கம் 437, பாடம் 24 பக்கம் 441 பாடம் 25 சிறுகுறிப்பு 64 ஹதீஸ் எண். 3826,3829,1582,364)
ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு ரமழான் மாதம் (புகாரி பாகம் : 4, பக்கம் 831, ஹதீஸ் எண் : 4275-4292) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் கிடைத்த மகத்தா வெற்றிதான் மக்காவின் வெற்றி. இதன் மூலம் தனது புனித ஆலயத்தை முஷ்ரிக்குகள் மற்றும் காஃபிர்களின் கையிலிருந்து மீட்டெடுத்து முஸ்லிம்களின் கைகளில் அல்லாஹ் ஒப்படைத்தான். அதுவரை பல நூற்றாண்டுகளாக புனித கஅபா ஆலயத்தின் நிருவாகமும், பராமரிப்பும், புணரமைத்தலும், முஷ்ரிக்குகளும், காஃபிர்களும் தானே செய்து வந்தார்கள்.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது, ஆஷிரா (எனும் முஹர்ரம் மாதம் 10ம் நாளென்பது அறியாமைக் காலத்தில் குறைஷிகள் நோன்பு நோற்கின்ற நாளாக இருந்து வந்தது (அவர்களால்) கஅபாவிற்குப் புதிய திரை போடப்படும் நாளாகவும் இருந்தது. (புகாரி : 3831, 1592,1893,3397)
இஸ்லாத்தில் பெரும் திருப்புமுனையாக அமைந்த ஹிஜ்ரத் பயணத்தின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பனூ அப்து பின் அதி குலத்தைச் சேர்ந்த ஒருவரை வழிகாட்டியாக கூலிக்கு அமர்த்தினார்கள். அவர் தேர்ந்த வழிகாட்டியாக இருந்தார். அம் மனிதர் ஆஸ்பின் வாயிலின் குடும்பத்தினரிடம் உடன்படிக்கை செய்திருந்தார். மேலும் அவர் குறைஒ காஃபிர்களின் மார்க்கத்தில் இருந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் அவரை நம்பித் தமது இரு ஒட்டகங்களையும் அவரிடம் ஒப்படைத்து மூன்று நாட்கள் கழித்து ஸவ்ர் குகையில் வந்து சேரும்படி கூறினார்கள். அம் மனிதர் (சரியாக) மூன்றாம் நாள் காலையில் ஒட்ட கங்களுடன் அவர்களிடம் வந்தார். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் மதீனாவை நோக்கிப் புறப்பட்டார்கள். அவர்களுடன் ஆமீர் பின் புஹைரா என்பவரும் சேர்ந்து கொண்டார். பனூ அப்து பின் அதிகுலத்தைச் சேர்ந்த அப்துல்லாஹ் பின் உரைக் என்ற அந்த வழி காட்டி அம் மூவரையும் மக்காவிற்கு மேற்குப் பக்க மாகவுள்ள கடற்கரை வழியாக அழைத்துச் சென்றார். (புகாரி : 2263, 2264,2439,2297,3905)
கவிஞர் ஸல்த்தைக் கொண்டும்:
கவிஞர் உமைய்யா பின் அபிஸ் “ஸல்த்’ என்பவர் தமது கவிதைகளால் சிறந்த சீர்திருத்த கருத்துக்களைப் பரப்பி வந்தார். ஏக இறைக்கொள்கை, மறுமை நம்பிக்கை அல்லாஹ்வைத் தவிரவுள்ள பொருட்கள் அனைத்தும் அழிந்து விடும்; அவனது முகம் மாத்திரமே நிலைத்து நிற்கும் என்பன போன்ற நல்ல பல ஏகத்துக் கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இவரின் கவிதைகளில் நூறு பாடல்கள் வரை பாடச்சொல்லி நபித்தோழர் ஷிரைத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டிருக் கின்றார்கள். ஆனாலும் இஸ்லாத்தின் பொற் காலத்தை அவர் அடைந்தபோதிலும் அவர் முஸ்லிமாகவில்லை. ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு தாயிப் நகரில் மரணமடைந்தார். (புகாரி : 3841, 6147, 6489)
யூதரைக் கொண்டும்:
உஹத் யுத்த நேரத்தில் ஸஅலபா கிளையைச் சேர்ந்த “முகைரிக்’ என்ற யூதர் தனது இனத்தவரிடம் சென்று யூதர்களே அல்லாஹ்வின் மீது ஆணையாக முஹம்மதுக்கு உதவிச் செய்வது உங்கள் மீது கட்டாயக் கடமை என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும் தானே? என்று கூறினார். அதற்கு அவர்கள் இன்றையத் தினம் சனிக்கிழமை அல்லவா? நாம் எப்படி போருக்குச் செல்ல முடியும்? என்று எதிர்க் கேள்வி கேட்டார்கள். (இது கேட்ட அவர்) உங்களுக்கு சனிக்கிழமை என்பதே இல்லாமலாகட்டும் என்று கோபமாகக் கூறிவிட்டு தனது வாளையும், ஆயுதத்தையும் எடுத்துக் கொண்டு நான் போரில் கொல்லப்பட்டு விட்டால் எனது செல்வங்கள் அனைத்தும் முஹம்மது அவர்களைச் சாரும். அதை அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ளலாம் என்று கூறிவிட்டு களம் வந்து போரில் கலந்து வீரமரண மடைந்தார். இதனையே “முகைரிக்’ யூதர்களில் மிகச் சிறந்தவர் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (இப்னு ஹிஷாம், ரஜீக் 342) ஆனாலும் முகைரிக் இஸ்லாத்தை ஏற்கவில்லை.
மதீனாவில் யூத மூதாட்டிகளில் இருவர் என்னிடம் வந்து மரணித்த பின்னர் கெட்டவர்களுக்கு மண்ணறை வேதனையைப் பற்றி கூறிவிட்டு அல்லாஹ் அமல்களை மண்ணறை வேதனையை விட்டும் பாதுகாப்பானாக; மண்ணறைவாசிகள் கெட்டவர்களுக்கு மண்ணறையில் வேதனை செய்யப்படுகின்றனர் என்று கூறினார்கள். அவர்கள் இரு வரும் கூறியதை நான் நம்புவதற்கு மறுத்தேன். அவர்கள் கூறியதை நம்புவதற்கு எனது மனதுக்குச் சரியாகப்படவில்லை. பிறகு அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டார்கள்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு கீழுள்ள “NEXT” ஐ “கிளிக்” செய்யவும்.