அப்பா என்றாலே… ஏன் தப்பான பார்வை?
‘தமிழ்மாமணி’ மு. ஹிதாயத்துல்லாஹ்
அம்மா… என்றால் அன்பு!
அப்பா என்றாலும் அன்புதானே…
ஏனிதை நாம் கற்பிக்க மறந்தோம்?
பெரும்பாலும் அப்பாவைத் தப்பாகப் புரிந்து கொள்ளும் நிலையில் சிலர் இருக்கிறார்கள்?
குடும்பத்தில் ஆடம்பரச் செலவை கட்டுப்படுத்தும் ஆடிட்டராகத் தெரிவதால் அவர் மீது ஒரு எரிச்சல் ஏவுகணை!
மீசை யரும்பும் பருவத்தில் டீன் ஏஜ் பையன்களோடு லூட்டி அடிக்கும் போது அதைப் பார்க்கும் தந்தை துடித்துப்போய் வீட்டுக்குப் போடா… ராஸ்கல் என்று வாத்தியாராய்… கண்டிக்கிறாரே அதனாலா…?
ஏன்…? அப்பா என்றாலே தப்பான பார்வை?
சில அம்மாக்கள் தான் பிள்ளைக்கு அவன் அப்பாவை வில்லன்களாய் காட்டும் விபத்தாயிருக்குமோ…?
இனியாவது அப்பாவும் அம்மாவும் அன்பு என்று கற்றுக் கொள்ளுவோம்!
முஸ்லிம் முரசு, அக்டோபர் 2015