வெற்றிட வாழ்க்கை!
Y.அஜ்மல்கான், ஜெகதாப்பட்டினம்
இயற்கைக்கு மாற்றமான வாழ்க்கையை மனிதன் தேர்வு செய்யும்போது மனிதன் நஷ்டம் அடைகிறான். இதன் விளைவாக நிம்மதியை இழந்து விடுகின்றான்.
உதாரணமாக; இறைவனால் வழங்கப்பட்ட மார்க்க நெறியான இஸ்லாத்தை ஏற்காமல் மாற்றுக் கொள்கைகளை மனிதன் ஏற்பதனால் இருவுலகிலும் நஷ்டப்படுகின்றான் என்பதை அனைத்து முஸ்லிம்களும் அறிந்தே வைத்துள்ளனர்.
ஆனால் இப்படிப்பட்ட இந்த நிலையில் கடினமான கஷ்டங்களையும், நஷ்டங்களையும் முஸ்லிம் சமுதாயம் சுமப்பது ஏன்? இறை நெறியை தங்களுடைய வாழ்வில் அன்றாடம் கொண்டு வரவில்லை என்ற ஒரே காரணம் மட்டும்தான். இதை யாராவது மறுக்க முடியுமா? (பார்க்க: அல்குர்ஆன் 3:139, 30:47)
கணவனும் மனைவியும் இணைந்து வாழ்வதுதான் இருவுலகிலும் இன்பத்தைப் பெற்றுத் தரும். மாற்றமாக கணவனை மனைவி சார்ந்து வாழும் வாழ்க்கையை தான் முஸ்லிம்களில் அதிகமானோர் தேர்வு செய்து வாழ்கின்றனர்.
வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் மட்டும் தான் நாம் நிம்மதியைப் பெறமுடியும். நம்முடைய தேவைகளைச் சரிவர நிவர்த்தி செய்ய முடியும். சமுதாயத்தில் அந்தஸ்த்தையும் பெறமுடியும் என்ற ஷைத்தான்களின் சூழ்ச்சி வழியில் அநேக முஸ்லிம்கள் சிக்கியதின் விளைவுகள் மோசமானவை.
கணவனை இழந்த விதவைக் கூட நான்கு மாதம் பத்து நாட்கள் தான் இத்தா இருக்க வேண்டும். கணவன் உயிருடன் இருக்கும் போதே இரண்டு வருடம் அவர(அ)வர் விருப்பம் போல் பல வருடங்களாக இத்தா(?) இருக்கும் அவசியம் என்ன?
இஸ்லாத்தில் நிர்பந்தம் உயிர் போகும் என்ற நிலை வரும்போது தான் அனைத்து சட்டங்களி லிருந்தும் விதிவிலக்கு உண்டு. வெளிநாடு சென்றால் தான் நானோ, என்னைச் சார்ந்தவர்களோ உயிர் வாழ முடியும் என்ற நிலை வரும்போது தான் சட்டம் விதிவிலக்கு அளிக்க முடியும். வேற எவ்விதக் காரணங்களாலும் வெளிநாட்டில் வாழ்வதால் கணவன் மனைவி இருவரும் பிரிவதற்கு அனுமதி இல்லை. கடனால் பளுவாக்கப்பட்டால் கடனை செலுத்துவதற்கு மட்டும் சம்பாதித்து விட்டு இன்பமான கணவன்-மனைவியுடன் வாழும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுங்கள். ஆனால் வீடு கட்டவும், நகைகளை சேர்க்கவும், வெளிநாடு செல்வதற்காக கடன் வாங்கி வைத்துவிட்டு அந்த கடனை அடைப்பதற்காகவும் தாம் நாம் வந்து கஷ்டப்படுவதுடன் வாழ்க்கையையும் வெற்றிடமாக மாற்றுகின்றோம்.
காற்று இல்லாத இடம்தான் வெற்று+ இடம்= வெற்றிடம் இப்படிப்பட்ட இடங்களில் உயிரினங்கள் வாழ முடியாது. ஆனால் பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு அனைத்தையும் அல்லாஹ் படைத்துள்ளான். முஸ்லிம்கள் உயிர் வாழ்ந்து வாழ்க்கையை வெற்றிடமாக மாற்றி விடுகிறார்கள்.
அல்குர்ஆன்- சூரா 102:1-8 வசனங்களை திரும்ப திரும்ப படித்துப் பாருங்கள். கபன் கட்டும் காலம் வரை பணத்தேவை இருக்கவே செய்யும். அதற்காக வாழ்வை இழக்காதீர்கள், நரகத்தைப் பார்ககாதீர்கள்.
அனைத்து அருட்கொடைகளைப் பற்றியும் அந்நாளில் கேட்கப்படும் என்றால் உனக்கு கொடுத்த மனைவியைப் பற்றியும், பிள்ளைகளைப் பற்றியும், உன் அண்டை வீட்டாரைப் பற்றியும், உன் பெற்றோர்கள் பற்றியும், உம்மத்தன் வாஹிதா(ஒரே சமுதாயம்)அமைய உன் பங்கெடுப்பையும் இன்னும் பிற பொறுப்புகளைப் பற்றியும் கேட்கப்படுமே அந்த நாளை பயந்துக் கொள். இறை நெறி 78:17 (தீர்ப்பு நாள் நேரம் குறிக்கப்பட்டு விட்டது) உங்களது தீர்ப்பு எப்படி அமைய வேண்டும் என்பதற்கு முன் உங்கள் செயல்களை சரிசெய்து கொள்ளுங்கள்.
வாழ்வதற்கு பணம் அவசியம், பணத்திற்காக இரு உலக வாழ்வை தொலைத்து வாழ்க்கையை வெற்றிட வாழ்க்கையாக (Vaccum Life) மாற்றாதீர்கள்.
இறைநெறி 62:8 நீங்கள் விசாரணைக்கு உள்ளாவீர்கள் மறக்காதீர்கள். இறைநெறி 62:11 உணவளிப்பவர்களில் அல்லாஹ் மிகச் சிறந்தவன் என்பதையும் உணருங்கள். ஏதாவது கைத்தொழிலை கற்றுக் கொள்ளுங்கள். வெட்கம் தடையாக இருக்குமானால் எந்த தொழிலை யும் கற்றுக் கொள்ள முடியாது.
செல்வமும், பிள்ளைகளும் ஒவ்வொரு மனிதன் நேசிக்கும் விசயங்களே. இவற்றைக் கொண்டு மதிமயங்கிட வேண்டாம். இறை நெறி 63:9யைப் பார்க்கவும்.
இங்கு வெளிநாடு வந்தவர்களில் பெரும் பாலோர் அடிமையாகவே (கஃபீல்) நடத்துவதை மறுக்க முடியுமா? உடல் நலக்குறைவு என்றால் கூட தேவையான ஓய்வு எடுக்க முடியுமா? தொழிற்சாலைகளில் வேலைப் பார்ப்பவர்கள் இரவு வேலையை (Night Shift)-ல் வேலை செய்ய முடியாது என்று சொல்ல முடியுமா? நம்முடைய ஒப்பந்தத்தில் (Agreement)–ல் இரவு வேலை என்று நம்முடன் ஒப்பந்தம் செய்வதில்லையே! இரவில் வேலை செய்வதால் தூக்கமின்மை, தலைவலி நிம்மதி இழப்பு இதனை அல்குர்ஆன் 78:9-11 கூறுகின்றது.
அடுத்தவர் வீடு கட்டி விட்டார், அவரு டைய மனைவி அழகிய உயர்ந்த ஆடைகளை அணிகிறார் விரும்பிய உணவை உண்கிறார்கள், அதிக பீஸ் செலுத்தும் பள்ளிகளில் பிள்ளைகளைப் படிக்க வைப்பதால் மனதளவில் நாம் ஏன் இவற்றை அடையவில்லை என்ற பேராசை தான் (அல்குர்ஆன் 108:1-8) நரகத்திற்கு இழுத்துச் செய்கின்றது.
வெளிநாட்டில் வசிக்கும் பலர் தங்களுடைய அறைகளில் T.V. களிலும், தவறான நடத்தை உள்ள படங்களாலும் செல்போனிலே மணிக்கணக்காக மனைவியிடம் அளவு கடந்த கொஞ்சும் பேச்சுக்கள் விளைவு சம்பாதித்த பணமும் போனிலே கரைந்து, தவறான நடத்தைக் காட்சிகளைப் பார்ப்பதால் உள்ளமும் கெட்டு, மனைவியிடம் ஆசையாய் அதிகமாக பேசுவதால் அவளுக்கு இச்சையையும் தூண்டி இருவருடைய இச்சையையும் அடக்க முடியாமல் மானம் கப்பலேறும் நிலையும், போனில் அதிக நேரம் பேசுவதால் மூளை யில் பாதிப்புகள் கொடூரமானது என்பதையும் அறிந்து இந்த தப்புகளை செய்கிறார்களே…
இன்னும் சிலர் “உம்மத்தன் வாஹிதா’வை உடைப்பதையே நன்மையாகக் கருதி தங்களுடைய பிரிவு ஜமாஅத்களுக்காக அறிவிப்பு செய்வது, வசூல் செய்வது, வெளிநாடுகளில் சேவை என்று இரத்ததானம், குர்ஆன் போட்டி, வெளிநாடுகளில் குடும்பத்துடன் இருப்பவர் கள் ஒன்றுகூடி மகிழ பிரிவு ஜமாஅத் நிகழ்ச்சிகள் என்று செயல்படக் காரணம் அவர்களுக்கு உண்டான பதவிகள், மேடைகளில் ஆயிரக் கணக்கான மக்களுக்கு முன் அமர்ந்து அகப் பெருமையும் இவர் ஜித்தா மண்டல பொறுப்பாளர், அவர் தம்மாம் மண்டல செயலாளர் என்ற பதவிகளைத் தவிர வேற என்ன இருக்க முடியும்?
அல்லாஹ்விடம் உள்ள பட்டங்களை முஸ்லிம்கள் எதிர்பார்த்து வாழ்வோமாக! முஸ்லிம்கள் அறிவாளியாக இருக்க வேண்டும், பகுத்தறியும் பண்பை பெற்றவர்களாக வாழ அல்லாஹ் போதுமானவன். வாழ்வும் மரண மும் சோதனைக்காகத்தான்.
இறைநெறி 30:1-2 பார்க்கவும்.
source: http://annajaath.com/archives/7678#more-7678