எதனை நோக்கி பயணிக்கிறது நமது முஸ்லிம் உம்மத்…?
ஜுனைத்.எம்.பஹ்த்
[ மனைவி விடயத்தில் கணவன்மார்களின் கவனக்குறைவு அவர்களை வழிகேட்டில் விழச்செய்து விடுகிறது.
தனது மனைவியை அடுத்தவன் பார்த்து ரசிக்கும் அளவிற்கு அலங்காரம் செய்ய அனுமதித்து, ஊர்வலம் போக வைத்து அடுத்தவனுக்கு ஆசை உணர்வை தூண்டிவிடுவது..
பிறகு அவனோடு உங்கள் மனைவி ஓடுவது.. இதற்கு யாரு காரணம் நீங்களே!
அவள் ஆசப்பட்டாள் என்பதற்காக உள்ளாடை வெளியே தெரியும் வகையில் ஒரு கேவளமாக இறுக்கமான ஆடை வாங்கிக் கொடுத்தது நீங்களே!
விலை உயர்ந்த மொபைல் வாங்கி கொடுத்து எல்லா சொப்ட்வெயாரும் போட்டுக்கொடுத்தது நீங்களே!
கவர்ச்சியாக மோட்டார் சைக்கிள பின்னால ஏத்திக்கொண்டு ஊரானுக்கு அறிமுகப்படுத்தியது நீங்களே!]
எதனை நோக்கி பயணிக்கிறது நமது முஸ்லிம் உம்மத்…?
இன்றைய காலத்தில் உலகம் நவீனம் என்ற போர்வையில் அனாச்சாரத்தையும், விபச்சாரத்தையும் இளம் சமுதாயத்திற்குள் புகுத்திவருகிறது..
ஒரு காலத்தில் எமது முஸ்லிம் சகோதரிகள் ஒழுக்கத்திலும் சரி நடத்தைகள், பழக்கவழக்கம், உடை போன்றவற்றில் பிற சமுகத்திற்கும் பிற இனத்துக்கும் முன்மாதிரியாக இருந்தார்கள்.. ஆனால் இன்று நமது சகோதரிகளின் நிலமை அப்படியே தலை கீழாக மாறியுள்ளது .
தற்போது பிற மத சகோதரர்களே சீஸ என்று கேவளமாக சொல்லும் அளவிற்கு எமது முஸ்லிம் சகோதரிகளின் ஆடைகளும், நடத்தைகளும் படு கேவளமாக உள்ளது..
ஆடைகளை இருக்கமாக அனிந்து அன்னிய ஆண்களுக்கு முன்னால் செல்கிறார்கள். இவர்கள் உள்ளே அனித்திருக்கு உள்ளாடை தெளிவாக கவர்ச்சியாக் வெளியே தெரிகிறது.. இது இவர்களுக்கு கேவளமாக தெரியவில்லை.. இந்த கேவளமான பெண் எதை நோக்கி பயனிக்கிறாள்ஸ? கொழுந்து விட்டு எரியும் நரகத்தை நோக்கியா?
பல்கலைக்கழகத்தில்,அலுவலகத்தில், நேர வகுப்புக்களில் அன்னிய ஆண்களோடு தோலுக்கு மேல் “கை” போட்டுக்கொண்டு காதல் காமம் புரியும் சகோதரிகளது நிலைமை? அதிலும் கேவளம் பிற மத ஆண்களோடு காதல் காம உல்லாசம் அனுபவிக்கும் தலையில் மொக்காடு மட்டும் போட்ட இஸ்லாமிய பெண் முஸ்லிம் வேடம் போட்ட இந்த கூத்தாடியின் நிலை கொழுந்து விட்டு எரியும் நரக நெருப்பே தவிர வேறு எது?
இப்படி நமது சமுதாயம் சீரழிந்து நரகத்தை நோக்கி பயனிக்க முக்கிய காரணம் இந்த ஆண் சமுகமேஸ
தனது மகள் படிக்கப் போகிராள் என்று மட்டுமே அதிக தந்தைமார்க்குத் தெரியும் .. அவள் எங்கு படிக்கப்போகிறாள்? எப்போது போகிறாள்? என்ன படிக்கப்போகிறாள்? இத்துணை கேள்விக்கும் பதில் “தெரியாது”
தனது படிக்கப்போன மகள் சில காலம் கழித்து திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றெடுக்கும் கேவலம்..
இதில் இப் பெண்னின் தவறை விட தகப்பனின் தவறே பிரதான காரணம். தனது மகள் ஒழுக்கமானவர் என்ற நம்பிக்கையில் கவனம் எடுப்பதில்ல.. உங்கள் குழந்தை ஒழுக்கமானவள் தான் ஆனால் வெளி உலகம் ஷெய்தான்களின் சூழ்ச்சியில் அகப்பட்டு கிடக்கிறது..
இதற்கு துவக்கம் எது வென்றால்…
தனது மகள் ஆசைப்பட்டாள் என்று நீங்கள் வாங்கிக் கொடுத்த உள்ளாடையும் வெளியே தெரியக் கூடிய இறுக்கமான ஆடை..
நீங்கள் வாங்கிக் கொடுத்த விலை உயர்ந்த மொபைல்!
அவள் விரும்பினாள் என்பதற்காக துணை இன்றி பாதுகாப்பு இன்றி கல்விக்காக நீங்கள் அனுப்பிய பிரயாணம்ஸ
தினசரி பத்திரிகை வாங்கிப் பார்த்தால் பொதுச்செய்தி பொருளாதார செய்தியை விட.. கொலை செய்தியும் தற்கொலை செய்யும் துஷ்பிரயோக செய்தியுமே அதிகமாக காணப்படுகிறது..
இனியாவது உங்கள் பிள்ளைகள் மேல் கவனம் எடுங்கள் . அவர்களது நடத்தைகளை உன்னிப்பாக அவதானியுங்கள்.. இல்லை என்றால் நாளை உங்கள் மகளின் செய்தியும் பத்திரிகையில் வரலாம்.. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்..
அடுத்ததாக மனைவி விடயத்தில் கணவன்மார்களின் கவனக்குறைவு அவர்களை வழிகேட்டில் விழச்செய்து விடுகிறது.
தனது மனைவியை அடுத்தவன் பார்த்து ரசிக்கும் அளவிற்கு அலங்காரம் செய்ய அனுமதித்து, ஊர்வலம் போக வைத்து அடுத்தவனுக்கு ஆசை உணர்வை தூண்டிவிடுவது..
பிறகு அவனோடு உங்கள் மனைவி ஓடுவது.. இதற்கு யாரு காரணம் நீங்களே!
அவள் ஆசப்பட்டாள் என்பதற்காக உள்ளாடை வெளியே தெரியும் வகையில் ஒரு கேவளமாக இறுக்கமான ஆடை வாங்கிக் கொடுத்தது நீங்களே!
விலை உயர்ந்த மொபைல் வாங்கி கொடுத்து எல்லா சொப்ட்வெயாரும் போட்டுக்கொடுத்தது நீங்களே!
கவர்ச்சியாக மோட்டார் சைக்கிள பின்னால ஏத்திக்கொண்டு ஊரானுக்கு அறிமுகப்படுத்தியது நீங்களே!
அன்பான சகோதரர்களே! இன்றைக்கு தினதி பத்திரிகை, ஊடகங்களில் பார்கிறோம் கேட்கிறோம்..
கனவன் கள்ளக் காதலியுடன் ஓட்டம்..
மனைவி கள்ளக் காதலனுடன் ஓட்டம்..
இது கொலை செய்யும் அளவிற்கு சென்றுள்ளத அறிகிறோம்..
நமது சமூகத்தை அல்லாஹ் மென்மேலும் பாதுகாக்க வேண்டும்..
அன்பான ஆண் சகோதரர்களே!
உங்கள் பெண்கள் விடயத்தில் அவதானமாக இருங்கள் அவர்களை தனியாக பயணம் அனுப்புவதில் கவனமாக இருங்கள்/ பிற ஆண்கள் விடயத்தில் பாதுகாப்பை கற்றுக்கொடுங்கள்..
வீட்டுக்கு வரும் மேசன் தொடக்கம் மரக்கறி வியாபாரி வரை அவதான மாக இருங்கள்..
நாம் ஒவ்வொறுவரும் பொருப்பாளிகள் நாளை மறுமையில் எமது பொருப்புக்கள் பற்றி விசாரிக்கப்படுவோம்..
அல்லாஹ்வின் விசாரணை இவ்வுலக விசாரணை போன்றது கிடையாது பொய் சொல்லியோ அல்லது இலஞ்சம் கொடுத்து தப்பித்துக்கொள்ள ! அல்லாஹ்வின் விசாரணை கடுமையானது..
எனவே எமது சமூகத்தை சீரழிவிலும் அனாச்சாரத்திலும் இருந்து பாதுகாத்து அல்லாஹ்வின் அன்பை பெற ஒவ்வொருவரும் முயற்சிப்போமாக!!!