Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பிறந்த குழந்தைகளுக்கு முதல் உணவாக இனிப்பை வழங்குவது ஏன்?

Posted on April 17, 2016 by admin

பிறந்த குழந்தைகளுக்கு முதல் உணவாக இனிப்பை வழங்குவது ஏன்?

பிறந்த குழந்தைகளுக்கு முதல் உணவாக இனிப்பை வழங்குவது அவர்களை மூளை சிதைவில் இருந்து பாதுக்கும் என்ற ஆய்வு முடிவு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனின் உண்மை தூதர் என்பதை உறுதி செய்கிறது.

பிறந்த குழந்தைகளுக்கு முதல் உணவாக இனிப்பான வற்றை கொடுப்பது நபி வழியாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரித்தம் பழத்தை மென்மையாக பிசைந்து பிறந்த குழந்தைகளுக்கு முதல் உணவாக கொடுத்துள்ளார்கள் அப்படி கொடுக்கவும் கர்பித்துர்ள்ளார்கள்.

பேரித்தம் பழத்தை பெற்று கொள்ளதவர்கள் சீனி தேன் போன்ற இனிப்பான பொருள்களை தொட்டு பிறந்த குழந்தையின் நாவில் தடவுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் இது நபி வழியில் இருந்து பெறப்பட்ட அறிவாகும்.

நபிகள் நாயகம் சர்வசாதரணமாக இந்த அறிவை நமக்கு கற்று தந்து சென்றிருக்கிறார்கள். ஆனால் இந்த அறிவுக்கு பின்னால் மிக பெரியதொரு மருத்துவ குணம் ஒளிந்திருக்கிறது என்பதை அன்றைய கால மக்கள் அறிந்திருக்க வாய்பில்லை.

ஆம் பிறந்த குழந்தைகளுக்கு முதல் உணவாக இனிப்பை வழங்குவதினால் அவர்கள் மூளை சிதைவு நோயிலிருந்து இருந்து பாதுகாக்க படுகின்றனர் என்று நவீன ஆய்வுகள் உறுதி படுத்தியுள்ளதாக சவுதி அரேபியாவை சார்ந்த மருத்துவர் குளரி என்பவர் சுட்டி காட்டியிருக்கிறார்.

நவீன ஆய்வுகளுக்கு பிறகு உறுதி செய்யபட்டுள்ள மருத்துவ உண்மையை உள்ளடக்கிய இந்த விசயத்தை விஞ்ஞானத்தின் கண்கள் இறுக கட்ட பட்டிருந்த காலத்தில் நபிகள் நாயகத்தால் எப்படி சொல்லமுடிந்தது

அவர் சாதாரண மனிதர் என்ற நிலையில் இருந்து இந்த வழிகாட்டுதலை வழங்க வாய்பே இல்லை. அவர்கள் இறைவனின் துதராக இருந்ததால் இப்படி ஒரு மருத்துவ உண்மையை உள்ளடக்கிய இந்த வழிகாட்டுதலை தமது சமுதாயத்திர்கு அவர்களால் வழங்க முடிந்தது.

எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த வழிகாட்டுதலும் நபிகள் நாயகம் இறைவனின் உண்மை துதர் என்பதை அறுதியிட்டு உறுதி கூறும் அர்புத சான்றுகளில் ஒன்றாக அமைகிறது.

இதற்கு சான்றாக பல நபி மொழிகள் உள்ளன சான்றிர்காக ஒரே ஒரு நபி மொழியை மட்டும் இங்கு அதன் அரபி மூலத்தோடு பதிவு செய்கிறேன்.

أخرج البخارى في صحيحه عن أسماء بنت أبى بكر الصديق رضي الله عنهما أنها حملت بعبد الله بن الزبير بمكة. قالت خرجت وأنا متم فأتيت المدينة فنزلت قباء فولدت بقباء ثم أتيت به رسول الله صلى الله عليه وسلم فوضعته في حجره ثم دعا بتمرة فمضغها ثم تفل في فيه فكان أول شيء دخل جوفه ريق رسول الله صلى الله عليه وسلم ثم حنكه بالتمر ثم دعا له فبرك عليه، فكان أول مولود يولد في الإسلام ففرحوا به فرحا شديدا،لأنهم قد قيل لهم أن اليهود سحرتكم فلا يولد لكم.(كتاب العقيقة الحديث رقم/47500وكتاب المناقب حديث رقم 3619وأخرجه أيضا مسلم في صحيحه كتاب الآداب رقم 3999وأخرجه أحمد في مسنده في مسند الأنصار حديث رقم25701).

அஸ்மா பின்து அபு பக்கர் அவர்கள் நிறை மாத கர்பத்தோடு மதினா வந்து சேர்ந்தார்கள் மதீனாவில் உள்ள குபா பள்ளியின் முற்றத்திலேயே அவர்கள் தங்கினார்கள் அங்கேயே அவர்கள் அப்துல்லா பின் சுபைர் அவர்களை பெற்று எடுதடதார்கள் உடனே அந்த குழந்தையை எடுத்து வந்து நபிகள் நாயகத்தின் மடியில் வைத்தார்கள் நபிகள் நாயகம் பேரித்தம் பழம் ஒன்றை எடுத்து தனது வாயில் வைத்து மென்று மென்மையாக்கி அதை அந்து குழந்தைக்கு வழங்கினார்கள் அந்த குழந்தைக்காக பிரார்தனையும் செய்தார்கள்

அந்த குழந்தை நபிகள் நாயகம் மதீனாவிர்கு வந்த பிறகு பிறந்த முதல் குழந்தையாகும் முஸ்லிம்களுக்கு குழந்தைகள் பிறக்காமலிருக்க யூதர்கள் சூனியம் வைத்துள்ளனர் என்று சொல்ல பட்டு வந்த நிலையில் இந்த குழந்தை பிறந்ததால் முஸ்லிம்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். (அறிவிப்பவர் அஸ்மா பின்த் அபு பக்கர் ஆதரம்: புகாரி)

source: http://www.unmaiyinpakkam.com/2015/05/blog-post_21.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

29 + = 39

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb