நிர்வாகம் என்பது பதவியல்ல, பொறுப்பு!
மக்களினால் ஓர் ஊரில் கட்டுப்பாட்டிற்கு பள்ளி நிர்வாகிப்பிற்கு அல்லது அரபுக்கலாசாலைகளின் நிர்வாகிப்பிற்கு மற்றும் சமூக சேவை, சேவைநலன் சங்கங்களுக்கு நிர்வாகங்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.
முன்னொரு காலத்தில் நிர்வாகத்திற்கு தெரிவு செய்யப்படும் போது மக்கள் அது அமானத் என்று விளங்கி அல்லாஹ்வைப் பயந்து நிர்வாகத்தை செவ்வெனே நிறைவேற்றினர்.
அமானத்தை சரிவர நிறைவேற்றிய தயங்கியவர்கள் அதைவிட்டு கௌரவமாக ஒதுக்கிக் கொண்டனர். தகுதி வாய்தவர்கள் நிர்வாகங்களை கௌவமாக தற்சாய்வு, பகைக்காய்வின்றி மனத்தூய்மையுடன் நிர்வகித்ததன் பிரதிபலனாக சமூகம் ஏராளமான, நல்ல பல சேவைகளையும், நன்மைகளையும் பெற்றுக் கொண்டது.
ஆனால் துரதிஷ்டவசமாக இன்றைய நிர்வாகங்களில் சிலர் நிர்வாகம் என்பது பதவி என்று தவறாக விளங்கி பொறுப்பு என்பதை மறந்து மறுத்து இஸ்லாமிய வரையரைகளுக்கு அப்பால் செயற்பட்டுக் கொண்டுடிருக்கிறார்கள்.
நிர்வாக பலத்தினால் சுய இலாபங்களை அடைந்து கொள்வதுடன் நாம் நிர்வாகிகள் என மாறு தட்டிக் கொள்கிறார்கள். தொடர்ந்தும் நிர்வாகத்தில் தனது ஆசனத்தை தக்கவைத்துக் கொள்ள பல உத்திகளைச் செய்கின்றனர். இதனால் அவர்களின் கீழுள்ள சமூகம் பல நஷ்டங்களையும், இடர்களையும் மற்றும் பின்னடைவுகளையும் சந்திக்கின்றது.
இவர்கள் இம்மையில் அனைத்தையும் அனுபவித்துவிட்டு மறுமையிலுள்ள தண்டனைகளை மறந்து விட்டார்கள் போலும்
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலம் அவர்களிடம் கியாமத் நாள் எப்போது வரும் என்று கேட்டபோது தகுதியற்றவர்களிடம் பொறுப்புக் கொடுக்கப்பட்டு அது வீணடிக்கப்பட்டால் நாளை எதிர்பாருங்கள் என பதிலளித்தர்கள் (நூல்: புகாரி)
எனவே இன்றைய நிர்வாகங்கள் பின்வரும் முறையில் தங்களது நிர்வாகங்களை அமைப்பது காலத்தின் அத்தியவசியத் தேவையாகும்.
நிர்வாகிகள் இஸ்லாத்தின் வரையரைகளைப் பேண வேண்டும்.
பொது அர்ப்பணிப்புடன் இம்மையுடைய புகழ்களை மறுத்து மனத்தூய்மையுடன் செயற்படல், பதவி என்பதை துறந்து பொறுப்பு என்று செயற்படல் வேண்டும்.
நிர்வாக செயற்பாடுகள் சம்பந்தமாக மக்கள் கருத்துகளை பின்னூட்டங்கள் (Feedback) பெறவேண்டும்
பொதுச் சொத்துக்களை மற்றும் பைத்துல் நிதியங்களை பேணுவதில் கரிசனை காட்ட வேண்டும்.
ஆயுட்கால நிர்வாக முறைமை தவிர்ந்து பருவகால நிர்வாகங்கள் அமைக்கப்பட வேண்டும். (கூடிய பருவாகாலம் 3 வருடங்களாகும்)
நிர்வாகத்தெரிவு ஏலவே அறிவிக்கப்பட்டு மக்களினால் தெரிவு செய்யப்பட வேண்டும்.
எப்படியானவர்கள் தெரிவு செய்யப்பட்டாலும் முன்னைய நிர்வாகமும், சமூகமும் கட்டுப்படுவதோடு ஒத்தாசை வழங்க வேண்டும்.
மக்கள் சந்தேகங்கள் கொண்டு பார்க்குமளவுக்கு நிர்வாகத்தின் செயற்பாடுகள் இருக்கக் கூடாது.
பொறுப்புக்களை கணகச்சிதமான நிறைவேற்ற வேண்டும்
நிர்வாகத்தினுள்ளே சலசலப்பு, மணவுளைச்சல்கள் ஏற்படும் போது நிர்வாகத்தினுள் பேசித் தீர்த்துக் கொள்வதோடு மக்களிடையே அவைகளை பிரஸ்தாபிக்காமல் பாதுகாக்க வேண்டும்
நிர்வாக இரகசியங்களைப் பாதுகாக்க வேண்டும்.
எந்த நேரமும் தனக்கு கிடைத்திருக்கும் பொறுப்பை சரிவர நிறைவேற்ற வல்ல அல்லாஹவிடம் எந்நேரம் துஆக் கேட்டுக் கொண்டே இருப்பதோடு நிர்வாக வேலைகளுக்கு நேரம் ஒதுக்க வேண்டும்.
மக்கள் குறைகளை துறுவித் துறுவி ஆராயக் கூடாது குறைகளை மறைக்க வேண்டும்.
எனவே மேற்கூறிய விடயங்களை கடைபிடித்து இன்றைய சமூக சீர்கேடுகள் ஏற்படுவதிலிருந்து நிர்வாகங்கள் சமூகத்தை பாதுகாக்க வேண்டும். ஆகவே எமது நிர்வாகங்களை சரிவர செவ்வனே நிறைவேற்றி வெற்றி பேறுவோமாக!
எம். றமழான் மர்ஸுக், நெல்லியாகம
source: http://www.lankascholars.com/2015/03/blog-post_27.html