“ஹிஜாமா” -இரத்தம் குத்தி எடுக்கும் சுன்னத்தான வைத்திய முறை
ஹிஜாமா (حجامة) என்றால் என்ன? ஹிஜாமா (‘Hijama’ Arabic: حجامة lit. “sucking”) என்ற அரபி வார்த்தை hajm ‘(உறுஞ்சுதல்-Sucking) இருந்து பெறப்படுகிறது.
கப் அல்லது கோப்பையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, பின்னர் நமது தோல் மேற்பரப்பில் வைத்து தூய்மையற்ற அல்லது கெட்ட இரத்த கழிவுகளை உடலின் பல்வேறு இடங்களில் இருந்து வெளியேற்றும் மருத்துவ முறை தான் ஹிஜாமா (Hijama).
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதைப்பற்றி என்ன கூறியுள்ளார்கள்?
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; ‘அல்லாஹ் எந் நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை’ என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (புகாரி – 5678)
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. தேன் அருந்துவது, இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில் கீறுவது, தீயால் சூடிட்டிக்கொள்வது ஆகியனவே அந்த மூன்றுமாகும். (ஆனால்,) தீயால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமென என் சமுதாயத்தாருக்கு நான் தடை விதித்கிறேன்’ என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில், ‘தேனிலும் இரத்தம் வெளியேற்றுவதிலும் நிவாரணம் உள்ளது’ என வந்துள்ளது (புகாரி – 5680)
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்; “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் குருதி உறிஞ்சி எடுத்தார்கள்.” (புகாரி – 5694)
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்; “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘இஹ்ராம்’ கட்டியிருந்த நிலையில் குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள்.” (புகாரி – 5695)
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்; ”இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தலையில் குருதி உறிஞ்சி எடுத்தார்கள்.” (புகாரி – 5699)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடைய மிஃராஜ் பயணத்தின் போது மலக்குமார்களின் கூட்டங்களை கடக்கும் போது “ஒ முஹம்மத், ஹிஜாமா செய்யுங்கள்” என்று சொல்லப்படாமல் தவிர கடக்கவில்லை. (நூல்: திர்மிதி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், யாரெல்லாம் பிறை 17, 19, 21 ஆகிய தினங்களில் ஹிஜாமா செய்கிறார்களோ, அது எல்லா நோய்க்கும் நிவாரணம் ஆகும். (நூல்: ஸஹீஹ் ஸுனன், அபூ தாவூத்)
ஹிஜாமா (حجامة) செய்தால் எற்ப்படும் பயன்கள்:
முதன்மையான பயனும், நன்மை என்னவென்றால் இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறை (சுன்னத்), அதற்கான நன்மைகள் இவ்வுலகத்திலும், மறுமை நாளிலும் கிடைக்கும். இந்த ஹிஜாமா (குருதி (அ) இரத்த உறுஞ்சுதல்மூலம் இரத்த ஓட்டத்தை சமசீர் செய்து Kinetic energy என்ற ஆற்றலை அதிகப்படுத்துகிறது. இது இரத்தத்தில் இருந்து நச்சுகள் மற்றும் பிற கழிவு பொருள் அகற்றுகிறது. இதனால் சில வகையான நோய்கள் துரிதமாக குணமடைய உதவுகிறது.
ஹிஜாமா (حجامة) செய்வதின் மூலம் சில வகையான நோய்கள் உதாரணமாக இரத்தம் சார்ந்த Metabolic disease வருவதை நாம் முன் எச்சரிக்கையாக தடுக்கலாம். அதாவது வரும் முன் காப்போம் (Prevention better than cure). ஹிஜாமா செய்வதால் சில தீய கெட்ட எண்ணங்களால் உருவாகும் கண்ணோறு, செய்வினை போன்ற நோய்களின் பாதிப்பதை குறைக்கலாம் என கூறப்படுகிறது.
ஹிஜாமா முறையில் எந்தவித பக்க விளைவுகள் இல்லை, இது சுமார் 70% நோய்களையும், உடலின் குறைபாடுகளை குணமாக்க உதவுகிறது. இதை நாம் நவீன மருத்துவத்துடன் செய்தால் நம் உடல் நோய் மிகவேகமாக குணமடையும். நாம் உடல்நிலை சரியில்லாமல் நோய்வாய்ப்பட்டு இருக்கும் சமயத்திலும், நாம் உட்கொள்ளும் மருந்திலிருந்தும், அதிகநச்சுப்பொருட்கள் (Toxins), கழிவுப்பொருட்கள் (Waste metabolic product) உடலிருந்து வெளியோற வழி இல்லாமல் நம் இரத்தத்திலும், தோல் அடிப்புறம் (Subcutaneous area) களிலும் சேகரமாகியுள்ளது. அவற்றை நாம் ஹிஜாமா மூலம் அப்புறப்படுத்தி நம் உடல் நோய்களை குணப்படுத்த துரிதப்படுத்தலாம்.
ஒவ்வோரு வருடத்திற்கு இரண்டு மற்றும் நான்கு முறை ஹிஜாமா சிகிச்சை செய்வதனால் இடைப்பட்ட காலம் காலங்களில் எற்ப்பட்ட, உடலில் சேகரமாகிய கழிவுகளை நீக்கி, இரத்ததை சுத்தப்படுத்தி, இரத்த சுழற்சி மேம்படுத்தலாம், புதிய ஹார்மோன்கள் உற்பத்தியை துண்டுவதின் மூலமும், உடலின் அமைப்புகள் இயற்கை சமநிலை (Natural Biological Balance) மேம்படுத்துவதன் மூலம்பல உடல் சார்ந்த நோய்களை தடுக்கலாம்.
இரத்த மற்றும் நிணநீர் (Lymph) தேங்கி கழிவுகளை அகற்ற உதவுகிறது. இம்முறையால் நல்ல இரத்தங்கள், இரத்த செல்கள் (Blood cells – RBC, WBC ), இரத்தப்புரதங்கள் (Blood Protein) இவைகள் வெளியேறுவதில்லை.எந்த காலங்களில் (நாட்களில்) ஹிஜாமா (حجامة) செய்யலாம்? இந்த ஹிஜாமா இஸ்லாமிய காலண்டரான சந்திர காலண்டர் படி ‘ஒற்றைப்படை’ நாட்களில் செய்து சிறந்ததாக பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், குறிப்பாக திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் நாட்களில் செய்து சிறந்தது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு தினங்களில் ஹிஜாமா செய்வதை தவீர்த்துள்ளார்கள். மேலும் புதன்கிழமைகளில் Hijama செய்வதை தடுத்துள்ளார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், யாரெல்லாம் பிறை 17, 19, 21 ஆகிய தினங்களில் ஹிஜாமா செய்கிறார்களோ, அது எல்லா நோய்க்கும் நிவாரணம் ஆகும். (நூல்: ஸஹீஹ் ஸுனன், அபூ தாவூத்)
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறிய அறிவிப்பு இப்னு மாஜா (3487) பதிந்துள்ளது அதன் கருத்தாவது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெறும் வயிற்றில் ஹிஜாமா செய்வது குணப்படுத்தக்கூடியது என்றும், இறை அருள் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்கள்.
மேலும் அது அறிவாற்றல் மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கிறது. எனவே வியாழக்கிழமை அன்று அல்லாஹ்வின் அருள் மீது ஆதரவு வைத்து ஹிஜாமா செய்யுங்கள். புதன், வெள்ளி தினங்களில் ஹிஜாமா செய்யாதீர்கள். சனி மற்றும் ஞாயிறு தினங்களில் செய்வதை தவீர்பதின் மூலம் பாதுகாப்பாக இருங்கள். திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஹிஜாமா செய்யுங்கள்.இந்த நாட்களில் தான் நபி ஐயூப் அலைஹிஸ்ஸலாம் நோய் இருந்து பாதுகாப்பு பெற்றார்கள்.