ருமானா அஹ்மத் – வெள்ளை மாளிகையில் ஒரு ஹிஜாபி
அபுசாலிஹ்
[ என்னுடைய தோற்றத்தை பார்த்து பிரபல ஹாலிவுட் நடிகர் ஆடம்ஷ்கட் என்னருகில் வந்தார். எனது பொறுப்பு, எனது உடை எனது பின்னணி குறித்து விவரமாக கேட்ட அவர் என்னுடைய மகளை உங்களைப்போலவே வளர்க்க வேண்டும் அதற்கு நீங்கள் உதவவேண்டும் என்றார்.]
ருமானா அஹ்மத் தலை கவசம் நேர்த்தியாக அணியப்பட்ட அமெரிக்க அதிபரின் பெண் ஆலோசகர் ஹிஜாப் உடையுடன் தோற்றமளிக்கும் இவரை ஹிஜாபி என அங்குள்ளோர் அழைக்கின்றனர்.
அதிபர் மாளிகையில் முக்கிய பொறுப்பு வகிக்கும் முஸ்லிம்கள் அறுவரில் ருமானா ஒருவர். அதில் சிலர் தேசிய பாதுகாப்பு சபையில் பொறுப்பேற்று அதி முக்கிய தகவல் களஞ்சியங்களை தரம் பிரிக்கும் பணியில் சிலர், நாடாளுமன்றம், குடியேற்றம், தொடர்பான பணிகளிலும் அறிவியல் தொழில் நுட்ப பணிகளிலும் சிறப்புடன் பங்காற்றி வருகின்றனர்.
முஸ்லிம்களின் அரசியல் தொடர்பான விவாதங்கள், தேச பாதுகாப்பு குடியுரிமை தொடர்பான விவாதங்களில் மொத்த அமெரிக்காவே பங்கு பெற்று ஆர்வத்துடன் ணையில் ருமானா அஹ்மத்தின் வெள்ளை மாளிகை பொறுப்பு தொடர்பான முக்கியத்துவம் புருவம் உயர்த்தி பார்க்கப்படுகிறது. அதே வேளையில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் முஸ்லிம்களை குறிவைத்து வெறுப்புணர்வை கக்கி வருகிறார்.
முஸ்லிம்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கவேண்டும் என்றும் அவர் கூறியது நாடு முழுவதும் பெரும் கண்டனங்களை எழுப்பி பெரும் பர பரபப்பை ஏற்படுத்திய நிலையில் முஸ்லிம்களுக்கும் அரசுக்கும் இடையேயான உறவை மேம்படுத்த அதிபர் ஒபாமா உள்பட முக்கிய ஆளுமைகள் தனி கவனம் செலுத்தினர்.
கடந்த மாதம் ஒபாமா அதிகார பூர்வ பயணமாக பால்டிமோர் மஸ்ஜிதுக்கு சென்று வந்தார். அப்போது அமெரிக்க முஸ்லிம்கள் தாய்நாட்டுக்காக பணி செய்து பல்வேறு தியாகங்களை செய்ததோடு நாட்டிற்காக தங்கள் இன்னுரியையும் இழந்தனர் என்பதை ஒபாமா உருக்கத்துடன் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் பெரும்பாலான துறைகளில் முஸ்லிம்கள் அரும்பணி ஆற்றி வருகின்றனர். எனினும் அரசு பொறுப்புகளில் மத ரீதியிலான கணக்கெடுப்பு நடத்த அந்நாட்டு அரசியல் சாசனம் அனுமதி மறுத்துள்ள நிலையில் துல்லியமாக கணக்கெடுப்பை வெளியிட முடியவில்லை ருமானா அஹ்மது போன்ற முக்கிய உயர் முக்கியத்துவம் மிகுந்த அதிகாரிகள் பற்றிய தகவல்கள் மட்டுமே வெளி வருகின்றன.
2008 ம் ஆண்டு கோடை காலத்தில் அன்றைய அதிபர் வேட்பாளர் ஒபாமாவை சந்தித்தார் மாற்றங்களுக்கான நம்பிக்கைக்கு உரிய அந்த சந்திப்புக்கு பிறகு 2009 ஜூலை மாதம் அதிபர் மாளிகை மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பயிற்சியில் சேர்ந்தார். படிப்படியாக உயர்ந்து அமெரிக்காவை மேம்படுத்தும் மாற்றங்களுக்கான பணியை முன்னெடுத்தார் . துப்பாக்கி கலாச்சாரத்தில் இருந்து அமெரிக்க இளைய தலைமுறையை காப்பாற்றுவது ஆரோக்கியத்தை மேம்படுத்துவது போன்றவை இவரது பணியாகும்.
அவரது பணி முஸ்லிம் சமூகத்திற்கான மேம்படுத்தும் பணியாகவும் இருந்தது
இவர் வாஷிங்க்டன் புறநகர் பகுதியான கேய்தர்ஸ் பர்க் பகுதியில் பிறந்தவர் . இவரது பெற்றோர் பங்களாதேஷில் இருந்து அமெரிக்காவின் மேரி லேண்டுக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தகது.
இரட்டை கோபுர வளாக தாக்குதலுக்கு பிறகு தலையை மறைத்து ஆடை அணிந்து வெளியே சென்றதற்கு கடும் ஏற்பட்டதாகவும் அதனை லேசாக எடுத்துக்கொண்டதாக தெரிவித்தார்.
தான் ஸ்கார்ப் அணிந்து இருந்ததை பார்த்து எனது மேலதிகாரி அதிபர் முன்னிலையில் அமர இடம் ஒதுக்கினார். எப்போதுமே ஹிஜாபியான நான் முன்வரிசையில் தான் அமர்ந்திருப்பேன். என்கிறார் ருமானா.
என்னுடைய தோற்றத்தை பார்த்து பிரபல ஹாலிவுட் நடிகர் ஆடம்ஷ்கட் என்னருகில் வந்தார். எனது பொறுப்பு, எனது உடை எனது பின்னணி குறித்து விவரமாக கேட்ட அவர் என்னுடைய மகளை உங்களைப்போலவே வளர்க்க வேண்டும் அதற்கு நீங்கள் உதவவேண்டும் என்றார்.
மேலும் ருமானா கூறும்போது அலுவலக பணி தொடர்பாக மொராக்கோ சென்ற போது அங்கு தான் சந்தித்த பாலஸ்தீன இளைஞர்கள் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் ஒரு முஸ்லிம் அதிலும் முழுக்க ஹிஜாப் அணிந்த பெண்ணா? என நம்பவே முடியாமல் என்னைப்பார்த்தார்கள் கிரேட் அமெரிக்கன் சக்சஸ் ஸ்டோரி அங்கே நனவாகியது. அமெரிக்கா எல்லோருக்கும் உரிமையானது என்கிறார் ருமானா உண்மைதானோ!