தேனைவிட இனிப்பான செல்வந்தர்!
“சூரியனை எவ்வாறு அதன் சுடர் பற்றிப்பிடித்துக் கொள்கின்றனவோ, அதைவிடவும் அழுத்தமான பிடியாக சிலர் பணமுள்ளோரைப் பற்றிப் பிடித்துக் கொண்டுள்ளனர்.
அத்தகைய மனிதர்களுக்கு செல்வந்தர் தேனைவிட இனிப்பானவர்;
வானத்தைவிட உயர்வானவர்;
தண்ணீரைவிட இனிமையானவர்;
நறுமலர்களைவிட மணமுள்ளவர்.
செல்வந்தர் செய்யும் தவறு அவர்களுக்குச் சரியானது.
தீமையும், நன்மையாகத் தெரியும்.
செல்வந்தர் சொல் ஏற்றுக்கொள்ளக்கூடியது,
அவர் தலம் உயர்வானது என்று பற்றிப்பிடிப்போர் கருதுவர்.
ஆனால் வறுமைப்பட்ட மனிதனை செல்வந்தர் சந்தித்தால் முகத்தை சுளிப்பர். வறியவனிடம் கை கொடுத்தால் ஒளு முறிந்து போகுமெனக் கருதுவர் – என்று வறுமையின் கொடுமை குறித்து ஹளரத் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உரைத்துள்ளார்கள்.
முஸ்லிம் முரசு ஏப்ரல் 2016