கட்டிய மனைவி கட்டுக் குலைந்தாலும் கைவிடாதே!
[ மலரின் பசுமை நிறம் போலிருக்கும் மனைவி மீது வெறுப்பு காட்டாதே.
அணிகலணை சிதறவிடாது கோர்த்து இணைக்கும் நூல் போலும், இரதத்தில் சென்று வெற்றி கொண்ட மன்னன் தனது தொண்டின் மூலம் நாட்டைப் பாதுகாப்பது போன்றும் மனைவியைப் பாதுகாத்திடு.
வெண்சங்கு முறம் போன்ற காதுகளையுடைய யானை மீது அமர்ந்து வந்த முன்னோருக்கு அவர்கள் கரங்களில் வைத்திருந்த ஆயுதம் உதவியது போன்றும் மனைவிக்கு உதவ வேண்டும்.
தவறு இழைக்காது நன்மையான சொற்கள் பேசி அவளின் துன்பம் நீக்க வேண்டும்.]
கட்டிய மனைவி கட்டுக் குலைந்தாலும் கைவிடாதே!
அன்னாந்து ஏந்திய வன முலை தளரினும்
பொன் நேர்மேனி மணியின் தாழ்ந்த
நல்நெடுன் கூந்தல் நரையோடு முடிப்பினும்
நீத்தல் ஓம்பு மதி – பூக்கேழ் ஊர!
இன் கடுங்கள்ளின் இழை அணி நெடுந்த்தேர்க்
கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீ இயர்
வெண் கோட்டு யானைப் போஓர் கிழவோன்
பழையன் வேல் வாய்த்தன்ன நின்
பிழையா நல்மொழி தேறிய இவட்கே. (நற்றினை – சங்கப்பாடல்)
பாடலுக்கான உரை:
குழந்தைக்குப் பாலூட்டும் மார்பகங்கள் இரண்டும் தளர்ந்து போனாலும், அழகான உடலின் கருத்தமணி மாலைபோல் நீண்டு தொங்கிய அவளது கூந்தல் நரைத்துப் போனாலும் பிரிந்து விடாதே. கரம் பற்றிய மனைவியின் இளமைக் காலத்திலும், முதுமைக் காலத்திலும் கைவிடாது அவளைப் பாதுகாத்திடு.
மலரின் பசுமை நிறம் போலிருக்கும் மனைவி மீது வெறுப்பு காட்டாதே. அணிகலணை சிதறவிடாது கோர்த்து இணைக்கும் நூல் போலும், இரதத்தில் சென்று வெற்றி கொண்ட மன்னன் தனது தொண்டின் மூலம் நாட்டைப் பாதுகாப்பது போன்றும் மனைவியைப் பாதுகாத்திடு.
வெண்சங்கு முறம் போன்ற காதுகளையுடைய யானை மீது அமர்ந்து வந்த முன்னோருக்கு அவர்கள் கரங்களில் வைத்திருந்த ஆயுதம் உதவியது போன்றும் மனைவிக்கு உதவ வேண்டும். தவறு இழைக்காது நன்மையான சொற்கள் பேசி அவளின் துன்பம் நீக்க வேண்டும்.
– சேது குடியான்
முஸ்லிம் முரசு ஏப்ரல் 2016