எது மார்க்கம்?
“மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன் தான், அவனைத் தவிர வேறு நாயனில்லை, அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் . (அல்குர்ஆன் 2:163)
முஸ்லிமிடம் இஸ்லாம் விரும்பும் முதல் பண்பு அவர் அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப ஈமான் கொண்டு, அவனுடன் உறுதியான உறவைக் கொண்டிருத்தலாகும். அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்து, அவனை சதாவும் நினைவு கூர்ந்து கையாள்வதுடன், அல்லாஹ்விடம் உதவியும் தேட வேண்டும்.
உண்மை முஸ்லிமின் இதயம் விழித்திருக்கும். அவரது அறிவுக்கண் திறந்திருக்கும். உண்மை முஸ்லிம் தனது அனைத்து சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டு, அவனைப் பணிந்து அஞ்சி நடப்பார்.
உண்மை முஸ்லிம் தனக்கு அல்லாஹ் விதித்ததை மகிழ்வுடன் ஏற்றுப் பொருந்திக் கொள்வார். அவரது பார்வை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழியில் நிலைகொள்ளும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; ”முஸ்லிமின் அனைத்து விஷயங்களும் ஆச்சரியமானதுதான். அவரது அனைத்து விஷயங்களும் நன்மையானதே. அவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு துன்பம் ஏற்பட்டால் பொறுமையை மேற்கொள்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைகிறது. (ஆதாரம்: புகாரி)
இன்று, முஸ்லிம்களில் சிலர், நம்பிக்கை எது? மூடநம்பிக்கை எது? என்று கூட தெரியாமல், மூடநம்பிக்கையை நம்பிக்கை போன்று பின்பற்றி வருகிறார்கள்.
திருமணம், குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கு செய்யும் காரியங்கள், நேர்ச்சை செய்யும் காரியங்களில், இப்படி இன்னும் நிறைய விஷயங்களில் முஸ்லிம்களில் சிலர் இன்னும் செய்துக் கொண்டுதான் வருகிறார்கள்.
தர்காக்களில் நடக்கும் காரியங்களைப் பார்த்தால் என்ன சொல்வது என்று தெரியவில்லை! அல்லாஹ்வுக்கு மட்டும்தான் நேர்ச்சை செய்ய வேண்டும். மாறாக, இறைநேசர்களின் பெயரில் நேர்ச்சை செய்யும் சில முஸ்லிம்களை பார்க்கிறோம். அல்லாஹ்விடம் செய்ய வேண்டிய பிரார்த்தனைகள் . இறைநேசர்களிடம் சில முஸ்லிம்கள் முறையிடுகிறார்கள். பிள்ளை பேரு இல்லாதவர்கள், எதோ ஒரு நேர்ச்சை செய்கிறார்கள். அங்கே ஒரு தொட்டியை கட்டி விடுகிறார்கள். இன்னும் நிறைய இஸ்லாத்தில் இல்லாத மூட பழக்க வழக்கங்கள்.
(நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கின்றேன்,, அவர்கள் என்னிடமே [பிரார்த்தித்துக்] கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக. (அல்குர்ஆன் 2:186)
அல்லாஹ்விடம் கேட்டால், அவன் கொடுக்க தயாராக இருக்கின்றான். அப்படி உங்கள் பிரார்த்தனை தாமதமாக ஆனாலும் . அது உங்களுக்கு நலவுதான்!
“நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்.” (அல்குர்ஆன் 2: 208)
”ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக! (அல்குர் ஆன் 9:51)
சில முஸ்லிம்கள் அப்படியும், இப்படியுமாக இருப்பார்கள். அவர்கள் இஸ்லாத்தில் முழுமையாக ஈடுப்பாடு இல்லாமல். அறியாமையும், மார்க்க கல்வியும் இல்லாமையும் காரணத்தினால். இப்படி தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு சிறிய ஊரில், அந்த ஊரில் எந்த தர்காவும் இல்லை. சில காலம் பிறகு அந்த ஊரில் ஒரு தர்கா வந்துவிட்டது. மக்கள்கள் கூட்டம் கூட்டமாக அங்கே செல்கிறார்கள். எப்படி திடிரென்று வந்தது என்று தெரியவில்லை. (அப்படி யாரவது ஒருவரிடம் கேட்டால். அவர் சொல்லும் பதில்.” யாரோ ஒருவர் கனவில் அங்கே இறைநேசர் அடங்கி இருக்கிறார், அங்கே ஒரு கட்டிடம் எழுப்பு என்று கனவில் சொல்லப்பட்டதாக கூறுவார்”) இறைநேசர்கள் என்ற பெயரிலே சில முஸ்லிம்கள் இறைநேசர்களை மதிப்பதாக எண்ணிக் கொண்டு அவர்களை அவமதிக்கிறார்கள். கந்தூரி விழா நடத்துகிறார்கள். இஸ்லாத்தில் இல்லாத அனாச்சாரங்களை செய்து வருகிறார்கள். இதுதான் இஸ்லாம் மார்க்கமா…? சிந்திக்க வேண்டாமா..!!
ஒருவர் வீட்டில் யாராவது ஒருவர் ”தந்தையோ அல்லது தாயோ இறந்துவிட்டால் அவருக்காக அங்கே நடத்தப்படும் சில காரியங்கள் . அந்த வீட்டில் இருப்பவர்கள் பிள்ளைகள், உறவினர்கள் மாறி மாறி முழு குரானை ஓதி அன்றே முடித்துவிடுவார்கள். இந்த பழக்கம் பெரும்பாலும் வீட்டில் நடக்கிறது.
சாதாரண காலங்களில் குர்ஆனை எடுத்து கொஞ்சம் ஓதுங்கள் என்று சொன்னால், இப்பொழுது எனக்கு நேரம் இல்லை. சுத்தமாக இல்லை, பிள்ளை சிறுநீர் கழித்து விட்டது, இப்படி ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி வருவதைப் பார்க்கிறோம். அல்லாஹ்வின் திருமறை உலகத்தில் உள்ளவர்களுக்காக இறக்கப்பட்டது. உயிருடன் இருப்பவர்கள் அந்த குர்ஆனை படித்து வாழ்க்கைக்கு வழிக்காட்டியாக எடுத்துக் கொள்ளவேண்டும் தவிர இப்படி மரணித்தவர்களுக்கு வேகமாக தப்பும் தவறுமாக ஓதி ஹத்தம் செய்வதற்கு அல்ல. சிந்திக்க வேண்டும்!
குர்ஆனில் சொல்லப்பட்டதை விட்டு விட்டு. நீங்கள் உங்கள் மனோ இச்சையின் படி நடப்பது எந்த விதத்தில் முறை..? பெற்றோர்கள் இறந்தால் பிள்ளைகள் அழகான முறையில் பெற்றோர்களுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும். அவர்களுக்காக தான தர்மம் செய்ய வேண்டும். இரத்த உறவுகளை பேணி கொள்ளவேண்டும். பெற்றோர்கள் விட்டு போன ஏதாவது கடன்கள் இருந்தால் பிள்ளைகள் தான் அந்த கடனை தீர்க்கவேண்டும். பெற்றோர்கள் ஏதாவது வஸியத் செய்திருந்தால் பிள்ளைகள் நிறைவேற்ற வேண்டும். அன்பார்ந்த இஸ்லாமியர்களே! சிந்திக்க வேண்டும்! அல்ஹம்துலில்லாஹ்!!!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
சத்திய பாதை இஸ்லாம் Haja Jahabardeen sp
source: http://islam-bdmhaja.blogspot.com/2016/02/sathiya-pathai-islam.html