அல்லாஹ்வின் அழகிய ஒப்புவமை!
M.S. அபூ பக்கர், அதிரை
o (நபியே!) தீயவை அதிகமாக இருப்பது உம்மை ஆச்சரியப்படுத்திய போதிலும், ”தீயதும் நல்லதும் சமமாகா; எனவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்குப் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்” என்று நீர் கூறுவீராக. (5:100)
o இன்னும் நீர் கூறும்; “குருடனும், பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?” (6:50)
o குருடனும், பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள், (அவ்வாறே) இருளும், ஒளியும் (சமமாகா). (அவ்வாறே) நிழலும், வெயிலும் (சமமாகா). (35:19,20,21)
o அன்றியும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாகமாட்டார்கள். (35:22)
o நன்மையும், தீமையும் சமமாகமாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்குமிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரைப் போல் ஆகிவிடுவார். (41:34)
o எவர் மறுமையை அஞ்சி, தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து இராக்காலங்களில் ஸுஜூது செய்தவராகவும், நிலையில் நின்றவராகவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா? (நபியே!) நீர் கூறும். “அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம். (39:9)
o குருடரும், பார்வையுடையோரும் சமமாகார்; அவ்வாறே, ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்வோரும், தீயோரும் சமமாக மாட்டார்கள்; உங்களில் சொற்பமானவர்களே நல்லுபதேசம் பெறுகிறீர்கள். (40:58)
o எவர்கள் தீமைகள் செய்கிறார்களோ அவர்களை, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல் கள் செய்கிறார்களோ அவர்களுக்குச் சமமாக நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணுகிறார்களா? அவர்கள் உயிருடனிருப்பதும், மரண மடைவதும் சமமாகுமா? அவர்கள் முடிவு செய்து கொண்டது மிகவும் கெட்டதாகும். (45:21)
o உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன; அதில் அவருக்கு எல்லாவகையான கனி வர்க்கங்களும் உள்ளன; (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்து விடுகிறது; அவருக்கு (வலுவில்லாத) பலஹீனமான சிறு குழந்தைகள்தாம் இருக்கின்றனர். இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக்காற்று அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ்(தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான். (2:266)
o குருடனும், பார்வை உடையவனும் சம மாவார்களா? அல்லது இருள்களும், ஒளியும் சமமாகுமா? அல்லது அவர்கள் இணையாக்கிக் கொண்டிருக்கும் (தெய்வங்கள்) அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதையும் படைத் திருக்கின்றனவா? (அப்படியிருந்தால் இது யார்) படைப்பு என்று அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்!” (13:16)
o அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றி நடப்போர், அல்லாஹ்வின் கோபத்தைத் தம் மேல் வரவழைத்துக் கொண்டவர் போல் ஆவாரா? (அல்ல-கோபத்தை வரவழைத்துக் கொண்டோராகிய) அவனது இருப்பிடம் நரகமேயாகும்; அது தங்குமிடங்களில் மிகவும் கெட்டதுமாகும். (3:162)
o மரணம் அடைந்த ஒருவனை நாம் உயிர்ப் பித்து எழுப்பினோம்; இன்னும் அவனுக்கு ஓர் ஒளியையும் கொடுத்தோம்; அதைக் கொண்டு அவன் மனிதர்களிடையே நடமாடுகிறான். மற்றொருவன் இருள்களில் சிக்கிக்கிடக்கிறான்; அதைவிட்டு அவன் வெளியேறவே முடியாது. இவ்விருவரும் சமமாவாரா? இவ்வாறே காஃபிர்களுக்கு அவர்கள் செய்யக்கூடிய (பாவச்) செயல்கள் அழகாக்கப்பட்டுள்ளன. (6:122)
o இவ்விரு பிரிவினர்களுக்கு உதாரணம் : (ஒரு பிரிவினர்) குருடர், செவிடர் போலவும் (இனி யயாரு பிரிவினர் நல்ல) பார்வையுள்ளவர், (நல்ல) கேட்கும் சக்தியையுடையவர் போலவும் இருக்கின்றனர். இவ்விரு பிரிவினரும் ஒப்புவமையில் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (11:24)
o அல்லாஹ் உங்களில் சிலரை சிலரைவிட செல்வத்தில் மேன்மைப்படுத்தி இருக்கிறான்; இவ்வாறு மேன்மையாக்ககப்பட்டவர்கள், தங்களுடைய செல்வத்தை தங்கள் வலக்கரங்களுக்கு உட்பட்டு(த் தம் ஆதிக்கத்தில்) இருப் பவர்களிடம் கொடுத்து அவர்களும் இவர்கள் செல்வத்தில் சமமான உரிமை உள்ளவர்கள் என்று ஆக்கிவிடுவதில்லை; (அவ்வாறிருக்க) அல்லாஹ்வின் அருட்கொடையையா இவர்கள் மறுக்கின்றனர்? (16:71)
o அல்லாஹ்(இருவரை) உதாரணம் கூறுகி றான்; பிறிதொருவனுக்கு உடமையாக்கப் பட்ட எந்தப் பொருளின் மீதும் (அதிகார) உரிமை பெறாத ஓர் அடிமை; மற்றொருவனோ நம்மிடமிருந்து அவனுக்கு நல்ல உணவு(ம் மற்றும்) பொருள்களும் கொடுத்திருக்கின்றோம்; அவனும் அவற்றிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (நம் வழியில்) செலவு செய்கி றான். இவ்விருவரும் சமமாவாரா? அல்ஹம்து லில்லாஹ்(புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே) என்றாலும் அவர்களில் பெரும்பாலோர் அறிந்து கொள்வதில்லை. (16:75)
o மேலும், அல்லாஹ் இரு மனிதர்களைப் பற்றி ஓர் உதாரணம் கூறுகிறான்; அவ்விருவரில் ஒருவன் ஊமை(யான அடிமை); எந்தப் பொருளின் மீது (உரிமையும்) சக்தியும் அற்றவன்; தம் எஜமானனுக்குப் பெரும் சுமையாகவும் அவன் இருக்கின்றான்; எங்கு அவனை அனுப்பினாலும் அவன் யாதொரு நன்மையும் கொண்டுவர மாட்டான்; மற்றவனோ, தானும் நேர்வழியிலிருந்து (பிறரையும் நன்மை செய்யுமாறு) நீதியைக் கொண்டு ஏவுகிறான். இவனுக்கு (முந்தியவன்) சமமாவானா? (16:76)
o ஈமான் கொண்டவர்களில்(நோய், பலஹீனம், முதுமை, பார்வையிழத்தல் போன்ற) எந்தக் காரணமுமின்றி (வீட்டில்) உட்கார்ந்திருப்பவர்களும், தங்களுடைய சொத்துக்களையும், தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அல்லாஹ்வின் பாதையில் பாடுபடுபவர்களும் சமமாகமாட்டார்கள்; தங்களுடைய பொருட்களையும், தங்களுடைய உயிர் களையும் (அர்ப்பணித்தவர்களாக) அறப்போர் செய்வோரை, உட்கார்ந்திருப்பவர்களைவிட அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான். (4:95)
o உங்களிலிருந்தே அவன் உங்களுக்காக ஓர் உதாரணத்தை எடுத்துக் கூறுகிறான்; உங்கள் வலக்கரம் உரிமைப்படுத்திக் கொண்டவர்களில்(அடிமைகளில்) எவரையும், நாம் உங்களுக்கு அளித்திருப்ப(தான சம்பத்தில் உங்களுடன் பங்காளிகளாக ஆக்கிக்கொண்டு) அதில் அவர்களுடன் சமமாக இருக்கிறீர்களா? இவ்வாறாகவே! நாம் நம் அத்தாட்சிகளை சிந்தித்துணரும் சமூகத்திற்கு விவரிக்கிறோம். (30:28)
o எனவே (அத்தகைய) முஃமினானவர் (வரம்பு மீறிய) பாவியைப் போல் ஆவாரா? (இருவரும்) சமமாகமாட்டார்கள். (32:18)
o இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா; ஒன்று மிகவும் இனிமையாக, (தாகந்தீரக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது; மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. (35:12)
o அல்லாஹ் ஓர் உதாரணம் கூறுகிறான்; ஒரு வருடன் ஒருவர் கருத்து வேற்றுமை கொண்டிருக்கும் பல எஜமானர்களுக்கு (ஊழியம் செய்யும்) ஒரு மனிதனும், ஒரே மனுதனுக்கு (ஊழியம் செய்யும் பிறிதொரு) மனிதனும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் சமமாவார் களா? அல்ஹம்துலில்லாஹ். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள். (39:29)
o (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களில் நின்றும் (எவரும்) சமமாகமாட்டார்; (மக்காவின் வெற்றிக் குப்) பின் செலவு செய்து போரிட்டவர்களை விட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள்; எனினும் அல்லாஹ் எல்லோருக்குமே அழ கானதையே வாக்களித்திருக்கின்றான். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (57:10)
o நரகவாசிகளும், சுவர்க்கவாசிகளும் சமமாக மாட்டார்கள்; சுவர்க்கவாசிகளே பெரும் பாக்கியம் உடையோர். (59:20)