தொடரும் தலாக், தடுமாறும் ஜமாத்!
[ அகிலத்தின் அதிபதி அல்லாஹ்வின் அர்ஷே நடுங்கக்கூடிய, அனுமதிக்கப்பட்டவைகளிலேயே அல்லாஹ்வை மிகவும் கோபம் கொள்ளச்செய்யும் ஒரு விஷயத்தை எவ்வளவு எச்சரிக்கையாக கையாள வேண்டும் என்பதை நிர்வாகிகள் சற்றேனும் சிந்தித்துப்பார்ப்பார்களேயானால் அவர்களிடம் “தலாக்” குறித்த அலட்சியம் இருக்கும் இடம் இல்லாமல் போய்விடும்.]
சில ஜமாத்தின் இயலாமையுடன், சகிப்புத்தன்மை இல்லாததும் தான் தலாக் நிலைமைகள் ரெம்பவும் மோசமாகி வரும் சூழ்நிலை க்குக் காரணமாக அமைகிறது.
கணவன் மனைவிக்கிடையில் புரிதலின்மை, உறவினர்களின் குறுக்கீடு போன்ற காரணங்களால், திருமணமாகி சில மாதங்களில் தலாக் கேட்டுவரும் தம்பதிகள் ஒருபுறம் என்றால், மனைவியை வெளி நாட்டிற்கு அழைத்து சென்று மணப்பெண்ணை கொடுமைகள் செய்த சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் பெண்ணைப் பெற்ற பெற்றோர்கள் தன் மகளுக்கு நேர்ந்த கொடுமைகளை ஜாமாத் நீர்வாகத்திடம் போய் முறையிட்டால் அப்போது தான் சொல்லுகிறார் மாப்பிள்ளை வீட்டிற்கு ஆதரவான ஜமாத் நிர்வாகி ”உங்கள் பிள்ளையை மாப்பிள்ளைக்கு பிடிக்க வில்லையாம்” என்று!
எங்களுக்கு மனுக்கள் வந்து 10 நாட்கள் ஆகி விட்டது என்று காமடி செய்யும் நிர்வாகி அல்லாஹ்விற்க்கு அஞ்சிக் கொள்ளட்டும்.
அடப்பாவிங்களா! என்று பெண்ணை பெற்ற பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தார்கள் மனக்குமுறல்! வரதட்சணையாக ரூபாய். 10 லட்சம் பணத்தை வாங்கி ஏப்பம் விட்ட மாப்பிள்ளையின் பெற்றோர்கள் தன் மகனுக்கு அடுத்த பெண்ணை மன முடிக்க ஆயத்தம்!
இதற்கு யார் காரணம் மாப்பிள்ளையின் வீர தீர செயல்களா? .தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தலாக் என்றால் சக்கரை பொங்கல் போல் சந்தோஷம்.
இதை சரி செய்ய சமரசம் இல்லையாம் நிர்வாகிக்கு! ஜமாத்திற்கு ஏன் இந்த அவல நிலை? தலாக் மனுவை அசர் தொழுகைக்கு கொடுத்தால் போதுமாம், மக்ரிபு தொழுகைக்கு வரும் போது கச்சிதமாக தலாக் செய்து பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்கி முடித்து விடுவார்களாம்.
இதைப் போல் ஜமாத்திற்கு உட்பட்ட வேறு நபர்கள் மற்றும் பிடிக்காத நபர்கள் அவர்களின் வீட்டில் தலாக் சம்மந்தமாகவும் மற்றும் ஏதாவது பிரசனையாக இருந்தால் தலைவரைப் போய் பாருங்கள் இவரைப் போய் பாருங்கள் என்று தட்டிக் கழிக்கும் அவலம்.
தலைவாரைப் போய் பார்த்தால் அவருக்கு மார்க்கமும் தெரியாது, ஷரிஅத்தின் வழி முறையும் தெரியாது, மனிதர்களை மதிக்கவும் தெரியாது.
அல்லாஹ்வின் ஹதீஸ்களும் தெரியாது. மாப்பிள்ளை, பெண், தலாக் விசயத்தில் எங்கள் ஜமாத் தலையிட மாட்டோம். நீங்கள் நீதி மன்றத்தின் கதவுகளை தட்டி தீர்ப்புகள் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அடாதடியாக சொல்லி விடுவார்கள். இவர் ஏன் தலைவராக இருக்க வேண்டும் என புலம்பி செல்லும் அவலம்.
பல ஊர்களில் ஜமாஅத்தின் தலமைமையில் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான அடிப்படை அறிவுகூட இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.
தலாக் பிரச்சனையை பயன்படுத்தி காசு பறிக்கும் கீழ்த்தரமான வெலைகளையும் சிலர் கூசாமல் செய்து வருகின்றனர்.
அகிலத்தின் அதிபதி அல்லாஹ்வின் அர்ஷே நடுங்கக்கூடிய, அனுமதிக்கப்பட்டவைகளிலேயே அல்லாஹ்வை மிகவும் கோபம் கொள்ளச்செய்யும் ஒரு விஷயத்தை எவ்வளவு எச்சரிக்கையாக கையாள வேண்டும் என்பதை நிர்வாகிகள் சற்றேனும் சிந்தித்துப்பார்ப்பார்களேயானால் அவர்களிடம் “தலாக்” குறித்த அலட்சியம் இருக்கும் இடம் இல்லாமல் போய்விடும்.
தகுதிகள் இல்லாதவர்களை நிர்வாக பொறுப்பில் இருந்து அகற்ற வேண்டும். அல்லாஹ்விற்கு அஞ்சி தீர்ப்புகள் வழங்கும் இறை அச்சம் உள்ளவர்களை நிர்வாகப் பொறுப்பிற்கு கொண்டு வர வேண்டும், அப்போதுதான் இதற்கு சரியான தீர்வு கிடைக்கும்.
-அபூ ஸஃபிய்யாஹ்