வங்கிகளில் வாங்கப்படாமல் உள்ள 75,000 கோடிகள் முஸ்லிம்களின் வட்டிப்பணம்! இதோ அதற்கான ஒரு தீர்வு!
கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் RBI Legal News and Views வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி கிடத்தட்ட 75,000 ஆயிரம் கோடிகள் முஸ்லிம்களின் வட்டிப்பணம் வாங்கப்படாமல் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் வட்டியை வாங்காததற்கு காரணம் இஸ்லாம் வட்டியை தடை செய்துள்ளது என்ற ஒற்றை காரணம் மட்டுமே.. மேலும் அந்த அறிக்கையின் படி கேரளாவில் தான் அதிக அளவாக 45,000 கோடிகள் அளவுக்கு முஸ்லிம்களின் வட்டிப்பணம் வாங்கப்படாமல் உள்ளது.
இது 2005 ஆம் ஆண்டு வரை உள்ள கணக்கு தான். இன்று 2014 ஆம் ஆண்டு எப்படியும் வாங்கப்படாமல் உள்ள வட்டிப் பணம் அதிகரித்திருக்கும் என்பதே உண்மை.
முஸ்லிம்களின் சமூக – பொருளாதார – கல்வி நிலையைப் பற்றி ஆய்வு செய்த நீதியரசர் ராஜிந்தர் சச்சார் அவர்களின் அறிக்கையில் வங்கி பரிவர்த்தனையில் முஸ்லிம்களின் பங்களிப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதை படம் பிடித்துக் காட்டியுள்ளார். நாட்டில் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களில் வெறும் 12 விழுக்காடு தான் முஸ்லிம்கள்.
மக்கள் தொகையில் 6 விழுக்காடு உள்ள ஏனைய சிறுபான்மை மக்கள் 8 விழுக்காடு அளவிற்கு வங்கி பரிவர்த்தனை செய்கின்றனர். நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களில் உள்ள வங்கிகளின் கிளைகளை ஙிலிகிசிரி லிமிஷிஜிணிஞி கிளைகளாக அந்த வங்கிகளின் தலைமையகம் வைத்துள்ளது. முஸ்லிம்கள் இன்றைய வங்கிகளோடு நெருங்கி பரிவர்த்தனை செய்யாதது தான் இதற்குக் காரணம் என்று நீதியரசர் ராஜிந்தர் சச்சர் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் நீண்ட நெடும் காலமாக முஸ்லிம்கள் வட்டி இல்லாத வங்கி முறையை நடை முறைப்படுத்த மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தும் கூட இன்றுவரை ஒரு செயல்பாட்டுக்கும் வருவதாக இல்லை.
மேலும் முஸ்லிம்களின் கல்வி பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் பின் தங்கியுள்ள சூழலிலும் கூட அதற்கான முன்னேற்றத்திற்கும் எந்த ஒரு செயல்பாட்டுக்கும் மத்திய அரசு தயாராக இல்லை. ஒருவேளை வட்டி இல்லாத வங்கி என்ற ஒன்று செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் நிட்சயம் முஸ்லிம்களின் வங்கி முதலீட்டுக்கும் உகந்ததாக இருக்கும்..மற்றபடி வட்டியோடு தொடர்புடைய்ய வங்கிகள் செயால்பாட்டில் இருக்கும் வரை முஸ்லிம்கள் நிச்சயம் அதில் முதலீடு செய்யப்போவதில்லை என்பது மட்டும் உண்மை..
நாட்டில் உள்ள 25 கோடி வாழும் முஸ்லிம் சமூகத்தின் பொருளாதார ஏற்றத்தாழ்வை போக்காத வரை முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட பொய் பிரட்சாரட்தின் மூலம் தனிமைப்படுத்தப்படுவது நிற்காத வரை வல்லரசு கனவு என்பது வெறும் கனவாக மட்டுமே இருக்கும் என்பதே உண்மை..
வழக்கம் போலவே முஸ்லிம் தீவிரவாதம் என்ற பொய்யை பரப்பிவரும் எந்த ஒரு ஊடகமும் இந்த் செய்திகளுகெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பதும் இல்லை . இஸ்லாம் வட்டியை தடை செய்துள்ள ஒரே ஒரு காரணத்தினால் தான் முஸ்லிம்கள் வட்டியின் பக்கம் செல்வதில்லை என்ற உண்மையை வெளிப்படுத்துவதும் இல்லை….மாறாக வழக்கம் போலவே தொடர்சியான பொய்களின் மூலம் முஸ்லிம்களை சமூகத்தில் இருந்து பிரிக்கும் கேவலமான வேலையே தான் தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது. (தகவல் உதவி – samooganeethimurasu)
வங்கிக் கணக்கில் சேரும் வட்டி வேண்டாமா? தீர்வுக்கு வழி!
வங்கிகளில் கணக்கு வைத்துள்ள தனித்தனி முஸ்லிம்கள் தங்களது இருப்பு, சேமிப்பு பணத்திற்கு அரசு தரும் வட்டிப் பணத்தை எடுத்துப் பயன்படுத்தாமல் பல இலட்சம் கோடிகள் சேர்ந்து கிடப்பதாகவும், ஆண்டுதோறும் 10-15 சதம் பணம் மேலும் அதிகரிப்பதாகவும், இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிடும் “செர்வ் ஆல் பவுண்டேஷன்” என்ற அமைப்பு.
இவ்வாறு சேர்ந்துள்ள பணத்தை முஸ்லிம்கள் எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்ற கருத்தாய்வின் முயற்சியாக, உலகம் முழுவதிலும் கொடுக்கப்பட்ட ஒன்பது “ஃபத்வாக்கள்” அடிப்படையில், செயல்படத் தீர்மானித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
o புற்று நோய், சிறுநீரகச் செயலிழப்பு நோய்கள், இதய நோய்கள் அவசர அறுவை சிகிச்சைக்கு, ஊனமுற்றவர்களுக்கு உதவுவது.
o வட்டியால் பாதிக்கப்பட்ட கடனாளிகளை மீட்டெடுப்பது.
o கிராமப்புறங்களில் தனி பாத்ரூம், கக்கூஸ் கட்டுவது போன்ற அடிப்படை வசதிகள் செய்து தருவது.
o நில நடுக்கம், வெள்ளம், தீ விபத்து, சுனாமி போன்ற பேராபத்து நேரங்களில் நிவாரணம் உதவி செய்வது.
o கல்வி உதவி, ஊக்கத்தொகை வழங்குவது போன்ற முடிவெடுத்து “Serve All Foundation” அமைப்பைத் துவக்கியிருக்கின்றனர்.
இந்த அமைப்பின் சேர்மேனாக,
புரபஷனல் எஸ். அஹமது மீரான் (9884230575)
செயலராக,
L.K.S.கோல்டு பேரடைஸ் எஸ். இம்தியாஸ் அஹமது (9841072722)
பொருளாளராக,
அம்சன் பர்னிச்சர் முஹம்மது அஹ்மத் (9940044004)
துணைச் சேர்மேனாக,
ஏ. முஹமது அஷ்ரப் (9841078866)
இணைச்செயலராக,
இம்ரான் ஹ§ஸைன் (9884252899)
இணைப் பொருளாளராக,
டி.சி. முஹம்மது ரியாஸ் (9840159786) போர்டு
மெம்பர்களாக,
அவைஸ் முஸ்வி (9841016655)
முஹம்மது ஏ. அப்சல் (9840041999)
ஏ.கே. முஹமது ஹனீபா (9884390392)
எஸ். இப்னு சௌத் (9444380600)
ஏ.எஸ். அப்துல் பாசித் (9840031786) ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்.
இந்த அமைப்பு செயல்பாடுகள் குறித்த சந்தேகம், விளக்கம், கருத்துரைத்தல் போன்றவைகளுக்கு மேற்காணும் பொறுப்பாளர்களைத் தொடர்பு கொண்டு பேசலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் தங்களிடம் வங்கியில் சேர்ந்திருக்கும் வட்டிப் பணத்தை அனுப்பலாம் என வங்கிக் கணக்கு விபரங்கள் தந்துள்ளனர்.
பணத்தை தருவது போலவே, தேவையுடைய தகுதியான நபர்களைப் பரிந்துரையும் செய்யலாம் என்றும் நான்கு பக்க தகவல் கையேட்டில் கூறப்பட்டுள்ளது.
வட்டிப்பணம் வேண்டாம் எனக்கருதுவோரும் நோய்களுக்கும், கல்விக்கும், பணமில்லாது அவதிப்படும் இருசாரரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
(தகவல் உதவி– முஸ்லிம் முரசு, பிப்ரவரி 2016)