மரணத்தின் வலி ஏற்படும் விதம்..!
N. மீரான்
உலகில் வாழும் பல உயிரினங்கள் குறித்தும் குர்ஆனில் பல அத்தியாயங்கள், வசனங்களில் கூறப்பட்டுள்ளது. குர்ஆன் தனக்கேயுரிய தனித்தன்மையால் விவரித்துக் கூறாமல் சுருக்கமாக, மறைபொருளாகவே ஒவ்வொன்றையும் கூறியிருக்கும். அந்த மறை பொருளாகக் கூறப்பட்டிருப்பதை கீழ்க்காணும் வசனங்கள் நமக்கு உணர்த்தும்.
“அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்து வானவர்கள் அவர்களை மரணிக்கச் செய்யும்போது எப்படியிருக்கும்“ (அல்குர்ஆன் 47:27)
(ஏக இறைவனை) உயிர்களைக் கைப்பற்றும் போது, அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து “எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்” என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே!” (அல்குர்ஆன் 8:50)
o உங்கள் முகங்களிலும், முதுகுகளிலும் என்ற வார்த்தைகளை இறைவன் கூறியிருப்பதற்கான கேள்வி நமக்குள் எழும்பும். விடை காணவும், மனிதனால் எளிதாகப் புரிந்து கொள்ளவும் முடியாது. ஆனாலும், ஒரு உம்மத்தாக இறைவன் வஹியாக அனுப்பிய செய்தியை விளக்க கடமைப்பட்டுள்ளோம். இது நம்முடைய பணி:
“கடினமாகக் கைப்பற்றுவோர் (வானவர்கள்) மீது சத்தியமாக”. (அல்குர்ஆன் 79:1)
“மென்மையாகக் கைப்பற்றுவோர் (வானவர்கள்) மீது சத்தியமாக”. (அல்குர்ஆன் 79:2)
o இரண்டு விதமாக மனித உயிர்களைப் பிடிப்பதாக, மலக்குகள் மீது சத்தியமிட்டுக் கூறுகிறான் இறைவன்.
o மரணத்தருவாய் துன்பம் தருவது: இந்த துன்பம் மனித உடலில் எங்கிருந்து வருகிறதெனில், மனித உடலில் உணர்ச்சி மண்டல நரம்புகள் மூலமாக மூளைக்கு வலியின் உணர்வுகள் எடுத்துச் செல்லப்படுகிறது.
உடம்பின் அனைத்து பாகங்களிலும் உணர்ச்சி மண்டல நரம்புகள் இருக்கின்றன:
மனித உடம்பு முழுவதுமுள்ள தோல்களில் இருக்கும் உணர்ச்சி செல்களுக்குப் பெயர் “Corpuscles – கார்ப்ப செல்ஸ்”.
இதன் பணி, ‘தொடு உணர்ச்சி, தட்பவெப்ப உணர்ச்சி, வலி உணர்ச்சிகளைத் தோல்களில் கண்டறியக் கூடியது. மனித தோல்களில் எங்காவது வலி ஏற்பட்டால் அதற்கான செய்தியை பிற நரம்புகள் மூலம் மின் துடிப்புகளாக முதுகுத் தண்டுவடத்திற்கு கொண்டு செல்லும். பின்னர் மூளைக்குச் செல்லும் பகுதியான “Spinothalamic- ஸ்பைனோதலாமிக்” பாதையில் மூளைக்குக் கொண்டு சேர்க்கும்!
தோல் வெளிக்காட்டும் வலிகளை இந்த ஸ்பைனோதலாமிக் தான் மூளையிலிருந்து கொண்டு செல்கிறது!
தோல்வழியாக வலிகளை மூளைக்கு எடுத்துச் செல்லும் மின் துடிப்புகள் உடலின் அனைத்து பாகங்களிலும் இருக்கின்றன.
உடலின் ஒரு பகுதியில் சூடுபட்டால், மூளையில் இருக்கும் சுற்றுகளுக்கு உடனடி சமிக்ஞையாக முன் பாராவில் குறிப்பிடப்பட்டுள்ள கார்ப்பசெல்கள் அசுர வேகத்தில் பயணித்து எடுத்துச் செல்கின்றன. அதே போன்று, தட்பவெப்ப உணர்ச்சி செல்களில், உடலியல் நரம்புகள் இணைந்திருந்தால் தட்பவெப்பம் மாறும்போது உடனடியாக மூளைக்கு எடுத்துச் செல்கின்றன.
இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பணிகள் இருப்பதால், முன் தயாரிப்பு எச்சரிக்கையுணர்வுடன் பணியாற்றுகின்றன!
o உடம்பிலுள்ள நரம்புகள், இணைப்புகள், தொடர்புகள் மூளையின் சுற்றுகளோடு எங்கு இணைக்கப்பட்டிருக்கின்றன என்பதை மனிதரால் கணக்கிட முடியாது.
தாயின் கருவில் குழந்தையாக இருக்கும் போது இவைகளை, இறைவன் வளர்க்கிறான். இவையனைத்தும் உடலுள் கடினமாகப் பிணைக்கப்பட்டிருப்பதால், மனிதனால் எந்த மாற்றமும் செய்ய இயலாது.
மனித உடம்பின் வெளி உறுப்புகள் அகற்றப்பட்டாலும், அகற்றப்பட்ட இடத்தின் நுனியில் உணர்ச்சி நரம்புகள் இருந்தால், அந்த இடத்தில் மின் துடிப்புகள் இருக்கும். அதன் காரணமாக வலி உணர்ச்சி ஏற்படும்.
முன் கூறப்பட்டுள்ள வலி உணர்ச்சிகளில் “nociseptive – நோசிசெப்டிவ்” என்ற ஒன்றிருக்கும். உண்டாகும் வலியை அதிகமாக்கிக் கொண்டு செல்லக்கூடியது இது. உறுப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் இந்த நோசி செப்டிவ் இருக்காது. அதனால் வலி வெளிப்படையாக உணரமுடியாது. அகற்றப்பட்ட நபருக்கு வரக்கூடிய வலியை மருத்துவ உலகம் “phantom pain – மறைமுக வலி” என்று பெயிரிட்டிருக்கிறது.
மனிதருக்குள் இருக்கும் உணர்ச்சி மண்டல நரம்புகள் உடம்பின் உள்ளே உள்ள உறுப்புகளிலிருந்து ஆரம்பித்திருக்கும். ஒட்டுமொத்த உறுப்புகளுடைய நரம்புகளும் முதுகுத்தண்டுக்குச் சென்றடைந்து கொத்தாகக் குவிந்திருக்கும். இதனை “முதுகின் வேர்கள்” எனக் குறிப்பிடுவர்.
உறுப்புகளிலிருந்தும் உணர்ச்சி நரம்புகள் தொடங்குவதால், இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகளில் நோய் வந்தால், இந்த உறுப்புகளிலிருந்து வரக்கூடிய உணர்ச்சி சமிக்ஞைகள் வலியை உணர்த்தாது.
முதுகுத்தண்டுகளில் கொத்தாகக் குவிந்திருக்கும் உணர்ச்சி நரம்புகளிலிருந்து வலி வெளிப்படும்! எடுத்துக்காட்டுக்கு இதய சம்பந்த நோய் வந்துள்ள நபருக்கு, இடது புஜத்தில் வலி ஏற்படும்! தொடக்க இடத்தில் காட்டப்படாத வலி, முடிவு இடத்தில் உண்டாகிக் காட்டும்.
ஆழ்ந்த உறக்கத்திலிருப்போர், தன்னுணர்வற்ற நிலையி ல் இருப்போரால் வலிகளை உணர முடியாது. காரணம், மூளையில் இருக்கும் உணர்ச்சி மண்டலம் மூலம் மூளைக்குச் செல்லும் உள்ளீடுகள் தடை செய்யப்பட்டிருக்கும் இது உடலுக்கும், மூளைக்குமான தொடர்பு.
ஆன்மாவுக்கும், மூளைக்குமான தொடர்பு என்ன என்று ஆராய்ந்தால், அறிதல் மிகமிகக் குறைவு! மரண அனுபவமும், இறை நம்பிக்கையும் வேறு, வேறு! வலியின் உணர்ச்சிகளுக்கும், ஆன்மாவுக்கும் தொடர்பு இருக்கின்றதா?
உறங்கிய நிலையில் ஒருவர் இறப்பை சந்தித்தால் அவர் எந்த வலியையும் உணர முடியாது.
உறக்கத்துக்கும், இறப்புக்குமான செய்திகள் பலவற்றை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
“இறைவா! உன் பெயராலேயே வாழ்கிறேன். உன் பெயராலேயே இறப்பேன்” என்று உறங்கச் செல்லும் முன்பு கூறுவார்கள். எழும்பிய பிறகு “இறைவா! இறப்புக்கு அடுத்து எனக்கு ஒரு வாழ்வைத் தந்துள்ளாய்” என்று கூறுவார்கள். (நூல்: ஸஹிஹ் முஸ்லிம் – 35:6549)
“அவன் தான் உங்களை இரவில் மரணிக்கச் செய்கிறான்; இன்னும் நீங்கள் பகலில் செய்தவற்றை எல்லாம் அறிந்திருக்கிறான்; மீண்டும் உங்களைக் குறிப்பிட்ட தவணை முடிப்பதற்காக பகலில் எழுப்புகிறான்; உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது; (அல்குர்ஆன் 6:60)
=== மனித நரம்பு மண்டலம் ===
புற நரம்புகள் கொத்தாக இருப்பதை “முதுகுத்தண்டு வேர்” என்கிறோம் இவை முதுகுத் தண்டுவடம் வழியே வெவ்வேறான 33 முள் எலும்பு அடுக்குகள் வழியாகச் செல்வதற்கு முன்னதாக மூளையையும், முதுகுத் தண்டுவடத்தையும் இணைக்கும் “மத்திய நரம்பு மண்டலம் – “Central Nervous System” என்ற ஒன்று புற நரம்பு மண்டலத்திற்கு நேர் எதிரே அமைந்துள்ளது.
உடலுக்கும், மூளைக்கும் இருக்கக்கூடிய ஒரே நரம்பு வழித்தடம், மூளை நரம்புகள் என்று கூறக்கூடிய “Cranialnerves – கிரேனியல் நெர்வ்ஸ்” இது உடம்பின் அடிப்பாகத்திலிருந்து மூளைக்குச் ª சல்கின்றன, இவை மொத்தம் பன்னிரெண்டு உள்ளன.
இந்த 12 கிரேனியல்களில் 10ஆவது கிரேனியல் நரம்பு தவிர, மற்றவைகள் உணர்ச்சி தகவல்களை தலைக்குக் கொண்டு செல்பவை.
10ஆவது நரம்பின் பணி, உடல் உள் உறுப்புகளான இதயம், நுரையீரலில் உள்ள உணர்ச்சி தகவல்களை உள்ளுக்குள்ளாக பறிமாறிக் கொள்ளும், இதன் பெயர் “Vacus” -நரம்பு.
o மத்திய நரம்பு மண்டலத்திற்கு உணர்ச்சி தகவல்கள் ‘தலை’ அல்லது ‘ முதுகு ’த் தண்டுவடத்திடம் இருந்துதான் வரும். இதைத்தான் குர்ஆன் “உங்கள் முகங்களிலும், முதுகுகளிலும்’’ என்று கூறியுள்ளது.
o மனிதர்கள் தம் தோல் வழியாக வலியை உணர்வதும், உடலின் உறுப்புகள் வழியாக உண்டாகும் வலிகளை அனுபவிப்பதும் மரணத்தருவாயில் மிகக்கடுமையாக இருக்கும். காரணம்; உணர்ச்சி செல்களுக்கு வரக்கூடிய இரத்த ஓட்டம் குறையும். இரத்தத்திலுள்ள செல்கள் மரணிக்கத் தொடங்கும்.
உடம்பின் உள்ளாக எரியும். எல்லா உயிர்களுக்கும் இதுதான் நிலை! இரத்த செல்கள் ஓட்டம் குறையும்போது மூச்சுவிடுதலும் சுவாசமும் குறையும். இந்த செயல்பாடுகளால் மூளைக்குள் அதிகவலி உணர்ச்சிகள் கொண்டு சேர்க்கப்படும்.
o இந்த வலி எப்படியிருக்குமெனில், மருத்துவ உலகம் கூறுவது போன்று “மறைமுக வலி – ஃபாண்டம்பெயின்” போன்றிருக்கும்.
o குர்ஆன் அத்தியாயம் 47:27 வசனத்தில் “Daraba தரபா” என்ற சொல் ஒன்றிருக்கும். இதன் பொருள்; “அடிக்கத்தக்க – உறைக்கத்தக்க”
o சில பல தருணங்களில் “வலியால் துடிச்சுப்போயிட்டேன்” என்று நாம் சொல்வதுண்டு. அந்த சமயம் இதயம் துடிக்கும்போது அதிகமான இரத்தம் சில இடங்களுக்குப் பாயும். பாயும் இடத்திலிருக்கும் வலி வாங்கிகள் ‘தீ’ எரிவது போன்று விட்டு விட்டு எரியும். அந்த சமயம் அவ்விடத்தில் அதிகமாகும், குறையும். இதைத்தான் குர்ஆன் ‘தரபா’ என்று கூறியிருக்கிறது.
குர்ஆனுக்கே உரிய அடையாள மொழியில் மனிதருக்கு இறைவன் கூறியிருக்கிறான்.
o மரணம் குறித்து மனிதருக்குள் கேள்விகள் எழும்பலாம்.
வலி வரும் நேரத்தில் ஆன்மா உடம்பினுள் இருக்குமா?
கடுந்துயரத்தை அனுபவிக்குமா?
ஆன்மா அதனை அனுபவிப்பதற்குள் வானவர்கள் பிடித்துச் செல்வரா?
அனுபவித்து முடிக்கும் வரை காத்திருந்து கைப்பற்றுவரா?
-போன்ற கேள்விகள் பிறக்கலாம். பதில் உரைக்க மனிதர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. அனைத்தையும் இறைவன் தன் கையில் வைத்திருக்கிறான்.
ஆன்மாவுக்கு வலியை உணர்த்தி கைப்பற்ற வேண்டுமா? வலி உணர்த்தாது கைப்பற்ற வேண்டுமா? அவனது முடிவு. அவன் மட்டுமே அறிந்த இரகசியம்.
முஸ்லிம் முரசு, பிப்ரவரி 2016
source: http://jahangeer.in/Feb_2016.pdf