Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஜனாஸாவும் இன்றைய முஸ்லிம்களும்!

Posted on February 15, 2016 by admin

ஜனாஸாவும் இன்றைய முஸ்லிம்களும்!

உண்மை முஸ்லிம் ஜனாஸா தொழுகைக்கான சட்டங்களையும் அதில் ஓதப்பட வேண்டிய நபிவழி துஆக்களையும் அறிந்துகொள்ள வேண்டும்.

மரணம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஜனாஸா தொழுகை நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், இன்னும் நம்மிடத்தில் எந்த மாற்றமும் வரவில்லை. வந்தாலும் அதை தடுப்பதற்கு சிலர் தயாராக இருக்கிறார்கள். இன்னும் பிடிவாதம் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஊர் வழக்கம் என்று சொல்லிக் கொண்டு, நபிவழிக்கு மாற்றமாகத்தான் நடந்து கொண்டியிருக்கிறது.

உண்மை முஸ்லிம் சமூகத்தில் நிகழும் மரணங்களின்போது பங்கெடுத்துக் கொண்டு கப்ருவரை பின்தொடர வேண்டும். இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்தினார்கள். ”முஸ்லிமின் மீது மற்ற முஸ்லிமுக்குரிய கடமைகள் ஐந்து. ஸலாமுக்கு பதிலுரைத்தல் , நோயாளியை நலம் விசாரித்தல், ஜனாஸாவை பின்தொடர்தல், அழைப்பை ஏற்றல், தும்மியவருக்கு (அவர் அல்ஹம்துலில்லாஹ் என்று சொன்னால் ‘யர்ஹமுகல்லாஹ்’) பதிலளித்தல். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

ஒருவர் இறந்துவிட்டால், அந்த வீட்டார்கள் எப்படி நடந்துக் கொள்ளவேண்டும் என்பதை நமக்கு நபிமொழி அறிவிக்கிறது.

உஸாமா இப்னு ஜைது ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்; ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளார் ஒருவர் ‘தனது மகன் மரண தருவாயில் இருக்கிறார்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு செய்தி அனுப்பினார். வந்தவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”நீர் அவரிடம் சென்று, ‘கொடுத்ததும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானது, எடுத்தும் அவனுக்குச் சொந்தமானது, அனைத்து விஷயங்களுக்கும் அல்லாஹ்விடத்தில் குறிப்பிட்டதோர் தவணை இருக்கிறது’ என்று கூறி, அவரை பொறுமையாக இருந்து நன்மையை ஆதரவு வைக்கச் சொல்லுங்கள்” என்று கூறி அனுப்பினார்கள். (ஆதாரம்.. புகாரி, முஸ்லிம்]

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.. ‘மரணத்தின்போது ஒப்பாரி வைத்து அழுவதால் அந்த மய்யித் கப்ரில் வேதனை செய்யப்படுகிறது.’

மற்றோர் அறிவிப்பில், ‘ஒப்பாரி வைத்து அழும் காலமெல்லாம் மய்யித் வேதனை செய்யப்படுகிறது. (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; ”ஒப்பாரி வைப்பவள் தனது மரணத்துக்கு முன் தௌபா (பாவ மன்னிப்பு) செய்யவில்லை என்றால் கியாம நாளில் அவள் கொண்டு வரப்படும்போது அவளுக்கு தாரினால் ஆனா கீழாடையும் உருக்கினாலான சட்டையும் அணிவிக்கப்படும்.

கண்களிலிருந்து கண்ணீர் வழிவது இதயம் துயரத்தால் காயமடைந்திருப்பதன் அடையாளமாகும். கூச்சல், ஒப்பாரி போன்ற விலக்கப்பட்ட செயல்கள் இல்லாமல் அழுவதில் எவ்விதக் குற்றமும் கிடையாது.

இறையச்சமுடைய முஸ்லிம் அடக்கம் செய்யப்படும் வரை அந்த ஜனாஸாவுடன் இருக்க வேண்டும். அதில் மகத்தான நற்கூலி உண்டு.

உஸ்மான் இப்னு அஃப்பான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மய்யித்தை அடக்கம் செய்தபின் அங்கு நின்று கூறுவார்கள். ”உங்கள் சகோதரருக்காக பாவமன்னிப்பு கோருங்கள். அவர் உறுதியுடன் இருப்பதற்கு அல்லாஹ்விடம் கேளுங்கள். நிச்சயமாக அவர் இப்போது விசாரிக்கப்பட இருக்கிறார்.” (ஆதாரம்: அபூதாவூத்)

நாம் மய்யித்தை அடக்கம் செய்தவுடன் , உடனே அங்கேயிருந்து புறப்படத்தான் பார்ப்போம். அல்லது ஹஜ்ரத் துஆச் செய்வார் . எல்லோரும் வாடிக்கையாக வழக்கமாக ஆமீன் கூறுவோம். அந்த மய்யித்காக நாம் யாராவது ஒருவர் சிறிது நேரம் இருந்து உருக்கமாக அல்லாஹ்விடம் துஆச் செய்வோமா..? எப்பொழுதும் சடங்கும், சம்பிரதாயமும் தான் !

இறுதியாக ஒரு ஹதீஸ்…

அம்ரு இப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.. நீங்கள் என்னை அடக்கம் செய்தால் ஒரு ஆட்டை அறுத்து அதன் இறைச்சியை பங்கீடு செய்யும் நேரம்வரை எனது கப்ரைச் சுற்றி நில்லுங்கள். உங்களைக் கொண்டு நான் ஆறுதல் அடையவும், எனது இரட்சகனின் தூதுவருக்கு எதைக் கூறவேண்டும் என்பதை நான் அறிந்து கொள்வதற்காகவும் (கப்ரைச் சுற்றி நில்லுங்கள்) எனக் கூறினார்கள்.

ஒரு ஆட்டை அறுத்து என்பது பொருள்.. ஒரு ஆட்டை அறுத்து அதன் இறைச்சியை பங்கீடு செய்யும் நேரம் வரை, எவ்வளவு நேரம் பிடிக்கும்? ஒரு மணி நேரம் அதிகம் தான் ஆகும்.

நமக்கு அப்பொழுது எதுவும் புரியாது. நம்மை அடக்கம் செய்யும்போது எல்லாம் புரிய வரும்.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

இந்த கட்டுரையை விளக்கமாகவும், விரிவாகவும் எழுத எமக்கு ஆசைதான். இருப்பினும் உங்களால் படிப்பதற்கு சிரமம் ஏற்படும் என்பதை கவனித்தில் வைத்து சுருக்கமாக எழுதியுள்ளேன். சிலரின் வேண்டுகோள் இணங்க!!

சத்திய பாதை இஸ்லாம்

source: http://islam-bdmhaja.blogspot.com/2016/02/do-not-do.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 2

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb