நன்றிகெட்ட நயவஞ்சகத்தனம்!
M.A.முஹம்மது அலீ
4 2 2016 அன்று “தி இந்து”வில் வெளியான கட்டுரைக்கு நமது பதில்!
திருச்சியில் நடந்துமுடிந்த “ஷிர்க் ஒழிப்பு மாநாடு” பலரை கதிகலங்கச் செய்துள்ளது என்பதற்கு ‘இந்து’வில் வெளியான “இந்துத்துவம் அடிப்படைவாதம் என்றால், வஹாபியிஸத்துக்கு என்ன பெயர்?” எனும் கட்டுரை சாட்சி பகர்கிறது என்பதே தவ்ஹீத் வாதிகளுக்கு மிகப்பெரும் வெற்றி.
இதனை விளங்கிக்கொள்ளாமல் “சுன்னத் வல் ஜமாஅத்”திலுள்ள சிலர் “இன்றைய ‘இந்து’வை பார்த்தீர்களா?” என்று நக்கலாக வினா எழுப்புவது அவர்களது அறியாமையையே உறுதி செய்கிறது.
இதோ கட்டுரையில் வெளியான சில பகுதிகளும் நமது பதிலும்.
//“உண்மையில், தேசிய அளவில் ஏனைய முஸ்லிம் சமூகங்களுக்குத் தமிழக முஸ்லிம்கள்தான் மத நல்லிணக்கத்தில் முன்னுதாரணங்களாக இருக்க முடியும். ஏன், சர்வதேச அளவில்கூட வழிகாட்ட முடியும். அதற்கான கலாச்சாரப் பலம் தமிழக முஸ்லிம்களுக்கு இருக்கிறது!”//
எவர்களை வஹ்ஹாபிகள் என்று முத்திரை குத்தி பொதுமக்களை ஏமாற்ற முயற்சிக்கிறீர்களோ அவர்கள் தானே நீங்கள் மேலே பதிவு செய்திருக்கும் அத்தனை – அத்தனை – அத்தனை பாராட்டுமழைக்கும் சொந்தக்காரகள்! கட்டுரையின் ஆரம்பத்திலேயே ”சேம் ஸைட் கோலா?”
உண்மையுடன் பொய்யையும் திணிப்பதில் பல எழுத்தாளர்கள் கெட்டிக்காரர்கள் என்பது மக்கள் அறியாததல்ல.
கட்டுரையின் கடைசியில் //மதச்சார்பின்மையைக் காக்கும் கடமையுள்ள ஒவ்வொருவரும் இந்துத்துவத்துக்கு இணையாக வஹாபியிஸத்தை எதிர்த்து நிற்பது இன்றைய தார்மிகக் கடமை!// என்று மக்களை தூண்டிவிடும் உங்கள் முயற்சி பலிக்காது.
தவ்ஹீத் ஜமாஅத்துக்கு வஹ்ஹாபிஸம் முலாம் பூசி அதனை ஒழிக்க வேண்டும் என்று நீங்கள் மறைமுகமாக விடுக்கும் நச்சுக்கருத்து சென்னை மட்டுமல்ல, கடலூர் மட்டுமல்ல, தமிழகத்திலுள்ள மனித நேயமுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தனிப்பட்ட முறையில் “தவ்ஹீத் ஜமாஅத்” -ன் குறைகள் இருந்தால் அதனை சுட்டிக்காட்ட வக்கற்ற நீங்கள் அதற்கு வஹ்ஹாபிஸத்தை இழுத்து வந்து கோர்த்துவிடுவது நயவஞ்சம் அன்றி வேறில்லை.
//இன்றைக்கு உங்கள் மதத்துக்குள் உங்கள் அதிகாரம் மேலோங்குகிறது, தர்காக்கள் மீது கை வைக்கிறீர்கள். நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பீர்கள் இல்லையா?//
//காந்தி சொன்னார், “நான் ஒரு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன், யூதனும்கூட.” இந்திய மதச்சார்பின்மைக்கான இலக்கணம் இதுவென்றால், இந்துத்துவம், இஸ்லாமியத்துவம், கிறிஸ்துவத்துவம், யூதத்துவம் என எந்த வடிவில் வந்தாலும் மத அடிப்படைவாதம் எதிர்க்கப்பட வேண்டும். அதுதான் மத அடிப்படைவாத எதிர்ப்புக்கான இலக்கணம், இல்லையா?//
காந்தி சொன்னார் என்று ஒரு குறிப்பை கொடுத்துள்ளீர்கள். அவர் கொடுத்த இன்னொரு குறிப்பையும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்… (இஸ்லாத்தின் இரண்டாம் கலீபாவான) உமருடைய ஆட்சியை நான் விரும்புகிறேன்” என்று சொன்னதும் அதே காந்திஜிதான். தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை அவர்கள் ஒருபோதும் அரசியல் கட்சியாக உருவெடுக்க மாட்டார்கள். அப்படியே அவர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால் அந்த அரசு காந்திஜி விரும்பிய உமருடைய ஆட்சி போன்றதொரு நல்லாட்சியைத்தான் கொடுக்குமே தவிற வேறு மாதிரியானதல்ல.
உமருடைய ஆட்சியின் ஒரு வரலாற்று சம்பவத்தை இங்கு குறிப்பிடுகிறேன். தனது ஆட்சிக்குட்பட்ட அப்போதைய ஜெருசேலத்துக்கு அவர் மிக மிக எளிமையாக வருகை தந்தபோது அங்குள்ள கிருஸ்துவ பாதிரிமார்கள் உமரை அங்குள்ள கிருஸ்துவ தேவாலயத்துக்குள் தொழ வேண்டிக்கொண்டபோது, “இங்கு நான் தொழுதால் நாளை எவரேனும் ‘இது உமர் தொழுத இடம் என்று உரிமை கொண்டாடி இதை பள்ளிவாசலாக மாற்றக்கூடும், எனவே நான் வெளியிலேயே தொழுது கொள்கிறேன்” என்று மறுத்தார்.
யூதர்களின் வரலாற்றிலேயே அவர்கள் நிம்மதியாக வாழ்ந்ததே இஸ்லாமியர்களின் ஆட்சி காலத்தில் மட்டுமே என்பதற்கு பல யூத வரலாற்றாசிரியர்களின் வாக்குமூலமே சான்று. அவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதெல்லாம் கிருஸ்தவர்களாலேயே என்பதுதான் வரலாறு.
//நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பீர்கள் இல்லையா?// என்று கேட்டுள்ளீர்கள்.
த.மு.மு.க.வை ஆரம்பித்தது P.ஜெய்னுல் ஆபிதீன் தான். அதனை அரசியல் கட்சியாகவும் செயல்பட சிலர் வற்புறுத்தியதால்தான் அதிலிருந்து விலகி “தவ்ஹீத் ஜமாஅத்” உருவானது என்பது வரலாறு.
அப்படியே ஒருக்கால் இறைவன் நாடி, இந்நாட்டு மக்கள் அவரிடம் அரசியல் அதிகாரத்தைக் கொடுத்தால் அவரது ஆட்சி காந்திஜி விரும்பிய உமருடைய ஆட்சி போன்றதாகத்தான் இருக்கும்.
மக்களுக்கு உதவுவதுபோல் போட்டோவுக்கு மட்டுமே போஸ் கொடுக்கும் ஹிந்துத்துவ வாதிகளுடன், களத்தில் இறங்கி உண்மையாகவே தன்னலமற்று சேவை செய்த “தவ்ஹீத் ஜமாஅத்”க்கு வஹ்ஹாபி முலாம் பூசி ஒப்பிட்ட உங்கள் பெரிய்ய்ய்ய மனசை பாராட்ட அகராதியில் சொற்களை தேடிக்கொண்டிருக்கிறேன்…. கிடைக்க மாட்டேன்கிறது!
தமிழக மக்களுக்கு “தவ்ஹீத் ஜமாஅத்” என்றால் யார்? அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? என்னென்ன பணிகளை செய்கிறார்கள் என்பது நன்றாகவே தெரியும். உங்கள் பொய் மூட்டைகளால் எவ்வித பலனும் ஏற்படாது.
சிலறை பலநாள் ஏமாற்றலாம், பலரை சிலநாள் ஏமாற்றலாம், எல்லோரையும் எல்லா நேரத்திலும் ஏமாற்ற முடியாது.
உண்மையிலும் உண்மை என்னவென்றால் திருச்சியில் நடந்த மாநாட்டின் கூட்டமும், அதன் கட்டுப்பாடும் மக்களிடம் அதுவும் குறிப்பாக முஸ்லிம் மக்களிடம் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வும், உண்மையை நோக்கி பயணிக்க முயலும் சகோதர மதத்தைச் சார்ந்த சகோதரர்களிடம் ஏற்பட்டுள்ள, ஏற்படப்போகும் தாக்கமும் உங்களை கதிகலங்கச் செய்திருக்கிறது. அதுவே தன்மானமுள்ள தமிழர்களுக்கு மிகப்பெரும் வெற்றி.
இறைவனுக்கு உண்மையாகவே அஞ்சும் எம்மதத்தைச் சார்ந்த அடிப்படைவாதியாக இருந்தாலும் அவர்கள் நல்லவர்களாகத்தான் இருப்பார்கள். போலிகள் மட்டுமே கொடூர குணம் படைத்தவர்கள். இன்றைய எழுத்தாளர்கள் அடிப்படைவாதம் என்ற சொல்லை எதிர்மறை நோக்குடன் மட்டுமே பயன்படுத்தும் போக்கு துரதிர்ஷ்டமே.
சென்னை பெருவெள்ளத்தில் உயிரைக்கூட துச்சமாக எண்ணி மக்களுக்கு சேவையாற்றியவர்களை ஒழிக்கவேண்டும் என்பதுதான் உங்கள் கட்டுரையின் நோக்கமென்றால் உங்களைவிட இழிபிறவி இந்த உலகில் எவரும் இருக்க முடியாது.
ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் “நன்றிகெட்ட நயவஞ்சகத்தனம்.”
இன்ஷா அல்லாஹ் நாளை கட்டுரை தொடரும்.