விருப்பத்திற்கேற்ப விளக்கங்கள்!
டாக்டர் மஹாதீர் முஹம்மது, மேனாள் பிரதமர், மலேசியா
[ மத அறிஞர்கள் மட்டும்தான் அல்குர்ஆனுக்கு விளக்கவுரை தரவேண்டும் எனும் காலம் இனி இருக்காது. சமகாலப் பிரச்சினைகளுக்கேற்ப பிற துறை அறிஞர்களும் விளக்க உரை வழங்க வேண்டிவரும்.
மருத்துவம், விஞ்ஞானம், மரபியல், விண்வெளி ஆய்வு, வணிகம், தொழிற்சாலை முதலிய வற்றில் ஆழ்ந்த அறிவு இருந்தால்தான் அல்குர்ஆன் போதனைகளை முறையாக அறிந்து கொள்ள முடியும்.
சில உலமாக்கள் ‘ஒட்டாமன்’ அரசுக்குத் தகுந்தவாறு குர்ஆனுக்கு விளக்க உரை எழுதினார்கள். உண்மையான விளக்க உரை எழுதாமைக்குச் சான்றுகள் உள்ளன. இன்றும் அவர்களின் விளக்க உரைகள் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படுகின்றன. இதற்கு மாற்றுவழி சரியான விளக்கவுரை வழங்குவதேயாகும். சுயநலத்திற்காக, தனிப்பட்ட மனிதருக்காக, குழுவிற்காக, அரசியல் கட்சிகளுக்காக எழுதக்கூடாது.
மாற்றங்கள் நிறைந்த இன்றைய உலகிற்கு குர்ஆனின் விளக்கங்கள் சரியானவையாக இருக்கவேண்டும். பசியைப் போக்குவதற்கு மட்டும் மனிதன் வாழவில்லை. ஆன்மிகப் பசியையும் அவன் தணிக்க வேண்டும்.
அரபு மொழி தெரியாத முஸ்லிம்களுக்கு விளக்கப்படுத்த உலமாகள் தேவைப்படுகின்றனர். குர்ஆன், ஹதீஸ் மொழியாக்கங்களில் அடைப்புக் குறிக்குள் எழுதப்பட்டு விளக்கப்படுத்தப்படுகிறது. ஆனால் அவை மூலவரிகளல்ல. உலமாகள் புரிந்துகொண்ட தன்மையை காட்டுபவை.
அவர்கள் தவறு செய்திருக்கலாம் (பக். 230) துரதிருஷ்டவசமாக உலமாகளுடைய தீர்ப்புகள் தவறு இல்லாதவை எனும் போக்கு முஸ்லிம்களிடம் நிலவுகிறது.
சிலர் இஸ்லாத்தை பற்றிய தவறான விளக்கங்கள் தருகின்றனர். நம்பிக்கையாளர்களின் முன்னேற்றத்தை தடைப்படுத்தும் சுருக்குக் கயிறாக அந்த வழிபாடுகள் ஆகிவிடுகின்றன.]
விருப்பத்திற்கேற்ப விளக்கங்கள்!
டாக்டர் மஹாதீர் முஹம்மது, மேனாள் பிரதமர், மலேசியா
முஸ்லிம்கள் அரசியல் விடுதலை பெற்றாலும் மற்ற மக்களின் ஆதிக்கத்தில்தான் இருக்கின்றனர். பிற மதக்காரர்களிடம் இஸ்லாத்தையும், இஸ்லாமி ய நாகரிகத்தையும் சரியாக உணர்த்தவில்லை முஸ்லிம்கள்.
புரிதலற்ற சமுதாயமாக உலா வருகின்றது. இஸ்லாமிய பொற்காலமாக விளங்கிய அக்காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் இஸ்லாத்தின் நெறியில் வாழ்ந்தது போல் இன்றைய முஸ்லிம்கள் வாழவில்லை. பிற மதக்காரர்களுடன் கலந்து வாழ்ந்தாலும் தனித்தே காணப்படுகின்றனர்.
தீவிரவாதம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. முஸ்லிம்கள் மீது பொய்மையாகச் சுமத்தப்பட்டவை. நிரூபிக்கப்படாதவை. மற்ற மதத்தினர் இதே தவறுகளை செய்யும்போது கிறித்துவ, யூத, புத்த தீவிரவாதிகள் என்று எவரும் குறிப்பிடுவதில்லை.
தீவிரவாதம் இஸ்லாத்துடன் இரண்டறக் கலந்ததும் என்றும், மற்றவர்கள் மதத்திற்கோ, பண்பாட்டிற்கோ, பழமைவாதத்திற்கோ தொடர்புடையவர்கள் அல்லர் என்ற தோற்றம் தரப்படுகிறது. உலகிலேயே ஒடுக்கப்பட்ட சமுதாயம் முஸ்லிம் சமுதாயம்தான். அவர்களுடைய சுதந்திரம், மனித உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. உலகில் பற்பல இனத்தவர்கள் அவரவர் நம்பிக்கையுடன் வாழ்ந்து வருவதை இஸ்லாம் ஏற்றுக்கொள்ளக் கூறியுள்ளது.
அல்குர்ஆன், பிற மதத்தவரை விமர்ச்சிக்கக் கூடாது. இழித்துப் பேசக்கூடாது. பகைமை கொள்ளக்கூடாது கூறியுள்ளது.
கட்டாயப்படுத்தி இஸ்லாத்தில் இணைப்பதை குர்ஆன் தடுத்துள்ளது. கட்டாயப்படுத்தக் கூடாது என்று இறைத்தூதர் கட்டளை இட்டுள்ளார்கள்.
இஸ்லாத்தை பற்றிய அறியாமையும், விரக்தியும் சில முஸ்லிம்களை இஸ்லாத்தை விமர்சிக்கத் தூண்டியுள்ளது. இஸ்லாமிய விளக்கவுரை வல்லுநர்கள் என்ன தான் கற்றிருந்தாலும், அவர்களுக்கு சீடர்கள் எவ்வளவு இருந்தாலும், அவர்களது போதனைகளை நிலை நிறுத்தி யிருந்தாலும் அவர்கள் இறைத்தூதர்கள் அல்லர்.
இஸ்லாத்திற்குரிய ஒரே இறைத் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அல்குர்ஆனும் ஒருக்காலும் தவறாக இருக்க முடியாது. ஆனால், விளக்கம் கூறியவர்கள் தவறிழைத்திருக்கக் கூடும். இஸ்லாம் கடினமாகத் தோன்றினால் அது விளக்கம் தந்தவர்களினால் உருவாக்கப்பட்டது.
பல்வேறுபட்ட குழுக்கள் தோன்றி அவரவர் கோணத்தில் அல்குர்ஆன் வசனங்களுக்கு, அல்ஹதீஸிற்கும், அண்ணலாரின் சுன்னத்திற்கும் (வழி முறைக்கும்) விளக்கம் தருகின்றனர்.
அல்குர்ஆன் போதனைகள் இறைத் தூதரின் காலத்திற்கு மட்டுமோ, அரபு மக்களுக்கு மட்டுமோ வழங்கப்பட்டதல்ல, அனைத்து முஸ்லிம்களுக்கும் கால காலச் சிந்தனைகளுக்கு வழிகாட்ட வழங்கப்பட்டது. பல நேரங்களில் சில சுயநலவாதிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப விளக்கங்களைத் தருகின்றனர்.
அல்குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை நேரடி மொழிபெயர்ப்பு தரக்கூடாது. குர்ஆன் வழிகெடுப்பதோ, காலத்திற்குப் பொருந்தாதோ அல்ல. விளக்க உரையாளர்கள் அறிவு ஆழம் போதாத நிலையில் காலத்திற்குப் பொருந்தாதவர்களாக ஆகின்றனர்.
மத அறிஞர்கள் மட்டும்தான் அல்குர்ஆனுக்கு விளக்கவுரை தரவேண்டும் எனும் காலம் இனி இருக்காது. சமகாலப் பிரச்சினைகளுக்கேற்ப பிற துறை அறிஞர்களும் விளக்க உரை வழங்க வேண்டிவரும். மருத்துவம், விஞ்ஞானம், மரபியல், விண்வெளி ஆய்வு, வணிகம், தொழிற்சாலை முதலிய வற்றில் ஆழ்ந்த அறிவு இருந்தால்தான் அல்குர்ஆன் போதனைகளை முறையாக அறிந்து கொள்ள முடியும்.
சில உலமாக்கள் ‘ஒட்டாமன்’ அரசுக்குத் தகுந்தவாறு குர்ஆனுக்கு விளக்க உரை எழுதினார்கள். உண்மையான விளக்க உரை எழுதாமைக்குச் சான்றுகள் உள்ளன. இன்றும் அவர்களின் விளக்க உரைகள் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படுகின்றன. இதற்கு மாற்றுவழி சரியான விளக்கவுரை வழங்குவதேயாகும். சுயநலத்திற்காக, தனிப்பட்ட மனிதருக்காக, குழுவிற்காக, அரசியல் கட்சிகளுக்காக எழுதக்கூடாது.
மாற்றங்கள் நிறைந்த இன்றைய உலகிற்கு குர்ஆனின் விளக்கங்கள் சரியானவையாக இருக்கவேண்டும். பசியைப் போக்குவதற்கு மட்டும் மனிதன் வாழவில்லை. ஆன்மிகப் பசியையும் அவன் தணிக்க வேண்டும்.
அரபு மொழி தெரியாத முஸ்லிம்களுக்கு விளக்கப்படுத்த உலமாகள் தேவைப்படுகின்றனர். குர்ஆன், ஹதீஸ் மொழியாக்கங்களில் அடைப்புக் குறிக்குள் எழுதப்பட்டு விளக்கப்படுத்தப்படுகிறது. ஆனால் அவை மூலவரிகளல்ல. உலமாகள் புரிந்துகொண்ட தன்மையை காட்டுபவை.
அவர்கள் தவறு செய்திருக்கலாம் (பக். 230) துரதிருஷ்டவசமாக உலமாகளுடைய தீர்ப்புகள் தவறு இல்லாதவை எனும் போக்கு முஸ்லிம்களிடம் நிலவுகிறது.
முஸ்லிம் நாடுகளுக்குள், இஸ்லாமியப் பல்கலைக் கழகம் என்றால் இஸ்லாமிய மதத்தை விட்டும் கற்பதுதான் என்னும் நம்பிக்கை இருந்து வருகிறது. இது குறுகிய மனப்பான்மை. இஸ்லாம் இத்தகைய கொள்கையைக் கொண்ட மதமல்ல.
‘குர்ஆன் அல் காஷியா’வில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். “மலைகளையும் ஒட்டகங்களையும் உற்று நோக்குங்கள் ” என்று. இறைப்படைப்பின் இரகசியம் இவ்வறிவுதான்.
“ உற்று நோக்குதல்”, என்பது படித்தலாகும். கற்பதற்கு இறைவன் எந்த எல்லையும் வைக்கவில்லை. நம்மைச் சூழ்ந்து இருக்கின்ற பொருள்கள் குறித்த உண்மை அறிவினை வளர்க்கவும், நமது வாழ்வின் ஒரு பகுதியாக அமைக்கவும் கட்ட ஆள இடுகிறது குர்ஆன்.
பிற பல்கலைக்கழகங்களில் கற்றுக்கொடுக்கப்படும் பாடங்களையே இஸ்லாமிய பல்கலைக் கழகத்திலும் கற்றுக் கொடுத்தால், இஸ்லாமிய பல்கலைக்கழகம் என்று அழைப்பதில் சிறப்பென்ன இருக்கிறது?
இஸ்லாம் வாழ்வின் வழிகாட்டி. வழிகாட்டுதல், வணங்குதல், சடங்குகளுக்கு மட்டும் இருக்க முடியாது. வழிகாட்டுதல் ஒவ்வொரு நாளின் அசைவிலும் முஸ்லிம்களிடம் பிரதிபலிக்க வேண்டும்.
இஸ்லாம் மற்றவர்களிடமிருந்து பிரிந்தும் தனித்தும் வாழச் சொல்லி கட்டளையிடவில்லை. அவரவர்கள் அவர்கள் வழிபாட்டில் தொடர்ந்திருப்பர் என்று அல்குர்ஆன் குறிப்பிட்டுள்ளது. இஸ்லாத்தை மறுப்பார்கள் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது. இறைவன் விரும்பியிருந்தால் அனைவரையுமே முஸ்லிம்களாக ஆக்கியிருப்பான். இறைவன் விரும்பவில்லை.
மதினாவில் தோன்றிய முதல் முஸ்லிம் சமுதாயம் யூதர்களுடனும், கிறிஸ்துவர்களுடனும் உறவும் உரிமையும் கொண்டு வாழ்ந்தனர். அவர்களை முஸ்லிமாக்க எவ்விதக் கட்டாயமும் செய்யவில்லை. மத சகிப்புத்தன்மை, பண்பாடு இஸ்லாத்தின் போதனைகளுக்கு உட்பட்டதாகும். இஸ்லாத்திற்கு விசுவாசமாக இருப்பது மத வெறியல்ல. அது அறிவுப்பூர்வமானது. வேறுபாடுகளைச் சகித்துக் கொள்ள இந்த விசுவாசம் தான் வழிகாட்டுகிறது.
பழம் புகழை அடைவதில் தோல்வியுற்றோம். நமது பலத்தை, அறிவை பெருக்குவதில் தோல்வியுற்றோம். நம்மை நாமே பாதுகாப்பதில் தோல்வியுற்றோம். குர்ஆன், ஹதீஸ் கூறிய வழியில் நம் வாழ்வு அமைக்கப்படாததால் நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட தோல்விகள்.
முஸ்லிம் சமுதாயம் பலவீனம், அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட மனநிலையில் இருக்கிறது. அந்தச் சூழ்நிலையிலிருந்து விடுபட ஆன்மிக வழிகளைத் தேடுகின்றனர். இஸ்லாத்தை பற்றிய தவறான விளக்கங்கள் தருகின்றனர். நம்பிக்கையாளர்களின் முன்னேற்றத்தை தடைப்படுத்தும் சுருக்குக் கயிறாக அந்த வழிபாடுகள் ஆகிவிடுகின்றன.
இன்று புதிய பிரிவுகள், குழுக்கள் ஏற்பட்டு முஸ்லிம் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. சில பிரிவுகளின் போதனைகள் இஸ்லாத்திலிருந்தே வேறுபட்டுள்ளன. முஸ்லிம்கள் இஸ்லாமிய போதனைகளைத் தவறாகப் புரிந்து கொண்டு சிலவ ற்றில் தடுமாறுகின்றனர். யூதர்களும், கிறிஸ்துவர்களும் படு மோசமாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
மலேசியாவில் பிரிவினை வாதம் முஸ்லிகளிடமும், பிற மதத்தவர்களிடமும் இல்லை. அரசு மதமாக இஸ்லாம் இருந்தாலும் புத்த, ஹிந்து, தாஓயிச கோவில்களையும், கிறிஸ்துவ தேவாலயங்களையும் எங்கு பார்த் தாலும் காணலாம்.
மலேசியாவில் வாழும் பிற மதத்தவர்கள், முஸ்லிம்களைத் தீவிரவாதிகள் என்றோ, இஸ்லாம் வன்முறை மதம் என்றோ எண்வதில்லை. (பக். 243)
மலேசியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினர், பிற சமயத்தின் 40 விழுக்காட்டினர். (பக். 138)
(மலேசிய மேனாள் பிரதமர், அறிஞர் மகாதீர் முஹம்மது பல்வேறு தருணங்களில் உலகத்தின் பிரதான அரங்குகளிலும், உலகத் தலைவர்களுக்கு மத்தியிலும் ஆற்றிய உரைத் தொகுப்பு “இஸ்லாமியச் சிந்தனைகள்” என்ற பெயரில், ஏ.வி.எம். ஜாபர்தீன் நூர்ஜஹான் அறக்கட்டளை வெளியிட்டுள்ளது, அந்நூலில் இருந்து எடுக்கப்பட்ட வரிகள்.)
தொகுப்பு : ஹைத்துரூஸ்
முஸ்லிம் முரசு மே 2015
source: http://jahangeer.in/May_2015