இரண்டு மருத்துவ சிகிச்சைகளும் ஜின்னும்!
ஜின் பிடித்தலுக்கான வைத்தியம்
ஹைத்துரூஸ்
[ Nor Azian என்ற மலேசிய பெண்மணி ஜின்னால் ஏற்படக்கூடிய நோய்கள், அது குறித்த அடையாளங்களை ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வியல் கல்வி மலேசியா “The University Kebangsaan Malaysia” ‘UKM’ மற்றும் “யூனிவர்சிட்டி செயின்ஸ் மலேசியா” இவ்விரண்டு பல்கலைக்கழகங்களும் வழங்குகின்றன.
”இன்னும் நிச்சயமாக மனிதர்களிலிருந்து ஆண்கள் சிலர், ஜின் ஆண்கள் சிலரைக் கொண்டு பாதுகாப்பு தேடுகின்றனர். எனவே, அவர்களுக்கு (ஜின்களுக்கு) அழிச்சாட்டியப் போக்கை அதிகப்படுத்திவிட்டனர்.” (குர்ஆன் 72:6)
முஸ்லிம்கள் உளவியல், மனநோய்களில் சிக்கிக்கிடக்கின்றனர். ஜின்கள் குறித்து குர்ஆன் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை குறித்து நாம் அறிந்து கொள்வது நமக்குக் கடமையாக ஆக்கப்பட்டுள்ளது. புறக்கணித்தோமானால், குர்ஆனின் ஒரு பகுதியையே புறக்கணித்த குற்றத்திற்கு ஆளாகுவோம்.]
ஜின் பிடித்தலுக்கான வைத்தியம்
இஸ்லாமிய மருத்துவம், நவீன மருத்துவம் இணைத்து தரும் சிகிசை மூலம் சில நோயாளிகளை நோயின் பிடியிலிருந்தும் விடுவிக்கலாம்.
பாரம்பர்யமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மருத்துவத்தில் நோய்களைத் தீர்ப்பதற்கு இரண்டு அம்சங்கள் உள்ளன. உடல் வழியிலான சிகிச்சை ஆன்மீக வழியிலான சிகிச்சை.
நவீன மருத்துவத்தில் தோல்வி கண்ட பிறகே மக்கள் இஸ்லாமிய மருத்துவத்தை நாடுகின்றனர். நவீன மருத்துவர்கள் கூறியதைக் கடைப்பிடித்த நிலையிலும், நிவாரணம் கிடைக்காத நிலையில் அகுகின்றனர்.
ஆன்மிக வழியிலான இஸ்லாமிய மருத்துவம் போதிக்கும் “The University Kebangsaan Malaysia” (UKM) பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய மருத்துவம் குறித்த முதுநிலைக் கல்வி முடித்த ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார்;
“நவீன மருத்துவத்தில் தோல்வி கண்டு வருவோர்க்கு இஸ்லாமிய சிகிச்சையாக குர்ஆன் ஓதுவதன் மூலம், நபி கற்றுத் தந்த போதனைகளை நோயாளிக்குக் கூறுவதன் வாயிலாக சிகிச்சை அளிக்கின்றனர்.” தன் முன் வந்தமர்ந்துள்ள நோயாளியை, இஸ்லாமிய சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், குர்ஆன் ஆயத்துகளை ஓதிக்கொண்டே அவரது செயல்பாடுகளைக் கண்காணிப்பர்.
ஓதும்போது நோயாளி முகத்தில் வீக்கம் ஏற்படுகிறதா? வாந்திக்கான அறிகுறிகள் வருகின்றதா எனப்பார்ப்பார். இயற்கையை மீறிய ஜின்களின் அடையாளங்கள் அந்நோயாளியிடம் இல்லை எனத் தெரிந்தால், உங்களுக்கு ஒன்றுமில்லை தொடர்ந்து வேத வசனங்களை ஓதுங்கள் எனக்கூறி அனுப்பி வைத்துவிடுவர்.”
இஸ்லாமிய நம்பிக்கையின்படி, ஜின்கள் மனிதனுக்கு நோய்கள் உண்டாக்கக் கூடியவை. மனித இரத்த இரத்த நாளங்களில் நுழைந்து நோய் உண்டாக்கும்.
நபிமொழி. ஜின்களில் தீயவர்கள்தான் ஷைத்தான். ஜின் நுழைந்துள்ள ஒரு நோயாளிக்கு ஆன்மிக சிகிச்சை அளித்து ஜின்னை வெளியேற்றும்போது உடல் ரீதியாக சில சேதத்தை அவை உண்டாக்கிச் செல்லும். அந்த உடல் ரீதியான சேதத்தை நவீன மருத்துவம் சரி செய்யும்.
ஜின்கள் குறித்து குர்ஆனில் ஒரு அத்தியாயமே உள்ளது. “சூரத்துல் ஜின் – 72.
Nor Azian என்ற மலேசிய பெண்மணி ஜின்னால் ஏற்படக்கூடிய நோய்கள், அது குறித்த அடையாளங்களை ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வியல் கல்வி மலேசியா ‘UKM’ மற்றும் “யூனிவர்சிட்டி செயின்ஸ் மலேசியா” இவ்விரண்டு பல்கலைக்கழகங்களும் வழங்குகின்றன.
இக்கல்வி பயில 7 இலட்சம் மலேசிய வெள்ளிகள் செலவாகும். நம் இந்தியப் பணம் ஏறத்தாழ 1 கோடியே 40 இலட்சம். தகவல் தொழில்நுட்பக் கல்வி பயின்ற பெண்ணான நார் அஜியான், இந்த மருத்துவத்தின் மீதான ஆர்வத்தின் காரணமாகவும், அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் ‘Schizophrenia’ – மனச்சிதைவு நோயால் ஏழுவருடமாகப் பாதிப்படைந்த நிலையில் இருந்ததாலும் அதனைச் சரி செய்யலாம் என்ற தூண்டுதலால் இக்கல்வியைக் கற்றுள்ளார்.
இம்மருத்துவ முறை குறித்த தவறான புரிதலும் இருக்கிறது. “வெறுமனே வேதத்தை வாசிக்கிறார்கள்” என்றும் கூறப்படுகிறது.
வேதம் ஓதப்படுதலோடு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் வாழ்வில் பயன்படுத்திய உணவுகளை உண்ணுதலும் கூறப்படும்.
குறிப்பிடத்தக்க அப்பொருட்கள் ஆலிவ் எண்ணெய், தேன். நபி வழி உணவு, மருத்துவமுறை காலம் காலமாக பயிற்சி கொடுக்கப்பட்டு தொடர்கின்றது. அல்லாஹ்வின் நாட்டத்தால் நோய்கள் தீர்க்கப்படுகின்றன.
இஸ்லாமிய வரலாற்றுப்படி ஜின்கள் வழமைக்கு மாற்றமான ஒரு படைப்பினம்.
“குர்ஆன் 15:27 ஜின்னை (மனிதனுக்கு) முன்னதாக கடும் சூடுள்ள நெருப்பிலிருந்து நாம் அதை படைத்தோம். வரலாற்றுப் பதிவுப்படி ஜின்கள் மனிதனை மிரட்டக்கூடியவை. பித்துப்பிடிக்க வைக்கக்கூடியவை. பயத்துடனேயே மக்கள் ஜின்கள் குறித்து பேசுகின்றனர். பாரம்பர்யமாகவே முஸ்லிம் மக்கள் மனநோய், நரம்பியல் நோய். ‘Epilepsy’ எனப்படும் வலிப்பு நோய்க்கு ஜின்களே காரணம் என நம்புகின்றனர்.
முஸ்லிம்களுடைய பொதுவான கேள்வி, “ஜின்கள் எப்படி நோயை ஏற்படுத்துகின்றன?” ஜின்கள் குறித்த ஆய்வுகள், சிகிச்சைகளை அறிவியல் பதிவுகளில் ஆய்வு செய்ததில் 105 அறிவியல் கட்டுரைகள் கிடைத்தன. அதனில் ஜின் குறித்து ஆய்வு செய்ததில் 47 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த அறிக்கை கிடைத்தன. அவற்றில் 67 சதம் பேர் மனச்சிதைவு மற்றும் அது சம்பந்தமான நோய்களால் பாதிப்படைந்தவர்கள். இந்த நோய்க்கான அறிகுறி தென்படுவோர், முஸ்லிம் சமுதாயத்தில் அதிகம் பேர் உள்ளனர்.
2014 ஜுலை 30-இல் வெளிவந்த “The Journal Transcultural Psychiatry” இதழ் பதிவு செய்திருக்கின்றது.
முஸ்லிம்கள் உளவியல், மனநோய்களில் சிக்கிக்கிடக்கின்றனர். ஜின்கள் குறித்து குர்ஆன் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை குறித்து நாம் அறிந்து கொள்வது நமக்குக் கடமையாக ஆக்கப்பட்டுள்ளது. புறக்கணித்தோமானால், குர்ஆனின் ஒரு பகுதியையே புறக்கணித்த குற்றத்திற்கு ஆளாகுவோம்.
அரபு அகராதி நூல் எழுதியவர்: இப்னு மன்சூர். 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் அல்-ஜின் சொல்லுக்கு கொடுத்துள்ள விளக்கம் “மூடப்பட்டது – ”Covered” அல்லது “மறைக்கப்பட்டது – ”Concealed”.
தாயின் கருவறையில் இருக்கும் ஒரு குழந்தையை “அல் ஜனீன்” என்பர். தாயின் வயிற்றுக்குள் குழந்தை மறைந்திருப்பது போன்று ‘ஜின்’ வார்த்தையும் மறைவாக இருப்பதைக் குறிப்பது.
தனிப்பட்ட ஆதாயம் அடைதலுக்காக ஜின்களை சிலர் கட்டுப்படுத்தி வைத்து பலவந்தமாக அதனிடம் கெஞ்சி வேண்டுகோள் வைத்து வேலைகளைச் செய்து முடிக்கின்றனர். பாவம் செய்யக்கூடியோர் தான் சுய ஆதாயத்துக்காக இதுபோன்று ஜின்களுடன் பேசுவர்.
இவர்கள் குறித்து குர்ஆன் கூறுகிறது;
”இன்னும் நிச்சயமாக மனிதர்களிலிருந்து ஆண்கள் சிலர், ஜின் ஆண்கள் சிலரைக் கொண்டு பாதுகாப்பு தேடுகின்றனர். எனவே, அவர்களுக்கு (ஜின்களுக்கு) அழிச்சாட்டியப் போக்கை அதிகப்படுத்திவிட்டனர்.” (குர்ஆன் 72:6)
“ஜின்களை அல்லாஹ்வின் கூட்டாளிகளாக அவர்கள் ஆக்கிவிட்டார்கள். (குர்ஆன் 6:101)
இந்த வசனங்கள் அறிவிப்பதும், நுண்ணறிவாளர் கருத்தும் ஜின்களுடன் மனிதர்கள் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதே!
குர்ஆனும், நபியின் மரபுகளும் கூறுவன “பல வகையான நோய்களை ஜின்கள் புகுத்தும்.” தீவிர பயம், உளவியல் ரீதியாக மன அழுத்தம், பதட்டம், உடலுக்குள் நோய்கள் எதுவும் இல்லாதது போன்ற மாயத்தோற்றம், நண்பர்கள், தம்பதிகளுக்குள் விரோதம் உண்டாக்குதல், உடல் உறவு பிரச்சினைகள், பொருள் சேதாரம் போன்றவைகளை ஏற்படுத்தும்.
இவர்களுக்கு சிகிச்சையளிக்கக் கூடிய இஸ்லாமிய மருத்துவ சிகிச்சையாளர்களுக்கு சில அடிப்படைப் பண்புகள் தகுதிகள் இருக்க வேண்டுமெனக் கூறப்படுகிறது.
“நோயாளிக்கு உதவ வேண்டும் என்ற உள்நோக்கம். உலகத்தின் மீது, ஆன்மிக மருத்துவத்தின் மீதும் ஆழ்ந்த அறிவு, மன நோய் குறித்த முழுமையான புரிதல், நான் என்னுடைய சுய பெருமைக்காக, புகழுக்காக இந்த பணியைச் செய்யவில்லை, அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்கிறேன் என்ற எண்ணம் மனத்தினுள் தோன்ற வேண்டும்.
நோய்ப்பிடித்த உடலில் பேய் இருக்கும் மாயத்தோற்றத்துடன் ஒளிந்திருக்கும் என்று கூறுவதெல்லாம் இஸ்லாத்தில் இடமில்லை. அடிப்படை ஆதாரமற்ற பயம், பேச்சுக்கள். ஒருவரது உடலிலிருந்து வெளியே எடுக்கப்படும் உயிர் ஆன்மா ‘ ஃபர்ஸக்கில் ’ வைக்கப்படுகிறது. இறந்த உடலுடைய ஆன்மா மீண்டும் உலகிற்கு வருகிறது என்பது இறையியல்படி சாத்தியமற்ற ஒ ன் று. ஆனாலும் ஒரு சில முஸ்லிம்களும், முஸ்லிம் நாடுகளும் பேய் குறித்து நம்புகின்றனர். ஆண்டாண்டு காலமாக பயத்தை தொடர்கின்றனர்.
கோலாலம்பூரிலிருந்து வெளிவரும் இணைய இதழ் “The Rakyat Post” குறிப்பிட்டுள்ள “அஸ்கர்ஸ்” – 1998 ஆய்வுப் படி “இது ஜின் தான். கனவிலும், நனவிலும் தனிப்பட்ட நபரைப் போன்று வடிவம் எடுத்து வரும்.
நுண்ணறிவாளர் இப்னு தைமியா குறிப்பிடுகின்றார்; “ஒரு மனிதன் ஜின்னை வெளிப்படுத்த மிக உன்னிப்பாக அவன் தந்தையைப் போல பாவனை செய்கிறான். மகனாக இருப்பதால், தன் தந்தையின் குணாதிசியங்களை ஜின்னை விடவும் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறான்.
ஜின்களுக்கும் மனிதர்களை போலவே சொர்க்கம், நரகம், பலன், தண்டனை உண்டு. மனிதனைப் போலவே அவைகளுக்கும் மனைவி குழந்தைகள் உண்டு. மரணம் உண்டு. இறைவனது தடுப்புகளும் உண்டு.
குர்ஆன் கூறுகிறது; ”அவன் மறைவாக வைத்திருப்பவற்றை எவருக்கும் அவன் வெளிப்படுத்த மாட்டான்.” (72:26)
முஸ்லிம் முரசு, டிசம்பர் 2014
source: http://jahangeer.in/MUSLIM%20MURASU%20dec_dps.indd.pdf