மனிதன் கண்டு பிடிக்காத குளிரூட்டும் இயற்கை இயந்திரம்!
சனோபர் நிஷா, இலண்டன்
வெப்ப காலத்தில் மனிதனுக்குச் சுகம் ஊட்ட குளிரூட்டும் இயந்திரங்கள் உள்ளன. குளிர்காலத்தில் பாதுகாக்க வெப்பமூட்டிகளும் உள்ளன.
குளிரூட்டும் தன்மை முதலில் கண்டு பிடித்த பெருமை மனிதனுக்குரியதல்ல. படைப்பினங்கள் பலவற்றின் உடம்புகளுக்குள்ளும் குளிரூட்டும் தன்மை இருக்கின்றது. ஆப்பிரிக்காவில் வாழும் ‘கலைமான்’ இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
விலங்கினங்கள் தன்னை உணவாக்கிக் கொள்ளும் மிருகங்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள விரைவாக ஓடவேண்டும். ஓடுவது ஒன்றே அவைகளுக்கான தற்காப்பு. அவை ஓடும்போது உடல் சூடு அதிகரித்து மூளைக்குள் பரவும். இந்த சூடு மரணத்தை தரக்கூடியது. இவ்வுயிரினங்கள் வாழ்வதற்கு மூளையின் சூடு குறைய வேண்டும்.
கலைமான் மூளைக்குள், தலையின் வலது பக்கமாக குளிரூட்டும் சிறப்பு முறை ஒன்று உள்ளது. கலைமானுக்கும், அவை போன்று வேகமாக ஓடக்கூடிய விலங்கினங்களுக்கும் மூச்சுக் கால்வாய்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான சிறிய இரத்த நாளங்கள், மூச்சுக் கால்வாய் பின்புறமாக இருக்கின்றன. இரத்தத் திரட்டுகளுடன் அவை பரவிக்கிடக்கின்றன.
கலைமான் உள்ளிழுக்கும் மூச்சுக் காற்றை மேற் சொன்ன அமைப்பின் செயல்முறைகள் குளிரூட்டுகின்றன. அதனால், சிறிய இரத்த நாளங்கள் வழியே செல்லும் குருதி குளிர்ச்சி அடைகின்றது.
சிறிய இரத்த நாளங்கள் தன் வழியே செல்லும் குளிரூட்டப்பட்ட இரத்தம் அனைத்தையும் ஒன்று சேர்த்து மூளைக்கு அனுப்பி சூட்டைத் தணிக்கின்றது. இந்த அமைப்பு முறை இல்லாது போயிருந்தால், கலைமான் தோன்றிய காலத்திலேயே அழிந்து போயிருக்கும். உறுப்பு அமைப்பும், உடல் அமைப்பும் சரியான வடிவமைப்பு மூலம் அமைக்கப்பட்டுள்ளது. பரிணாமவாதிகளின் பார்வைக்கே இது தெரியாது.
படைப்பினங்கள் அனைத்தின் உடல் அமைப்புகளுக்குள்ளும் ஒரு வடிவம் உள்ளது. அவற்றில் உள்ள ஒரே ஒரு கூறு இழந்தால் கூட மற்றவை சரியாக வேலை செய்யாது.
இந்த அமைப்பு முறை மனிதனுக்கு நினைவூட்டுவது; உலகில் வாழும் அனைத்து படைப்பினங்களும் உலகிற்கு வந்தது தற்செயலாகவோ, நிகழ்வுகளின் பொருத்தம் காரணமாகவோ வந்தவையல்ல. பரிணாமவாதிகள் கூறுவது போன்றுமல்ல. சரியான திட்டமிடலுடன் இறைவன் உருவாக்கியன. நுண்ணறிவை ஆழமாக, அழுத்தமாகப் பொருந்திப் பார்ப்போருக்கு உண்மை பளிச்சென்று பளிங்குக்கல் போன்று தெரியும்.
“நீங்கள் உணர்ந்து கொள்பவர்களாக இருப்பீர்களாயின் அவனே கிழக்கிற்கும், மேற்கிற்கும் இன்னும் இவ்விரண்டிற்குமிடையே இருப்பவற்றிற்கும் இறைவன் ஆவான்.” (அல்குர்ஆன்)
-முஸ்லிம் முரசு ஏப்ரல் 2015