உயிர்கள் அனைத்திற்கும் உதவும் வானம்!
வானத்தின் முக்கியப் பண்புகள் மீது கவனம் செலுத்துமாறு குர்ஆன் வலியுறுத்துகின்றது.
”இன்னும் நாம் வானத்தை பாதுகாப்பான விதானமாக (ஒழுங்காக, உபாயமாக, மேற்கட்டியாக) அமைத்தோம். எனினும் அவர்கள் அவற்றிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள்.” (அல்குர்ஆன்- 21:32).
வானத்தின் பண்புகள் குறித்து அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் 20ஆம் நூற்றாண்டில் கண்டு பிடித்தார்கள் ; “பூமியைச் சுற்றியுள்ள வளி. காற்று மண்டலம் நம் வாழ்வு தொடர்வதற்கு முக்கியப் பங்காற்றுகின்றது. பூமியைச் சுற்றியிருக்கும் பெரிய, சிறிய வகையிலான விண் கற்கள் பல நம்மை நோக்கி வரும்போது பூமிக்கு வராமல் தடுத்து மனிதனைப் பாதுகாக்கின்றது.”
விண்வெளியிலிருந்து வரும் ஒளிக் கதிர்கள் மனிதருக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் வளி மண்டலம் வடிகட்டி அனுப்புகின்றது. பூமியில் வாழக்கூடிய அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் உட்செலுத்துகின்றது.
அல்ட்ரா வயலட் கதிர். ரேடியோ அலைகள் காணக்கூடிய கதிர்கள் மட்டுமே பூமிக்குத் தருகின்றது, அல்ட்ரா வயலட் மொத்தக் கதிர்களில் அரைப்பகுதியைத் தான் வளி மண்டலம் கொடுக்கின்றது. அவை தாவரங்கள் ஒளிச் சேர்க்கைக்கு தேவையான, பூமியிலுள்ள இனங்களின் தேவைக்கானவை மட்டுமே!
சூரியனிலிருந்து வரும் அல்ட்ரா வயலட் கதிர்களை, வளி மண்டலம் ஓசோன் படலங்கள் மூலம் வடிகட்டி பூமிக்கு அனுப்புகின்றது. அத்தியாவசியத் தேவையான அல்ட்ரா வயலட் வண்ணப் பட்டிகள் பூமியை அடைகின்றன. வளி மண்டலம் தனது பணியை அத்துடன் முடித்துக் கொள்வதில்லை.
விண்வெளியிலிருந்து வரக்கூடிய உறையும் தன்மை கொண்ட மைனஸ் 270 டிகிரி செல்சியஸ் குளிர் பூமிக்கு வருவதைத் தடுக்கின்றது.
‘Van Allen Belt’ இது கதிர்வீச்சு பெல்ட் மின் சுமையுடைய துகள்களின் அடுக்குகள் கொண்டது. காந்தப் புலம் கொண்ட இடங்களில் செயல்படக்கூடியது. எடுத்துக் காட்டுக்கு பூமி. காந்தப்புலம் கொண்ட பூமியில் செயல்படுவதால், பூமிக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியக் கதிர்வீச்சுகளில் இருந்தும் தடுக்கின்றது.
சூரியன், நட்சத்திரங்கள் தொடர்ந்து வெளிப்படுத்தக்கூடிய கதிர்வீச்சுகள் பூமியிலுள்ள உயிரினங்களுக்கு மரணத்தைத் தரக்கூடியன. ‘Van Allen Belt’ இல்லையென்றால், இவைகள் கொண்டு வரக்கூடிய கதிர்களால் சூரிய எரிப்பு ஏற்பட்டு மரணத்தைத் தந்திருக்கும்.
காந்தப் புலம்களால் உருவாக்கப்படும் காந்தக்கோள் அடுக்குகள், பூமிக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய விண்லகு அண்டக் கதிர்கள், துகள்களிலிருந்தும் பாதுகாக்க காந்தக்கோள் அடுக்கு பெல்ட்டுகள் ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் மேலிருந்து கொண்டு, பூமியில் ஏற்படுத்தக்கூடிய ஆபயாகரமான ஆற்றல் கொண்ட சக்தியை தடுத்து காப்பாற்றுகின்றது.
பூமி முழுவதையும் பாதுகாக்க ஆயிரம் கிலோ மீட்டர் இடைவெளி அதற்குத் தேவைப்படுகிறது. இந்த அறிவியல் பாதுகாப்பு நமக்கு உணர்த்தலாம், குறிப்பிட்ட வழிமுறை ஒன்றின் மூலம் நாம் பாதுகாக்கப்பட்டுள்ளதது. இது குறித்து குர்ஆன் கூறியிருக்கிறது
“வானத்தை பாதுகாப்பாக வைத்தோம். மேலும் பாதுகாப்பு முகடாகவும் ஆக்கினோம்.”
14 நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டது. சூரிய மண்டலத்திலுள்ள கிரகங்களிலேயே பூமி மட்டுமே அதிக அடர்த்தி கொண்டது. நிக்கல், இரும்பு மையம் காந்தப்புலம்களை உருவாக்குகின்றன. வேன் ஆலன் பெல்ட் கதிர் காந்தப்புலம் உருவாக்குபவற்றிலிருந்தும் பாதுகாக்கின்றது. அது இல்லாமல் பூமியில் வாழ இயலாது.
இதே போன்ற காந்தப்புலம் கொண்ட மற்றொரு கிரகம் ‘மெர்க்குரி’. இதன் புலம் பலம் பூமியை விடவும் 100 மடங்கு குறைவு. நம்முடைய தங்கை கிரகம் என்று கூறக்கூடிய ‘வீனஸ்’ கிரகத்தில் காந்தப்புலம் இல்லை. ‘வேன் ஆலன் பெல்ட்’ கதிர் பாதுகாப்பு நம் பூமிக்காகவே வடிவமைக்கப்பட்டது.
இந்த வேன் ஆலன் பெல்ட் பாதுகாப்பு இல்லாமல் வெளியேறி வரக்கூடிய ஒரு துளி கதிர் தீங்கு குறித்து சமீப காலத்தில் ஆராய்ந்து கூறியுள்ளனர்.
ஒரு துளி கதிர் 100 மில்லியன் அட்டாமிக் குண்டுகளுக்கு இணையானது என்று. நாம் வானத்தை ஒவ்வொரு நாளும் பார்க்கிறோம். வளி மண்டலம் இப்படி ஒரு பாதுகாப்பு வழங்குவது குறித்து நாம் சிந்திப்பதில்லை. இவ்வளவு அழகிய, அற்புத வடிவமைப்பு கொண்ட பூமியில் வாழ்கிறோம் என்ற நினைவும் கொள்வதில்லை.
சமீபத்தில் அமெரிக்கா அரிசோனா பகுதியில் சிறிய எரிமலையின் வாய் போன்று பள்ளம் ஒன்று விண் கற்கள் விழுந்ததன் மூலம் ஏற்பட்டிருந்ததை கேள்வியுற்றோம்.
வடிவமைக்கப்பட்ட இந்த வளி மண்டலம் இல்லையானால், பூமியில் பல விண் கற்கள் வந்து வீழ்ந்து வாழ இயலாத நிலையை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.
இறைவன் தான் பூமிக்கு மேலே சரியான வழிமுறை அமைத்து நம்மைப் பாதுகாக்கின்றான். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வளிமண்டலப் பாதுகாப்பு குறித்து குர்ஆனிலும் கூறியிருக்கிறான்.
(இலண்டன் மொழிமாற்றக் கட்டுரை)
-ஏ.ஜெ.என்
முஸ்லிம் முரசு ஏப்ரல் 2015
source: http://jahangeer.in/April_2015.pdf