[ முஸ்லிம் 1000 ஆண்களுக்கு 936 பெண்களே உள்ளனர். ஒவ்வொரு முஸ்லிமும் பலதார மணம் புரிகின்றார் என்றால் எங்கிருந்து புரிவர்? மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகள், பொய்ப் பரப்புரைகள் செவிவழி உரைகளாக, இணைய எழுத்துகள் மூலமாக சமூகத்திற்குள் திணிக்கப்படுகின்றன.
முஸ்லிம்கள் வேண்டுமென்றே தங்களது ஜனத்தொகையை அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்னும் பரப்புரை அர்த்தமற்ற குற்றச்சாட்டு. இது குறித்து சமூகத்திற்குள்ளாக நடக்கும் பிரச்சாரம் அப்பட்டமான பொய்.
’NFHS’- தகவல்படி முஸ்லிம் பெண்கள் நவீன முறையிலான கருத்தடைச் சாதனங்களைப் பொருத்தியிருக்கின்றனர். அதிகமாக உபயோகித்திருக்கின்றனர். இந்த வகை முறைகளைக் கையாளும்போக்கு இந்து, முஸ்லிம் இருபிரிவுப் பெண்களிடமும் இருந்திருக்கிறது. நவீனக் கருத்தடைச் சாதனங்கள் குறித்த விழிப்புணர்வு முஸ்லிம் பெண்களிடம் அதிகமாகவே இருந்திருக்கிறது.
சமீப காலத்தகவல்படி இரு பாலினங்களும் சம விகிதத்தில் இல்லை. முஸ்லிம் 1000 ஆண்களுக்கு 936 பெண்களே உள்ளனர். 64 ஆண்கள் திருமணம் செய்ய பெண்கள் இல்லை. இருக்கும் ஆண்களுக்கே பற்றாக்குறை இருக்கிறபோது ஒவ்வொரு முஸ்லிமும் பலதார மணம் புரிகின்றார் என்றால் எங்கிருந்து புரிவர்?
பெண்கள் உயிர்வாழ்தல் குறித்து எடுக்கப்பட்ட 2005-06 ஆய்வு தகவல்; இந்துப் பெண்கள் வாழ்நாள் காலம் சராசரியாக 65 ஆண்டுகள். முஸ்லிம் பெண்கள் வாழ்நாள் காலம் 68 ஆண்டுகள்.
5 வயதுக்குட்பட்ட குழந்தை இறப்பு இந்துக்களிடம் 76 விகிதம். முஸ்லிம்களிடம் 70 விகிதம்.]
முஸ்லிம் ஜனத்தொகைக் கட்டுக்கதை உடைப்பு!
மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகள், பொய்ப் பரப்புரைகள் செவிவழி உரைகளாக, இணைய எழுத்துகள் மூலமாக சமூகத்திற்குள் திணிக்கப்படுகின்றன.
அந்த பரப்புரைகள் குறித்து நீண்டதோர் ஆய்வு நடத்தி “The Myth of the Muslim Population Bomb” என்னும் தலைப்பில் காலம்னிஸ்ட் – கமர் வாஹித் நக்வி தெஹல்கா இதழில் கட்டுரை எழுதியிருக்கிறார்.
எழுப்பப்படுவதன் பதிவுகளில் காம் குற்றச்சாட்டுகளையும், கேள்விகளையும் முன் வைத்து ஆதாரப்பூர்வமாக, ஆய்வுப் பூர்வமாகப் பதிலளித்திருக்கிறார். உண்மை நிலையை எடுத்துரைப்பதே நாம் மொழி பெயர்த்திருப்பதன் நோக்கம்.
2035-இல் இந்துக்களை விடவும் முஸ்லிம்கள் அதிகமாக இந்தியாவில் இருப்பார்கள்!
முஸ்லிம்கள் ஜனத்தொகை 2035-இல் 92.5 கோடிப் பேராக இருக்கும்!
இந்துக்களின் ஜனத்தொகை 90.2 சதம் சுருங்கிவிடும்!
2040-இல் இந்துக்களின் பண்டிகை கொண்டாடப்படாது!
2050=இல் முஸ்லிம்கள் ஜனத்தொகை 189 கோடி ஆகிவிடும்!
இந்தியா முஸ்லிம் நாடாக ஆகிவிடும்!
பரப்புரையின் பட்டியல் இது. இதன் அடிப்படையில் வாஹித் நக்வி சில
கேள்விகளை முன்வைக்கின்றார்!
முஸ்லிம்கள் வேண்டுமென்றே ஜனத்தொகையாக அதிகரிக்கின்றனரா?
ஒவ்வொரு முஸ்லிமும் நான்கு மனைவிகள் வைத்துள்ளனரா?
ஒரு முஸ்லிம் பெண் 10 குழந்தைகளைப் பெற்றெடுகின்றாரா?
இஸ்லாம் பலதார மணத்தை கூறியிருப்பதுதான் அதிக ஜனத்தொகைப் பெருக்கத்துக்குக் காரணமா?
முஸ்லிம் பெண்கள், தங்கள் மதத்துக்கு எதிரானது எனக் கருதி குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதில்லையா?
இந்துக்களை விடவும் முஸ்லிம் ஜனத்தொகை அதிகரிக்குமா?
இந்த புரோபகண்டாக்கள் பொய்ப் பரப்புரைகள் இந்தியாவில் மட்டுமல்லாது ஐரோப்பாவிலும் பரப்பப்படுகின்றது.
“ஐரோப்பியா எதிர்காலத்தில் யுரோப்பியவாக மாறிப்போகும்.” இவர்கள் கூறுவது அனைத்திற்குமான உண்மை நிலை என்ன என்பதை ஆராய்வதே கட்டுரையின் நோக்கம்.
UPA அரசாங்கம் எடுத்து முடித்த மக்கள் தொகை கணக்கெடுப்பை 2011ஆம் ஆண்டு வெளியிடப் போவதாகக் கூறியது. அதற்கான பணிகளை ஒரு வருடம் முன்னதாகவே தொடங்கியிருந்தது. 2014-இல் பொதுத் தேர்தல் வந்தவுடன் அச்சமடைந்து அதனை வெளியிடவில்லை. ஆனபோதிலும், மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தகவல்கள் வெளிக் கசிந்துவிட்டன.
அந்த தகவல்கள்;
முஸ்லிம் ஜனத்தொகை 13.4 சதத்திலிருந்து 14.2 சதமாக உயர்ந்திருக்கிறது. இந்து மக்கள் ஜனத்தொகை 80 சதம் கீழ்நோக்கிச் சென்று கொண்டுள்ளது.
1961-இல் முஸ்லிம் ஜனத்தொகை 10.7 சதமாக இருந்தது. இந்து ஜனத்தொகை 83.4 சதமாக இருந்தது.
இந்த தகவலை எடுத்துக்கொண்டு முஸ்லிம் ஜனத்தொகை அதிகரித்துள்ளது எனக் கூறிக் கொண்டுள்ளனர். இந்த பரப்புரை பாதி உண்மை. பாதி பொய்.
உண்மையை ஆராய்வோம்;
ஒவ்வொரு பத்து ஆண்டுகளாக கணக்கெடுப்புகளை எடுத்து ஆய்வு செய்தால் முஸ்லிம் ஜனத்தொகை வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டுள்ளதை உணரலாம்.
1991-2001 வரை இருந்த முஸ்லிம் ஜனத்தொகை வளர்ச்சி விகிதம் அளவு 29 சதம். 2001-2011இல் முஸ்லிம் ஜனத்தொகை ஐந்து சதம் குறைந்து 24 சதமாக ஆனது. ஆனால், நாட்டின் மொத்த ஜனத்தொகையின் ஒட்டு மொத்த வளர்ச்சி 18 சதம்.
18 சதம் வளர்ந்த மொத்த ஜனத்தொகையில், முஸ்லிம் ஜனத்தொகை வளரவில்லை. 29 சதத்திலிருந்தும் வளர்ச்சியில் 24 சதமாகக் குறைந்து போயிருக்கிறது கணக்கெடுப்பு கூறுகிறது.
கூர்ந்து நோக்கினால் இந்த பின்னடைவுக்கான காரணத்தை உணரலாம். முஸ்லிம் சமூகத்திற்குள் புதிய போக்கு ஒன்று புகுந்தது. தனித்தனி குடும்பங்களாக பிரிந்து வாழத்துவங்கினர். கல்வியறிவு மேம்பட்ட போது இவர்களுக்குள் குழந்தை பிறப்பு குறைய ஆரம்பித்துள்ளது.
“நேஷனல் பேமிலி ஹெல்த் சர்வே’’ – ’NFHS’- எடுத்துக் கொடுத்துள்ள தகவல் 1991-92, 1998-99, 2005-06களில் எடுக்கப்பட்ட மூன்று சர்வேக்களிலும், குழந்தை பிறப்பு விகிதத்தில் மாற்றம். குடும்பக் கட்டுப்பாட்டில் மிகப்பெரிய மாற்றம், கருத்தடை செய்தலில் ஏற்பட்ட மாற்றங்களை காணலாம்.
1991-92 சர்வே. ஒரு இந்துப் பெண் குழந்தை பிறப்பு விகிதம் 3.3.
முஸ்லிம் பெண்ணின் குழந்தைப் பிறப்பு விகிதம் 4.41.
1998-99 சர்வே. இந்துப் பெண் 2.78 விகிதம்.
முஸ்லிம் பெண் 3.59 விகிதம்.
2005-2006 சர்வே. இந்துப் பெண் 2.59 விகிதம்.
முஸ்லிம் பெண் 3.4 விகிதம்.
மூன்று சர்வேக்களிலும் முஸ்லிம் பெண்களின் குழந்தை பிறப்பு விகிதம் ஒரே சீராகக் குறைந்து கொண்டே வருவதனைக் காணலாம்.
எடுத்துக்காட்டுக்கு; ஆயிரம் இந்துப் பெண்கள், ஆயிரம் முஸ்லிம் பெண்களை எடுத்துக் கொண்டால், 1991-92 கணக்குப்படி ஆயிரம் இந்துப் பெண்களில் 330 பேர் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கின்றனர். ஆயிரம் முஸ்லிம் பெண்களில் 441 பேர் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கின்றனர்.
1998-99இல் ஆயிரம் இந்துப் பெண்களில் 278 பேர் குழந்தைகளையும், ஆயிரம் முஸ்லிம் பெண்களில் 359 பேர் குழந்தைகளையும் பெற்றெடுத்திருக்கின்றனர்.
2005-06இல் ஆயிரம் எண்ணிக்கையில் இந்துப் பெண்கள் 259 குழந்தைகளையும், முஸ்லிம் பெண்கள் 340 குழந்தைகளையும் பெற்றெடுத்திருக்கின்றனர்.
’NFHS’- தந்துள்ள இந்த சர்வேயின் இருபுறப் பிறப்புகளையும் ஒப்பீடு செய்து பார்த்தால் இந்துப் பெண்கள் குழந்தை பிறப்பு அளவு, முஸ்லிம் பெண்கள் குழந்தை பிறப்பு அளவுகளில் பெரிய மாற்றம் ஒன்றுமில்லை. ஒரு இந்துப் பெண்ணை விடவும், ஒரு முஸ்லிம் பெண் ஒரு குழந்தை தான் அதிகம் பெற்றிருக்கிறார் என்பதை முன் சர்வே கூறுகிறது. பின்வரும் சர்வேக்களில் அதற்கும் குறைவாக ஆகியிருக்கின்றது.
முஸ்லிம் பெண் ஒவ்வொருவரும் 10 குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றனரா என்ற கேள்விக்கு ’NFHS’- கொடுத்துள்ள ஆதாரப்பூர்வ தகவல் விடையளித்துள்ளது.
பொய்ப் பரப்புரையை பொருளற்றதாக ஆக்கிவிட்டது. 2006க்குப் பிந்தைய நிலையைக் கணக்கெடுத்தால் முஸ்லிம் பெண்கள் குழந்தை பிறப்பு விகிதம் இன்னும் குறைந்து போயிருக்கும்.
முஸ்லிம் பெண், இந்துப் பெண் இடையிலான ஒரு குழந்தை வித்தியாசமும், கல்வியறிவில் மேம்பட்ட, பொருளாதாரச் செழிப்பில் உள்ள முஸ்லிம் குடும்பங்களில் காண இயலாது. கல்வியறிவு, படிப்பு வாசனையற்ற வறுமை நிலையிலுள்ள முஸ்லிம் குடும்பங்களில்தான் காணவியலும்.
’NFHS’- 1998-99இல் எடுத்த ஒரு சர்வே
கீழ் நிலை முஸ்லிம்களின் குழந்தை பிறப்பு விகிதம் 3.37 நடுத்தர வர்க்கம் முஸ்லிம்களின் குழந்தை பிறப்பு விகிதம் 2.85 மேல்தட்டு முஸ்லிம்களின் குழந்தை பிறப்பு விகிதம் 2.1
’NFHS’- 2005-06 சர்வே தகவல்
கீழ்நிலை முஸ்லிம்கள் குழந்தை பிறப்பு 3.89 விகிதம் நடுத்தட்டு முஸ்லிம்கள் குழந்தை பிறப்பு 2.58 விகிதம் மேல்தட்டு முஸ்லிம்கள் குழந்தை பிறப்பு 1.78 விகிதம்
முஸ்லிம் சமூகம் கல்வியறிவிலும், பொருளாதாரத்திலும் வளர்ச்சியடையும்போது குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே போயிருப்பதனை ’NFHS’ சர்வே காட்டுகின்றது.
ஒரு முஸ்லிம் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து அந்த இருவருக்கும் எதிர்காலத்தில் இரண்டு குழந்தைகள் பிறக்குமானால் மக்கள் தொகை கணக்கு ஒரே சீராக இருக்கும். ஆனால், இயற்கையான பிறப்பு விகிதப்படி நம் சமூகத்தில் ஆண்களை விட பெண்கள் பிறப்பு குறைவாக இருக்கின்றது.
குற்றச்சாட்டு, பரப்புரைத் தகவல் முஸ்லிம் குடும்பங்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்யாதது போலவும், மதத்துக்கு எதிராக இயங்காதது போலவும் காட்டுகின்றது.
’NFHS’- தகவல்படி முஸ்லிம் பெண்கள் நவீன முறையிலான கருத்தடைச் சாதனங்களைப் பொருத்தியிருக்கின்றனர். அதிகமாக உபயோகித்திருக்கின்றனர். இந்த வகை முறைகளைக் கையாளும்போக்கு இந்து, முஸ்லிம் இருபிரிவுப் பெண்களிடமும் இருந்திருக்கிறது. நவீனக் கருத்தடைச் சாதனங்கள் குறித்த விழிப்புணர்வு முஸ்லிம் பெண்களிடம் அதிகமாகவே இருந்திருக்கிறது.
கருத்தடைச் சாதனங்கள் பயன்படுத்தியோர் குறித்த ’NFHS’- ஆய்வுத் தகவல்
1991-92 ஆண்டில் இந்துப் பெண்கள் 37.7 சதம் பேர் நவீனக் கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.
அதே 91-92இல் முஸ்லிம் பெண்கள் 22 சதம் பேர் நவீனக் கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.
1998-99இல் பயன்படுத்துதல் அதிகமாகி இந்துப் பெண்கள் 44.3 சதம். முஸ்லிம் பெண்கள் 30.2 சதம் பயன்படுத்தியிருக்கின்றனர்.
2005-06இல் கருத்தடை நவீன சாதனங்கள் பயன்படுத்துதல் மேலும் அதிகமாகி இந்துப் பெண்கள் 50.2 சதம். முஸ்லிம் பெண்கள் 36.4 சதம் பயன்படுத்தியுள்ளனர்.
’NFHS’- தரும் கணக்குப்படி 1991-92 இல் நவீனக் கருத்தடைச் சாதனங்களைப் பொருத்திக் கொண்டிருந்த முஸ்லிம் பெண்கள் 22 சதம். 1998-99இல் 30.2 சதமாக ஆகி, 8.2 சதம் பேர் அதிகமாகியிருக்கின்றனர்.
இதே ஆண்டுகளில், நவீனக் கருத்தடைச் சாதனங்கள் உபயோகிக்கும் இந்துப் பெண்கள் 37.7 சதத்திலிருந்து 44.3 சதமாக உயர்ந்திருக்கின்றனர் வளர்ச்சி விகிதம் 6.6 சதம் தான்.
இரு சமூகத்தினருடைய கருத்தடைச் சாதனப் பயன்பாட்டைக் கணக்கில் கொண்டால் முஸ்லிம் பெண்கள் 1.6 சதம் பேர் அதிகம் பயன்படுத்தியிருக்கின்றனர்.
2005-06இல் எடுக்கப்பட்ட ’NFHS’- தகவலிலும் நவீனக் கருத்தடைச் சாதனங்கள் பயன்படுத்தும் பெண்களில், முஸ்லிம் பெண்களே அதிக சதமானத்திலும், இந்துப் பெண்கள் குறைந்த சதமானத்திலும் இருந்திருக்கின்றனர்.
இந்துப் பெண்கள் 44.3 சதமானத்திலிருந்து 50.2 சதம். 5.9 சதம் அதிகரித்திருக்கின்றனர். முஸ்லிம் பெண்கள் 30.2 சதத்திலிருந்து 36.4 சதமானம். 6.2 சதம் அதிகம்.
இறுதித் தகவல்படி இந்துப் பெண்களை விட முஸ்லிம் பெண்களே 0.3 சதம் அதிகப் பயன்பாட்டில் இருந்திருக்கின்றனர். 2006-க்குப் பிந்தைய காலத்தில் கணக்கெடுக்கப்பட்டிந்தால் இன்னும் அதிகப்பட்டிருக்கும். கல்வியறிவு அதிகப்பட முஸ்லிம் பெண்கள் குடும்பக் கட்டுப்பாட்டில் அதிகம் ஈடுபட்டிருக்கின்றனர்.
குடும்பக் கட்டுப்பாடு செய்த கீழ்த்தட்டு முஸ்லிம் பெண்கள் அளவு 34.6 சதம். நடுத்தட்டு முஸ்லிம் பெண்கள் 49.8 சதம். மேல்தட்டு முஸ்லிம் பெண்கள் 58 சதம். முஸ்லிம் பெண்கள் குடும்பக்கட்டுப்பாடு செய்வதில்லை என்னும் பரப்புரை, குற்றச்சாட்டுக்கள் மேற்காணும் ’NFHS’- தகவல்படி அடிப்படையற்றதாக ஆக்கி விட்டது.
உலகம் முழுவதிலும் கடந்த 30 வருடங்களாக, முஸ்லிம்கள் மத்தியில் குடும்பக் கட்டுப்பாடு புரிதல் இருக்கிறது.
முஸ்லிம்கள் அதிகமாக வாழக்கூடிய 49 நாடுகளில் முஸ்லிம்கள் குழந்தை பிறப்பு விகிதத்தை “The Future of The Global Muslim Population” என்ற தலைப்பில் (PEW ஆய்வுமையம்) ஆராய்ந்திருக்கிறது.
1990-95இல் முஸ்லிம்கள் 4.3 விகிதம் குழந்தை பிறப்பு 2010-15இல் சரிந்து 2.9 விகிதமாக குறைந்திருக்கிறது. 2020-25இல் 2.6 ஆகக் குறையலாம். மேலும் 2025-30இல் 2.3 ஆகவும் மாறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
“PEW” தரும் தகவல்படி ஒருவருக்கு இரண்டு குழந்தைகள் என்ற சம விகிதத்தில் இருந்தால் சரியாகப் பொருந்தி வரும். ஒரு முஸ்லிம் 10 குழந்தைகளைப் பெறுவார் என்ற குற்றச்சாட்டு PEW கூறும் கணக்கிற்குப் பொருந்தவில்லை. குழப்பம் விளைவிப்பதற்கே உதவும்.
முஸ்லிம்கள் வேண்டுமென்றே தங்களது ஜனத்தொகையை அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்னும் பரப்புரை அர்த்தமற்ற குற்றச்சாட்டு. இது குறித்து சமூகத்திற்குள்ளாக நடக்கும் பிரச்சாரம் அப்பட்டமான பொய்.
தங்கள் சமூகம் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் முஸ்லிம்களிடத்தில் இல்லை. ஒரு சில முஸ்லிம் குடும்பங்களில் குழந்தை பிறப்பை இறை ஆசிர்வாதமாகக் கருதுவது உண்மை.
கல்வி, பொருளாதாரத்தில் செழிப்பான முஸ்லிம் குடும்பங்கள், முஸ்லிம் நாடுகள், முஸ்லிம் சமூகத்தில் குழந்தை பிறப்பை அதிகம் நேசிப்பதில்லை. வறுமைக்கோட்டில் இருப்பவர்கள் குழந்தை பிறப்பை நேசித்தலுக்குக் காரணம், நபர்கள் அதிகரித்தால் குடும்பத்திற்கு வருமானம் ஈட்டித்தர உதவுவர் என்ற எண்ணமே! இவர்களது பொருளாதார நிலையை மேம்படுத்தினால் பிறப்பு விகிதம் குறையும்.
சமீப காலத்தகவல்படி இரு பாலினங்களும் சம விகிதத்தில் இல்லை. முஸ்லிம் 1000 ஆண்களுக்கு 936 பெண்களே உள்ளனர். 64 ஆண்கள் திருமணம் செய்ய பெண்கள் இல்லை. இருக்கும் ஆண்களுக்கே பற்றாக்குறை இருக்கிறபோது ஒவ்வொரு முஸ்லிம் ஆம் பலதார மணம் புரிகின்றார் என்றால் எங்கிருந்து புரிவர்?
ஆண்களை விடவும் பெண்கள் அதிகமாக இருந்தால்தான் பலதார மணம் செய்ய இயலும். நம்நாட்டில் அதற்கு வழியில்லை.
ஆயிரம் முஸ்லிம் ஆண்களில் 100 பேர், இரண்டு பெண்கள் வீதம் திருமணம் செய்தால், இருக்கும் 936 பெண்களில் இன்னும் 100 குறைந்து 836 பெண்களே இருப்பர்.
மேலும், பெண்கள் பற்றாகுறை ஏற்பட்டு 164 ஆண்கள் திருமணம் முடிக்க வழியில்லாதிருப்பர். இருக்கும் ஆண்களுக்கும் திருமணம் முடிக்கப் பெண்கள் இல்லை. பலதார மணமும் செய்ய இயலாது. மேலும், நாட்டின் ஒட்டு மொத்த ஜனத்தொகையையும் மிஞ்சப் போவதில்லை.
பெண் குழந்தை பிறப்பும் குறைந்து கொண்டே வருகின்றது. எதிர்வரும் காலத்தில் ஆண்கள், திருமணம் முடிக்கப் பெண்களின் தேவைக்கு கிடைக்காமை ஏற்பட்டு ஆண் முதிர் காளையர்கள் உருவாகுவர்.
பெண்கள் உயிர்வாழ்தல் குறித்து எடுக்கப்பட்ட 2005-06 ஆய்வு தகவல்; இந்துப் பெண்கள் வாழ்நாள் காலம் சராசரியாக 65 ஆண்டுகள். முஸ்லிம் பெண்கள் வாழ்நாள் காலம் 68 ஆண்டுகள்.
5 வயதுக்குட்பட்ட குழந்தை இறப்பு இந்துக்களிடம் 76 விகிதம். முஸ்லிம்களிடம் 70 விகிதம்.
பொதுவாக நம் நாட்டில் ஜனத்தொகை அதிகரித்துக் கொண்டுதான் போகும். அரசுதான் மக்களுக்குக் கல்வியறிவு, விழிப்புணர்வு மூலமாகக் கொண்டு செலுத்த வேண்டும். மக்களை ஈர்க்கும் வகையில் கவனம் பதிக்க வேண்டும். ‘போலியோ’ நோயினை பிரச்சாரத்தால் வென்றெடுத்து போன்று ஜனத்தொகைப் பிரச்சினையையும் வென்றெடுக்க வேண்டும். (Published in Tehelka Magazine, Volume 12, Issue 8, Dated 21 February – 2015)
குறிப்பு : ‘NFHS’ என்ற அமைப்பு, இந்தியா முழுமைக்கும் சர்வே எடுக்கக்கூடியது. இவர்கள் எடுக்கக்கூடிய சர்வேக்கள்; குழந்தை பிறப்பு. சிசு மற்றும் குழந்தை இறப்பு. குடும்பக் கட்டுப்பாடு, தாய், சேய் ஆலோசனை. குழந்தைகள் உடல் நல சர்வே. இனப்பெருக்கம், சுகாதாரம், ஊட்டச்சத்து, அனீமியா இரத்த சோகை குறித்த சர்வேக்கள். குடும்பக்கட்டுப்பாடு, சுகாதாரம் சேவைகளில் தரம் மற்றும் பயன்பாடு குறித்த சர்வே இவர்கள் எடுத்துத்தருவது.
‘இந்தியன் மினிஸ்ட்ரி ஆஃப் ஹெல்த்’ – மத்திய அமைச்சகம் தனக்கு தகவல் தேவைப்படும் சமயங்களில் இந்த அமைப்பை நாடி சர்வே எடுக்கக் கூறுகின்றது.
– தமிழாக்கம் : முரசுக்குழு
– முஸ்லிம் முரசு, ஏப்ரல் 2015
source: http://jahangeer.in/April_2015.pdf