”நமக்கென்ன ஆச்சு!”
[ என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன்.. நான் இந்த நாட்டில் சிலமுறை தப்லிக் ஜமாத்துடன் சென்றுயிருக்கிறேன். உலக நினைவுகளை விட்டு அல்லாஹ்வின் நினைவு மட்டும் இருக்கும் அந்த உணர்வு இருந்தது. மனசுக்கு ஒரு விதமான அமைதி இருந்தது! இந்த நாட்டில் கோடை விடுமுறை காலங்களில் நிறைய வாலிபர்கள் இந்த தப்லிக் ஜமாத்துக்கு செல்வார்கள்
பல அற்புதமான ஒழுக்கங்களையும் இதில் கற்றுக் கொள்ளலாம்.
கடை வீதிக்கு செல்லும்போது என்ன ஒழுக்கம் பேண வேண்டும்.
பிறர் வீட்டிற்குச் சென்று நம் சகோதரர்களை தொழுகையின் பால் அழைக்கும் போது எவ்வாறு நிற்க வேண்டும். அவரை எவ்வாறு அழைக்க வேண்டும்.
அவரிடம் எப்படி பேச வேண்டும்.
அந்த வீட்டிற்கு செல்லும்போது வீட்டு கதவுக்கு நேராக நிற்கக் கூடாது.
ஜன்னல் வழியாக பார்க்கக் கூடாது.
இப்படி பல அற்புதமான நபிவழியின் வழிமுறைகளை நாம் கற்றுக் கொள்ள முடியும்.]
”நமக்கென்ன ஆச்சு!”
அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தவனாக! அல்லாஹ் நம்மை முஸ்லிமாக ஆக்கிவைத்தானே! அல்ஹம்துலில்லாஹ்!
முஸ்லிமாக இருப்பதற்கு நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். நாளை மறுமைநாளில் காஃபிர்கள் கூறுவார்கள் ”நாங்கள் முஸ்லிமாக இருந்திருக்க கூடாதா? என்று”. அல்லாஹ் கூறுகின்றான் தன்னுடைய திருமறையில்..
ஹஜ்ரத் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்; ”ஒரு தடவை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள் அவர்கள் யாரிடமும் பேசவில்லை. ஒளு செய்துவிட்டுப் பள்ளிவாசலுக்குச் சென்றார்கள். மிம்பர் படி மீது ஏறி, அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பிறகு சொன்னார்கள்”. ”மனிதர்களே அல்லாஹ் தஆலா கூறுகிறான், ”நன்மையை ஏவியும் தீமையைத் தடுத்து வாருங்கள் .இதைச் செய்யாவிட்டால், ஒரு காலம் வரும் [அந்தக் காலம் வந்தபின்] நீங்கள் என்னிடம் துஆ கேட்டால், நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். உங்கள் தேவைகளை என்னிடம் வேண்டினால், நான் அதைத் தர மாட்டேன். உங்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி கேட்டால் நான் உதவி செய்ய மாட்டேன்” என கூறிவிட்டு மிம்பர் படியிலிருந்து இறங்கி விட்டார்கள்.
தீமையை தடுப்பதில் உடலாலும் தடுக்க வேண்டும், முடியாத பட்சத்தில், மனதிலாவது நினைக்க வேண்டும். ஒரு ஹதீஸின் கருத்து ஒருவர் தீமையை கண்டார் என்றால் அவர் கரத்தினால் தடுக்கட்டும் அல்லது நாவினால் தடுக்கட்டும் அல்லது மனதிலாவது நினைக்க வேண்டும். இதுதான் ஈமானின் கடைசி நிலை. .
நமக்கென்ன ஆச்சு என்று கண்டும் காணாமல் சென்றால், மேற்கண்ட ஹதீஸ் நமக்கு எச்சரிக்கையாகி விடும். தீமையை எப்படித் தடுப்பது? என்பாய்…. நன்மையை ஏவி தீமையை தடுக்கும் செயல் பட்டறையாக இன்று நாடு முழுவதும் தப்லிக் இயக்கம் செயல்பட்டு வருகிறது.
இன்றுவரை தப்லிக் வேலை அல்லாஹ்வின் உதவியால் உலக முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எல்லா இயக்கத்திலும் பணமும், பதவியும் நுழைந்து விட்டன. ஆனால், இந்த ஜமாஅத் மட்டில் தான் பணமும் இல்லை பதவியும் இல்லை. அவரவர் பணத்தில் செலவு செய்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தாம்!
நபிவழி! நபிவழி! என்று சொல்லி கொள்ளும் சில கூட்டத்திற்கு மத்தியில், இந்த ஜமாஅத் உண்மையாகவே நபிவழியை பின்பற்ற கூடியவர்களாக இருக்கிறார்கள். இது நூறு சதவிதம் உண்மை!
அவர்களிடம் பணிவும், அடக்கமும், அன்பும், அழகான பேச்சுக்களும், அருமையான நாகரிகமும் இருக்கிறது. உங்கள் பிள்ளைகளை பயம் இல்லாமல் நிச்சயமாக இந்த உயர்ந்த பணியில் நீங்கள் அனுப்பலாம்.
இந்த தப்லிக் ஜமாஅத் ஆண்பிள்ளைகளுக்கு பயிற்சி பட்டறைகளாக விளங்கிக் கொண்டிருக்கிறது. ஒளு எப்படி செய்வது? தொழுகையில் உள்ள ஒழுங்கு முறைகள். இன்னும் நிறைய விடயங்களை அங்கே கற்றுக் கொள்ளலாம் என்பதில் ஒரு துளிக் கூட சந்தேகம் இல்லை.
என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன்.. நான் இந்த நாட்டில் சிலமுறை தப்லிக் ஜமாத்துடன் சென்றுயிருக்கிறேன். உலக நினைவுகளை விட்டு அல்லாஹ்வின் நினைவு மட்டும் இருக்கும் அந்த உணர்வு இருந்தது. மனசுக்கு ஒரு விதமான அமைதி இருந்தது! இந்த நாட்டில் கோடை விடுமுறை காலங்களில் நிறைய வாலிபர்கள் இந்த தப்லிக் ஜமாத்துக்கு செல்வார்கள் .
பல அற்புதமான ஒழுக்கங்களையும் இதில் கற்றுக் கொள்ளலாம்.
கடை வீதிக்கு செல்லும்போது என்ன ஒழுக்கம் பேண வேண்டும்.
பிறர் வீட்டிற்குச் சென்று நம் சகோதரர்களை தொழுகையின் பால் அழைக்கும் போது எவ்வாறு நிற்க வேண்டும். அவரை எவ்வாறு அழைக்க வேண்டும்.
அவரிடம் எப்படி பேச வேண்டும்.
அந்த வீட்டிற்கு செல்லும்போது வீட்டு கதவுக்கு நேராக நிற்கக் கூடாது.
ஜன்னல் வழியாக பார்க்கக் கூடாது.
இப்படி பல அற்புதமான நபிவழியின் வழிமுறைகளை நாம் கற்றுக் கொள்ள முடியும்.
இன்று பல இயக்கங்களில் உள்ள சகோதரர்களை நாம் பார்க்கிறோம். அவர்கள் மற்றவர்களிடம் எப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்பதையும் பார்க்கின்றோம். நாகரிகம் தெரியாமல் மற்றவர்களிடம் எப்படி அணுகிறார்கள் என்பதை கண் கூடாக நாம் பார்க்கிறோம்.
இதுப் போன்ற நிலைகளை அங்கே நாம் பார்க்க முடியாது. இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் அங்கே காணலாம். இஸ்லாம் கூறும் நாகரிகம் அதையும் அங்கே பார்க்கலாம்..
இன்று நமது நாட்டில் தீனை மறந்து வாழ கூடிய நிறைய வாலிபர்களை காண முடிகிறது. தொழுகை இல்லாமல் ஊர் சுற்றக் கூடிய நிலைகளை பார்க்கக் முடிகிறது.
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஒரு பைக்கை [வாகனம்] வாங்கிக் கொடுக்கிறார்கள், அதை வைத்துக் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள், வீணாக பொழுதைக் கழிக்கிறார்கள்.
நீங்கள் மரணித்தபிறகு எப்படி உங்கள் பிள்ளைகள் உங்களுக்காக துஆச் செய்வார்கள்..? சிந்திக்க வேண்டாமா..?
இந்த ஜமாத்தின் வேலை மற்றவர்களை திருத்துவது நோக்கம் அல்ல! மாறாக நமக்கு நாமே செய்து கொள்ளும் சுய பரிசோதனை.
தீனில் நாம் எங்கே இருக்கிறோம். நமது ஈமான் எப்படி என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளும் அளவு கொள்! இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்….. நோக்கம் அதுவல்ல விளக்கம் தான் முக்கியம் என்பதை இங்கே சுட்டிக் காட்டியுள்ளேன்.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
சத்திய பாதை இஸ்லாம் Haja Jahabardeen sp ;
source: http://islam-bdmhaja.blogspot.com/2016/01/do-dahwa.html