M U S T R E A D
செல்வந்தர்களே! படிப்பினை பெற முன்வாருங்கள்..
அபூ அப்தில்லாஹ்
பெருவெள்ளம் கற்றுத் தரும் பாடம் :
சென்னை, கடலூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி இன்னும் பல நகரங்களை வெள்ளத்தில் மிதக்க வைத்து, எல்லாம் வல்ல இறைவன் மனித குலத்திற்குப் பல பாடங்களைப் புகட்டியிருக்கிறான். அவற்றில் ஒன்று கோடிக்கணக்கில் பல தலைமுறைகளுக்குச் செல்வத்தைச் சேமித்து வைத்துக் கொண்டு பெருமையடிக்கும் செல்வந்தர்கள் பெறவேண்டிய பாடமும் ஒன்று.
செல்வத்தைக் கொண்டு எதையும் சாதித்துவிட முடியும் என்ற இறுமாப்பில் இருந்த செல்வந்தர்களை வயிற்றுப் பசிக்கு ஒரு பொட்டலம் உணவிற்கும், ஒரு பாட்டில் தண்ணீருக்கும் ஒன்றுமே இல்லா பிச்சைக்காரனைப் போல் கையேந்த வைத்தப் பெருமை இறைவனின் கடும் சோதனையான வெள்ளத்திற்கே உண்டு.
வங்கியில் கோடிக்கணக்கான பணம், வீட்டிலும் லட்சக்கணக்கான பணம். பாக்கெட்டிலும் நனைந்தும், நனையாமலும் நூற்றுக்கணக்கில் பணம். அப்படி இருந்தும் ஒரு வேளை உணவை அப்பணம் கொண்டு பெற முடிந்ததா? கழுத்தளவில் தண்ணீர் இருந்தும் குடிக்க ஒரு குவளை தண்ணீர் கிடைத்ததா? சிந்தியுங்கள்.
வாய்க்கருகே இருந்த தண்ணீரைக் குடிக்க முடியவில்லை. பாக்கெட்டிலிருந்த பணத்தைக் கொண்டு சாப்பிட முடியவில்லை. பிச்சைக்காரனைப் போல் கையேந்தும், யாசிக்கும் அவல நிலை. இப்போதாவது ஏகனாகிய இறைவ னின் வல்லமையை செல்வந்தர்களே உங்களால் உணர முடியவில்லையா? ஏழைகளின் பசி, தாகம் இவற்றை இப்போதாவது உணர முடிகிறதா? இல்லையா?
கோடிக்கணக்கான செல்வத்தைப் பல அராஜக, அட்டூழிய, அநியாய செயல்கள் மூலம் தங்கம், வெள்ளி, நிலம், கரன்சி என சேமித்து வைத்துக் கொண்டு என்னுடையது, என்னுடையது என பெருமை பேசுகிறீர்கள். அறிவில்லா மக்களின் கூழைக் கும்பிடு கண்டு பெருமைப்படுகிறீர்கள்.
நீங்கள் என்னுடையது, என்னுடையது எனப் பெருமைப்படுகிறீர்களே, அவை உண்மையில் உங்களுடையது அல்ல. அவற்றில் நீங்கள் உண்டு கழித்தது, உடுத்துக் கிழித்து, இல்லாதவர்களுக்குத் தாராளமாக வழங்கியது இவை மட்டும் தான் உங்களுக்குரியவை. எஞ்சியவை உங்களின் வாரிசு களுக்குரியவை என்பதை நீங்கள் உங்கள் உள்ளங்களில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். இந்த அரிய அறிவுரை ஏகனான இறைவனின் இறுதித் தூதர் வழங்கியதாகும்.
நீங்கள் என்னுடையது என்னுடையது எனப் பெருமை பேசி சேமித்து வைத்துக் கொண்டு அவற்றில் ஏழைக்குரிய பங்கைக் கொடுக்காமல் கஞ்சத் தனம் செய்ததன் பலனாக நாளை மறுமையில் நீங்கள் அனுபவிக்கப் போகும் கடும் தண்டனையை இறுதி இறைநூல் குர்ஆன் அழகுற எடுத்துக்காட்டுகிறது. படித்துப் படிப்பினை பெறுங்கள்.
”…இன்னும், எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கிறார்களோ, (நபியே!) அவர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக. (அல்குர்ஆன் 9:34)
(நபியே!) அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக) அந்த நாளில் நரக நெருப்பில் அவை காய்ச்சப்பட்டு அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், விலாப் புறங்களிலும், முதுகுகளிலும், சூடு போடப்படும் (இன்னும்) “”இதுதான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது. ஆகவே நீங்கள் சேமித்து வைத்திருந்ததைச் சுவைத்துப் பாருங்கள். (என்று கூறப்படும்) (அல்குர்ஆன் 9:35)
இந்தத் தண்டனை செல்வந்தர்கள் என்னுடையது, என்னுடையது என்று பெருமை பேசிக் கொண்டு அவற்றிலுள்ள ஏழைகளின் பங்கைக் கொடுக்காமல் தடுத்து வைத்திருந்ததின் தண்டனையாகும். அடுத்து அவர்கள் இறக்கும் வரை என்னுடையது என பெருமை பேசியவை அவர்கள் இறந்த அடுத்த நிமிடமே அவர்களின் வாரிசுகளுக்கும், பினாமிகளுக்கும் உரியதாகிவிடுகிறது. அத்துடன் இவர்களை விட்டதா? அவர்கள் விட்டுச் சென்ற சொத்துக்களின் தீய வினைகள். அவர்களின் வாரிசுகளும், பினாமிகளும் அச்சொத்துக்களை நல்லவற்றில் பயன்படுத்தினால் பரவாயில்லை. அவர்கள் அதற்கு மாறாகத் தீயக் காரியங்களில் பயன்படுத்தினால் அந்தப் பாவங்களின் பங்கும் இவர்களையே வந்தடையும். என்னே பரிதாபம்?
சொத்துக் குவிக்கும் பேராசையில் ஹலால் (ஆகும்)-ஹராம்(ஆகாது) பார்க்காத பெரும் பாலான செல்வந்தர்கள், சொத்துக் குவிப்பதில் காட்டும் ஆர்வத்தைத் தங்களின் பிள்ளைகளை நல்லொழுக்கமுள்ள பிள்ளைகளாக வளர்க்க ஆர்வம் காட்டுவதில்லை. இன்றைய நாட்டுச் சூழ் நிலைகளும் அவர்கள் பிஞ்சிலே பழுத்து பல தீய பழக்க வழக்கங்களுக்குப் பலியாக வைக்கிறது.
அதன் விளைவு இவர்கள் ஐந்தாறு தலைமுறை களுக்குச் சேர்த்து வைத்த சொத்துக்களை இரண்டாவது தலைமுறையினரே தவறான வழிகளில் செல விட்டு அழித்து விடுகின்றனர். இவர்கள் தங்கள் வாரிசுகளுக்கென்று கஞ்சத்தனம் செய்து சேர்த்து வைத்தப் பெரும் சொத்துக்கள் இப்படிப் பாழாகிப் போவதோடு, இதன் பாவச் சுமையும் மறுமையில் அச் சொத்தை முறை தவறி ஈட்டியதோடு, ஏழை களின் பங்கைக் கொடுக்காமல் கஞ்சத்தனம் செய்தவரின் தலையிலேயே விடிகிறது.
நூறாண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம்:
சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம். கோடி கோடியாகச் சம்பாதித்த ஒரு பெரும் செல்வந்தர். அன்றைய பிரிட்டிஷ் ராணிக்கு அன்றைய பெருமதிப்படி 20 லட்சம் ரூபாய்க்கு ஒரு வைர நெக்லஸ் பரிசளித்தப் பெரும் செல்வந்தர். அவரது பேரன் எல்லாச் சொத்துக்களையும் அழித் தொழித்துவிட்டு, தனது மகள் திருமணத்திற்கு ஊர் ஊராகக் கையேந்தி பிச்சைக் கேட்டுத் திரிந்த பரிதாப நிலையை 1969ல் எமது கண்களாலேயே கண்டோம்.
செல்வந்தர்களே உங்களின் எதார்த்த நிலையை நடுநிலையோடு சிந்திப்பீர். எத்தனைக் கோடி பணம் உங்களிடம் இருந்தாலும், சமீபத்தில் தமிழகத்தைப் புரட்டிப் போட்ட மழை வெள்ளத்தில் பல நாள் பட்டினிக் கிடக்கும் நிலையை நீங்களே சந்தித்து விட்டீர்கள். ஒரு வேளை சாப்பாட்டிற்கும் ஒரு குவளை நீருக்கும் நீங்கள் கையேந்திப் பிச்சைக் கேட்கும் நிலையையும் சந்தித்து விட்டீர்கள். எத்தனை உடுப்புகள் உங்களிடம் இருந்தாலும், மாற்று உடை இல்லாமல் தத்தளித்தீர்கள். அதற்கும் பிச்சை கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டீர்கள்.
எத்தனையோ வாகனங்கள் உங்களிடம் இருந்த நிலையில் கழுத்தளவு வெள்ளம் இருந்த நிலையிலும், அடுத்து மூழ்கி இறந்து விடுவோமோ என்ற அச்சத்தில் சாகாமல் செத்துக் கொண்டிருந்த நிலையிலும் அவ்வெள்ளத்தில் இருந்த வெளியேற முடியாமல் துடியாகத் துடித்தீர்கள். பிறரது உதவியை கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தீர்கள். இந்த அனைத்து நரக வேதனைகளும் உங்களிடம் கோடிக் கணக்கான பணம், உணவு, உடை, வாகனம் அனைத்தும் மிக நிறைவாக இருந்த நிலையில் தான் இந்தக் கடும் சோதனைகள்.
செல்வந்தர்கள் இப்படிப்பட்ட இடர்பாடுகள் இல்லாத நிலையிலாவது சந்தோசமாக வாழ முடிகிறதா? சொத்துக் குவிக்கும் பேராசையில் வேளா வேளைக்கு முறையாகச் சாப்பிடுவதில்லை. அதன் காரணமாகப் பெரும் பெரும் வியாதிகளை விலைக்கு வாங்குகிறார்கள். ஒரே பத்தியம். விரும்புவதைச் சாப்பிட முடியாது. ஆசைப்படுவதை அனுபவிக்க முடியாது. இதுவும் ஒரு வாழ்க்கையா? என அவர்களே வேகாமல் வெந்து கொண்டு தினம், தினம் சாகாமல் செத்துக் கொண்டிருக்கிறார்கள் பெரும்பாலான செல்வந்தர்கள். இந்த நிலையிலும் அவர்களின் பகட்டும் பெருமையும் செல்வந்தர்கள் என்ற செருக்கும் அவர்களை விட்டு அகன்ற பாடில்லை.
அவர்களில் சிலர் இப்படிப்பட்டத் துன்பங்களில் சிக்காமல் ஆரோக்கியமாக இருந்தாலும் அவர் களால் ஏழு வயிறுக்குச் சாப்பிட முடியுமா? ஒரே நேரத்தில் பல ஆடைகாளை அணிந்து அசத்த முடியுமா? பல வாகனங்களில் பயணிக்க முடியுமா? ஒரே நேரத்தில் பல இடங்களுக்குப் போக முடியுமா? இவை அனைத்திலும் இறைவன் அவர்களுக்கென்று அளந்ததை மட்டுமே அனுபவிக்க முடியும்.
பல லட்சம் கோடிக்கு அதிபதியாக இருந்தாலும், அவர்கள் உண்டு கழித்து, உடுத்துக் கிழித்தது, ஏழை எளியவர், தேவைப்படுவோருக்குக் கொடுத்து மறுமைக்கென்று அனுப்பி வைத்தது மட்டுமே அவருக்குரியது. மற்ற அவர்கள் தன்னுடையது தன்னுடையது என வீண் பெருமை பேசியவை அனைத்தும் அவர்களின் வாரிசுகளுக்கும், பினாமிகளுக்கும் உரியவை.
இந்த உண்மை நிலையை உணராமல் வீண் பெருமைக்காகத் தவறான வழிகளில் யார் பல தலை மறைகளுக்குரிய சொத்தைச் சேர்த்து வைப்பதோடு அவற்றிலுள்ள ஏழைகளுக்குரிய பங்கைக் கொடுக் காமலும், கஞ்சனாக வைக்கோல் போரைக்காத்த நாய்கள் போல் பல்லாயிரம் கோடிச் சொத்துக்களை குவித்துப் பெருமை பாராட்டிய நிலையில் இறப்பார்களானால், அந்தச் சொத்துக்களை முழுமையாக இழந்து வெறுங்கைகளுடன்தான் மறுமையைச் சந்திக்கப் போகிறார்கள். இதையே உலகையே கட்டி ஆண்ட அலெக்சாண்டர் தான் இறந்த பின் தனது இரு கரங்களையும் சவப்பெட்டிக்கு வெளியே விரித்த நிலையில் கொண்டு சென்று அடக்கம் செய்யும்படி கட்டளையிட்டார் மகா அலெக்சாண்டர்.
மறுமையில்:
அத்துடன் இச்செல்வந்தர்களின் அடங்கா பேராசை, பெருமையின் இழிநிலை முடிவுறுமா? அதுதான் இல்லையே! இறந்த பின்னரே அடங்காத, முடிவுறாத நித்திய நீண்ட, இங்கு தண்ணீர் வெள்ளத்தில் மூழ்கி அவதிப்பட்டது போல அல்ல, நரக நெருப்பு வெள்ளத்தில் மூழ்கி வெந்து கரியாகிக் கொண்டு, மீண்டும் மீண்டும் வேதனையை உணரும் தோல் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். வேதனை தொடர்ந்து கொண்டே இருக்கும். முடிவே இல்லை.
இங்கேயாவது வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், தனது செல்வத்தை அனுபவிக்க முடியாவிட்டாலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் உணவும் கிடைத்தது. நீரும் கிடைத்து. இந்த அவல நிலையும் ஒரு சில நாட்கள் மட்டுமே. பின்னர் அவ் வேதனையிலிருந்து உங்களுக்கு விமோசனம் பிறந்து விட்டது. அதற்கு மாறாக நாளை மறுமையில் நெருப்பு வெள்ளத்தில் மூழ்கிக் கடுந்துன்பம், வேதனைகளை விட்டு விடுபட முடியுமா? முடியவே முடியாது. 10 அல்லது 20 ஆண்டுகளுக்குப் பின்னர் முடியவே முடியாது. 100, 200 ஆண்டுகளுக்குப் பின்னர் இல்லை. முடியவே முடியாது. ஆம்! முடிவே இல்லாத நிரந்தர நரகம்.
இங்கு மழை வெள்ளத்தில் மூழ்கி இருந்தபோது பசி தாங்கமுடியாமல், கோடிக் கணக்கில் பணம் இருந்தும் அவை பயன்படாமல் மற்றவர்களிடம் பிச்சை கேட்டுப் பெற்று பசிதீர உணவும், தாகம் தீர நீரும் பெற்றீர்கள். நாளை மறுமையில் இந்த வாய்ப் பும் இல்லை. தவறான முறைகளில் சொத்தைச் சேர்த்து அதிலுள்ள ஏழைகளின் பங்கைக் கொடுக்காமல் கஞ்சத்தனம் செய்தீர்களே அதன் விளைவாக நாளை மறுமையில் நரக வெள்ளத்தில் மூழ்கியவர்களாகப் பசி பசி ஏதாவது தாருங்கள் எனக் கெஞ்சுவீர்கள். அப்போது உணவு கொடுக்கப்படாது. அதற்குப் பகரமாக, நெருப்பில் வளரும் முள்ளிச் செடி கொடுக்கப்படும். பசிக் கொடுமையால் அதையே சாப்பிடுவீர்கள். தாகம், தாகம் எனக் கதறுவீர்கள்! கொதிக்கும் சீழும், சலமும் கொடுக்கப்படும். அவற்றை அருந்தும் மிகமிகத் துர்பாக்கிய நிலை யைச் சந்தித்தே தீர வேண்டும். இது உண்மையான ஒரு தண்டனைதான் என்பதை இவ்வுலகில் சில நாட்க ளுக்கு வெள்ளத்தில் மூழ்கிப் பட்டத் துன்பங் கள் உங்களுக்கு உணர்த்தப் போதுமானதாகும்.
முஸ்லிம் செல்வந்தர்களே அல்குர்ஆன் 59:7 இறைக் கட்டளைப்படி செல்வம் செல்வந்தர்களுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்காமல் ஏழை எளியவர்களுக்கும் உரியவையும் உண்டு. எனவே உங்களின் வெளியே செல்லவிடாமல் சேமித்து நிறுத்தி வைக்கப்படும் செல்வங்களில் வருடா வருடம் தவறாமல் 2.5% ஏழைகளுடைய பங்கைக் கொடுத்து விடுங்கள்.
உணவு தானியம் உற்பத்தியானவுடன் தானே விளைந்தால் 10%, நீர் பாய்ச்சி விளைந்தால், 5%, முப்போகம் விளைந்தால் முப்போகமும் அதாவது வருடத்துக்கு 30% ஜகாத் கடமை. புதையல் பொருளுக்கு 20% என ஜகாத் கடமை என்று மார்க்கம் சொல்லும்போது பல தலைமுறைகளுக்குச் சேமித்து வைக்கச் சாத்தியமான தங்கம், வெள்ளி, நிலம் இவற்றிற்கு ஒரேயொரு முறை 2.5% ஜகாத் கொடுத்தால் போதும் என்பது கூமுட்டை ஃபத்வாவா? இல்லையா?
நகைக் கடை அதிபரின் பேராசை:
ஒரு பெரும் செல்வந்தர் நகைக் கடை அதிபதியின் சந்தேகம். அவரது கேள்வி. என் கடையில் ரூபாய் 30 கோடிக்குப் பொருள் இருக்கிறது 30 கோடிக்கு 2.5% வருடா வருடம் கொடுத்தால் 75 லட்சம் கொடுக்க வேண்டுமே. எப்படிங்க கொடுக்க முடியும்? இது தான் அவரது கேள்வி.
பாவம் பணத்திலிருக்கும் பேராசை அவரை இப்படிச் சிந்திக்க வைக்கிறது. உண்மையில் அவர் எனது கடை என்று கூறும் கடைக்கு அவர் மூன்றாவது தலைமுறை. எனது கடை, எனது கடமை எனப் பெருமைப்பட்டவர்களில் இரண்டு தலைமுறையினர் சென்றுவிட்டனர். இவர் மூன்றாவது தலைமுறை. இன்னும் சில ஆண்டுகளில் இவர் போய் நான்காவது தலை முறை எனது கடை, எனது கடை எனப் பெருமைப்படப் போகிறார்.
பாருங்கள் இப்போது அவரது அறிவீனத்தை. இந்த 30 கோடி சொத்தும் அல்லாஹ் கொடுத்தச் செல்வம். அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து வருடா வருடம் 2.5%மான 75 லட்சத்தை ஜகாத்தாகக் கொடுத்தால், இந்த 75 லட்சமும் மறுமைக்குரிய அவரது வங்கிக் கணக்கில் போய் சேரப் போகிறது. ஜகாத்தை முறையாகக் கணக்கிட்டுக் கொடுப்பதால் அவரது 30 கோடிச் சொத்தை 40 கோடிச் சொத்தாகப் பெருக்கவும் அல்லாஹ் அருள் புரியலாம். (பார்க்க : அல்குர்ஆன் 2:110,177,277, 7:156, 9:34,35, 22:41, 30:39, 33:33, 41:7, 98:5)
இவர் மூன்றாவது தலைமுறை முதல் தலை முறை ஆரம்பிக்கும் போது, இதே 30 கோடி நகைக ளின் அன்றைய பெறுமதி என்ன தெரியுமா? நாமே 1971ல் ஒரு பவுன், சேதாரம், கூலி என ரூ. 150/- என்று 30 பவுன் 4500/-க்கு வாங்கினோம். 1925ல் ஒரு பவுன் என்ன விலை இழுந்திருக்கும்? நீங்களே கணக்கிட் டுக் கொள்ளுங்கள். அன்று 30,000/-இருந்த நகைகள் தான் இன்று 30 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்த வளர்ச்சி யார் கொடுத்த வளர்ச்சி? அல்லாஹ் கொடுத்த வளர்ச்சி தானே?
ஒரு சில மவ்லவியின் தவறான ஃபத்வாவை வேதவாக்காக் கொண்டு பல தலைமுறைகளுக்குச் சேமித்து வைக்கும் பொருள்களுக்கு ஆயுளில் ஒரு முறை ஜகாத் கொடுத்தால் போதும் என்று நம்பிச் செயல்படுகிறவர்கள் நாளை நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு புலம்பு வதை அல்குர்ஆன் 9:34,35, 33:36, 66-68, போன்ற எண்ணற்ற வசனங்கள் அம்பலப்படுத்துகின்றன.
எனவே ஒரு பொருளுக்கு ஆயுளிலேயே ஒரு முறை ஜகாத் கொடுத்தால் போதும் என்ற மூட நம்பிக்கையில் மூழ்காதீர்கள்.
நீங்கள் ஜகாத்தாகக் கொடுக்கும் 2.5%தான் உங்களுக்குரியது. நாளை மறுமைக்காக உங்களது வங்கியில் சேமித்து வைக்கப்படும். என்னுடையது, என்னுடையது எனப் பெருமையடிக்கும் எஞ்சியுள்ள 97.5% உங்களுக்குரியதே அல்ல. அது உங்களின் வாரிசுகளுக்கும், பினாமிகளுக்குமே உரியவை. ஏமாறாதீர்கள்.
பாடம் புகட்டவே பெருவெள்ளம்:
முஸ்லிம் செல்வந்தர்களே உங்களைப் போன்றவர்களுக்குப் பாடம் புகட்டவே சமீபத்தில் தமிழகத்தை பெரும் வெள்ளத்தால் அல்லாஹ் புரட்டிப் போட்டான். பாடம் பெறுங்கள். கோடிக்கணக்கானப் பெரும் செல்வத்திற்கு அதிபதிகளாக இருந்த பெரும் செல்வந்தர்கள் அந்த சில நாட்களில் பெரும் பசியைப் போக்க பரம ஏழைகளைப் போல் பிறரிடம் மானம், வெட்கம், சூடு, சுரணை அனைத்தையும் இழந்து கையேந்தும் நிலை, பிச்சை கேட்கும் நிலை, உங்கள் நாய்களுக்குப் போடும் உணவையாவது எங்களுக்குக் கொடுங்கள் என பரிதாபமாகக் கெஞ்சிய நிலைகளையும் பார்க்கத்தானே செய்தீர்கள்.
இங்கேயாவது ஓரளவு முறையான உணவும், நீரும் கிடைத்தது. ஆனால் நாளை மறுமையிலோ இவ்வுலகில் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியாக இருந்த நீங்கள் அங்கு நரக வெள்ளத்தில் மூழ்கி வெந்து கரியாகிக் கொண்டு, பசி பசி என்றும் தாகம், தாகம் என்றும் விடாது கூக்குரலிடும் போது, உங்க ளுக்கு உணவாகக் கள்ளிச் செடிகளும், நீராகக் கொதிக்கும் சீழும், சலமுமே கொடுக்கப்படும். பசியின் கொடுமையையும், தாகத்தின் கொடுமையையும் தாங்க முடியாமல், அவற்றைச் சாப்பிடவும், குடிக்கவும் நேரிடும். இந்த பரிதாப நிலையை ஏற்கத் தயாரா? ஏழைகளின் பங்கை வருடா வருடம் கொடுக்காமல் மோசம் செய்து சொத்துக்களைக் குவியுங்கள்.
அல்லாஹ் மீதும், மறுமையிலும் உறுதியான நம்பிக்கை உள்ளவர்கள் ஒருபோதும் இந்தப் பரிதாப நிலையில் இருக்க மாட்டார்கள். அல்லாஹ் மீதும், மறுமையிலும் உறுதியான நம்பிக்கை இல்லாமல், இவ்வுலகை அதிகமாக நேசிப்பவர்கள் மட்டுமே அவர்கள் பல தலைமுறைகளுக்குச் சேமித்து வைத்திருக்கும் செல்வத்திலிருந்து ஏழைகளுக்குரிய பங்கான 2.5% ஜகாத்தைக் கொடுக்காமல் மோசம் செய்வார்கள். நீங்கள் எந்த ரகம் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
பூமியில் நடமாடி(த் தம் வாழ்க்கைத் தேவை களை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அள வுக்கு, அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப் பணித்துக் கொண்ட ஏழைகளுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும்; (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்; அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம்; அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்ல திலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகின்றான். (அல்குர்ஆன் 2:273)
அநாதைகளை அவர்கள் திருமணத்திற்குரிய பருவத்தை அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள்; (தங்கள் சொத்தை நிர்வகிக்கும்) பகுத்தறிவை அவர்களிடம் நீங்கள் கண்டால் அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்துவிடுங்கள்; அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று)விடுவார்கள் என்று அவற்றை அவசரமாகவும், வீண் விரயமாக வும் சாப்பிடாதீர்கள்; இன்னும், (அவ்வநாதை களின் பொறுப்பாளர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த் துக் கொள்ளட்டும், ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு(அதிலிருந்து) சாப்பிட்டுக் கொள்ளவும், மேலும், அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும் போது, அவர்கள்மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்; கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன். (அல்குர்ஆன் 4:6)
நம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாக, அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாக இருங்கள்; (அச்சாட்சி) உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினர்களுக்கோ விரோதமாக இருப்பினும் சரியே! (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர் செல்வந்தராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில், அல்லாஹ் அவ்விருவருக்கும் (அவர்களைக் காப்பதற்கு) மிக உரியவன்; எனவே, நியாயம் வழங்குவதில் மனோ இச்சையைப் பின் பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சிக் கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:135)
நம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக இணை வைப்பவர்களெல்லாம் அசுத்தமானவர்களே; ஆதலால், அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் (கஃபா என்னும்) மஸ்ஜிதுல் ஹராமை அவர்கள் நெருங்கக்கூடாது; (அதனால், உங்களுக்கு) வறுமையை நீங்கள் பயந்தீர்களாயின் அல்லாஹ் அவன் நாடினால், விரைவில் தன் அருளால் உங்களைச் செல்வந்தர்களாக்கி விடுவான்; நிச்சயமாக அல்லாஹ், எல்லாம் அறிந்தவனாகவும், ஞானமுடையவனாக வும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 9:28)
மேலும், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு, அவனுடைய தூதருடன் சேர்ந்து போர் புரியுங்கள் என்று ஏதாவது ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால், அவர்களில் வசதி படைத்தவர்கள் உம்மிடம் அனுமதி கோரி, எங்களை விட்டு விடுங்கள்; நாங்கள் (போருக்கு வராமல்) தங்கியிருப்போருடன் இருந்து கொள்கிறோம் என்றும் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 49:86) (மேலும் பார்க்க :34:34, 43:23, 59:7)
source: http://annajaath.com/archives/7586