நீதிபதி பதவிகளில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு: நேஷனல் லாயர்ஸ் நெட்வொர்க்’ (NLN) தகவல்!
மாநில உயர்நீதிமன்றங்களில் மொத்த நீதிபதி பணியிடங்கள் 601 .
முஸ்லிம் நீதிபதிகளின் எண்ணிக்கை 25 மட்டுமே..!
அதிலும் 10க்கும் மேற்பட்டோர், இந்த ஆண்டிலேயே ஒய்வு பெற உள்ளனர்.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 14.2% உள்ள முஸ்லிம்களின் விகிதாச்சாரப்படி 86 முஸ்லிம்கள், மாநில உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளாக இருக்கவேண்டும்.
போதிய தகுதிகள் இருந்தும் நீதிபதி நியமனங்களில் முஸ்லிம்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
27% முஸ்லிம்களை கொண்ட மேற்குவங்கத்தின் ‘கொல்கத்தா’ உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கையான 42-ல் 2 பேர் மட்டுமே முஸ்லிம்கள், அதிலும் ஒருவர் இந்த ஆண்டில் ஒய்வு, மற்றவர் அடுத்த ஆண்டு ஒய்வு பெரும் நிலையில் உள்ளார்.
19.3% முஸ்லிம்கள் உள்ள உ.பி,.யின் ‘அலஹாபாத் ஹைகோர்ட்’டில் 74 நீதிபதி பணியிடங்களில் 15 முஸ்லிம்கள் இருக்கவேண்டிய இடத்தில் 3 பேர் மட்டுமே நீதிபதிகளாக உள்ளனர்.
முஸ்லிம் மக்கள் தொகை அதிகம் உள்ள அஸ்ஸாமில் ஒருவர் கூட நீதிபதியாக இல்லை.
காஷ்மீர் ஹைகோர்ட்டில் 7 முஸ்லிம்கள் இருக்க வேண்டிய சூழலில் 3 பேர் மட்டுமே முஸ்லிம்கள், அதிலும் ஒருவர் இந்த ஆண்டில் ஒய்வு பெறுகிறார்.
25% முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட பீகாரில், 7 பேர் இருக்கவேண்டிய இடத்தில், 2 பேர் மட்டுமே முஸ்லிம்கள், அதிலும் ஒருவர் இந்த ஆண்டில் ஒய்வு பெறுகிறார்.
7 நீதிபதிகள் இருக்க வேண்டிய ‘பாம்பே ஹைகோர்ட்’டில் 2 முஸ்லிம்கள் மட்டுமே உள்ள நிலையில் ஒருவர் இந்த ஆண்டே ஒய்வு பெறுகிறார்.
9 நீதிபதிகள் இருக்கவேண்டிய கேரள உயர்நீதிமன்றத்தில் 5 முஸ்லிம் நீதிபதிகள் இருந்தாலும், இந்த ஆண்டில் 2 பேர் ஒய்வு பெறுகின்றனர்
டெல்லியில் 5 முஸ்லிம் நீதிபதிகள் இருக்கவேண்டிய இடத்தில் இருவர் மட்டுமே பதவியில் உள்ளனர்.
ராஜஸ்தானில் பதவியில் உள்ள ஒரே ஒரு முஸ்லிம் நீதிபதியும் இந்த ஆண்டே ஒய்வு பெறவேண்டிய நிலையில் இருக்கிறார்.
தமிழ்நாடு, மத்திய பிரதேசம், உத்தர்காண்ட், பஞ்சாப்-ஹரியானா, போன்ற மாநில உயர்நீதிமன்றங்களில் ஒரு முஸ்லிம் கூட நீதிபதியாக இல்லை.
நீதிபதிகளின் நியமனத்தில் தகுதியுள்ள அனைத்து சமூகத்தை சார்ந்தவர்களையும் நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ‘நேஷனல் லாயர்ஸ் நெட்வொர்க்’ (NLN) சார்பாக சென்னையில் ‘கருத்தரங்கம்’ நடைபெற்றது.
இதில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி D.ஹரி பரந்தாமன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் M.முகம்மது இஸ்மாயில்,
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மூத்த வழக்கறிஞர் M.அஜ்மல் கான், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் D.சத்திய சந்திரன், S.நாக சீலா ஆகியோர் கலந்துகொண்டு நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை வலியுறுத்தி பேசினர்.
-Maruppu