தோள் கொடுத்தோர் தூய்மை செய்தார்களா?
[ எவரும் ஒளூச் செய்யாத நிலையில் மௌத்துக்கு தோள் கொடுக்கக் கூடாது. ஒளூச் செய்து விட்டுத்தான் தோள் கொடுக்க வேண்டும்.]
இறந்த மனிதரின் உடலுக்காக தொழுகை புரிய பள்ளி வாசலுக்கு தூக்கி வருவோரோடு உடன் வரும் முஸ்லிம்கள் பள்ளிக்கருகே வந்தவுடன் உள்ளே வராது வெளியிலேயே நின்று கொண்டு கதை பேசிக் கொண்டிருப்பர். பள்ளி உட்புறம் இறந்த நபருக்காக சிலர் தொழுவர்! வெளியில் பலர் நிற்பர்! இதுதான் எதார்த்தம்.
சில இடங்களில் முழுக் கூட்டமும் தொழுவதுண்டு. இன்னும் மௌத்தை தூக்கி வந்திருந்தோர் ஒளுச் செய்திருந்தார்களா? என்பதும் தெரியாது.
அபூதாவூத், திர்மிதி பதிவுகளில் நபியவர்கள் கூறியதாகச் கூறப்பட்டுள்ளது;
“எவன் மையித்தைக் குளிப்பாட்டினானோ அவன் குளிப்பானாக! எவன் மையித்தைச் சுமந்து சென்றானோ அவன் ஒளூச் செய்து கொள்வானாக!
தாரகுத்னி, கதிப் பதிவுகளில் உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாக உள்ளது; “நாங்கள் ஆண் மய்யித்தை குளிப்பாட்டுவோம். அதற்குப்பிறகு சிலர் குளிப்பார்கள், சிலர் குளிக்கமாட்டார்கள்”
இரு ஹதீஸ்களிலும் குளிப்பாட்டுதலுக்குரியதைக் கூறியுள்ளனர்.
தோள்கொடுத்து தூக்கிச் செல்வோர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அவர்கள் கூறியபடி ஒளூச் செய்து கொள்ளவேண்டும்.
பல ஊர்களில், நகரங்களில் மௌத் தொழுகையில் கலந்து கொள்ளாது பள்ளிக்கு வெளியிலேயே நிற்கும் உறவினர்கள், தோள் கொடுத்தோர் தூய்மை செய்தார்களா?
நண்பர்கள் உடல் பள்ளியிலிருந்து வெளியில் வந்ததும் தோள் கொடுக்க முண்டியடிக்கின்றனர்.
நபி கூறியதிலிருந்தும் தெரிகிறது, இனி எவரும் ஒளூச் செய்யாத நிலையில் மௌத்துக்கு தோள் கொடுக்கக் கூடாது. ஒளூச் செய்து விட்டுத்தான் தோள் கொடுக்க வேண்டும்.
மெளத் தொழுகையின்போது மஸ்ஜிதில் …வேறுபாடு காண்பிப்பது சரியா?
சென்னையில் உள்ள சில பெரிய பள்ளிகளில், மௌத் தொழுகைக்காக உடல்களைக் கொண்டு வரும் வேளையில், இறந்த நபர் செல்வந்தர், பிரபலமானவர், அந்த பள்ளிவாசலை நிர்வகிப்போருக்கு வேண்டப்பட்டவர் என்றால் பள்ளி மெஹ்ராப், இமாம் நின்று தொழுகை புரியும் இடத்திற்கு முன்பாகக் கொண்டு சென்று வைத்து தொழுகை நடத்துகின்றனர்.
ஏழைகள், வந்தேறிக்குடிகள், அறிமுகமில்லாதவர் எனில் முன் வராண்டா வாசலில் வைத்து அனுப்புகின்றனர். மனிதர்கள் தத்தமது புத்திகளுக்கேற்ப இவ்வாறு நடந்து கொள்கின்றனர். இவ்வாறு செய்வது தவறு என்பதை நிர்வாகிகள் உணரவேண்டும்.
முஸ்லிம் முரசு, ஜனவரி 2016