செங்கிஸ்கான் பேரர்கள்
[ நூல் நயம் ]
96 பக்கத்திற்குள் மாபெரும் வரலாற்றை அடக்கியுள்ளார் நூலாசிரியர் தாழை மதியவன். நூல்வாசிப்போர் உள்ளத்தில் இடம்பெற்ற படைப்பாளர்களில் இவரும் இடம் ஒருவர். எந்தவித ஒளிவுமறைவுமின்றி பழிவாங்கும் வெறித்தனம், பாலியல் வேட்கை, பதவிப் பித்துநிறைந்த கூட்டம் என அன்றைய வரலாற்று அருவருப்புகளை பதிவு செய்துள்ளார். இந்த நூல் செழுமையான நடை கொண்டு வாசிக்கத் தூண்டுகிறது, சில இடங்களில் வாய்பிளந்து நம்மை ரசிக்கவும் வைக்கிறது.
தேர்ந்த சிற்பியின் கைங்கர்யத்தால் உருவாகும் சிற்பம் போல் நுணுக்கமான வேலைப்பாடுகள் நூலெங்கும் விரவிக் கிடக்கிறது.
27 நூல்களை படைத்த கைகளால் இதனைப் படைத்துள்ளார். இந்தியாவை ஆண்ட முஸ்லிம்கள் கட்டிடக் கலை, உணவு, சட்டம், பூங்கா, வாள்களின் ஆயுத நேர்த்தி, குதிரை வளர்ப்பு, உடைகளின் நேர்த்தி என பலவற்றை நமக்குத் தந்துள்ளனர்.
நூலின் சில இடங்களில் நிகழ்கால ஆட்சி, அரசியலையும் தாழையான் விட்டுவைக்கவில்லை. நூலின் 38 ஆம் பக்கம் மூன்றாம் பத்தி கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு வரலாம் ஆனால் கீழானவர்கள், கீழ்த்தரமானவர்கள் ஆட்சி அதிகாரத்தை கையிலெத்தால் என்னவாகும்?! எனக் கேட்கும் இடம் அருமை. வீட்டு நூலகத்திற்குள் இருக்க வேண்டிய தகுதியுள்ள நூல்.
ஒரு விணையின் விசும்பல்!
ஒரு நூலின் அட்டைப்படம் அந்த நூலின் உள் அடையாளத்தை வெளிப்படுத்தும் வல்லமை கொண்டது. அது இந்த நூலுக்கும் பொருந்தும்.
சிறுகதைகளின் தொகுப்பே இந்த நூல் கதைகளின் ஊடாக நிறைய பேசுகிறார். அதில் ஒன்று “அவங்க வேற நாம வேறன்னு நீ சொல்ற. அவுங்க நாமெல்லாம் ஒன்னுன்னு சொல்றாங்க” என்கிற வரிகள் இஸ்லாம் கூறும் சமத்துவத்தை கதை ஊடாகப் பேசுகிறது.
உச்சி முதல் உள்ளங்கால் வரை மருத்துவம் பார்க்க கற்றவர்கள் காசுக்காக அலைபாய்வது தொடங்கி இன்றைய கல்யாண சந்தையை நறுக்காகப் பேசும் கதை.
வியாபார இழப்பை சரிக்கட்டலாம். பிள்ளைகள் இழப்பை சரிக்கட்ட இயலாது இது பர்வீன் அப்பாவுக்கு மட்டுமல்ல சகல முஸ்லிம் அப்பாக்களுக்கும் சரியான புத்திமதி. அதைப்போலவே பிழைக்கத் தெரியாதவன் என்ற அடைமொழியோடு முடியும் கதை, பிறர் உதவியின்றி வாழ்க்கையை நகர்த்த இயலாத நிலையில் உள்ள ஒரு வாத நோயாளியின் கதை என ஒவ்வொன்றும் அற்புதமாக, அழகாக தொகுக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக 70 முதல் 80 வரை தமிழ் இதழ்களில் தரமான சிறுகதை இடம் பெற்று வந்தன. தற்போது சிறுகதைகள் முற்றிறும் குறைந்து விட்டது. அது ஏதோ பாவகரமான ஒன்றாக பத்திரிகை அதிபர்களால் பார்க்கப்படுகிறது. அந்தக்குறையை “ஒரு வீணையின் விசும்பல்” சிறுகதை தொகுப்பு எனக்குத் தீர்த்து வைத்தது.
வாசிப்புக்கு ஏற்ற கதைகள் எளிய நடை அரபு பெயர்களைத் தவிர வடசொற்கள் மாசுக் கருத்துக்கள் எதுவுமின்றி ஸ “ஒரு வீணையின் விசும்பல்” தொகுப்பு கிதாரின் சினுங்கல் போல்ஸ எனக்கு இப்படித்தான் நூல் தலைப்பை நினைக்கத் தோன்றுகிறது.
மனக்குகை பதிப்பகம் மேற்கூறும் இரண்டு நூல்களையும் வெளியிட்டுள்ளன. க.குணசேகரன்
நூல் வெளியீடு; தாழைமதியவன்