மரணத்தை பிரபலப்படுத்தாகாதே!
மரணத்தை அறிவிப்பு செய்ய பேப்பரில் விளம்பரம், டி.வி.யில் விளம்பரம் கொடுப்பது. போஸ்டர் ஒட்டுவது. ஆட்கள் வருவதற்காக காத்திருப்பது. மரணத்தின் மூலம் அரசியல் வியாபாரம் செய்வது, மரணித்த உடலைப் போட்டு காத்திருப்பது போன்றவைகள் தடுக்கப்பட்டவை.
இது “நான் பெரிய ஆள் பாருங்க”. “நான் பெரிய ஆள் பாருங்க”! என்று அறிவிப்பதாக, “அனுதாபம் தெரிவியுங்கள்” என்று வலிய அழைப்பதாக அமைந்துவிடும் தவறுகள்.
உறவினர்கள் மரணத்தை வேறு யாருக்கும் அறிவித்து விடாதீர்கள். அது அனுதாபத்தை வேண்டி செய்வதாகிவிடும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிவித்திருக்கிறார்கள். (திர்மிதி, இப்னுமாஜா)
இதில் ‘வேறு’ என்ற சொல் உறவினர்கள் அல்லாதவர்களுக்குக் கூறி அவர்களது அனுதாபத்தை எதிர்பார்க்காதே என்ற பொருளில் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வாறே புரிந்து கொள்ளவேண்டும்.
மரணித்தவர் உடலை அடக்கம் செய்வதில் தாமதம் கூடாது. விரைவாக அடக்கம் செய்யவேண்டும் என நபி கூறியதாக, அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, அறிவித்திருக்கிறார்.
மரணித்த உடலை ஊர்விட்டு, நாடுவிட்டு கொண்டு வருகின்றனர். அதற்காக மிகுந்த பிரயாசைப்படுகின்றனர்.
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா சகோதரர் ‘வாதில் ஹபஷா’ என்ற இடத்தில் மரணமடைந்தார். அவரை அங்கிருந்து மதீனா கொண்டுவந்தார்கள். எங்களைத் துக்கமடையச் செய்யவே இவ்வாறு கொண்டு வந்திருக்கிறார்கள், அந்த இடத்திலேயே அடக்கம் செய்வதைத்தான் நான் விரும்புகிறேன் என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாக ‘பைஹகீ’ கூறுகிறது.
– முஸ்லிம் முரசு நவம்பர் 2015