நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்?
கேள்வி : ஓர் ஆண்டிற்கு முன் வரை பல தீமைகளைச் செய்துகொண்டிருந்தேன்.
அதனால் உலகின் பல விஷயங்கள் இலகுவாகக் கிடைத்து கொண்டிருந்தன.
நான் யாருக்கும் கடன்பட்டிருக்கவில்லை. உபகாரம் செய்ய வேண்டியிருந்ததில்லை.
இப்போது அத்தனை தீயகாரியங்களையும் விட்டு நன்மையின் பக்கம் திரும்பியிருக்கிறேன்.
என்னிடமிருந்த மகிழ்ச்சியும் நிம்மதியும் முடிவுக்கு வந்துவிட்டதைப் பார்க்கிறேன். உணவுக்கும் சிரமப்படுகிறேன்.
நன்மையான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இவ்வுலகில் ஏன் நெருக்கடிகள் ஏற்படுகின்றன?
இவ்வாறு இருக்கும் போது மக்கள் நன்மையின் பக்கம் எப்படி வருவார்கள். இது எனக்கு சோதனையாக இருக்கிறது.
பதில் : நீங்கள் எதிர்கொண்டிருக்கும் சூழ்நிலைக்கு என்னுடைய மனமார்ந்த ஆதரவு உண்டு. உங்களின் மனதைப் புண்படுத்த நான் விரும்பவில்லை. உங்களின் கேள்விக்கான சரியான பதில் நீங்கள் உண்மையில் சோதனையில் சிக்கி இருக்கிறீர்கள். இறைவனின் மீதும் மறுமையின் மீதும் உங்களுடை ய நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டு பொறுமையுடன் நன்மையின் பாதையில் நடைபோடுவதுதான் இச்சோதனையிலிருந்து நலமோடு மீண்டு வருவதற்கான வழியாகும்.
இது தொடர்பான சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கு சில விஷயங்களைச் சுட்டுக்காட்டுவதே போதுமென நினைக்கிறேன். தீமையின் பாதை இலகுவானதாகவும், நன்மையின் பாதை சிரமமானதாகவும் இருப்பதை நீங்கள் இப்போது பார்க்கிறீர்கள்.
இன்றைய ஒழுக்க, கலாச்சார, பொருளாதார, அரசியல் சூழ்நிலைகள் கெட்டுப் போய் சிரமமானதாகவும் ஆகிவிடும். தீய சூழ்நிலையில் நேர்மையான பாதையை தேர்ந்தெடுத்தவர்கள் அக்காலம் வரும்வரை வேறு வழியின்றி அனைத்து சிரமங்களையும் தொல்லைகளையும் சகித்துக்கொள்ள வேண்டும்.
உண்மை நிலை தன்னளவில் உறுதியாகவே உள்ளது. “நன்மை’ தனக்குள்ளேயே சிரமங்களின் ஒரு அம்சத்தை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு நேர்மாறாக தீமைக்குள் இலகுவின் ஓர் அம்சம் கலந்துள்ளது. நீங்கள் உயரமான சிகரங்களை அடைய விரும்பினால் ஏதாவது ஒரு வகையில் கண்டிப்பாக உழைக்க வேண்டியிருக்கும். சுற்றுப்புறம் எவ்வளவுதான் சாதகமாக இருந்தாலும் சரியே! அதே நேரத்தில் கீழ்நோக்கி வீழ்வதற்கு எவ்வித முயற்சியும் உழைப்பும் தேவையில்லை.
தீயபாதையில் செல்பவர்களுக்குப் பலரும் உதவுகிறார்கள். நன்மையின் பாதையைத் தேர்ந்தெடுத்து செல்பவர்களுக்கு ஒவ்வொரு திருப்பத்திலும் தடைகளைப் போடுகிறார்கள். இறைவனின் நல்லடியார்கள் ஒன்றிணைந்து முயற்சி செய்து நேர்மையான வாழ்க்கை முறையை நிறுவி விட்டால் இன்ஷா அல்லாஹ் நன்மையின் பாதை இலகுவாகவும், தீமையின் பாதைகள் நெருக்கடிகள் உண்டாகின்றன. எனவே உலகம் இதன் பக்கம் எப்படித் திரும்பிப் பார்க்கும்’ என நீங்கள் கேட்கிறீர்கள்.
நற்பணி ஆற்றுபவர்களுக்கு இவ்வுலகில் அனைத்து வசதி வாய்ப்புகளும் கிடைக்கப் பெற்றுவிட்டால்ஸ தீய பணி ஆற்றுபவர்களுக்கு ஆபத்துகள் வந்து சூழ்கின்றன எனில் பின் தீயவற்றைத் தேர்ந்தெடுக்கவும், நல்லவற்றைப் புறக்கணிக்கவும் எந்த அறிவிலி முன் வருவார் என நான் கேட்கிறேன். இதனால் வெற்றியின் பாதை இலகுவாகவும், தோல்வியின் பாதை கடினமானதாகவும் ஆகியிருக்கும். நற்கூலிக்கு மதிப்பில்லாமலும் தண்டனை மதிப்புள்ளதாகவும் ஆகி இருக்கும். நற்கூலி இலவசமாகக் கிடைத்திருக்கும். தண்டனை பெறுவதற்கோ உழைக்க வேண்டியிருக்கும்.
இவ்வாறு இருக்கையில் இச்சோதனைக் கூடத்திற்கு மனிதனை அனுப்புவதால் ஏதாவது பலன் இருக்குமா? இதன் பின்னும் நல்ல மனிதர்களின் நற்பணிகளுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்குமா? நன்மையான பாதையைத் தேர்வு செய்வதற்கு வரவேற்பு அளிக்கப்படுமா? உங்களுடைய கேள்வி விநோதனமான ஒன்று.
மக்கள் நேரான வழிக்கு வருவதில் அல்லாஹ்வின் தேவையும் அதோடு தொங்கிக் கொண்டிருக்கிறது என நினைக்கிறீர்களா? இவ்வாறு தவறாகப் புரிந்து கொண்டுஸ “நேரான பாதையில் சிரமங்களும் தொல்லைகளும் நிரம்பிக் கிடக்கின்றன. உலகம் இப்பாதையில் ஏன் வரவேண்டும்’ எனக் கேட்கிறீர்கள். நேரான வழியைத் தேர்ந்தெடுப்பதால் மக்களுக்குத்தான் பலன் இருக்கிறது என உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இறைவனுக்கு இதில் பலன் எதுவுமில்லை.
நன்மையின் பாதைக்கு எதிராக நடைபோடுவதால் மக்களுக்குத்தான் இழப்பு இருக்கிறது. இறைவனுக்கு அல்லஸ! மக்களுக்காக இறைவன் இரண்டு பாதைகளை வைத்துள்ளான். இதில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள், விரும்புவதைத் தேர்ந்தெடுத்துக்கொள்.
ஒன்று, இவ்வுலகின் சிலநாள் வாழ்க்கையின் சுவைக்கு முன்னுரிமை அளித்து மறுமையின் நீண்ட நெடிய வேதனையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது, மறுமையின் நீண்ட நெடிய நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கவனத்தில் கொண்டு தீனின் நியதிகளுக்குக் கட்டுப்படும் இச்சிரமங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.
மக்கள் விரும்பினால் முதலாவது வழியைத் தேர்ந்தெடுக்கட்டும். முழு உலகமும் ஒன்று சேர்ந்து இவ்வழியைத் தேர்வு செய்து இத்தவறைச் செய்துவிட்டாலும், இறைவனுக்கு எந்த இழப்பும் ஏற்படப் போவதில்லை. இவற்றை எல்லாம் விட்டு இறைவன் முற்றிலும் தேவையற்றவன். மக்கள் நேர்வழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாலும் இறைவனுக்கு எந்தப் பலனும் அதிகரிக்கப் போவதில்லை.
தர்ஜுமானுல் குர்ஆன்
தமிழில் : ஜி. அப்துர் ரஹீம்-சமரசம்
source: http://www.readislam.net/portal/archives/3468#comment-4427