உள்ளதைச் சொல்கிறேன் – ராஜ்குமார்
சிலர் சினம் கொள்கிறீர்கள் எனக்கு இசுலாமிய அமைப்புகளைப் பாராட்ட எந்த அவசியமும் இல்லை. இன்று சென்னை அம்பேத்கர் நகர் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் மட்டும் 5,000 பேருக்கு இசுலாமிய அமைப்புகள் உணவும் நீரும் கொடுத்துள்ளன,. இது நியூஷ் 7 டிவியிலும் இப்போ இரவு 11.20ப்ம் கு காட்டப்பட்டது.
எந்த முஸ்லிமும் செல்பி எடுத்து அனுப்பல,. பேச்சும் கொடுக்கல ஆனா ஊடகங்கள் தான் இன்று அவர்களைப் படம் எடுக்கின்றன.
பாதிக்கப்பட்ட மக்கள் உள்ள ஒவ்வொரு இடத்திலும் இசுலாமியர்கள் உதவிக் கொண்டு இருக்கிறார்கள். கேமராவும், ராணுவமும் நுழையாத இடங்களிலும் உள்ளார்கள்.,
“இதில் மதப்பெயர ஏன் சொல்லுரீங்க”நு சிலர் கேட்கறீங்க., யாரோ யாரயோ அடிச்சப்போ., யாரோ திருடுநப்போ, யாரோ ஏதோ செஞ்சப்போ முஸ்லிம், முஸ்லிம், இசுலாமியர் என்று கடந்த காலத்தில் மதத்தோடு தொடர்பு படுத்தித் தானே கேவலப்படுத்துனோம்., (தனி மனித தவறுக்கு)
இப்போ நல்லத அந்த சமூகமே சேந்து செய்யுரப்போ மதத்த சேக்காம இசுலாமியன்னு சொல்லாம., பிரிச்சு பேசச் சொன்னா எப்படி?, தொட்டதுக்கெல்லாம் அவங்க மதத்தோட தொடர்பு படுத்திப் பேச கத்துக் கொடுத்ததே நீங்க (ஊடகம், பஜக.RSS) தானே..!
நாங்கல்லம் செய்யலயானு சிலர் கேட்கரீங்க., நீங்களும் செய்யரீங்க ஆள் பாத்து ஒரு சின்ன தெருவுக்குள் குறுகிய அளவில் சில எல்லை வரையறைகளோடு.,
இன்னைக்கு கோயில்ல இருக்கரவங்களும் ஒரு இசுலாமியன் கோவில் உள்ள வந்தா அவன் நீரும், சோறும் கொண்டு வருவான்னு ஆவலோடு பாக்கறாங்க மக்கள்.,
இதுக்கு முன்னாடி சந்தேகத்தோடு (தீவிரவாதினு) பார்க்கத் தானே கற்பிக்கப்பட்டோம்.., “இவங்களுக்கு இங்க என்ன வேலை,. எதாவது வைக்க வந்துருப்பானோ சினிமால வர்ர மாதிரி” நு.
இதுக்கு முன்னாடி ஆத்து பாலத்துல ஒரு முஸ்லிம் ஓரமா வண்டிய நிறுத்திட்டு நின்னு வேடிக்கை பார்த்தா நாம “இவன் ஏன் இங்க நிக்கிறான் பாலத்துக்கு குண்டு வைக்க பாக்குறானோ… இவன் ஓட பைக் நம்பர நோட் பன்னுனு, ஆள அடையாளம் பத்து வெச்சுக்கோ” நு சொல்லத்தானே பழகி இருந்தோம்., இன்னைக்கு சென்னை ஆத்துப் பாலத்து கிட்ட நிக்கிற பாயப் பத்து “இவுங்க பிசுக்கட்டும், குடி தண்னியும் அந்தப்பக்கம் மக்களுக்குக் கொண்டுபோக வழி பத்து திட்டம் போடுறாங்க” நு சொல்லிட்ருக்கோம்.,
நான் சொல்லல இசுலாமியன் செய்யிறான்னு., சென்னையே சொல்லுது., வெறும் பெட்டிக் கடையும், டீ கடையும், பிரியாணிக்கடையும் வெச்சு வாழுரவன், மலிகைக் கடையில் வேல பாக்ரவன்., தன் பெண்டு பிள்ளைய மறந்து களத்தில் நிக்கரான்.,
மாடில இருந்து கையிர வீசர மக்களுக்கு கீழ இருந்து தண்னியும், உணவும் கட்டி அனுப்புரான்.,
இப்பிடி தன் அன்னாடங்காச்சிகள் தான் செத்தா நாளை தன் குடும்பம் தெருவுக்கு வந்துடுமேங்கர இயல்பான சிந்தனைய கூட மறந்து தன் சேமிப்பு தொகையெல்லாம் கொட்டி செஞ்சுட்ருக்கான்., அவன் பொண்டாட்டி சாப்டாலா?! புள்ள குட்டி சாப்டுச்சா?! நு கூட அவனுக்கு தெரியாது ஆனா அவன் சென்னையில்.. சேவையில்.,
இப்படிப் பட்டவங்கள தட்டிக் கொடுக்காம முட்டு சந்துல ஒரு ரூம்குள்ள தன் சாதி இன மக்களுக்கு மட்டும் சோறு போட்டு போட்டோ புடுச்சு தானே விளம்பரம் பன்னிக்கரவனுகள தூக்கி வெச்சுகிட்டு ஆடச் சொல்ரீகளா??!
# நாம் மதத்தின் பெயரால் தான் அவர்களை இதுவரை இழிவு செய்யக் கற்றுக் கொடுக்கப்பட்டோம்., இனியும் மதத்தின் பெயரால் தான் அவர்கள் செய்த தொண்டுகளைச் சொல்வோம்., இப்போது மட்டும் மனிதம் அப்படி இப்படி, தொண்டு நிறுவனம் என்றெல்லாம் மழுப்ப மாட்டோம்.
டிவி யில் மீட்புப் பணிகள் நடைபெறுவதை உணவு, பால், நீர் தரப்படுவதைக் காட்டுகிறார்கள்.. மீட்பு நடவடிக்கை ஊடக வீடியோக்களில் களப்பணியில் முஸ்லிம்கள் இல்லாத வீடியோவே இல்லை.
அவர்களின் பள்ளிக்கு அடைக்கலம் புகுந்த நம் பெண்களிடம், குழந்தைகளிடம், மக்களிடம் அவர்கள் தீட்டுப்பார்க்கவில்லை., பள்ளிவாசலில் குடம் குடமாய் குடி நீர் எடுத்துக் கொள்ளவும் அனுமதித்துள்ளார்கள்.,
துலுகன் புத்தி தொண்டைகுழி வரைக்கும் என்றீர்கள்,. ஆம் தொண்டையில் நீர்வார்த்தார்கள்., தொண்டையில் கடந்த சில தினங்களில் இறங்கிய உணவு அவர்கள் கொடுத்தது தான்..,
நம்மை அவர்கள் மாமா, மச்சான் என்று அழைத்தது உதட்டில் அல்ல உள்ளத்தில் இருந்து என்றும் உணர முடிகிறது.,
இனி ஒரு பாபர் மசூதியும் இடிக்கப்படக் கூடாது,. மழைக்கு ஒதுங்க உதவும்., இனி இந்திய மசூதிகள் நம்முடையது., உயிரைக் கொடுத்தேனும் நம் தெருவில் இருக்கும் அவர்களின் மசூதிகளை., நம் புகழிடங்களை நாம் காக்க வேண்டும்.. சர்ச்சுகளுக்கும் இது பொருந்தும்..,
யாருடைய தேச பக்தியை நாம் காலமெல்லாம் சந்தேகிக்க நிர்பந்திக்கப்பட்டோமோ??! யாரை பாகிஷ்தானுக்கு போ என சங்கப்பரிவார் RSS, BJP சொன்னபோது நாம் வேடிக்கை பார்த்தோமோ?? அந்த முஸ்லிம்கள்., யாரைக் காரில் அடிபட்ட நாய் என்று மோடி சொன்னாரோ?! அந்த முஸ்லிம்கள்.., ஆம் மாட்டுக்கறியின் பெயரால் கொல்லப்பட்ட, வேட்டையாடப்பட்ட அதே முஸ்லிம்கள்..மீட்புப்பணியில் உயிரைப் பணயம் வைத்து…
ஆனால் இவர்களது தேச பக்தியைக் கேள்விக்கு உட்படுத்திய தேச பக்தர்களைக் காணோம் களத்தில்..!
source: https://www.facebook.com/gobinath.gobinath.315?fref=ts
இவர்களுக்காக என் உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்
சென்னையில் மீட்பு பணியில் இருக்கும் ஒரு நண்பரிடம் (அவர் முகநூலில் இல்லை) பேசிக்கொண்டு இருக்கும் போது அவர் சொன்ன தகவல்:
நாங்கள் ஐந்து பேர் வளசரவாக்கம் பகுதியில் உணவு விநியோகம் செய்து கொண்டு இருந்தோம். அப்போது இரண்டு வகையான ( வெஜ் – நான் வெஜ் ) உணவுகளை கொடுத்துக்கொண்டு இருந்தோம். அப்போது சில இந்து மத சகோதரர்கள் உணவுக்காக வந்தார்கள்.
அவர்களிடம் நாங்கள் வெஜ் உணவுகள் தீர்ந்து விட்டது. கொஞ்சம் பொறுங்கள் போய் எடுத்துக்கொண்டு வருகிறோம். என்று சொன்னோம். அப்போது அந்த சகோதர்கள் இப்போது இருப்பது என்ன உணவு என்று கேட்டார்கள். நாங்கள் பிரியாணி என்று சொன்னோம்….
அதனால் என்ன தாங்க என்று கேட்டார்கள்….
இல்லைங்க இது பீப் பிரியாணி . நீங்கள் விரும்ப மாட்டீர்கள். ஐந்து நிமிடம் பொறுங்கள் வெஜ் உணவு கொண்டு வந்து தருகிறோம் என்று சொன்னோம்…
அதற்க்கு அந்த நண்பர்கள் சொன்ன வார்த்தை தான் கண் கலங்க வைத்தது..
“நாங்க பீப் பிரியாணி சாப்பிட மாட்டோம் என்று யாருங்க சொன்னது. எவனோ அட்ரஸ் இல்லாத பன்னாடைகள் சொல்லுவதை கேட்டு எங்களை நீங்கள் இப்படி நினைத்து விட்டீர்களே. எங்களை மாட்டுக்கறி சாப்பிடாதே என்று சொன்னவனுகளை நாலு நாலா தேடிகிட்டு இருக்கிறோம். எவனுமே வரல. இப்போதான் எங்களுக்கு புரிகிறது யார் நண்பன் யார் எதிரி என்று. இந்த நிலைமையை எல்லாம் சரி ஆனா பிறகு நீங்கள் எங்க வீட்டுக்கு வாங்க பெரிய விருந்தே வைக்கிறோம் ” என்று சொன்னார்கள்….
இவர்களுக்காக என் உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்….
என்று கூறினார்.