எத்தனை விதமாக நாம்!
1. ஏதாவது ஒரு இஸ்லாமிய இயக்கம் சார்ந்தவர்.
2. எந்த இஸ்லாமிய இயக்கத்திலும் சாராதவர்.
3. ஏதாவது ஒரு இஸ்லாமிய இயக்கத்தை விரும்புபவர்.
4. அனைத்து இஸ்லாமிய இயக்கங்களையும் விரும்புபவர்.
5. அனைத்து இஸ்லாமிய இயக்கங்களையும் வெறுப்பவர்.
6. ஏதாவது ஒரு இஸ்லாமிய இயக்கத்தை கண்மூடித்தனமாக நேசிப்பவர்.
7. ஏதாவது ஒரு இஸ்லாமிய இயக்கத்தை கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்.
8. அறிவு ஜீவி என்ற முகமூடியுடன்(மமதை) எதையும் அலட்சியப்படுத்துபவர்.
9. யாவற்றிலும் குறை கூறி (கலகம்)சிண்டு முடிந்து மகிழ்பவர்.
10. அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கருத்துக்களையும் ஆராய்ந்து நல்லவற்றை ஏற்றுக்கொள்பவர்
எனப் பிரிந்து, ஏதாவது ஒன்றாகவோ பலவாகவோ அடையாளம் காணப்படுகிறோம்.
எனினும் நமது இலட்சியம் சுவர்க்கத்தில் நுழைவது தான்.
ஆனாலும் நாம் ஒன்றை சௌகர்யமாக மறந்து போகிறோம் அல்லது மறக்கடிக்கப்படுகிறோம்.
அது ”நாம் இங்கு வாழ்வது அங்கு வாழ்வதற்காக” என்பது.
நாம் மறுமையை நினைவு கூர்பவர்களென்றால்…
நமக்குள் ஒற்றுமை ஏற்படுவதை தடுக்கும் துணிச்சல் எவருக்கு ஏற்படும்?
சக சகோதரனின் குறைகளை மிகைப்படுத்தும் தைரியம் எவருக்கு ஏற்படும்?
இறைவனால் படைக்கப்பட்ட சக சகோதரனை மிருகங்களின் பெயராலும் இன்னபிற அருவருக்கத்தக்க சொற்களாலும் அழைக்கும் இறுமாப்பு எவருக்கு ஏற்படும்?
நமது உயிருனும் மேலாக நேசிக்கப்பட வேண்டிய ஒப்பற்ற ஒரே தலைவர்,
இறைவனால் கண்ணியப்படுத்தப்பட்ட இறுதித்தூதர்
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பட்டப்பெயர் சூட்டி அழைப்பதையும், உருவ அமைப்பை வைத்து அழைப்பதையும் அடையாளம் செய்வதையும் தடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்துமா இறுமாப்பு அடைகிறார்கள்…..?
மரணத்தையும் மறுமையையும் அஞ்சிக் கொள்வோம் சகோதரர்களே!!!
“Jazaakallaahu khairan” சமுதாய ஒற்றுமையை விரும்பும் சகோதரன், நாஞ்சில் தமிழ்.