தந்தி டிவி எந்த பாதையைத் தேர்ந்தெடுக்கும்?
பாண்டேவுக்கு என்ன கேள்வி என்ற ஒரு நிகழ்ச்சி தந்தி டிவியில் ஒளிபரப்பிய போது அதைப்பார்த்த அனைவருக்கும் ஒரு கேள்வி எழாமல் இல்லை. யார் இந்த பாண்டே? அரசியல் தலைவரா? தியாகியா? சமூக ஆர்வலரா? அல்லது போராளியா? எதற்காக இவ்வளவு மெனக்கெட்டு பாண்டேவுக்கு என்ன கேள்வி என்ற நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற கேள்வி அனைவருக்கும் எழாமல் இல்லை.
தொலைக்காட்சி விவாதம் என்றால் அதை முதலில் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்திய பெருமை சன்டிவியில் பணிபுரிந்த வீரபாண்டியன் அவர்களையே சேரும். நேருக்கு நேர் என்ற நிகழ்ச்சியின் மூலம் அவர் அனைத்து கொள்கை கொண்டவர்களையும் பேட்டி எடுத்திருக்கிறார்.
எந்த விதமான தயவு தாட்சன்யமும் இன்றி கேள்விகள் கேட்பார் குறிக்கீடுகள் செய்வார். தவறான கருத்துக்களை பதியவைக்க முடியாது. காவி பயங்கரவாதத்திற்கு அவர் எதிரானவராக இருந்தாலும் தமிழக காவித்தீவிரவாதிகள் பலரையும் பேட்டி கண்டுள்ளார். ஆனால் அது அவர்களின் கொள்கைக்கு பாதகமாகத்தான் அமைந்ததே தவிர அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை.
அடுத்து ரபி பெர்னாட். வீரபாண்டியன் போல இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு கேள்விகள் வைப்பார். ரபி பெர்னாட்டிடமும் காவி பயங்கரவாதம் வெல்லவில்லை. ஆக இத்தனை வருடங்கள் அரசியல்வாதிகள் மற்றும் இயக்கவாதிகளுடன் விவாதம் புரிந்து தங்களின் நடுநிலையைப் பறைசாற்றி வந்த இந்த தொகுப்பாளர்களுக்கென தனியாக வீரபாண்டியனுக்கு என்ன கேள்வி என்றும் ரபிபெர்னாட்டுக்கு என்ன கேள்வி என்று தனியாக நிகழ்ச்சிகள் வைக்கவே இல்லை.
காவிகளின் முதல் காய் நகர்த்துதலில் ஊடகத்திற்குள் கால் வைத்தவர் சுதாங்கன். காவிகள் வாய் அடைத்து போயிருந்த காலகட்டத்தில் சுதாங்கனை காவிகள் விலைக்கு வாங்கி காவி பயங்கரவாதிகளின் அடிமையாக மாற்றினர். ஆனால் காலம் சுதாங்கனுக்கு சரியான பாடம் கொடுத்தது. ராஜ் தொலைக்காட்சியில் வீராவேசம் பேசி வந்த சுதாங்கன் அதன்பிறகு இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போனார். வின்டிவியில் கொஞ்சநாள் குப்பை கொட்டி வந்த சுதாங்கனுக்கு மீண்டும் அம்மாவின் அருளாசி கிடைத்து இப்போது ஜெயா பிளஸ்ஸில் அடைக்கலம்.
அடுத்து வின் தொலைக்காட்சி. வின் டிவியில் குறிப்பிடத்தக்கவர்கள் சி.ஆர் பாஸ்கரன் மற்றும் டி.எஸ்.எஸ். மணி. பாஸ்கரன் நீதியின் குரல் மற்றும் நீதிக்காக என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார். டி.எஸ்.எஸ் மணி செய்திகளும் நிஜங்களும் என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார். எஸ்.எம். பாக்கர் வின் டிவியில் பங்குதாரராக இருந்தாதாலும் இஸ்லாமியர்களை அதிகமாக நண்பர்களாக கொண்டிருந்ததாலும் வின்டிவியின் வளர்ச்சிக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிகழ்ச்சிகள் முக்கியமான காரணம் என்பதாலும் இஸ்லாமியர்கள் மீதான துவேசத்தை வின் தொலைக்காட்சி வளர்க்கவில்லை.
சகோ.பீஜே பங்கேற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியின் நேரடி படபிடிப்பின் போது யாதவ சமுதாய மக்கள் கூட்டம் கூட்டமாக பார்வையாளராக கலந்து கொள்ள ஆர்வம் காட்டினார்கள். சொல்லப்போனால் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியின் மூலம் ஹிந்து முஸ்லிம் மக்களுக்கு இடையே இருந்த கசப்புகள் அடியோடு நீக்கப்பட்டன. ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒருதாய் மக்கள் என்று இனிய மார்க்கம் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பறைசாற்றியது. இதை உலகம் முழுவதும் எடுத்துச் சென்றதில் வின் தொலைக்காட்சிக்கும் ஒரு பங்கு உள்ளதை மறுக்க முடியாது.
இப்போது சி.ஆர் பாஸ்கரன் மக்கள் தொலைக்காட்சிக்கு மாறி விட்டார். டி.எஸ்.எஸ் மணி தந்தி டிவியில் அதே நிகழ்ச்சியை மெய்பொருள் காண்பது அறிவு என்ற பெயரில் செய்து வருகின்றார். இவர்கள் இவ்வளவு பேர்கள் இத்தனை நாட்களாக தொகுப்பாளர்களாக இருந்தும் இஸ்லாமிய சமூகத்திற்கு அவ்வளவாக பங்கம் வந்து விடவில்லை. ஆனால் உன்னைப் போல் ஒருவன் பாண்டே அவ்வளவு பேரின் சகாப்தத்தையும் உடைத்து விட்டார்.
இப்போது இங்கே இவ்வளவு நிகழ்வையும் சொல்லக் காரணம் ஒரு தொகுப்பாளரை நோக்கி ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகமும், நடுநிலைவாதிகளும் விரலை நீட்டி நீ ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி என்று சொல்வதற்கு காரணம் மண்டையை மறைத்தாலும் கொண்டையை மறைக்க முடியவில்லை என்பதுதான்.
ரங்கராஜ் பாண்டே பிறந்தது ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலும் அவரது பூர்வீகம் வடநாடு ஆகும். பாண்டே என்பது பிராமனர்களின் ஒரு பிரிவு . நேபாளம் தான் இவர்களின் பூர்வீகம். நேபாளில் இருந்து மும்பையில் குடியேறியதால் மும்பையும் இவர்களது பூர்வீகம் ஆனது. நம்ம ரங்கராஜ் பாண்டே கிராஸ் பிறப்புத்தமிழர் தான்! அண்ணன் சீமான் சொல்வது போன்ற திராவிடத் தமிழர் அல்ல!
சன் நியூஸ் மட்டுமே தமிழகத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த கால கட்டத்தில் அடுத்து வந்தது ராஜ் நியூஸ். அதன் பிறகு கலைஞர் செய்திகள் பின்னர் ஜெயா பிளஸ். ஆனால் இவை எதுவுமே சன் நியூஸ் சேனலை அடித்துக் கொள்ள முடியவே இல்லை.
2011 ஆகஸ்ட். பாரி வேந்தர் பச்சை முத்துவின் SRM குழுமத்திலிருந்து புயலாய் வந்திறங்கியது புதிய தலைமுறை. சாயம் இல்லாத நியாயம் என்ற ஸ்லோகனோடு களமிறங்கி முதல் இடத்தில் இருந்த சன் நியூஸைப் பிடித்து கீழே தள்ளி விட்டு அரியனையில் ஏறி அமர்ந்தது புதிய தலைமுறை.
இங்கே புதிய தலைமுறை குறித்து ஒரு செய்தியை பதிவு செய்தாக வேண்டும். புதிய தலைமுறையின் உரிமையாளர் பாரிவேந்தர் பச்சை முத்து பாஜக கூட்டணியில் இருந்தாலும் பாஜவை உயர்த்தி வைத்து பேசுவது கிடையாது. பாஜகவினர் மற்றும் காவி பயங்கரவாதிகளின் செயலைக் கண்டிப்பதிலே புதிய தலைமுறை சரியான பாதையில் பயணித்து வருகின்றது என்று சொல்லலாம்.
செய்தி சேனல்களின் தாக்கம் அதிகமாகி வருவதை அறிந்து தங்கள் இயக்கத்தின் கொள்கைகளை ஊதுவதற்கு ஒரு டிவி தேவை என்று சொல்லி அக்டோபர் 2012 ஆம் ஆண்டு கோவையில் இருந்து டவுசர்கள் லோட்டஸ் டிவி என்ற பெயரில் ஒரு சேனலை துவக்கினார்கள்.
2009 ஆம் ஆண்டு ஹிந்து குழுமத்தில் இருந்து ஒளிபரப்பாகி வந்த NDTV செய்திச் சேனலின் தமிழ்பிரிவாக NDTV HINDU என்ற பெயரில் ஒரு சேனல் துவக்கப்பட்டு தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திகள் ஒளிபரப்பாகி வந்தன. ஆனால் அது மக்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை என்பதால் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தினத்தந்தி பத்திரிகை இந்தச் சேனலை வாங்கி அதை தந்தி டிவி என்று மாற்றம் செய்கின்றார்கள். லோட்டஸ் டிவியும் தந்தி டிவியும் ஒரு மாத இடைவெளிக்குள் துவக்கப்பட்டவைகள் ஆகும்.
தந்தி டிவியும் லோட்டஸ் டிவியும் கலந்து கொண்ட பந்தயத்தில் தந்தி டிவி முன்னேறியது. லோட்டஸ் டிவி முழுக்க முழுக்க காவிச்சிந்தனை கொண்டது என்பதால் தமிழக மக்கள் அவர்களுக்கு மரண அடி கொடுத்தார்கள். உள்ளூர் கேபிள் டிவிக்களில் வின் டிவி, இமயம் டிவி, தமிழன் டிவி போன்ற சாதாரண தொலைக்காட்சிகளுக்கு கூட சேனல் ஒதுக்கும் கேபிள் ஆப்பரேட்டர்கள் லோட்டஸ் டிவிக்கு எந்த ஊர்களிலும் சேனல் ஒதுக்காதது காவி பயங்கரவாதத்தின் தோல்விக்கு விழுந்த முதல் அடியாகும்
லோட்டஸ் டிவி படுத்துக் கொண்டதால் RSS ல் பயிற்றுவிக்கப்பட்ட பாண்டேவை வைத்து காவி பயங்கரவாத இயக்கம் தங்களின் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்ய தந்தி டிவியை ஒரு களமாக பயன்படுத்திக் கொள்கிறது. இது காவி பயங்கரவாதக் கொள்கைக்கு வெற்றி போலத் தெரிந்தாலும் தந்தி டிவியின் ரேட்டிங் மக்களிடையே இறங்குமுகமாக வருவதற்கு நல்ல உதாரணமாக இருக்கிறது.
TRP ரேட்டிங் 2015 ன் படி முதல் இடத்தை விஜய் டிவியும், இரண்டாவது இடத்தை சன் டிவியும் பிடித்துள்ளன. நியூஸ் சேனல் டிஆர்பியில் புதிய தலைமுறை முதல் இடத்தையும் தந்திடிவி இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளன. ஆனால் தற்போது தந்தி டிவியின் பார்வையாளர்கள் எண்ணிக்கை கனிசமாக குறைந்து வருகின்றது. மூன்றாவது இடத்தில் சன் நியூஸ் மற்றும் நியூஸ் 7 தமிழ் சேனல்கள் போட்டி போட்டு நிற்கின்றன. தந்தி டிவியை நடுநிலையாளர்கள் விமர்சிக்கத் துவங்கி விட்டதால் தந்தி டிவியின் ரேட்டிங் கீழே வந்து கொண்டிருக்கிறது. விரைவில் சன் நியூஸ் 2 வது இடத்தை பிடித்து விடும் என்று ரேட்டிங் கணிக்கப்பட்டுள்ளது.
சரி! தந்தி டிவியின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்? ஒரே ஒரு காரணம் தான் அது பாண்டே என்னும் RSS பயங்கரவாதி. டி.எஸ்.எஸ் மணியின் மெய்ப்பொருள் காண்பது அறிவு நிகழ்ச்சி படு சுவாரஸ்யமாக போய்க்கொண்டிருந்த வேலையில் அதற்குள்ளும் தன் காவி முகத்தை நுழைத்து மணியை பேசவிடாமல் ஆக்கி நிபந்தனைகள் விதித்து நடுநிலையாளராக இருந்த மணியை காவிகளுக்கு ஆதரவாக பேச வைத்தது மெய் பொருள் நிகழ்ச்சியை நடுநிலையாளர்களிடம் இருந்து பிரித்தது பாண்டேவின் கைங்கர்யம்.
மக்கள் தொலைக்காட்சியில் வெள்ளை வேட்டியைக் கட்டிக் கொண்டு சந்தை என்ற நிகழ்ச்சியில் பழைய சாமான்களை கூவிக்கூவி விற்றுக் கொண்டிருந்த சில்வண்டு ஹரிஹரனை பிடித்து ஆய்த எழுத்து நிகழ்ச்சியில் அமர வைத்தது பாண்டேவின் கைங்கர்யம். அரசியல் அரிச்சுவடி கூட தெரியாத ஹரிஹரன் ஏதோ தன்னை அம்பேத்காரின் கிளாஸ்மெண்ட் போல தனக்குத்தான் எல்லாம் தெரியும் என நினைத்துக் கொண்டு வாதிட வந்த விருந்தினர்களை கொஞ்சமும் மதிக்காமல் அவர்களை அதட்டி மிரட்டி தன் கருத்தை புகுத்தி மெச்சூர் இல்லாமல் நடந்து கொள்வதும் பார்வையாளர்களை முகம் சுழிக்க வைப்பதும், விவாதத்தில் கலந்து கொள்ளும் காவி பயங்கரவாதிகளுக்கு தடவிக் கொடுப்பதும் ஹரிஹரன் பொம்மையை இயக்கும் காவி பயங்கரவாதி பாண்டேவின் கைங்கர்யம்.
சன்டிவியில் இருந்து துரத்தப்பட்ட மாலன், பொதிகை தொலைக்காட்சியில் சனிக்கிழமை இரவு BSNL ஸ்போர்ட்ஸ் குவிஸ் நடத்தி வரும் ராமன், கண்ணம்மாபேட்டையில் டெட் பாடி தூக்கிக் கொண்டிருந்த கேடி ராகவன், நாய் பிடித்துக் கொண்டிருந்த நாராயணன், கார்ப்பரேசன் கக்கூஸ் சுவற்றின் உள்புறத்தில் RSS வாழ்க, துலுக்கன் ஒழிக என்று எழுதி விட்டு பயத்தில் கழுவாமல் கூட ஓட்டம் எடுத்து ஓடிய கல்யாண ராமன் இவன்களையெல்லாம் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு கேட்டகிரியில் அதாவது சமூக ஆர்வலர், பத்திரிகையாளர் வழக்கறிஞர் என்று போட்டு அவர்களை விவாத புலிகளாக மாற்றுவதற்கு ஒன்றும் தெரியாத ஒன்றுக்கும் உதவாத இஸ்லாமிய லட்டர்பேடு அமைப்புகளில் உள்ளவர்களை இவர்களுடன் மோதவிட்டு காவி பயங்கரவாதிகளின் தரப்பை உயர்த்தும் ஈனத்தனமான வேலையை பாண்டே செய்தததின் மூலம் தந்தி டிவி நடுநிலை மக்களை தூரப்படுத்தி விட்டது.
ஆக தந்தி டிவி தமிழகத்தில் நடுநிலை மக்கள் இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகள் ஆகியோரின் அபிமானத்தை மீண்டும் பெற வேண்டுமானால் காவி பயங்கரவாதி பாண்டேவைத் தூக்கி வெளியே எறிந்தால் மட்டும் தான் அது முடியும். காவி பயங்கரவாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் வேரூண்டச் செய்து விடலாம் என பாண்டே நினைத்தால் லோட்டஸ் டிவிக்கு விழுந்த மரண அடி தந்தி டிவிக்கும் விழும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அது சரி! பாண்டே 2012 ஆண்டுக்கு முன்பு வரை என்ன செய்து கொண்டிருந்தார் என்று யாருக்காவது தெரியுமா? RSS ல் துப்பாக்கியுடன் பயிற்சி எடுக்கும் புகைப்படத்தில் உள்ளது நான் இல்லை என்றாரே! ஆனால் அது அவர்தான் என்பதற்கு பெரிய ஆதாரம் என்ன தெரியுமா? RSS பாண்டே தந்தி டிவிக்கு வருவதற்கு முன்பு வேலை பார்த்தது தினமலர் சென்னை அலுவலகத்தில். தினமலர் சென்னை பதிப்பில் வருமே #டவுட் தனபாலு அதை இன்று வரை எழுதிக் கொண்டு வருபவர் சாட்சாத் நம்ம பாண்டே சார் தான்.
பார்க்க வெள்ளையாக இருக்கிறது. வாயில் போட்டுப் பார்த்தால் இனிக்கிறது ஆனால் அதன் பெயர் சர்க்கரை (சீனி) இல்லை என்றால் எப்படி முட்டாள் தனமோ, அதேபோல சாகாவில் பயிற்சி எடுத்தார், துப்பாக்கியுடன் போஸ் கொடுத்தார் தினமலரில் வேலை பார்த்தார் காவி பயங்கரவாதிகள் அனைவருக்கும் பூங்கொத்து கொடுத்தார் ஆனால் நான் அவன் இல்லை என்று வெளியே சொல்லிக் கொள்கிறார். பாண்டே இது நியாயமா?
அக்லாக் விவகாரத்தில் பாண்டே அவர்கள் கதையை மாற்றி பூமுடித்த போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில நிர்வாகி செய்யது இப்ராஹீமின் வீடியோ ஏற்படுத்திய தாக்கம் தான் பாண்டேவுக்கு என்ன கேள்வி என்ற நிகழ்ச்சி வரவே காரணமாக அமைந்தது. தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சார யுக்தியில் ஒரு கடுகளவு தான் வெளிவந்துள்ளது.
ஒரு சிறிய வீடியோவைப் போட்டவுடனேயே பதறித்துடித்து பாண்டேவுக்கு என்ன கேள்வி என்று கேட்டு தன்னை நல்லவர் என்று காட்ட முனைந்த பாண்டேவை அதன்பிறகு சகோ.செய்யது இப்ராஹீம் கிழி கிழி என கிழித்து விட்டார். இன்னும் பாண்டே தன்னை திருத்திக் கொள்ளாவிட்டால் காவி பயங்கரவாதத்தை தமிழகத்திற்குள் பரப்பலாம் என்று நினைத்தால் அதற்கான எதிர்ப்புகள் கடுமையாக இருப்பதோடு தந்தி டிவி இமயம், வின், தமிழன் டிவிக்களோடு போட்டி போட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விடும். தந்தி டிவி தன்னை திருத்திக் கொள்ளும் என நடுநிலையாளர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். எந்த பாதையை தேர்ந்தெடுக்கும் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
-முகநூல்