பாலியலால் பரவும் நோய்கள் (SEXUALLY TRANSMITTED DISEASES)
AIDS என்றால் என்ன?
AIDS என்பது Acquired Immune Deficiency Syndrome அதாவது தேடிக் கொண்ட நோய் எதிர்ப்புக் குறைபாட்டு நோய்த் தொகுதி சுருக்கமாக (தே.நோ.கு.தொ) எனலாம்.
தே.நோ.கு.தொ HIV என்கின்ற வைரசால் ஏற்படுகிறது. HIV என்பது Human Immuno deficiency Virus. அதாவது மானிட இன நோய் எதிர்ப்புக் குறைப்பாட்டு வைரஸ் ஆகும். சுருக்கமாகக் குறிப்பிட்டால் மா.நோ.வை. எனலாம். எல்லோரும் அறிந்தது HIV என்பதே.
HIV வைரஸ் என்பது நோய் எதிர்ப்பு ஏற்பாட்டுக் கலங்களோடு போரிட்டு வென்று விடுகிறது. ஒருமுறை இந்த வைரஸ் எமது நோய் எதிர்ப்புக் கலங்களை வென்று உடலுக்குள் புகுந்துவிட்டால் AIDS வியாதி உடலில் விருத்தியடைய 8 முதல் 10 வருடங்கள் வரை எடுக்கும்.
HIV இருக்கிறதா என்று பரிசோதித்து பார்க்காவிட்டால் இருப்பதே தெரியாது. மற்றவர்களுக்கும் அப்படியே. 8-10 வருடங்களில் இந்த வைரஸ் பரவும்.
உங்கள் நோய் எதிர்ப்பு ஏற்பாட்டை HIV வெற்றி கொண்டுவிடுமாயின் சாதாரணமாக உங்களைப் பீடிக்காமல் தடுக்கும் ஏற்பாடு தகர்க்கப்பட்டுவிடும். அதன் பின் மரணம் சம்பவிக்கும்.
AIDS ஆபத்தானது. மரணத்தில் தான் முடியும். இதுநாள்வரை இந்நோயைக் குணப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்படவில்லை.
HIV எப்படி வருகிறது?
HIV பீடிக்கப்பட்டவரிடமிருந்து பீடிக்கப்படாதவருக்கு உடல் திரவங்கள் ஊடாக அதாவது குறிப்பாக பாதகத்துக்குள்ளான குருதி அல்லது பாதகத்துக்குள்ளான விந்து வழியாகப் பரவுகிறது.
குருதி பாதிக்கப்பட்டவரிடமிருந்து பாதிக்கப்படாதவருக்கு பரவுவது இரு முறைகளில் ஆகும். ஒன்று குருதி வழங்குவதன் மூலமும் அல்லது பிணியாளருக்கு மருந்து செலுத்திய ஊசியைக் கொண்டு மற்றுமொரு பாதிக்கப்படாதவருக்குச் மருந்து செலுத்தும் போதும் ஆகும்.
குருதி வழங்கும் போது வழங்குபவரின் குருதியில் HIV இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளல் வேண்டும். மருந்து செலுத்தும் போது ஏற்றும் குழாயில் புதியதோர் ஊசி உங்கள் முன்பாகப் புகுத்தப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வெறொரு விதமாகவும் குருதி மூலம் HIV பரவுகிறது. வெளிப்புறக் காயங்களின் மூலம் பாதிக்கப்பட்டவரின் குருதி பாதிக்கப்படாதவருக்கும் பரவும்.
பாலியல் உறவு மூலம் பாதிக்கப்பட்டவரின் விந்து பாதிக்கப்படாதவருக்கு பரவும்.
இதுதான் HIV பரவும் இருவழி. வைரஸ் உடையத்தக்கது. உடலுக்கு வெளியே இந்த வைரசு நீண்ட நேரம் உயிர்வாழாது. அதனால் கழிவிடங்கள், கட்டியணைத்தல், முத்தமிடல், கைகளைத் தழுவுதல் மூலம் நோயால் பீடிக்கப்பட்டவரிடமிருந்து பாதிக்கப்படாதவருக்கு நோய் பரவாது. நீச்சல் குளங்களில் நுளம்பு கடிப்பதாலும் பரவிவிடாது.
உடல் திரவங்கள் என்றால் என்ன?
உடல் திரவங்கள் என்று குறிப்பிடப்படுபவை குருதி, விந்து, யோனிக்கசிவுகள், எச்சில் ஆகும்.
அப்படியென்றால் குருதி, விந்து ஆகிய இரண்டு மட்டும் ஏன் குறிப்பிடப்படுகின்றன?
இரத்த வழங்கலின் போது, பயன்படுத்தப்பட்ட மருந்து செலுத்தும் ஊசிகளால் தோலுக்கூடாக HIV குருதியினூடாக மற்றவரின் உடலினுள் புகுகிறது. இது உடலின் மேற்பகுதியில் தங்கி இருப்பதில்லை. பாலியல் உறவின் போது உறுப்பு உள்நுழைவு காரணமாக சிறு சிறு காயங்கள் ஏற்படுவதனால் HIV உள்ள விந்து தோல் ஊடாக உடல் எங்கும் பரவுகிறது.
பிறெஞ்சு முத்தத்தாலும் HIV புகுவதற்கு ஓரளவு இடமுண்டு. பாதிக்கப்படாதவரின் வாயில் இருக்கும் காயங்களில் பாதிக்கப்பட்டவரின் எச்சில் ஊடாக HIV பரவக்கூடும். ஆனால் ஆச்சரியம் என்வென்றால் HIV மக்கள் நினைப்பது போல மற்றவருக்குப் பரவிவிடாது. காயங்கள் எதனையும் சந்திக்காது வயிற்றை அடையும் எச்சில் வயிற்றிலுள்ள பலமான அமிலங்களால் சமிபாடு அடைந்து விடுகிறது.
பாலியல் உறவு கொள்ளும் போது சின்னஞ்சிறிய வெட்டோ காயமோ ஏற்பட்டு இருக்கின்றதோ என்பது தெரியாதிருக்கும். ஆகவே ஓரளவு கவனமாய் இருப்பது நல்லது .
AIDS என்பது ஓரினச் சேர்க்கை நோய் எனப்படுவது ஏன்?
இத்தகைய கருத்து வெளிவந்ததற்குக் காரணம் ஆரம்பத்தில் AIDS நோயாளராக அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களே. பாலியல் உறவால் ஒருவரிடமிருந்து பலருக்குப் பரவக்கூடும். இதன் விளைவாக ஆண்கள் கூடுதலான கவனத்துடன் நடக்கத் தொடங்கி ஆண் கருத்தடை உறைகளைப் பயன்படுத்துவதோடு HIV பற்றிய அறிவையும் மற்றவர்களுக்குப் புகட்ட ஆரம்பித்து விட்டனர்.
AIDS என்பது வேறொருவரின் பிரச்சினைதான் என்று நினைப்பது முட்டாள்தனம். தற்காலத்தில் பெருமளவில் AIDS நோயால் பீடிக்கப்படுபவர்கள் ஆண் பெண் பாலியல் உறவினாலேயே ஆகும். குறிப்பாக பலருடன் பாலியல் உறவு கொள்ளும் போது ஏதோ ஒருவர் HIV உடையவராயின் இந்நோய் பரவும். அடுத்தபடியாக AIDS நோயாளருக்குப் பயன்படுத்திய மருந்து செலுத்தும் ஊசியையே நோயால் பீடிக்கப்படாதவருக்கும் உபயோகிப்பதால் ஏற்படும்.
கருத்தடை உறை (Condom) என்றால் என்ன?
(கருத்தடை உறை பாலியல் உறவு கொள்ளும் போது ஆணின் பாலியல் உறுப்பு மீது அணியும் றப்பர் உறை)
உறைகளில் உள்ள இடைவெளியில் வெளிப்படும் மேலதிக விந்து தேங்கி விடுவதால் நோயற்றவரின் பாலியல் உறுப்பிலுள்ள காயங்களில் பட்டு உடலில் பரவுவது தவிர்க்கப்படுகிறது. உடல் திரவங்களாலான குருதி ஊடாகப் பரவும் வாய்ப்பை இழக்கிறது.
கருத்தடை உறை கருத்தரிப்பதையும் தடுக்கிறது. இதனால் ஆணின் விந்து பெண்ணின் முட்டையைச் சந்தித்து உறவு கொள்ளும் வாய்ப்பு தடுக்கப்படுகிறது.
கருத்தடை உறைகள் ஒருமுறைதான் பயன்படுத்தப்படுகிறது. பாலியல் உறவுக்குப் பின் சேர்ந்த விந்துக்களுடன் வீசி எறியப்படுகிறது.
தற்காலத்தில் பெண்கள் அணியக்கூடிய கருத்தடையும் வெளிவந்துவிட்டது. யோனித்துவாரத்தின் மிக அடிப்பகுதியில் வளையம் ஒன்றால் முனை பிடிக்கப்படுகிறது. பூப்பு என்புக்கு முன் தொடங்கி கருப்பைக் கழுத்துப் பகுதி வரை செல்கிறது. இதன் நோக்கம் ஆணின் கருத்தடை உறையை மட்டும் நம்பியிராமல் பெண் தனது சொந்தப் பாதுகாப்பு நிமித்தம் பயன்படுத்துவது. ஆண் கருத்தடை உறையைப் பயன்படுத்த விரும்பாவிட்டாலும் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.
பாலியல் உறவினால் HIV பரவுவதைத் தடுக்கவுள்ள ஒரே வழி கருத்தடை உறையைப் பயன்படுத்துவது.
பாலியல் உறவு மூலம் பரவி குணப்படுத்த முடியாத நோய் வேறெதும் உள்ளதா?
ஆம். ஹேப்ஸ். இந்நோயினால் மரணம் சம்பவிக்காது. வாழ்நாள் முழுவதும் உடனிருந்து அவ்வப்போது வேதனைதந்து கொண்டிருக்கும்.
ஹேப்ஸ் (Herpes) என்றால் என்ன?
ஹேப்ஸ் ஒரு வைரஸ். இது உடலிற்குள் இருக்கும். அடிக்கடி வாயிலும் பாலியல் உறவு கொள்ளும் பகுதியிலும் குதத்திலும் தொப்புளங்களாகவும் புண்களாகவும் தலை காட்டும். எப்பொழுதும் ஒரே இடத்தில் தான் இந்தத் தொப்புளங்களும் புண்களும் காணப்படும். இவை கடும் வேதனை தருவன. ஏனெனில் உணர்வு நரம்புகளில் வீக்கம் தோன்றும். உளைச்சல் படும் போது ஹேப்ஸ் புண்கள் தோன்றுகின்றன.
நோவைத் தணிக்கக்கூடிய சில கழிம்புகள் உள்ளன. ஆனால் அவற்றால் முற்றாகக் குணப்படுத்த முடியாது. நோயையும் ஒழித்துவிட முடியாது. எந்த நேரத்திலும் மீண்டும் வரும்.
இதனை தவிர்த்துக் கொள்ளவுள்ள ஒரே வழி ஹேப்ஸ் நோயால் பீடிக்கப்பட்டவரோடு எவ்வித பாலுறவும் வைக்காமல் இருப்பதே. ஹேப்ஸ் புண்கள் ஆறும் வரையாவது தவிர்ப்பது நல்லது.
எது சாதாரணமான பாலியல் உறவால் பரவும் நோய்?
சிஸ்ரிரிஸ் (Cystitis)
சிஸ்ரிரிஸ் என்பது சிறுநீரைச் சேகரித்து வைக்கும் மென் சவ்வினாலான பையில் ஏற்படும் வீக்கம் ஆகும். பெரும்பாலும் இது பெண்களுக்கு ஏற்படுகிறது. இதனை தேனிலவு நோய்த் தொகுதி என்றும் அழைப்பர். ஏனெனில் பெண்கள் முதன் முறையாகப் பாலுறவு கொள்ளும் போதுதான் ஏற்படுகிறது. பாலியல் உறவால் பரவும் நோய்களில் மிகவும் குறைந்த வீரியமுடையது என்று தெரிந்து கொள்ளாவிட்டால் பெண்கள் ஓரளவு பயந்து விடுவார்கள்.
சிஸ்ரிரிஸ் ஆண்களோடு பாலுறவு கொள்வதால் மட்டும் பரவுவதில்லை. கருத்தடை உறை அணிந்து பாலுறவு கொண்டாலும் கூட ஏற்படுகிறது. உண்மையில் நடப்பது இதுதான். பெண்ணின் வெளிப்புற பிறப்புறுப்பிலிருக்கும் பக்hPறியா பாலியல் உறவின்போது ஆண்குறியின் அசைவுகளினால் சிறுநீர் சேகரிக்கப்படும் பையை அடைகிறது.
இந்நோயின் அறிகுறி பலமுறை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். இது வயிற்றில் அதிக நோவைத் தருகிறது. நோயை உணரும் நரம்புகள் பெண்ணின் பிறப்புறுப்புக் கருகில் இருப்பதனால் பாலியல் உறவின் போது ஏற்படும் உராய்வை ஒத்து இருக்கிறது. ஓரிரு நாட்களுக்குப் பிறகு சிறுநீரில் குருதியின் அடையாளம் தென்படுகிறது.
பெண்ணிற்கு சிஸ்ரிரிஸ் அடிக்கடி ஏற்பட்டால் ஆணின் சிறுநீரில் பக்hPறியா உள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும். அவன் மீண்டும் நோய் பரவ வழி வகுப்பான். வேறொரு ஆலோசனை என்னவென்றால் பாலியல் உறவுமுடிந்தவுடன் சிறுநீர் கழியுங்கள். அல்லது சிறுநீரின் அமிலத்தன்மை அதிகரிக்கும் விதத்தில் பழச் சாற்றைப் பருகுங்கள்.
பாலியல் உறவால் பரவக்கூடியதும் குணப்படுத்தக்கூடியதுமான பயங்கரமான நோய் எது?
ரிறைகோமோனியாசிஸ், கண்டியாசிஸ், கிளாமீடியா, கொன்ஹோறியா, சிபிலிஸ் ஆகியவை இப்பட்டியலில் அடங்கும்.
இவை நுண்ணுயிர்க் கொல்லிகளால் குணமாக்கலாம். சில மாத்திரைகளை யோனி முகிழிற்குள் புகுத்திவைப்பதால் சுகப்படுத்தலாம். இந்நோயின் புதிய தோற்றங்கள் நடைமுறையிலுள்ள நுண்ணுயிர்க் கொல்லிக்குக் கட்டுப்படாது. மேலும் வீரியம் கூடிய நுண்ணுயிர்க் கொல்லியே தேவைப்படுகிறது.
ரிறைகோ மோனியாசிஸ் (Trichomoniasis) என்றால் என்ன?
யோனி முகிழிலிருந்து துர்நாற்றம் வீசும் மஞ்சள் கலந்த வெண்ணிற கழிவுப் பொருள் கசிவடைகிறது. ஆணின் ஆண்குறி வீங்கி இருக்கும். அல்லது பெண்ணின் யோனிப் பகுதியில் சொறிவும் வீக்கமும் காணப்படும்.
கண்டிடியாசிஸ் (Candidiasis) என்றால் என்ன?
இந்நோயின் அறிகுறி யோனி முகிழிலிருந்து தடிப்பான வெள்ளை நிறக் கழிவு கசிகிறது. யோனிப் பிரதேசத்தில் சொறியும் உணர்ச்சி தோன்றுகிறது. இது பொதுவாகக் காணப்படும் நோய். இதனை சாதாரணமாகக் குணப்படுத்தலாம். பெண்ணிற்கு மட்டும் ஏற்பட்டாலும் கூட ஆண் பெண் இருவரையும் வைத்திய சிகிச்சைக்குட்படுத்தல் வேண்டும்.
கிளமீடியா (Chlamydia) நோய் இருக்கிறது என்று எப்படி அறியலாம்?
இந்நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத போதிலும் ஆண்களுக்கு சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்ச்சி தென்படும்.
பெண்களைப் பொறுத்தவரை இந்நோயால் பெரிய ஆபத்து யாதெனில் இடுப்பு வீக்கநோய் ஏற்பட சூலகங்களிலிருந்து கருப்பைக்கு கரு முட்டைகளை எடுத்துவரும் குழாய்கள் அடைபடுகிறது. இதனால் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது. அதோடு கருப்பைக்கு வெளியே கருவுண்டாகிறது.
கருவில் வளரும் குழந்தை கருப்பைக்கு சூலகங்களிலிருந்து வரும் முட்டை எடுத்துவரும் குழாயில் (குயடடழியைn வரடிநள) நாட்டப்பட்டு வளர்கிறது. அதாவது கருப்பையிலிருந்து வெகுதூரத்தில் வளருகிறது. இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டால் அவசரமாகச் சத்திரசிகிச்சை செய்யப்படல் வேண்டும். இல்லையேல் குழாய்க்குள் குழந்தை வளர்ந்து வந்தால் குழாய் வெடித்துப் போக ஏதுவாகும்.
கிளமீடியா இருப்பதாகச் சந்தேகம் எழுந்தால் பாலியல் உறவு கொண்ட ஆண் – பெண் உடன் வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்தப்படவேண்டும்.
கொன்ஹொறியா (Gonhorrea) நோயின் அறிகுறிகள் என்ன?
இதுவும் கிளாமீடியா போன்றதே. கிளாமீடியாவால் வரும் ஆபத்துக்களே இந்நோயினாலும் ஏற்படுகிறது. ஆனால் இதனால் தொண்டை வலியும் வயிற்றோட்டமும் ஏற்படுகிறது.
இதனாலும் இடுப்பென்புப் பகுதியில் வீக்கநோய் ஏற்படுகிறது. ஆண்களுக்கு புறஸ்ரேட் சுரப்பியில் நோய் தொற்றிப் பரவுகிறது. இருவருக்கும் மூட்டுகள், தோல், குருதியோட்டம் ஆகியவற்றில் பரவுகிறது.
சிபிலிஸ் (Syphilis) நோயின் அறிகுறிகள் என்ன?
இது இருப்பதன் அறிகுறி ஆண்குறியின் மீது நோவற்ற வடு காணப்படும். இது போலவே பெண்ணின் யோனி முகிழ்வாயிலும் அல்லது குதவாசலிலும் காணப்படும்.
இந்த நிலையில் நோயைக் குணப்படுத்தாவிட்டால் தோலில் கொப்பிளங்கள் தோன்றும், அதோடு நோயாளர் பார்வை இழப்பார். இந்த நிலைக்குப் பிறகும் நோயைக் குணப்படுத்த முயலாவிட்டால் இதயமும் மூளையும் பாதிப்புக்குள்ளாகும். இதன் விளைவாக மரணமும் சம்பவிக்கும்.
சிபிலிஸால் பீடிக்கப்பட்ட பெண்ணிற்கு பிறக்கின்ற குழந்தையும் கூட சிபிலிஸ் உடன் தான் பிறக்கும். பார்வை குன்றியும், சித்தம் பேதலித்தும், உடல் ஊனமுற்றும் இருக்கும்.
சிபிலிஸ் நோய்க்கு இலக்கானால் பாலியல் உறவுகொண்ட இருவரையும் பரிசோதனைக்குட்படுத்தி வைத்திய சிகிச்சை செய்தல் வேண்டும்.
பாலியல் உறவால் ஏற்பட்ட குணப்படுத்த முடியாத வேறேதும் நோய் இருக்கிறதா?
ஆம். செங்கமாரி – மங்கமாரி (Hepatitis B) இதற்கான தடுப்பூசி இருக்கிறது தான். இந்நோய் ஓய்வாய் இருப்பதாலும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதாலும் சாதாரண செங்கமாரி நோயைப் போலவே குணப்படுத்தலாம். ஆனால் இந்நோய் உங்களைப் பலவீனமாக்கி, ஈரலையும் சிதைவுக்குள்ளாக்கி விடும்.
செங்கமாரி மங்கமாரி (Hepatitis B) என்னால் என்ன?
இந்நோயின் அறிகுறிகள் இருமல், தொண்டைப்புண், மூட்டு வலி என்பனவாகும். அதோடு செங்கமாரி அறிகுறிகளான கடும் அலுப்பும் உணவில் விருப்பு இன்மையும் ஆகும். காமாலை நோயின் அறிகுறிகளான தோலின் நிறம் மஞ்சள் ஆவதும் கண்கள் வெளிறி இருப்பதும் சிறுநீர் கடும் கபில நிறமாயும், மலம் வெண்களிமண் உருவிலும் தோன்றும்.
செங்கமாரி – மங்கமாரி நோய் HIV போல மாசுபட்ட குருதியாலும் மாசுபடர்ந்த மருந்து செலுத்தும் ஊசியாலும் பரவக்கூடியது. HIV யை விட தொற்றில் பரவுவதில் தீவிரமானது.
source: http://santhan.in/index.php/adult654/adult659