நான்தான்! நான்தான்!!
மனித குலத்திற்கு எக்காலத்திற்கும் ஏற்றவகையில் பல நல்ல ஒழுக்க நெறியினை இறைவன் தம் அருள் மறையின் மூலமாகவும், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வாழ்க்கை முறைகளின் வாயிலாகவும் வகுத்துத் தந்துள்ளான். மனிதனுக்கு மட்டுமே சிந்திக்க கூடிய ஆற்றலையும் தந்திருக்கிறான். அத்தகைய நன்னெறிகளை, பிறர் இல்லம் செல்லும் பொழுது பேண வேண்டிய வழிமுறையினை, ஒழுக்கத்தினை காண்போம்.
சாதாரணமாக பிறர் இல்லத்தினுள் செல்லும் போது சிலர் ”சர சர” வென்று, தமது வருகையினை அறிவிப்புச் செய்யாது நுழைந்து விட்டு பின்பு வருத்தபடுவதுண்டு.
வீட்டின் உரிமையாளர்களும் ”என்ன இது கொஞ்சம் கூட நாகரீகம் தெரியாதர்வர்களாய் இருக்கிறார்களே” என வெளியே வாய்விட்டு சொல்லாவிட்டாலும், மனதிலாவது நினைத்துக் கொள்வார்கள். இத்தகைய பழக்கத்தை இஸ்லாம் அன்றே கண்டித்துள்ளது.
ஒரு முறை அண்ணலார் அவர்கள் (தமது) இல்லத்தில் இருக்கும் பொழுது அமீர் உடைய சந்ததியாலரில் ஒருவர் வந்து, உள்ளே வர அனுமதி கோரி, ”நான் உள்ளே வரட்டுமா? என்று கேட்டார். அதற்கு அவர்கள் தம் பணியாளரிடம், ”அவரிடம் சென்று அனுமதி பெரும் முறையை அவருக்குக் கற்றுக் கொடுத்து (அதாவது முதலில்) ”அஸ்ஸலாமு அழைக்கும்” என்று கூறுமாறும், பின்னர், தான் உள்ளே வர அனுமதி உண்டா” என்று கேட்குமாறும் அவரிடம் கூறும்” என்றனர்.
இதனைக் கேள்வியுற்ற அவர், ”அஸ்ஸலாமு அழைக்கும், நான் உள்ளே வர அனுமதி உண்டா?” என்று வினவினார். (அது கேட்ட) அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருக்கு அனுமதி வழங்கினார். பின்னர் அவர் உள்ளே வந்தார். இது தான் இஸ்லாம் காட்டிய உயர் பணிவு!
நமது வீட்டினர் செல்வதேயாயினும் சலாம் சொல்லி விட்டுத்தான் நுழைய வேண்டும் என மார்க்கம் கூறுகிறது . யாரும் இல்லாத வீட்டில் சலாம் சொல்வது என்றால், ”அலைனா வஅலா இபாதில்லா ஹிஸ் சாலிஹீன்” என்று சொல்ல வேண்டும் இவாறு சொன்னால் பேய் பிசாசுகளின் தொல்லையை விட்டுப் பாதுகாப்பக் கிடைக்கும் .
கதவை தட்டும் பொழுது வீட்டினுள் இருப்பவர் ”யார்?” என்று கேட்டால், ”நான்தான்- நான்தான்” என்று சொல்வதை கேட்டிருப்பாய்! ஏன் பெயரினை சொன்னால் என்னவாம்? இப்படியொரு பழக்கம். இது தொடர்ப்பான ஒரு சம்பவத்தை சொல்கிறேன் கேளுங்கள்! ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள்; ”நான் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இல்லம் சென்று கதவைத் தட்டினேன். அப்பொழுது அவர்கள் ”யார் அது?” என வினவினார். ”நான்தான்” என்றேன் உடனே அவர்கள் ”நான்தான்” (என்றால் என்ன பொருள்) என்று கூறிக் கொண்டு வெளியில் வந்தனர். கதவைத் தட்டும் பொழுதே, பெயரையும் சொல்லி அழைப்பது எத்தனை ஏற்புடையது என்று பார்த்தாயா?
சிலருக்கு ஒரு பழக்கம் ஜன்னல் வழியே எட்டிப் பார்ப்பது, வீட்டில் உள்ளவர்கள் கதவைத் திறப்பதற்கு சற்றே தாமதம் ஆனா போதிலும் சாவி துவாரம் வழியாக பார்ப்பது, பட படவென்று கதவை மீண்டும் தட்டுவது- இப்படியாக நசாயில் மற்றொரு அறிவிப்பில் ஒரு சுவையான சம்பவம…
ஒரு காட்டரபி அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாயிலருகே வந்து கதவிடுக்கின் வழியாகப் கண்ணை வைத்துப் பார்க்கத் துவங்கினார். இதனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டு கொண்டனர். உடனே காய்ந்த ஒரு பேரீச்ச மராத்தி கிளையையோ அல்லது வேறு எதோ ஒரு குச்சியையோ எடுத்து அவருடைய கண்ணுக்கு நேராகக் குத்தும் பொருட்டுச் சென்றனர். இதற்குள் அவர் நகர்ந்து விட்டார். அப்பொழுது அண்ணலார் அவரிடம், நீர் (அதே இடத்தில்) இருந்திருப்பின், உமது கண்ணைக் குத்தியிருப்பேன் என்று சொன்னார்.
இன்னும் சிலரிடம் இது போன்ற அநாகரீகமான பழக்கம் இருந்து தான் வருகிறது. ”கஸ்து” என்சற அமலில், நம் சகோதரர்கள் அழைக்கச் செல்லும்போது, அவர்கள் வீட்டின் முன்பாக தலையைத் தாழ்த்தி வாசல் ஓரமாக நின்று அழைக்க வேண்டும் என்ற உயர்ந்த பண்பினை இஸ்லாம் நமக்கு சொல்லி தருகிறது.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவர் வந்த போதிலும், அவ்வீட்டின் தலை வாயிலுக்கு நேராக வந்து நிற்க மாட்டார்கள். அதன் வலது பக்கம் அல்லது இடது பக்கம் வந்து நின்று, ”அஸ்ஸலாமு அழைக்கும்” என்று கூறுவார்கள். பிறர் இல்லம் சென்றால், அவர்களுக்கு நமது வருகையினை எப்படி உணர்த்த வேண்டும் என்பதையும், ஆவலுடன் நம் வரவினை ஏற்பதினையும் அழகிய முன் மாதரியாக இஸ்லாம் வழங்கியிருப்பதை உங்களுக்கு உணர்த்தி விட்டோம் .
நன்றி: நர்கிஸ்