கம்யூனிஸ்ட்களே! பெரியாரிஸ்ட்களே! ஏமாறாதீர்கள்!
[ ஆரியர்கள் தீய நோக்கோடு இந்தியாவுக்குள் நுழைந்து அன்றைய அரசர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு இந்திய மக்களை நான்கு ஜாதிகளாகப் பிரித்ததோடு, ஐந்தாம் ஜாதியாகவும் ஒரு சாராரை அடிமையாக்கி, தங்களது வாழ்வில் வளம் கண்டார்கள். இதை அவர்கள் கடவுளின் பெயரைச் சொல்லியே செய்ததால் அப்பாவி மக்களும் பயந்து அவர்களுக்கு அடிமையானார்கள்.
இக்கொடுஞ் செயலைக் கண்டு சகியாத மக்கள் நலனில் அக்கறை கொண்ட பல அறிவுஜீவிகள் கடவுள் மறுப்புக் கொள்கையை கையில் எடுத்துப் போராடி, தாழ்த்தப்பட்ட மக்களின் உலகியல் வாழ்வில் ஒருசில முன்னேற்றங்களைக் கண்டார்கள். ஆயினும் அவர்களை ஒட்டிக் கொண்டிருக்கும் தீண்டாமை, இன இழிவு நீங்கவில்லை. ஆம்! ஆயிரம் அம்பேத்கர், ஆயிரம் பெரியார், இன்னும் ஆயிரம் ஆயிரம் சிறந்த அறிவு ஜீவிகள் பாடுபட்டாலும் ஜாதிக் கொடுமையை, தீண்டாமையை, இன இழிவை ஒருபோதும் போக்க முடியாது.
அற்பமான மனித அறிவைக் கொண்டு, மனிதன் ஏற்படுத்தும் சட்டங்கள், மனுநீதிகள் கொண்டு இவற்றை ஒழிக்க முடியவே முடியாது. ஜாதிப் பித்து, தீண்டாமைக் கொடுமை, இன இழிவு நீங்குவது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது இந்த அறிஞர்களின் பெரும் முயற்சியால் தாழ்த்தப்பட்டவர்கள் அடைந்து வரும் உலகியல் முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம், கல்வி முன்னேற்றம் இவற்றிற்கும் இப்போது ஆபத்து வந்து விட்டது.
அன்று ஆரியர்கள் அன்றைய ஆட்சியர்களான மன்னர்களைத் தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டு இக்கொடுமைகளை அரங்கேற்றி ஆதாயம் அடைந்து வருகிறார்கள். இன்றைய நிலைமை என்ன? ஆம்! இன்றைய இந்திய ஆட்சியே அவர்கள் கைகளில் சிக்கிக்கொண்டது. எனவே மிக எளிதாக அவர்கள் தங்களின் சாணக்கியத் தந்திரங்களைக் கொண்டு மீண்டும் ஜாதி வேற்றுமைகளையும், தீண்டாமையையும் இன இழிவையும் நிலை நாட்டி விடுவார்கள். அதற்குரிய வழிமுறைகளைத் தான் சட்டமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.]
கம்யூனிஸ்ட்களே! பெரியாரிஸ்ட்களே! ஏமாறாதீர்கள்!
ஆரியர்கள் என்ற பார்ப்பனர்கள் பார்ப்பனீயம் என்ற மனிதனை மனிதன் அடிமையாக்கும் ஜாதிக் கொள்கையை சுமந்து கொண்டு மேல் நாட்டிலிருந்து படை எடுத்து வந்தது இந்திய வரலாறு கூறும் மறைக்கப்படாத உண்மை! அப்போது நம் இந்திய நாடு “”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற உண்மையையே இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. அன்றைய ஆட்சியாளர்களான மன்னர்கள் ஓரளவாவது நீதி, நியாயம், தர்மம் இவற்றைப் பேணிக் காத்து வந்ததாகவே வரலாறு கூறுகிறது.
வந்தேறிகளான ஆரியர்கள் தங்கள் சூன்ய, வசீகர, மாயப் பேச்சுக்களால் அம்மன்னர்களைத் தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டனர். பார்ப்பனர்களாகிய தங்களைப் பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்ததாகவும், மன்னர்கள் தோளிலிருந்து பிறந்ததாகவும், வியாபாரிகளின் இடையிலிருந்து பிறந்ததாகவும், தாழ்த்தப்பட்ட மக்கள் காலிலிருந்து பிறந்ததாகவும், நான்கு ஜாதிகளைக் கற்பனை செய்ததுடன் பஞ்சமர் என்ற ஐந்தாவது இழி ஜாதியாகவும் கற்பனை செய்து திராவிட மக்களை ஆட்சியாளர்களின் துணையுடன் தங்களின் அடிமைகளாக, சேவகர்களாக ஆக்கிக் கொண்டனர்.
இதில் இன்னும் வேதனையான விஷயம் இந்த அனைத்து அநீதி, அட்டூழிய அதர்மங்களையும், இறைவனின் பெயரால் கற்பனை செய்து ஆட்சியாளர்களின் துணையுடன் பெருங்கொண்ட மக்கள் அவற்றையே நீதியாக, தர்மமாக நம்பி ஏற்கச் செய்ததுதான். இப்படிக் கடவுளின் பேராலேயே ஜாதி வேறுபாட்டைக் கற்பனை செய்து திராவிட மக்களைத் தங்களின் கொத்தடிமைகளாக ஆக்கிக் கொண்டனர். நாயைத் தொட்டால் தீட்டு இல்லை. இவர்களைத் தொட்டால் தீட்டு என நாயிலும் கேடாக திராவிடர்களை இழிவுபடுத்தி வருகின்றனர். மலத்தைக் கையால் தொட்டுக் கழுவியவர்கள், கையின் அப்பகுதியை மட்டும் கழுவும் பார்ப்பனர்கள், தாழ்த்தப்பட்டவர்களாக இவர்கள் கற்பனை செய்துள்ள மக்களைத் தொட்டுவிட்டால் குளித்தே தங்களைச் சுத்தப்படுத்த முடியும் எனச் சட்டம் இயற்றி திராவிடர்களை இழிவுபடுத்தி வருகின்றனர்.
இந்த அடாத அட்டூழியங்கள் அனைத்தையும், கடவுளின் பெயராலேயே சொல்லி மக்களை மயக்குவதால், பெருங்கொண்ட மக்களும் அதில் மயங்கிப் பார்ப்பனர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர். இவை போதாதென்று ஒரே கடவுளின் படைப்புகள் அனைத்தையும் குட்டி குட்டிக் கடவுளாக்கி, குட்டித் துணைத் தெய்வங்களாக்கி அவற்றையே இந்த மக்கள் வணங்கி வழிபடச் செய்து பார்ப்பனீய பூசாரிகள் மக்கள் பணத்தை அநீதமான வழிகளில் கொள்ளை அடிக்கவும் வழிவகை செய்துள்ளனர். அதனால்தான் பிராமணர்கள் மட்டுமே தெய்வங்களுக்குப் பூஜை செய்ய முடியும், செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். இது இந்திய நாட்டில் மிக நீண்ட காலமாக ஊறிப்போன ஒரு நிலையாகும்.
இந்த அநியாய அட்டூழியங்களையும், ஜாதிக் கொடுமைகளையும், இன இழிவையும் ஓரளவு சுய சிந்தனையுடைய அறிஞர்கள் கடவுளின் பேரால் தானே இந்த அநியாய அட்டூழியங்கள், ஜாதிக் கொடுமைகள், இன்னும் பல பகுத்தறிவு ஏற்காத மூட நம்பிக்கைகள் மக்களிடம் மண்டிக் கிடக்கின்றன. எனவே கடவுளே இல்லை என நிலை நாட்டி விட்டால் இவை அனைத்தையும் மண்மூடச் செய்து விடலாம். மனிதகுல வாழ்க்கை சீர் பெற்று விடும் என்ற தவறான நம்பிக்கையில் தங்கள் பிரசாரத்தை முடுக்கி விட்டனர். மனிதக் கற்பனையில் உருவான பொய்க் கடவுள்களை, தெய்வங்களை மறுப்பதற்கு மாறாக அகில உலகங்களையும், அவற்றிலுள்ள அனைத்துப் படைப்புகளையும், மனித குலத்தையும் படைத்த தன்னந்தனியனான, இணை, துணை, மனைவி, மக்கள், தேவைகள், இடைத்தரகு, பூசாரிகளின் மதகுருமார்களின் தேவை எதுவுமே இல்லாத ஒரே ஒரு இறைவனையும் மறுத்துப் பிரச்சாரம் செய்யத் துவங்கினர்.
அவர்களின் இந்தத் தவறான பிரசாரம் மூட நம்பிக்கைகளை, அனாச்சாரங்களை, சடங்கு சம்பிரதாயங்களை ஓரளவு கட்டுப்படுத்தினாலும், மனித குலத்திற்கு அசலான வழியில் முன்னேற்றம் கொண்டுவர முடியவில்லை. இவர்களின் இம் முயற்சியால் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்பட்டவர்களில் சிலர் படித்துப் பட்டங்கள் பெற்று நீதிபதிகள், வக்கீல்கள், மருத்துவர்கள், வியாபாரிகள் என உயர்ந்தாலும், தாழ்த்தப்பட்டவர்கள் என்ற இழிநிலை மட்டும் மாறியதாக இல்லை. இறைக் கட்டளைக்கு அடிபணியாத வரை மாறவும் மாறாது. அதனால்தான் பெரியார் “”இன இழிவு நீங்க இஸ்லாமே நன் மருந்து” என்று தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தார்.
ஆக அம்பேத்கர், பெரியார், பூலே, அண்ணா போன்ற அறிஞர்கள் இன இழிவை முற்றிலுமாக ஒழித்துக் கட்டப் பெரும்பாடு பட்டிருக்கிறார்கள். கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்பதில் கடுகளவும் சந்தேகமே இல்லை. ஆயினும் இவர்களின் இந்தக் கடும் முயற்சி உரிய பலனைத் தந்ததா? இன இழிவை விட்டும் பெரும்பான்மை மக்கள் விடுபட்டார்களா? இல்லவே இல்லை. காரணம் அவர்களின் முயற்சி சரியான பாதையில் இல்லை.
இன்று இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்களில் 95% தாழ்த்தப்பட்ட இன இழிவில் அவமானப் பட்ட மக்களின் வழித்தோன்றல்களே. இன இழிவைத் தாங்க முடியாமல் முஸ்லிமாக மதம் மாறியவர்களின் வாரிசுகளே. அதனால்தான் இப்போது R.S.S. வகையறாக்கள் “”கர்வாப்பசி” என்ற பெயரால் அம்மக்களை லட்சக்கணக்கில் பணம் கொடுத்து மீண்டும் இன இழிவு மக்களாக்க முற்படுகிறார்கள்.
இந்திய மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களின் முன்னோர்களும் இன இழிவைத் தாங்க முடியாமல் மதம் மாறினார்களே அல்லாமல், மனம் மாறவில்லை. எனவே அவர்கள் இன இழிவுக்குரிய மக்களாக இருக்கும்போது எப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள், சடங்கு சம்பிரதாயங்கள், இன்னும் பல வழிகேடுகளை அப்படியே கைக்கொண்டு புரோகித முல்லாக்கள் நடைமுறைப்படுத்தும் முஸ்லிம் மதத்திற்கு மாறினார்கள். இந்த முல்லாக்களும் தங்களின் ஹராமான வருமானத்தைக் குறியாகக் கொண்டு அச்சடங்குகள் அனைத்திற்கும் அரபு பெயர்களைச் சூட்டி, தங்களின் கொழுத்த வருமானத்திற்கு வழி கண்டார்கள்.
1947ல் பெரியார் ஒரு கூட்டத்தோடு முஸ்லிம் மதத்தைத் தழுவி, இன இழிவிலிருந்து விடுபட முற்பட்டார். அப்போது அவரைச் சூழ்ந்திருந்த அவரது தொண்டர்கள் முஸ்லிம் மதத்தினரிடம் காணப்படும் இந்த அனைத்து மூடச் சடங்கு சம்பிரதாயங்கள், சமாதி(கபுரு) வழிபாடுகள் இன்ன பிற மூட நம்பிக்கைகள் அனைத்தையும் எடுத்துக் காட்டியே பெரியாரைப் பின்வாங்கச் செய்தனர். இதே அடிப்படையில்தான் முஸ்லிம் மதத்தைத் தழுவ முற்பட்ட அம்பேத்கரும் தமது நோக்கத்தைக் கைவிட நேரிட்டது.
இவை அனைத்தையும் இங்கு ஏன் எடுத்து வைக்கிறோம் என்றால் இன்றைய முஸ்லிம்களை வைத்துத் தூய இஸ்லாத்தை எடை போடாதீர்கள். முஸ்லிம் மதகுருமார்களால் கற்பனை செய்யப்பட்டுள்ள முஸ்லிம் மதமும் ஏனைய மதங்களைப் போல் ஒரு மதமே. தூய இஸ்லாம் போதிக்கும் நேர்வழி மார்க்கம் அல்ல. இந்த உண்மையை தென்னிந்தியாவில் தோன்றிய பிரபல அறிஞரான வள்ளலார் கூறுகிறார். படித்துப் பாருங்கள்.
கடவுள் வேறு; மதம் வேறு,
கடவுளால் காட்டப்படுவது பாதை(ஒரே நேர்வழி)
மதங்களால் ஊட்டப்படுவது போதை
கடவுளை அறிவோம்,
மதங்களின் பிடியிலிருந்து விடுபடுவோம்,
கடவுளை அறிந்து அனுபவிப்பவர்,
இம்மையிலும் மறுமையிலும் மகிழ்ந்திருப்பர்
ஆக உலக மக்கள் அனைவருக்கும் ஒரே கடவுள் தான். அக்கடவுளுக்கு மனைவி, மக்கள், இணை, துணை, தேவை, இடைத்தரகர், புரோகிதர், மதகுரு என்று எவருமே இல்லை. மனித குலத்திலுள்ள ஒவ்வொரு ஆணும் பெண்ணும் மதகுரு என்ற இடைத்தரகர் எவரும் இல்லாமல் நேரடியாக அக் கடவுளுடன் தொடர்பு கொள்ள முடியும். அனைத்து மதங்களிலுமுள்ள மதகுருமார்களின் மிருகச் செயல்களைக் கண்டு நீங்கள் கடவுளை எடை போடாதீர்கள். இம்மதகுருமார்களுக்கும் கடவுளுக்கு அணுவளவும் தொடர்போ சம்பந்தமோ இல்லவே இல்லை. அக்கடவுள் இறக்கி அருளிய இறுதி இறை நூலான குர்ஆனைக் கொண்டும், அக்கடவுளின் இறுதித் தூதரின் நடைமுறைகளைக் கொண்டும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் நேர் வழி நடக்க முடியும். இடைத்தரகர் கூடவே கூடாது!
மனித குலத்தின் ஆதித் தந்தை ஆதத்திலிருந்து, நோவா, ஏப்ரஹாம், இஸ்மவேல், இஷ்ஹாக், டேவிட், சாலமன், மோஸஸ், ஜீஸஸ் போன்ற அனைத்து இறைத் தூதர்களுக்கும் இறைவன் புறத்திலிருந்து இறைச் செய்திகள கிடைக்கவே செய்தன. ஆயினும் அவை அனைத்தும் தற்காலிகமானவையாகவும், முழுமை பெறாதவையுமாக இருந்ததால் அவற்றை இறக்கியருளிய கடவுள் அவற்றைப் பதிந்துப் பாதுகாக்கக் கட்டளையிடவில்லை.
அதன் விளைவு முன்னைய இறைநெறி நூல்கள் அனைத்தும் ஒரே நேர்வழியைப் பல கோணல் வழிகளாக்கி அதாவது ஒரே மார்க்கத்தை பல மதங்களாக்கிய அனைத்து மதங்களின் மதகுருமார்களும் அந்த இறைநெறி நூல்களில் தங்களின் கற்பனைக் கட்டுக் கதைகள், ஆபாசங்கள், அசிங்கங்கள், சரச சல்லாபங்கள் அனைத்தையும் புகுத்தி நடைமுறைச் சாத்தியமில்லா வேதாந்தங்கள் நிறைந்த வேதங்களாக்கி விட்டனர். குடும்பத்தினர் அனைவரும் ஒருசேர உட்கார்ந்து அந்த வேதங்களைப் படிக்கும் நிலையில் அவை இல்லை. அந்தளவு மனிதக் கரம் பட்டு அவை மாசுபட்டு நடைமுறைக்குச் சாத்தியமே இல்லாத வேதாந்தங்கள் நிறைந்த வேதங்கள் ஆகிவிட்டன என்பது உண்மைதான். எனவே அவற்றை வேதங்கள் என்று சொல்வது சரியே! மறுப்பது நியாயமல்ல!
அந்த இறைநூல்களின் வரிசையில் இறுதியாக இறக்கியருளப்பட்ட சம்பூரணமாக நிறைவு பெற்று, முழுமையடைந்து பதிந்து பாதுகாக்கப்பட்டிருப்பதோடு, அதை இறக்கியருளிய ஏகன் இறைவனாலேயே பாதுகாக்கப்பட்டு வரும் (15:9) அல்குர்ஆனையும் நடைமுறைச் சத்தியமற்ற வேதாந்தங்கள் நிறைந்த வேதம் என்று சொல்வது பெருந்தவறாகும். வழிகேடாகும். மனித குலத்தினர் அனைவரும் தின மும் எப்பொழுதும் படித்துணர வேண்டிய செயல் படுத்த வேண்டிய நூலே குர்ஆனாகும்.
“குர்ஆன்” என்ற அரபு மொழி வாசகத்தின் நேரடியான விரிவான பொருள் இதுதான்.
குர்ஆன் முஸ்லிம்களின் வேதம் என்பதும் குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமானது என்பதும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குர்ஆனில் எவ்வித உரிமையும் இல்லை என்பதும் ஜமுக்காளத்தில் வடித்தெடுத்தப் பொய்யாகும். குர்ஆனை சுத்தமில்லாமல் தொடக்கூடாது, ஒளூ இல்லாமல் தொடக் கூடாது, மவ்லவி புரோகிதர் அல்லாதவர்கள் குர்ஆனின் மொழி பெயர்ப்பைப் பார்த்தும் விளங்கமுடியாது, முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குர் ஆனைக் கொடுக்கக் கூடாது, முஸ்லிம் அல்லாதவர்கள் குர்ஆனை மொழி பெயர்க்கக் கூடாது என்றெல்லாம் இந்த மவ்லவிகள் தொடர்ந்து கூறி வருவது தார்ப்பாயில் வடித்தெடுத்தப் பொய்யாகும். குர்ஆன் போதனைக்கு முற்றிலும் முரணாக இந்த மவ்லவிகள் முஸ்லிம்களை வழிகேட்டில் இட்டுச் சென்று நாளை நரகை நிரப்ப ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகளாகச் செயல்படுவதால், தங்களின் இந்த மாபாதகச் செயல் அம்பலப்பட்டுப் போகுமே என்ற அச்சத்தித்தில்தான் இப்படிப்பட்டப் பொய் மூட்டைகளைத் தொடர்ந்து அவிழ்த்து விடுகிறார்கள்.
பெரியார் பார்ப்பனப் புரோகிதர்களை எந்தளவுக் கடுமையாகத் தாக்கினாரோ அதை விடப் பல மடங்குக் கடுமையாகத் தாக்கப்பட வேண்டியவர்கள் இம்மவ்லவிகள். ஏனென்றால் பதிந்து பாதுகாக்கப்பட்டுத் தினமும் படித்து விளங்கி அதன்படி நடக்க வேண்டிய முஸ்லிம்களும் இம்மவ்லவிகளும், அதைப் படித்து விளங்கி நடக்காமல் மறைத்து வைத்துக்கொண்டு, முன்னோர்களின் கற்பனைக் கட்டுக் கதைகளை வேதவாக்காகக் கூறி மக்களை வழி கெடுத்து நரகில் தள்ளும் இம்மவ்லவிகள் ஆகக் கேடு கெட்டவர்கள் இல்லையா? வைக்கோல் போரை வெட்டியாகக் காக்கும் நாய்களை விடக் கேடுகெட்டவர்கள் இல்லையா இவர்கள்? சிந்தியுங்கள்.
கம்யூனிஸ்ட்களே, பெரியாரிஸ்ட்களே தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள். இறைவனால் இறுதியாக இறக்கியருளப்பட்ட குர்ஆன் அதாவது மனித குலமே தினமும் எப்பொழுதும் படித்து விளங்கி நடக்க வேண்டிய இறைநூல், மனித குலத்தினர் அனைவருக்கும் சொந்தமானது; உங்களுக்கும் சொந்தமானது. முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்த மானதல்ல. உலக மக்கள் அனைவரும் அதன் வழி காட்டல்படிதான் நடக்க வேண்டும். மனிதனின் அற்ப அறிவுக்கு எட்டாத மறைவான விஷயங்கள் அதில் இருக்கலாம். அதே சமயம் பகுத்தறிவுக்குப் பொருந்தாத ஒரேயொரு விஷயத்தையும் அதில் நீங்கள் காண முடியாது.
யாரொருவர் ஏற்கனவே தங்கள் உள்ளத்தில் ஊறிப்போயிருக்கும் கொள்கையை சிறிது ஒதுக்கி வைத்து விட்டு, உள்ளத்தைக் காலியாக வைத்துக் கொண்டு, நடுநிலையோடு குர்ஆனை அதாவது தினமும் எப்பொழுதும் படித்து விளங்க வேண்டிய நூலை படித்து வருவார்களானால், அதைவிட ஒரு நேரான, சரியான மனித வாழ்க்கைத் திட்டத்தை எத்தப் பெரிய அறிஞரும் தரவே முடியாது என்பதைத் திட்டமாக அறிய முடியும்.
இதுகாலம் வரை முஸ்லிம் மதகுருமார்கள் சொல்வதுதான், விளக்குவதுதான் முஸ்லிம் மதக் கொள்கை என்ற தவறான நம்பிக்கையில் அம்பேத்கர், பெரியார், அண்ணா இன்னும் மக்கள் நல்வாழ்வில் அக்கறையுள்ள பல அறிஞர்கள் நம்பியதால், இதர மதங்களைப் போல் முஸ்லிம் மதமும் மக்களைப் பல பிரிவுகளாகப் பிரித்து, ஏமாற்றி வயிறு வளர்க்க வழிவகுப்பதே, அபின் போல் போதை தருவதே என்ற தவறான நம்பிக்கையில்தான் இஸ்லாத்தைத் தழுவுவதில் தயக்கம் காட்டினர்.
இப்போது இந்த முஸ்லிம் மதகுருமார்களுக்கும் ஏனைய மதங்களின் மதகுருமார்களுக்கும் கடுகளவும் வேறுபாடு இல்லை. ஒட்டுமொத்த மதகுருமார்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் வஞ்சகர்களே. இஸ்லாமிய மார்க்கத்தில் இம்மதகுருமார்களுக்கு அணுவின் முனை அளவும் அனுமதி இல்லை.
குர்ஆன் தாஃகூத் என்று கூறும் மனித ஷைத்தான்களே. (பார்க்க : 4:256,257, 4:51,60,76, 5:60, 16:36, 39:17) ஷைத்தானின் சபதத்தை நிறைவேற்றி பெருங் கொண்ட மக்களை நரகில் தள்ளும் ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகளே. திருடனிலும் ஆகக் கேடுகெட்டத் திருடர்களே. நாலு கால் பிராணியை விடக் கேடு கெட்டவர்களே. இந்த உண்மையை குர்ஆன் 7:175-179, 45:23, 47:25 வசனங்களை நீங்களே நேரடியாகப் படித்து அறிந்து கொள்ளலாம்.
இந்த உண்மைகளை இப்போது நாம் உங்களுக்கு விளக்குவதற்குக் காரணம், ஆரியர்கள் தீய நோக்கோடு இந்தியாவுக்குள் நுழைந்து அன்றைய அரசர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு இந்திய மக்களை நான்கு ஜாதிகளாகப் பிரித்ததோடு, ஐந்தாம் ஜாதியாகவும் ஒரு சாராரை அடிமையாக்கி, தங்களது வாழ்வில் வளம் கண்டார்கள். இதை அவர்கள் கடவுளின் பெயரைச் சொல்லியே செய்ததால் அப்பாவி மக்களும் பயந்து அவர்களுக்கு அடிமையானார்கள்.
இக்கொடுஞ் செயலைக் கண்டு சகியாத மக்கள் நலனில் அக்கறை கொண்ட பல அறிவுஜீவிகள் கடவுள் மறுப்புக் கொள்கையை கையில் எடுத்துப் போராடி, தாழ்த்தப்பட்ட மக்களின் உலகியல் வாழ்வில் ஒருசில முன்னேற்றங்களைக் கண்டார்கள். ஆயினும் அவர்களை ஒட்டிக் கொண்டிருக்கும் தீண்டாமை, இன இழிவு நீங்கவில்லை. ஆம்! ஆயிரம் அம்பேத்கர், ஆயிரம் பெரியார், இன்னும் ஆயிரம் ஆயிரம் சிறந்த அறிவு ஜீவிகள் பாடுபட்டாலும் ஜாதிக் கொடுமையை, தீண்டாமையை, இன இழிவை ஒருபோதும் போக்க முடியாது. அற்பமான மனித அறிவைக் கொண்டு, மனிதன் ஏற்படுத்தும் சட்டங்கள், மனுநீதிகள் கொண்டு இவற்றை ஒழிக்க முடியவே முடியாது. ஜாதிப் பித்து, தீண்டாமைக் கொடுமை, இன இழிவு நீங்குவது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது இந்த அறிஞர்களின் பெரும் முயற்சியால் தாழ்த்தப்பட்டவர்கள் அடைந்து வரும் உலகியல் முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம், கல்வி முன்னேற்றம் இவற்றிற்கும் இப்போது ஆபத்து வந்து விட்டது.
அன்று ஆரியர்கள் அன்றைய ஆட்சியர்களான மன்னர்களைத் தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டு இக்கொடுமைகளை அரங்கேற்றி ஆதாயம் அடைந்து வருகிறார்கள். இன்றைய நிலைமை என்ன? ஆம்! இன்றைய இந்திய ஆட்சியே அவர்கள் கைகளில் சிக்கிக்கொண்டது. எனவே மிக எளிதாக அவர்கள் தங்களின் சாணக்கியத் தந்திரங்களைக் கொண்டு மீண்டும் ஜாதி வேற்றுமைகளையும், தீண்டாமையையும் இன இழிவையும் நிலை நாட்டி விடுவார்கள். அதற்குரிய வழிமுறைகளைத் தான் சட்டமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
”கர்வாப்பசி” என்றால் என்ன பொருள் தெரியுமா? தாழ்த்தப்பட்டவர்களிலிருந்து, முஸ்லிமானவர்கள் மீண்டும் தாழ்த்தப்பட்டவர்களாக வேண்டும். கிறித்தவர்கள் மீண்டும் தாழ்த்தப்பட்டவர்களாக வேண்டும். உலகியல் அடிப்படையில் கல்வி, பொருளாதார அடிப்படையில் ஓரளவு முன்னேறி இருப்பவர்கள் மீண்டும் ஆரியர்களுக்குக் கொத்தடிமையாக வேண்டும். இதுதான் R.S.S. .ன் லட்சியம், குறிக்கோள். அதற்காகத்தான் மத்திய அரசு காய்களை மிகச் சாதுரியமாக நகர்த்தி வருகிறது. கம்யூனிஸ்ட்களே, பெரியாரிஸ்ட்களே ஏமாறாதீர்கள். இதுவரை நீங்கள் கடைபிடித்து வரும் மனித அறிவில் பட்ட சீர்திருத்தத் திட்டங்கள் ஒருபோதும் உங்களுக்குப் பலனளிக்காது. மேலும் மேலும் ஆபத்தையே விளைவிக்கும்.
மனிதத் திட்டங்களைக் கைவிட்டு ஓரிறைத் திட்டத்தை எடுத்து நடக்க முன்வாருங்கள். பெரியார் சொன்னது போல் “”இன இழிவு நீங்க இஸ்லாமே நன் மருந்து” என்ற அறிவுரையை ஏற்று நடக்க முன் வாருங்கள்: பெரியாரும், அம்பேத்கரும் பின்வாங்கிய முஸ்லிம் மதகுருமார்கள் போதிக்கும் முஸ்லிம் மதத்தை ஏற்பதற்கு உங்களை நாம் அழைக்கவில்லை.
இணை, துணை, தேவை, இடைத்தரகு, மதப் பூசாரிகளின் வழிகாட்டல், பரிந்துரை எதுவுமே தேவைப்படாத ஓரிறைவன் கூறும் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று நடக்க முன்வாருங்கள். ஏகன் இறைவனால் இறுதியாக இறக்கியருளப்பட்ட குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கு மட்டுமல்ல. மனித குலத்திற்கே சொந்தமானது. அந்த இறைவனின் நேரடியான, தெள்ளத் தெளிவான, எவ்வித முரண்பாடுமில்லாத குர்ஆன் வசனங்களுக்கு மேல் விளக்கம் கொடுக்கும் தகுதி மனிதர்களில் எப்படிப்பட்ட மவ்லவிகளுக்கும், பேரறிஞர்களுக்கும் இல்லவே இல்லை என்பதைத் திட்ட மாக அறியுங்கள். குர்ஆனை நீங்களே உங்களுக்குத் தெரிந்த மொழிகளில் நேரடியாகப் படித்து அதன் படி நேர்வழி நடக்க முன் வாருங்கள். அதுவே ஜாதி வேற்றுமைகளையும், தீண்டாமைக் கொடுமையையும், இன இழிவையும் போக்கும் ஒரே வழி.
R.S.S. வகையறாக்கள் இஸ்லாமிய மார்க்கத்தை மிகமிகக் கடுமையாக எதிர்த்து வரும் நோக்கம் புரிகிறதா? ஆம்! R.S.S. வகையறாக்கள் எல்லா மதங்களையும் ஜீரணித்து விடுவார்கள். இஸ்லாமிய மார்க்கத்தை மட்டும் அவர்களால் ஜீரணிக்கவே முடியாது. இதற்கு மேலும் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் அழையுங்கள். நாங்கள் வந்து சந்தேக நிவர்த்தி செய்கிறோம். நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ நாளை மறுமையில் அந்த இறைவன் முன்னால் நிற்கத்தான் போகிறோம். அப்போது இந்த உண்மைகளை நாங்கள் உங்கள் அளவில் கொண்டு சேர்த்து விட்டோம் என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டால் போதும்.
நீங்கள் தெளிவாகப் புரியவேண்டும் என்ற நோக்கில் “அல்லாஹ்” என்ற அரபு பதத்தை எழுதாமல் கடவுள், இறைவன் போன்ற பதங்களில் மட்டுமே குறித்துள்ளோம். அல்லாஹ்வை குறிக்க வெவ்வேறு மொழிகளில் பலபல பதங்கள் இருந்தாலும் அவற்றிற்கு ஆண், பெண், இருமை, பன்மை எனப் பிரித்துக் கூற முடியும். மேலும் அரபு மொழியிலுள்ள அல்லாஹ்வை குறிக்கும் ரஹ்மான், ரஹீம், கரீம் போன்ற 99 திருப் பெயர்களையும் அப்படிப் பிரித்துக் காட்ட முடிந்தாலும் “அல்லாஹ்” என்ற அரபு பதத்தை மட்டும் அப்படி ஆண், பெண், இருமை, பன்மை என யாராலும் பிரிக்க முடியவே முடியாது. இந்தியாவில் பல மொழிகள் பேசும் மக்க ளிடையே இணைப்பை ஏற்படுத்த இப்போது உலகின் வடமேற்கிலுள்ள இங்கிலாந்தில் பேசப்படும் ஆங்கில மொழியை ஏற்றிருக்கிறோம். அதுபோல் உலகம் முழுவதிலும் எண்ணற்ற மொழிகள் பேசும் மக்களிடையே இணைப்பு மொழியாக உலகின் மத்திய பகுதியில் பேசப்படும் அரபு மொழியைப் பயன்படுத்தினால் என்ன தவறு? சிந்தியுங்கள்!
Filed under 2015 செப்டம்பர், தலையங்கம் – அந்நஜாத்