Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சமுத்திர ஆழங்களில் மண்டிக்கிடக்கும் மையிருள்

Posted on September 30, 2015 by admin

சமுத்திர ஆழங்களில் மண்டிக்கிடக்கும் மையிருள்

أَوْ كَظُلُمَاتٍ فِي بَحْرٍ لُّجِّيٍّ يَغْشَاهُ مَوْجٌ مِّن فَوْقِهِ مَوْجٌ مِّن فَوْقِهِ سَحَابٌ ظُلُمَاتٌ بَعْضُهَا فَوْقَ بَعْضٍ إِذَا أَخْرَجَ يَدَهُ لَمْ يَكَدْ يَرَاهَا وَمَن لَّمْ يَجْعَلِ اللَّهُ لَهُ نُورًا فَمَا لَهُ مِن نُّورٍ

”அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை; அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள் சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதைப் பார்க்க முடியாது; எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை. (24:40 سورة النور)

கடல் ஆழங்களில் மண்டிகிடக்கும் மையிருட்டை நவீன கருவி சாதனங்களால் தான் விஞ்ஞானிகளால் உறுதி செய்திட முடிந்தது என ஜித்தாவில் உள்ள மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக்கலகத்தில் பணியாற்றிய பேராசிரியர் துர்கா ராவ் கூறினார்.

எந்த ஒரு பொருளின் துணையில்லாமல் 20 முதல் 30 மீட்டர் அளவுக்கு மேல் மனிதர்கள் கடலுக்குள்ளே மூழ்குவது இயலாத காரியமாகும். அதேப்போன்று 200 மீட்டருக்கும் அப்பாற்பட்ட ஆழத்தில் கடல் பகுதிகளில் மனிதன் உயிர் வாழ்ந்திட முடியாது.

இந்த இறை வசனம் எல்லா கடல்களையும் குறிக்காது. காரணம் எல்லா கடல்களும் அடுக்கடுக்காய் மையிருள் திரைகள் படிந்துள்ளன என்று கூற முடியாது. “ஆழ் கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்” என்ற திர்க்குர்ஆன் கூற்றுப்படி அது ஆழ்கடலையே குறிக்கும். ஆழ் கடலில் இருள்திரைகள் அடுக்கடுக்காய் படிந்து கிடக்க இரண்டு முக்கிய காரணங்கள் அடிப்படையாகும்.

ஓர் ஒழிக்கதிர் ஏழு வர்ணங்களைக் கொண்டுள்ளது. இவை ஊதா(Violet), ஆழ்ந்த நீலம்(Indigo), நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிறம், சிகப்பு ஆகியன. இந்த சூரிய ஒளிக்கதிர் நீரை கடக்கும்போது ஒளிச்சிதைவு (Refraction of Light) ஏற்படுகின்றது. 10 முதல் 15 மீட்டர் மேலளவு கொண்ட நீர் சிகப்பு நிறத்தை உள்வாங்கி உறிஞ்சிக் கொள்கின்றது. எனவே நீரில் மூழ்கும் ஒருவர் அந்நீருக்கு கீழ் 25 மீட்டர் ஆழத்தில் சென்றவர் அடிபட்டு இரத்தம் கசிந்தால் இரத்ததின் சிகப்பு நிறத்தை கண்ணால் பார்க்க முடியாது. காரணம் இந்த ஆழத்திற்கு சிகப்பு நிறம் ஊடுருவிச் செல்வதில்லை.

அவ்வாறு ஆரஞ்சு நிறம் 30 முதல் 50 மீட்டர் வரையும், மஞ்சல் நிறம் 50 முதல் 100 வரையும், பச்சை நிறம் 100 முதல் 200 வரையும், நீல நிறம் 200 மீட்டருக்கு அப்பால் வரையும் ஊதாவும், கருநீலமும் 200 மீட்டருக்கு அப்பாலும் ஊடுருவிச் செல்கின்றன. இவ்வாறு பல்வேறு வர்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக படிப்படியாக கருமை அடைந்துக்கொண்டே செல்லும். கடலில் 1000 மீட்டருக்கு கீழ் உள்ள ஆழத்தில் முழுமையான இருள் ஆட்சி புரியத் தொடங்கிவிடும்.

ஒளிக்கதிர்கள் கடலின் மேற்பரப்பை சென்றடைகின்றபோது அது கடலலையின் மேற்பரப்பால் பிரதிபலிக்கப்பட்டு அதற்கு ஓர் ஒளிப்பிரகாசமான தோற்றத்தை வழங்கிவிடுகின்றது. ஒளியை பிரதிபலித்து இருளை ஏற்படுத்துவது கடலலைகளே! பிரதிபலிக்கப்படாத ஒளியோ கடல் ஆழங்களுக்குள் ஊடுருவிச் சென்று விடுகின்றது. ஆகவே கடலானது இரண்டு பகுதிகளை கொண்டதாக மாறி விடுகின்றது.

கடல்கள் மற்றும் சமுத்திரங்கள் ஆழமான அடிநீரை கடலின் உள்ளே உள்ள அலைகள் மூடிக்கொள்கின்றன. இதற்கு காரணம் கடல் ஆழத்தின் நீர் அதன் மேற்பரப்பில் உள்ள நீரை விட அதிகமான அடர்த்தித் தன்மைக் கொண்டதாக இருப்பதே! கடலின் உள்ளே உள்ள அலைகளுக்கு கீழ்தான் இருள் கவியத் தொடங்கும். அப்பொழுது அந்த ஆழத்தில் வசிக்கும் மீன் இனங்கள் கூட பார்வையை இழந்துவிடக் கூடும். அம்மீனனங்களின் உடலிலிருந்து வெளிப்படும் சொந்த ஒளி மட்டுமே அவற்றுக்கு வழிகாட்டும். இதனை மிகச் சரியாக திருக்குர்ஆன் வசனம் குறிப்பிடுகின்றது;

ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலைஸ.

வேறு வார்த்தைகளால் சொன்னால் இந்த அலைகளுக்கு அப்பால் இன்னும் அதிகமான அலை வடிவங்கள் உள்ளன. அதாவது இவை அனைத்தும் கடலின் மேற்பரப்பில் காணப்படுபவை.

இறை வசனம் மேலும் கூறுகின்றது;

அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள் சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன.

விளக்கிக் கூறப்பட்ட இம்மேகங்கள் யாவும் ஒன்று மற்றொன்றின் மேல் தடுப்பு சுவர்களாய் அமைந்து கடலின் பல்வேறு அலை மட்டங்களில் நிறங்களை உள்வாங்கி கருமையை தோற்றுவிக்கின்றன.

பேராசிரியர் துர்க்கா ராவ் இறுதியாக இவ்வாறு கூறினார்.

“1400 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கடலலையின் நிகழ்வை குறித்து ஒரு சாதாரண மனிதன் இவ்வளவு தெளிவாக கூறி இருக்க முடியாது. எனவே இயற்கைக் கடந்த தெய்வீக ஊற்றிலிருந்தே இந்தச் செய்தித் தகவல்கள் வந்திருக்க முடியும்.”

Dr. Zakir Naik. தமிழாக்கம்: இப்னு ஹுஸைன்

source: http://www.readislam.net/portal/archives/583

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 2

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb