அமெரிக்காவின் ‘அரசியல் சாசன சட்டம்’ என்பது கூட தெரியாத ஒருவர், அதிபர் வேட்பாளராக வலம் வருவது வெட்கக் கேடானது!
– பென் கார்சனின் துவேஷ கருத்துக்கு 12 வயது சிறுவன் ‘யூசுப்’ பதிலடி..!
அமெரிக்க அதிபர் தேர்தலில் ‘ரிபப்ளிகன்’ கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் ‘பென் கார்சன்’ ஒரு முஸ்லிம் அமெரிக்க அதிபராக வரக்கூடாது என்ற துவேஷ கருத்தை வெளியிட்டிருந்தார்.
இதற்கு ‘யூசுப் தயார்’ என்ற 12 வயது முஸ்லிம் சிறுவன் பதிலடி கொடுத்துள்ளார்.
நான் அமெரிக்க அதிபராகி ‘பென் கார்சன்’ போன்ற முஸ்லிம் விரோத சக்திகளின் தீய எண்ணங்களை தகர்த்துக் காட்டுவேன் என்று கூறியுள்ளார், யூசுப்.
நான் அதிபரானால், மதத்தின் பெயராலோ, நிறத்தின் பெயராலோ, இனத்தின் பெயராலோ எவர் மீதும் பாகுபாடு காட்டமாட்டேன்.
இது தான் அமெரிக்காவின் ‘அரசியல் சாசன சட்டம்’ என்பது கூட தெரியாத ஒருவர், அதிபர் வேட்பாளராக வலம் வருவது வெட்கக் கேடானது.
கருப்பினத்தை சார்ந்த ஒருவர் அதிபராக முடியாது என்று சொல்லி வந்த விஷயத்தை, தற்போதைய ‘அதிபர் ஒபாமா’ முறியடித்துள்ளதைப் போல, முஸ்லிம் துவேஷ கருத்துக்களை முறியடித்து, நாங்கள் வெற்றிப்பெறும் நாள் தொலைவில் இல்லை என்கிறார் யூசுப்.
ஒரு முஸ்லிம் அதிபராவதை ஏற்க முடியாது என்று ‘பென் கார்சன்’ கூறியுள்ளது போல, பென் கார்சனின் இனம், மதம், கொள்கை’யை நாங்கள் காரணம் காட்டி அவரை நிராகரித்தால், அவரது நிலைமை என்னவாகும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார், ‘யூசுப் தயார்’