சகோதரர் பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் பெருநாள்தின உரையின் சில அம்சங்கள்!
.
o அனுதினமும் ஹிந்துக்களும் கிறுத்தவர்களும் அறுத்து சாப்பிடும் ஆடு மாடுகளை பண்டிகையின் போது முஸ்லிம்கள் அதிகமாக சாப்பிடுகிறார்கள், அவ்வளவு தான்.
o பண்டிகை என்றால் எவராக இருந்தாலும் மாமிச உணவுகளை தான் அதிகமாக விருந்து படைப்பார்கள்.
இதை நடுநிலையான ஹிந்து சகோதரர்கள் சிந்திக்க மாட்டார்களா?
அதெப்படி முஸ்லிம் என்று வரும் போது மட்டும் மாமிசம் தடை என்கிறாய்?
நாங்களும் தினமும் அதை உண்ணத் தானே செய்கிறோம் என்று சிந்திப்பவர்கள் அவர்களிலும் இருக்க மாட்டார்களா?
o காற்றை மாசுப்படுத்தி, மக்களின் ஆரோக்கியத்தை கெடுக்கக் கூடிய பட்டாசை தீபாவளியன்று வெடிக்கிறாயே, அது சட்டப்படி தடுக்கப்பட வேண்டிய ஒன்று என்றாலும், எந்த முஸ்லிமாவது அதற்கு எதிராக வழக்கு இட்டானா?
o ஜல்லிக்கட்டு என்கிற பெயரில் காளை மாடுகளுக்கு சாராயத்தை ஊற்றிக் கொடுத்து போதையேற்றி, அதை அடக்குகிறோம் என்கிற பெயரில் சித்திரவதை செய்கிறார்களே, அதற்கு அரசாங்கமும் பக்கபலமாய் நிற்கிறதே, அதற்கு எதிராக எந்த முஸ்லிமாவது நீதிமன்றம் சென்றானா?
o சரி, அறுத்து சாப்பிடுவது கூடாது என்கிறாயே, கோவில் திருவிழாவில் பலி என்கிற பெயரில் ஆடுகளை உயிரோடு தீயில் எரிக்கிறார்கள்,
உயிரோடு கடித்து இரத்தத்தை குடிக்கிறார்கள்..
o இதையெல்லாம் எந்த முஸ்லிமாவது எதிர்த்தானா?
o இறந்த பிணங்களை கங்கையில் கொட்டி அந்த நீரை மாசுப்படுத்துகிறாயே, நாங்கள் யாராவது வழக்கு போட்டோமா?
o முஸ்லிம்களின் பண்டிகை தான் யாருக்கும் இடையூறு தராத பண்டிகை.
முஸ்லிம் ஒருவர் இறந்து விட்டால் கூட, உடலை பூமிக்கு அடியில் புதைத்து விடுகிறோம், இதனால் காற்று மாசுபடுவதில்லை
..
o ஆனால், ஹிந்துக்கள் பிணங்களை எரித்து காற்றை மாசுபடுத்துகிறார்கள்.
இதை நாங்கள் எதிர்த்தோமா?
o சிலைகளை கடலில் கரைத்து நீரை மாசுபடுத்துகிறார்கள். இதை கண்டித்து எந்த முஸ்லிமாவது போராடினானா?
o நாங்கள் மத சகிப்புத்தன்மையுடன் தான் இந்த நாட்டில் வாழ்ந்து வருகிறோம் என்பதை நடுநிலை ஹிந்து சமூகம் சிந்திக்காமல் இல்லை.
o நீ செய்யும் ஒவ்வொரு அடக்குமுறைகளும் அவர்களை இன்னும் சிந்திக்க தூண்டும்.
o இஸ்லாம் என்ன தான் சொல்கிறது?
ஏன் இந்த மார்க்கம் மட்டும் இவ்வுலகில் இந்த அளவிற்கு எதிர்ப்புகளை சந்திக்கிறது? என்று அவன் சிந்திப்பதற்கு நீ வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறாய்.
o அமெரிக்க, ஐரோப்பா நாடுகளில் இன்று இஸ்லாம் பல்கிப்பெருகி வருகிறதே, அதற்கெல்லாம் எது காரணம்?
o எங்கள் பிரச்சாரங்கள் காரணமில்லை.. இதே போன்று அவர்கள் இந்த மார்க்கத்திற்கு செய்த இடைஞ்சல்களும் கொடுமைகளும் தான் காரணம்.
o அது தான் ஹிந்து கிறித்தவ மக்களை இஸ்லாத்தின் பால் தங்கள் சிந்தனையை திருப்பும்! கூட்டம் கூட்டமாய் இஸ்லாத்தை நோக்கி மக்கள் இணைவார்கள்.
o உங்கள் செல்வங்களிலும், உயிர் களிலும் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிட மிருந்தும், இணை கற்பித்தோரிடமிருந்தும் ஏராளமான சங்கடம் தரும் சொற்களைச் செவியுறுவீர்கள். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அது உறுதி மிக்க காரியங்களில் ஒன்றாகும். (அல்குர்ஆன் 3:186)
– 24 09 2015 ”ஈதுல் அள்ஹா” பெருநாள் உரையில் சகோ. பிஜெ