Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

லெக்கின்ஸ் சுதந்திரமும் பெண்ணிய ஈர வெங்காயங்களும்

Posted on September 25, 2015 by admin

லெக்கின்ஸ் சுதந்திரமும் பெண்ணிய ஈர வெங்காயங்களும்

[ குமுதம் ரிப்போர்ட்டர்   பெண்களின் லெக்கின்ஸ் அணிந்த போட்டோவை பிரசுரித்துள்ளது. லெக்கின்ஸ் மீது குர்தா அணிந்த பெண்களையும், காற்றில் குர்தா விலகும்போது, மறைந்திருந்து போட்டோ எடுத்து ஆபாச கோணத்தில் போட்டுள்ளது.

சுடும் என்று தெரிந்தே நெருப்பில் கை விட்டு விட்டு நெருப்பில் கை விடுவது என் சுதந்திரம், இந்த இருபதாம் நூற்றாண்டில் சுடாமல் இருக்க நெருப்புதான் பழகிக்கொள்ள வேண்டும் என்று சொல்வது எந்த அளவு அபத்தமோ அதை விட அபத்தம் நான் எவ்வளவு கேவலமாக,கீழ்த்தரமாக, ஆடை அணிய முடியுமோ அணிவேன்.. ஆண்தான் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும் அல்லது உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உளறுவதும்..!!

ஐந்து வயது குழந்தையை கூட விட்டு வைக்காத கொடூரமான கயவர்கள் நிரம்பிய உலகம் இது… உங்கள் உடல் உங்களின் பொக்கிஷம் அல்லவா? அதை கண்ணியமான உடை அணிந்து மறைக்காமல் கண்டவன் கண்களுக்கும் விருந்தாக்கி செல்வதுதான் நீங்கள் படித்து தெளிந்த நாகரீகமா???

பெண் சுதந்திரம் என்பதும் பெண்ணியம் என்பதும் ஆடைக்குறைப்பும் ஆடை சுதந்திரமும் மட்டுமே என்று ஊடகங்களும் ஆணாதிக்க சிந்தனை உடையவர்களாலும் காலம்காலமாக நம்ப வைக்கப்பட்டு வருகின்றீர்கள். என்பதை உணராமல் இன்னமும் கற்காலத்திலேயே இருக்க முயலுகிறீர்களே பெண்களே!]

லெக்கின்ஸ் சுதந்திரமும் பெண்ணிய ஈர வெங்காயங்களும்

பெண்களின் அனுமதி இன்றி அவர்களை ஆபாசமாக படம் எடுத்து அட்டைப்படத்தில் போட்டு சீப் பப்ளிசிட்டி தேடிக்கொண்ட குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு இஸ்லாமியப் பெண்மணி வலை தளத்தின் வன்மையான கண்டனங்கள்..!!! ஆனால் பத்திரிக்கைக்காக கவரேஜ் செய்ய சென்ற ரிப்போர்ட்டரை விட பல மடங்கு வன்மமும், வக்கிரமும் கொண்டு அலையும் மிருகங்களுக்கு கொஞ்சமும் குறைச்சல் இல்லாத இந்த காலகட்டத்தில் இப்படி அரை குறை ஆடை அணிந்து கொஞ்சமும் கூச்சமில்லாமல் பொது இடங்கலில் அலையும் பெண்களுக்கும் ஒரு பெண்ணாக என் சார்பில் மிக மிக கடுமையான கண்டனங்கள்..!!!

சுடும் என்று தெரிந்தே நெருப்பில் கை விட்டு விட்டு நெருப்பில் கை விடுவது என் சுதந்திரம், இந்த இருபதாம் நூற்றாண்டில் சுடாமல் இருக்க நெருப்புதான் பழகிக்கொள்ள வேண்டும் என்று சொல்வது எந்த அளவு அபத்தமோ அதை விட அபத்தம் நான் எவ்வளவு கேவலமாக, கீழ்த்தரமாக, ஆடை அணிய முடியுமோ அணிவேன்.. ஆண்தான் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும் அல்லது உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உளறுவதும்..!!

ஐந்து வயது குழந்தையை கூட விட்டு வைக்காத கொடூரமான கயவர்கள் நிரம்பிய உலகம் இது… உங்கள் உடல் உங்களின் பொக்கிஷம் அல்லவா? அதை கண்ணியமான உடை அணிந்து மறைக்காமல் கண்டவன் கண்களுக்கும் விருந்தாக்கி செல்வதுதான் நீங்கள் படித்து தெளிந்த நாகரீகமா???

பத்திரிகையில் போடப்பட்டதற்கே இவ்வளவு கொதிக்கிறீங்களே… அது எவவ்ளவு அபத்தம்னு உங்களுக்கு புரியலையா? ஒரு தொடுதலில் உலகம் முழுக்க உங்களின் ஆடை விலகலை பதிவேற்ற முடியுமான நெட் யுகத்தில் இருக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம் சகோதரிகளே….! ஒவ்வொரு நாளும் நீங்கள் அறிந்தோ அறியாமலோ நம்மை சுற்றி இது போல பல்லாயிரக்கணக்கான சம்பவங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது. நம்மை சுற்றி எங்கும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, அனைவரின் கையிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. இன்று சமூகவளைதளங்களில் ஆண்களால் பதிவேற்றப்பட்டு கேவலப்படுத்தும் பெண்கள் உங்களில் யாரோ ஒருவர் தான். நாளை நீங்களாகவும் இருக்கலாம்.

எனக்கு தெரியாமல் என்னை போட்டோ எடுப்பதால் எனக்கொன்றும் கவலை இல்லை அது போன்ற ஈன செயலை செய்யும் ஆண்தான் வெக்கப்பட வேண்டும் என கொதிக்கும் பெண் ஈய போராளிகளுக்கு ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன், நீங்கள் சொல்வது ஓரளவுக்கு நியாயம் தான் எனினும் சம்மந்தப்பட்ட ஆணின் மனதில் சிறு பொறியாய் கனன்று கொண்டிருக்கும் பெண் மீதான வக்கிர எண்ணங்களுக்கு எண்ணெய் ஊற்றி கொழுந்து விட்டெறிய செய்து அவனின் உணர்வுகளுக்கு வடிகாலாய் இருப்பதற்காக தியாகத்தின் மறு உருவமாய் லெகின்ஸ், அல்லது உடலை இறுக்கி பிடிக்கும் உடை அணிந்து திரியும் பெண்களே அவன் செய்வது ஈன செயல் என்றால் அதை விட கேவலமானது நீங்கள் ஆடை சுதந்திரம் எனும் பெயரில் செய்யும் அபச்சாரங்கள்!!

அவனென்ன எங்களை தெரியாமல் படம் பிடிப்பது? இதோ எடுத்துக்கொள்ளுங்கள் எனும் முட்டாள்தனமான பதிவேற்றங்கள் நேற்றுமுதல் அரங்கேறிவருகின்றன. அவன் நிர்வாண படங்களை வெளியிட்டால் இதே பெண்ணிய போராளிகள் தங்கள் படங்களை பதிவேற்றுவார்களா. பதிவேற்றட்டுமே?? இதனால் யாருக்கு லாபம் யாருக்கு நட்டம் என்பது சிந்திக்கும் மக்களுக்கு புரியும். மாக்களுக்கு புரியாது.

பெண் சுதந்திரம் என்பதும் பெண்ணியம் என்பதும் ஆடைக்குறைப்பும் ஆடை சுதந்திரமும் மட்டுமே என்று ஊடகங்களும் ஆணாதிக்க சிந்தனை உடையவர்களாலும் காலம்காலமாக நம்ப வைக்கப்பட்டு வருகின்றீர்கள். என்பதை உணராமல் இன்னமும் கற்காலத்திலேயே இருக்க முயலுகிறீர்களே பெண்களே!

பெண்ணியம் உங்கள் கல்வி அறிவிலும் ஆணை விஞ்சும் நிர்வாகத்திறனிலும் கண்ணியமான உங்கள் நடை உடை பாவனையிலும் மிளிரட்டும்.

நம் பெண் பிள்ளைகளுக்கு ஒழுக்கமாக, கண்ணியமான உடை அணிய சொல்லித்தரும் அதே வேளையில் நம் ஆண் பிள்ளைகளுக்கும் பெண்களை மதிக்கவும் சொல்லி தருவோம்.

உங்கள் சகோதரி
ஷர்மிளா ஹமீத்

source: http://www.islamiyapenmani.com/2015/09/blog-post_22.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

40 − 33 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb