நேட்டோ படையை மிஞ்சும் இஸ்லாமிய படையை சவூதி அரேபியா உருவாக்கியுள்ளது – அமெரிக்க பத்திரிகை அலறல்!
நேட்டோ படையை மிஞ்சும் இஸ்லாமிய படையை சவூதி அரேபியா உருவாக்கியுள்ளதாக அமெரிக்க பத்திரிக்கையான வால் ஸ்ட்ரீட் (THE WALL STREET JOURNAL) அலறியுள்ளது.
இது தொடர்பாக அந்த பத்திரிக்கை வெளியிட்டுள்ள முழு செய்தியில்…
நேட்டோ படைகளை மிஞ்சும் ஒரு இஸ்லாமிய படையை சவூதி அரேபியா உருவாக்கியுள்ளதாகவும், இதன்மூலம் அமெரிக்காவிற்கு இனி மத்தியகிழக்கில் வேலையில்லை என்பதை சவூதி மன்னர் சல்மான் சொல்லாமல் சொல்லி சொல்லியிருக்கிறார் என்று தனது தலையங்கத்தில் கூறியிருக்கிறது.
ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கவின் நடவடிக்கைகள் எதிர்பார்த்த பயனை தரவில்லை என்பதை அறிந்த பிறகே சவூதி மன்னர் சல்மான் புதிய இஸ்லாமிய கூட்டணியை உருவாக்கியிருப்பதாக கூறியிருக்கும் அந்த பத்திரிகை இதன் மூலம் மத்திய கிழக்கில் ஏகபோக ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக சவுதி அரேபியா தன்னை மாற்றிகொண்டு விட்டது என்றும் இதனால் அமெரிக்காவின் முக்கியத்துவம் மத்திய கிழக்கில் வெகுவாக குறைந்து விட்டது என்றும் அந்த பத்திரிகை கூறியிருக்கிறது.
மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுக்கு இணையாக ஈரானையும் வெறுக்கிறது.
ஈரானோடு அந்து நாடுகள் எந்த சமரச போக்கையும் விரும்பவில்லை ஆனால் அமெரிக்கா அண்மை காலங்களில் ஈரானோடு ஒரு நளின போக்கை கடைபிடிப்பதை அறிந்து பிறகே சவூதி அரேபியா இந்த முடிவுக்கு வந்திருப்பதாக அரபு லீக்கின் முன்னாள் செயலாளர் அமர் மூஸா கூறியதாக அந்த பத்திரிகை மேலும் கூறியிருக்கிறது.
2003 ஆம் ஆண்டு வரை சன்னி முஸ்லிம்களின் வலுவான ஒரு பிரதிநிதியாக சதாம் உசைன் இருந்தார்.
சதாம் வீழ்ந்த பிறகு சன்னி முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தில் ஏற்பட்ட வெற்றிடம் நிறப்பபடாமலேயே இருந்தது இதை பயன்படுத்தி கொண்டு தான் இஸ்லாமிய நாடுகளில் புரட்சி செய்து ஆட்சியை பிடிக்க ஈரான் முனைகிறது.
அதனால் அந்த இடம் இனியும் வெற்றிடமாக இருக்க கூடாது என்பதற்காகவும் இஸ்லாமிய நாடுகளில் புரட்சி செய்ய ஈரான் முயன்றால் ஓட ஓட விரட்டுவோம் என்பதை ஈரானுக்கு தெளிவாக புரிய வைத்திடவே சவூதி அரேபிய இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறது.
சவூதி அரேபியா இந்த முயற்சியில் முழுமையாக வெற்றி பெற்றுவிட்டால் மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்க முழுமையாக துடைத்து எறியபட்டுவிடும் என்றும் அந்த பத்திரிகை மேலும் கூறியுள்ளது.
அமெரிக்கா ஈராக்கில் நடத்தும் போரில் இணைய மறுத்துவிட்ட எகிப்தை சவூதி மன்னர் சல்மான் தாம் அமைத்த கூட்டணிக்குள் கொண்டுவந்ததும் சல்மானின் சிறந்த இராஜ தந்திரத்திற்கான சான்றாக அமைந்துள்ளது எனவும் அந்த பத்திரிகை கூறியிருக்கிறது.
தகவல் உதவி : சவூதி அரேபியாவிலிருந்து மௌலவி செய்யது அலி ஃபைஜி
– முகநூல் முஸ்லிம் மீடியா
Saudi Arabia: The Gulf’s Best-Equipped Military
RIYADH, Saudi Arabia — Saudi Arabia has the best equipped armed forces in the Gulf region, while counting on its Western partners to guarantee its security, the International Institute for Strategic Studies says.
The Saudi military numbers 2,27,000 troops, including 75,000 in the army, 13,500 in the navy and 20,000 in the air force.
Some 16,000 personnel are committed to air defenses, 2,500 responsible for strategic missiles and 100,000 man the National Guard, according to the IISS Military Balance, 2015.
The kingdom also has 24,500 paramilitary forces.
The Saudi armed forces have close ties with foreign armies, particularly the United States, Britain and France which gives them access to training and equipment.