பெண்கள் கத்னா (circumcision) இஸ்லாத்தில் உண்டா?
அரபு நாடுகளில் குறிப்பாக எகிப்த போன்ற ஆப்ரிக்க கண்டத்தில் நடைபெறும் பெண்கள் கத்னா (circumcision) இஸ்லாத்தில் உண்டா இதற்கு எந்த அதரத்தின் அடிப்படைல் செய்கிறார்கள் இதை அவர்கள் சுன்னது என்று கூறுகிறார்கள். மேற்குறிய ஹதீஸ் சரியானதா? இல்லை என்றல் எந்த விதத்தில் பலகினமானது என்பதை என்பதை பார்ப்போம்.
ஆண்கள் கத்னா செய்ய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. மாற்று கருத்து இருக்கவும் முடியாது. ஆனால் பெண்கள் கத்னா செய்ய வேண்டும் என்பதில் அறிஞர்களுக்கு இடையே கருத்து வேடுபாடு நிலவுகிறது. யார் எதைச் சொன்னாலும் அதற்கான ஆதாரம் என்ன? அந்த ஆதாரம் சரிதானா? சரியான அடிப்படையில் விளங்கப்பட்டுள்ளதா என்பதை தீர்க்கமாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.
அந்த அடிப்படையில் பெண்கள் கத்னா செய்ய வேண்டும் என்று சொல்பவர்களின் ஆதாரங்களை முதலில் பார்ப்போம்.
மதினாவில் ஒரு அன்சாரி குலத்தைச்சார்ந்த பெண்மனி கத்னா பெண்களுக்கு கத்னா செய்பவராக இருந்தார். நீ கத்னா செய்யும் போது அளவு கடந்து விடாதே ஏனென்றால் அது பெண்களுக்கு பிரயோஜனமானதும் கணவருக்கு மிக விருப்பமானதாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூத் 4587)
இந்த செய்தியை ஆதாரமாக கொண்டு பெண்கள் கத்னா செய்ய வேண்டும் என்று சொல்பவர்கள் வாதம் செய்கிறார்கள். ஆனால் இந்த செய்தி பலவீனமானதாகும் என்று இந்த செய்தியை பதிவு செய்த இமாம் அபூதாவூத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களே சொல்லி இருக்கிறார்கள்.
ஏனென்றால் இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள முஹம்மது பின் ஹஸ்ஸான் என்பவர் யாரென்று அறியப்படாதவர். எனவே இந்த செய்தியை ஏற்றுக் கொள்ளமுடியாது.
இதே செய்தி சில வார்த்தை மாற்றங்களுடன் முஃஜமுல் அவ்ஸத் என்ற நூஇல் இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் ஸாயிதா பின் அபிர் ருகாத் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் முன்கருல் ஹதீஸ் ஹதீஸ் துரையில் நிராகரிக்கப்பட்டவர் என்று இப்னு ஹஜர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது தக்ரீபில் குறிப்பிடுகிறார்கள்.
மதினாவில் உம்மு ஐய்மன் என்று சொல்லப்படும் பெண்களுக்கு கத்னா நபர் இருந்தார். உம்மு அய்மனே நீங்கள் கத்னா செய்தால் உன்னுடைய கையை தாழ்த்திவிடு வெட்டுவதில் வரம்பு கடந்து விடாதே ஏனென்றால் தாழ்த்தி வெட்டுவதுதான் முகத்திற்கு வெண்மையும் ஆண்களுக்கு பிரயோஜனமானதாக இருக்கும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: தபாகாத்துல் முஹத்திஸீன் பாகம் 3 பக்கம் 346)
இந்த செய்தியும் ஆதாரமற்றதாக இருக்கிறது. ஏனென்றால் இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இஸ்மாயீல் பின் அபீ உமைய்யா என்பவர் இடம் பெற்றுள்ளார்.
இவர் ஹதிஸ் துரையில் கைவிடப்பட்டவர் என இஸானுல் மீஸான் மீஸானுல் இஃதிதால் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே போன்ற செய்தி தாரிகுல் பகுதாத் என்ற புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் அவ்ப் பின் முஹம்மது அபூ கஸ்ஸான் என்பவர் இடம் பெற்றுள்ளார்.
அவ்ஃப் என்பவருக்கு எந்த அறிமுகமும் நூற்களில் பதிவு செய்யப்படவில்லை. மேலும் அபூதஃலப் என்பவருக்கும் அறிமுகம் கிடைக்கவில்லை. இது அல்லாமல் அபூ பக்தரி என்பவர் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் எதையும் கேட்டதில்லை.
இதே போன்ற செய்தி ஹாகிம் பாகம் 3 பக்கம் 603 யிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் ஹிலால் பின் அலா என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இதே செய்தி மஜ்மவுஸ்ஸவாயித் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியில் மொத்த அன்சாரி பெண்களுக்கும் கட்டளையிட்டதாக இடம் பெற்றுள்ளது. என்றாலும் இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் முன்தில் பின் அலீ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர். இந்த தகவலை இந்த செய்தியை பதிவு செய்த அதன் ஆசிரியர் அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள்.
உஸ்மான் பின் அபில் ஆஸ் அவர்கள் உணவுக்காக அழைக்கப்பட்டார். இது என்ன என்று வினவப்பட்டது. இது பெண் கத்னா செய்யப்பட்டதற்கான விருந்து என்று சொல்லப்பட்டது. உடனே அபில் ஆஸ் அவர்கள் இது நாங்கள் நபியவர்கள் காலத்தில் பார்க்காததாக இருக்கிறது என்று சொல்லி விருந்துன்ன மறுத்தார். (நூல்: முஃஜமுல் கபீர்)
இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் அபூஹம்ஸா அல் அதார் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை அபூஹாதம் அவர்கள் இவரை சரிகண்டாலும் மற்ற அறிஞர்கள் இவரை சரிகாணவில்லை. எனவே இந்த செய்தியையும் நாம் ஏற்றுக் கொள்ளமுடியாது.
மேலும் ஆண்களுக்கு கத்கா சுன்னத் பெண்களுக்கு வெறுக்கத்தக்கது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதாக உஸாமா தன் தந்தை வழியாக சொல்கிறார் (நூல்: அஹ்மத் 19794)
இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் ஹஜ்ஜாஜ் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர். எனவே இந்த செய்தியையும் ஏற்றுக கொள்ளமுடியாது.
எனவே பெண்கள் கத்னா செய்ய வேண்டும் சொல்பவர்களின் ஆதாரங்கள் ஒன்று கூட ஏற்கத்தக்கதாக இல்லை. எனவே அவர்களின் வாதமும் அடிபட்டு போய்விடுகிறது.