Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

‪இஸ்லாத்திற்கும் தர்காவிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை‬

Posted on September 11, 2015 by admin

‪இஸ்லாத்திற்கும் தர்காவிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை‬

இஸ்லாமிய வழிகாட்டுதலின்படி, ஒரு ‪‎மனிதர்_இறந்துவிட்டால்‬, அவரை (மைய்யவாடியிலோ/கப்ருஸ்தானிலோ) மண்ணை தோண்டி புதைத்து அடக்கம் செய்துவிட்டு பின்பு ஒரு சாண் அளவு தான் மண்ணால் உயர்த்த வேண்டும். இதை தான் நாம் எல்லா மைய்யாவாடிகளில் பார்த்து வருகிறோம்.

ஆனால் ‪#‎தர்காக்களிலோ கட்டடம்‬ கட்டி இரண்டு அடியிலிருந்து நம்மைவிட உயரமாக ‪#‎ஏழு‬ அடி வரை உயரத்தி இருப்பதையெல்லாம் நாம் பார்க்கிறோம். இதை இஸ்லாம் ஆதரிக்கவேயில்லை மாறாக எதிர்க்கிறது.

1765. ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: கப்றுகள் (புதைக்கப்பட்ட இடம்) பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம்‬ எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‪#‎தடை‬ செய்தார்கள். – மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. (ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 11. இறுதிக் கடன்கள்.)

வாழ்கையின் வழிகாட்டியான நபிகள் நாயகம் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது நபிமொழியின் மூலம் கட்டடம் எழுப்பவது கூடாது என்பதை அறிய முடிகிறது.

ஆக தர்காவின் ‪‎அடிப்படையே_தவறு‬ என பார்த்தோம். இப்போது தர்காவில் நடக்கும் ‪வழிபாட்டை‬ பற்றி ஆராய்வோம்.

தர்காவில் ஒருவர் அடக்கம் செய்யப்பட்டு, கட்டடம் எழுப்பி பச்சை போர்வையெல்லாம் போர்த்தி, அவரிடம் (அடக்கம் செய்யப்பட்டவரிடம்) உதவி தேடுவதும், அவரை அல்லாஹ்விற்கு (வணக்குத்திற்குரிய ஒரே இறைவனை குறிக்க அரபியில் – அல்லாஹ்) இடைதரகராய் வைக்கும் வண்ணம் தான் அதிகப்படியாக வழிபாடுகள் அமைந்துள்ளன..

என்ன தான் ‪#‎அல்லாஹ்வை‬ நம்பி, அவனுக்கு ‪#‎இடைதரகர்‬ வைத்தாலும், அது அல்லாஹ்வை ‪#‎சரியாக‬ முறையில் நம்பியதாக ‪#‎ஆகாது‬. அவர்களும் நிராகரிப்பவர்களே!! இதை நான் சொல்லவில்லை!! திரிக்குர்ஆன் சொல்கிறது.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்திலேயே கூட இவ்வாறு நம்பிக்கையுடைவர்கள் இருந்தார்கள்.(பார்க்க திருக்குர்ஆன் 10:31,10:18,39:3) அவர்கள் இறைநிராகரிப்பாளர்கள் என்றே பல இடங்களில் கூறுகிறது.

ஆக ‪தர்காவின்‬ வழிபாட்டு முறையோ ‪இஸ்லாத்திற்கு‬ நேர் ‪முரணானது‬, எதிரானது. இன்னும் தர்காவின் அடிப்படையும் இஸ்லாத்திற்கு நேர் முரணானது. பல முஸ்லிம்கள் இஸ்லாம் குறித்த சரியான அடிப்படை புரிதல் இல்லாததால் இவ்வாறு தர்காவிற்கு செல்கிறார்கள். இதை நாங்கள் அவர்களிடம் எடுத்து சொல்லிக் கொண்டு தான் இருக்கிறோம். இன்னும் அதிகமாக எடுத்துச்சொல்ல வேண்டியிருக்கிறது.

‪முஸ்லிம்மல்லாத‬ நண்பர்களே!! அன்பர்களே!! தர்காவை(சமாதி வழப்பாட்டை) பார்த்து இஸ்லாம் என நினைத்து விடாதீர்கள். இஸ்லாத்தின் அதிமுக்கிய கோட்பாடே “‪‎ஓன்றே குலம்‬ ‪ஒருவனே தேவன்‬” என்பதே. இந்த கொள்கை தான் பகுத்தறிவுக்கு ஒத்துபோவது. இதனால் மட்டுமே சமத்துவம் பிறக்கும். எனக்கு ஒரு கடவுள் உனக்கு வேறு கடவுள் என சொல்வதனால் நம்மினுள் பிரிவு தான் ஏறபடும்.

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 2

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb